Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மையில் நடந்த குண்டுவெடிப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்திக்கொடுக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான நிதியை கொடுக்கவேண்டாமென சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார். நல்லாட்சி அரசுக்கான அடிப்படை அரசியற்கொள்கையின் அடிப்படையில் இவ்வறிவுறுத்தலை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாக தமது சொந்த வீடுகளுக்கு திரும்பமுடியாமலும் தமது சொந்தங்களை காணாமல்போனோர் பட்டியலில் தேடிக்கொண்டும் அரசியற்கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் பற்றியும் நல்லாட்சி அரசுக்கு ஏன் தெரியவில்லை என விமர்சனம் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது. http://thuliyam.com/?p=29957

    • 0 replies
    • 226 views
  2. கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆரம்பம் -சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174419/க-ள-ந-ச-ச-ஒர-ங-க-ண-ப-ப-க-க-ட-டம-ஆரம-பம-#sthash.7YbxOcKb.dpuf

  3. வடபுலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு என்றும், எவரும் எதனையும் எழுதலாம் என்றும் குறிப்பிடும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, தேவை ஏற்பட்டால் பத்திரிகைகளை ஒப்பிட்டு பாருங்கள் என்றும் கூறினார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றபோது, அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”எங்களுடைய கல்வியின் நிலை தற்போது கீழே தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை காட்டுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் எட்டுப்பிள்ளைகள் இருந்தால் ஒருவர் கடைசிப்பிள்ளையாகத்தான் இருப்பார். நாட்டில் 98…

    • 0 replies
    • 391 views
  4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தன் கோரிக்கை: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சொற்ப அளவிலானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …

  5. வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற கூடாது வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது. புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை. இது தான் கசப்பான உண்மையாகும். புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பி. யான உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போதே உதயகம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்…

  6. இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனிய பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், முன்னாள் உப வேந்தருமான அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/7429

  7. அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா:-- அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரிவிணைவாதத்திற்கு தீர்வு வழங்க முடியும் என நாம் நீண்ட காலமாக கூறி வருகின்றோம்என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசியல்தலைவர்கள் இதனை…

    • 0 replies
    • 214 views
  8. ' மக்களுக்கு வீடுகள் தேவையே தவிர இரும்புக்கூடுகள் அல்ல' சுவாமிநாதனிடம் கூறிய சம்மந்தன் மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து உரிய தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரச்சனைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர…

  9. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தன் கோரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சொற்ப அளவிலானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத…

    • 0 replies
    • 207 views
  10. பாராளுமன்றம் வருவதற்கு கல்வித் தகைமை கொண்டுவரப்படவேண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்; கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…

    • 7 replies
    • 433 views
  11. ஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல விதமான காரணங்களை கூறி தடையாகவுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதில் கூட முன்னர் நடந்ததாக கூறப்படும் காரணத்தை இராணுவம் கூறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும் இராணுவமே இட…

  12. கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத காடழிப்பை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு இடம்பெறும் காடழிப்புக்களை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என்றும் சில அதிகாரிகளின் துணையுடனே இவ்வாறான காடழிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதாவது பகல் வேளைகளில் இயந்திரங்கள் மூலம் பெறுமதிவாய்ந்த பாலை, முதிர…

    • 0 replies
    • 463 views
  13. ஜேர்மனியில் டொசுல்டோப் நகரில் உள்ள அகதிகள் முகாம் பற்றி எரிகிறது. இதனை அங்குள்ள அகதிகளே கொழுத்தி விட்டதாக அறியப்படுகிறது. முஸ்லீம்களின் புனித வாரமான ரம்ளான் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ளான் தினங்களில் தமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் நோண்பு முடிந்த பின்னர் தாம் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் அகதிகள் தெரிவித்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் தாம் இருந்த அகதி முகாமை , நெருப்பு மூட்டியுள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சுமார் 5,000 அகதிகளை ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா மேர்கிள் தனது நாட்டுக்குள் வர அனுமதித்தார். இது பல்வேறு விமர்சனங்களை தேற்றுவித்து இருந்தது. குறித்த அகதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வ…

  14. பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியிருந்த மக்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தமது பூர்வீக கிராமங்களில் குடியிருக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சொந்த வீடுகள் மற்றும் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு ப…

    • 0 replies
    • 233 views
  15. ஒருவரை நோக்கி கையை காட்டி அவர்களை குற்றவாளியாக்க முடியாது. குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர இருந்தமை உண்மையே. ஆனால், தற்போது அந்த பிரேரணையினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வ…

    • 0 replies
    • 281 views
  16. இழுபடும் வடக்கு மக்களின் பிரச்சினை!-பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் முதல்வர் விக்கி விசனம் வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் நிலவுவதாகவும், தங்களுடன் கலந்துரையாடாது நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் திட்டங்களை செயற்படுத்தல் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கர…

  17. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராகக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறுத்துமாறு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அரசியல்வாதி ஆகியோர் தூது சென்றுள்ளனர். வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடமும் இவர்கள் இருவரும் தூது சென்றனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக மாகாண சபையின் அடுத்த அமர்வின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரால் முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், நேற்று வரை மாகாணசப…

    • 3 replies
    • 342 views
  18. வட மாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாணசபையின் அடுத்த அமர்வில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்த ஒருசிலர் தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஆளும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு தங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், பேரினவாதிகளுக்கு தீனிபோட நினைக்கும் சில அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகச் செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய கும்பல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்தபோதும் அந்த முயற்சி இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மீறி அவ்வாறான தீர்மானம் சபைக்கு வந்தால் அதனை நிச்சயம் தோற்கட…

    • 0 replies
    • 514 views
  19. அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) http://www.virakesari.lk/article/7400

    • 2 replies
    • 918 views
  20. சிறிலங்கா உள்ளிட்ட ஒடுக்குமுறை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பொதுமக்களுக்குத் தெரியாமல், மறைத்து விட்டதாக ஸ்கொட்லாந்து காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்கொட்லாந்து காவல்துறையின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்த விவகாரம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பணிகளின் மூலம், ஸ்கொட்லாந்து காவல்துறை கடந்த மூன்று ஆண்டுகளில், 1.8 மில்லியன் பவுண்ட் நிதியை பெற்றுள்ளது. ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த உடன்பாடுகள் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, இருதரப்பு பயிற்சிகள் மூலம், சிறிலங்காவிடம் இருந்து, 713,646 பவுண்டும், த…

  21. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் மீதான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும், பேச்சு நடத்தியதாக, ஹியூகோ ஸ்வயர் தமது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி, ரவிநாத ஆரியசிங்கவையும், நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போத…

  22. கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தானுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவுமில்லை. இப்போது எதுவித தொடர்புகளும் இல்லை. ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் தனது மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்” என யுவதியின் தாய் அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த நேசதுரை சர்மினி (வயது 26) என்ற யுவதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில் வாய்ப்புப் பெற்று ஜோர்தான் சென்றுள்ளார். ஆனால், இன்றுவரை ஆறு வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் …

  23. கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்று, விசாரணைகள் முடியும் வரை – எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, வெடிவிபத்து ஏற்பட்ட சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு நீண்ட காலமாக உரிய வகையில் பராமரிக்கப்படவோ, கண்காணிப்படவோ இல்லை என்றும் மற்றொரு இராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆயுதக் கிடங்கு முற்றிலும்,…

  24. போர்க்குற்ற விசாரணை பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிராகரித்துள்ளமையை, அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரஸ் குழு கண்டித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் காங்கிரஸ் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் குழுவினர், இலங்கை தொடர்பில் அண்மையில் கலந்துரையாடிய போதே இந்தஅதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் தலைவர் மெட் சால்மன் (Matt Salmon) தமது கருத்தில், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை கொண்டிருந்த பாதக போக்கு 2015 ஜனவரி 8ம் திகதியுடன் மாற்றமடைந்ததாக கருதப்பட்டது. எனினும் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்ததன் மூலம் இலங்கை தொடர்ந்தும் பழைய நிலையிலேயே இருப்பத…

    • 1 reply
    • 291 views
  25. நிதியமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஆளுங்கட்சி வெற்றி கொண்டதையடுத்து,நேற்றுமாலை நாடாளுமன்ற வளாகத்துக்கு வெடியே பட்டாசு கொளுத்தப்பட்டது. அதேவேளை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக, அவருடைய ஆதரவாளர்கள் மலர் மாலைகள் மட்டுமன்றி, 5000 ரூபா நாணயத்தாள்களால் கட்டப்பட்ட மாலைகளுடன் அவரை வரவேற்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=159255&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.