ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143447 topics in this forum
-
சமாதான நிலைமையைச் சீர்குலைத்து மீண்டும் அராஜக நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள் என மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான மகிந்த அமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுவதாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையூடாக நீங்கள் (பொது எதிரணியினர்) நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதை உங்களால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது தெரிகின்றது. எமக்கு (ஸ்ரீலங்கா ச…
-
- 0 replies
- 127 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் பாரிய மோதல் நிலைமை ஏற்படும் என பிரபல சோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். 1988ம் மற்றும் 89ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு இணையான நிலைமையாக அது இருக்கும் எனவும் கிரக மாற்றங்களே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் இந்திக்க தொட்டவத்த கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.c…
-
- 0 replies
- 165 views
-
-
மற்றவர்களைக் குற்றஞ்சாட்டும் முன்னர் நம்மைப் பற்றிய முன்மாதிரி அவசியம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் நிதி செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற பெரியசெலவுகள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், பொதுநிதி தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொது நிதியை தனிப்பட்டவிடயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. ப…
-
- 0 replies
- 235 views
-
-
உலக தர வரிசையில் 6280 மற்றும் 11377 இடம் பிடித்த யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள். எப்ப தான் நாங்க முன்னேறுவது...?! சும்மா வெட்டிக்கு யுனிக்கு போனம் என்று பீலா விடுவது மட்டும் போதுமா...?! http://www.webometrics.info/en/Asia/Sri Lanka
-
- 3 replies
- 463 views
-
-
காத்திருப்பு... முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜப்பானை நோக்கி பயணமானார். அவர், புறப்பட்டு சென்றபோதும், ஜப்பானில் அவரை வரவேற்பதற்கு தயாராக இருப்பதையும் படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/174349/க-த-த-ர-ப-ப-#sthash.SzjG6vcb.dpuf
-
- 0 replies
- 342 views
-
-
அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவை தற்காலிக அடிப்படையில் நிறுத்திய பிரதமர் அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக அடிப்படையில் நிறுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்கும் வரையில் அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு பிரதமர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர்களின் வாகனங்களுக்காக அரசாங்கம் 1180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டமை கடுமையான விமர்சனங்களு…
-
- 0 replies
- 181 views
-
-
நாடாளுமன்றில் ஒலித்தவை அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, பொது எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்க்கிழமை (09) இடம்பெற்றது. அதில் உரையாற்றிய உறுப்பினர்களில் சிலரின் உரைச்சுருக்கங்கள் 'தூஷணத்தைக் கொண்டு வர முடிந்தது'- ரணில் விக்கிரமசிங்க 'ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஜனநாயக ஆட்சியிலேயே நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முடிந்தது' என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'இது தூஷணம் இதனை தோற்கடிப்போம்' என்றார். மஹிந்த ராஷபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்;சு, ஜனாதிபதியின் கீழ் இருந்தமைய…
-
- 0 replies
- 229 views
-
-
ஜனாதிபதி வருமுன்னமே அவரது ஆசனம் நிரம்பியது அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், சபைக்குள் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனம் சில நிமிடங்கள் நேற்று வியாழக்கிழமை (09) நிரம்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது. நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏதோ கலந்துரையாடுவதற்காக வந்தார். அவ்வாறு வந்தவர் பிரதமருக்கு வலது பக்கத்தில் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமர்ந்து விட்டார். அமர்ந்தவர், பிரதமர் ரணிலுடன் ஏதோ கதைத்துக் கொண்ட…
-
- 0 replies
- 262 views
-
-
இரு எம்.பிக்கள் வாய் உளறினர் -அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. வாக்களிப்பில் 28 பேர் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றம், நேற்று வியாழக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், காலை 9.30 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, பொது எதி…
-
- 0 replies
- 532 views
-
-
திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் இரண்டில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்சினை இரணைமடு கு ள நீரை யாழ். குடாநாட்டுக்கு கொண்டு செல்வதில் காணப்படும் பிரச்சினைகள், பூநகரி குளங்களை ஒருங்கிணைத்தல், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஆகியன தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்க…
-
- 5 replies
- 895 views
-
-
வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தினால் இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக பெறுவதில் சிக்கள்கள் உருவாகலாம்ஆகையால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என மாகாண சபையில் குழப்பங்களை வழமையாக ஏற்படுத்தி கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் எச்சரிக்கையை அடுத்து வடக்கு அமைச்சர் ஒருவர் மீது எதிர்வரும் பதின்நான்காம் கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை குறித்த தரப்பு கைவிட தீர்மானித்து உள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் குறித்த அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை குறித்த தரப்பு திரட்டி வருவதா…
-
- 0 replies
- 176 views
-
-
சாலாவ ராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மர்மம் இதுவரை துலங்காத நிலையில் இராணுவத்தினர் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக நிலவிய யுத்த காலத்தில் கூட இவ்வாறான பாரிய அழிவொன்றை இராணுவம் எதிர்கொண்டிருக்கவில்லை என்றும் இது தொடர்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்க பகுப்பாய்வு நிபுணர்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஆயுதக்கிடங்கு வெடிப்புச் சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த விசாரணை அறிக்கைகள் வரும் வரை இராணுவத்தரப்பு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இந்த விசாரணைகள் மூலம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் துல்லிய…
-
- 1 reply
- 346 views
-
-
கிளிநொச்சி மாவவட்டத்தில் காணப்படுகின்ற அதிகளவான காணிப்பிணக்குகளால் ஏனையப்பணிகளை தம்மால் மேற்கொள்ள முடியாதுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்ரைறு கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர். குறித்த நிகழ்வில்பேசிய அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு காணிப்பிணக்குகள் காணப்படுகிறது. நாளாந்தம்பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்திற்கு வரும் காணிப்பிணக்குகளைஅதிகாரிகளால் தீர்ப்பது என்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. இந்த அதிகரித்தகாணிப்பிணக்குகள் காரணமாக எம்மால் ஏனைய பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.அதிகரித்த காணிப்பிணக்குகள் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு பெரும் …
-
- 0 replies
- 218 views
-
-
எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது வேகமும் உத்வேகமும் இனி கண்கூடாகப் பார்க்கும் அளவிற்கு கடுகதியில் செல்ல வேண்டியிருக்கின்றது. இன்னும் இரு வருடங்களில் பலதையும் நாங்கள் சாதித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத…
-
- 1 reply
- 587 views
-
-
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து எதிர்வரும் 28ம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார்.நல்லிணக்க விவகாரம் தொடர்பில் கடமையாற்றி வரும் மனோரி முத்தெட்டுவேகமவும் வெளிவிவகார அமைச்சருடன் ஜெனீவா விஜயம் செய்ய உள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்ஈழத்திற்கு ஆதரவான புலம்பெயர் தரப்புக்களும் எதிர்ப்ப…
-
- 1 reply
- 290 views
-
-
இராணுவ உள் முரண்பாடுகள் காரணமாக கொஸ்கம பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தில் உயர் பதவிகளை வகிக்கும் முக்கிய பொறுப்புக்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமையினால் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. நிவாரணங்களை வழங்குதல் தொடர்பில் உரிய திட்டமொன்று வகுக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் ஆயுதப் பகுதிகளை அகற்றுதல் சேதமடைந்த வ…
-
- 0 replies
- 313 views
-
-
குண்டு வெடித்து மூவர் பலி தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்து இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி நடப்பதாக கிடைத்த தவலையடுத்து, குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/174297/க-ண-ட-வ-ட-த-த-ம-வர-பல-#sthash.eT99u9QW.dpuf
-
- 3 replies
- 437 views
-
-
உள்ளக கணக்காய்வு பிரிவை தவிர்ந்து எஞ்சியவர்கள் சோம்பறிகள் -எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுடன் சேர்த்து சில பிரிவுகள் மாத்திரமே வினைத்திறனுடன் செயற்படுவதாகவும் மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் சமய கலாசாரப் பிரிவு என்பன படுமோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்தின் வினைத்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்யும், செயற்றிறன் முகாமைத்துவ விளக்கப்படத்தின் மூலம் அறியமுடிகிறது. ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை, உற்பத்தித்திறனை செயற்படுத்தல், கோவை முகாமைத்துவம், குழுச் செயற்பாடு, மொத்தச் செயற்றிறன் ஆகிய தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, இந்த விளக்கப்படம் த…
-
- 1 reply
- 254 views
-
-
தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்! அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். அதனால் முன்னெச்சரிக்கையாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் அலுவலகர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும், அதனால் சிங்கள அறிவு இல்லையெனில் புறக்கணிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்…
-
- 21 replies
- 1.9k views
-
-
ஆடம்பர மாளிகையை விரும்பாத ஜனாதிபதி ஆடம்பர மாளிகையோ, ஆடம்பரமான வாழ்க்கையையோ தான் விரும்புவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை மக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆடம்பரமான முறையில் இந்த மாளிகை காணப்படுகின்ற போது நீங்கள் ஏன் இதனை விடுத்து இன்னுமொரு மாளிகையினை தேர்ந்தெடுத்தீர்கள் என திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மாணவன் ஒருவனினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 13 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது பாதைகள் திறக்கப்படுமா ? ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடி காங்கேசன்துறை வரையில் பின் நகர்த்தப்படலாம் எனவும் காங்கேசன்துறை வரையிலான பகுதி விடுவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவு…
-
- 1 reply
- 337 views
-
-
அயர்ந்து தூங்கி அகப்பட்ட திருடன் -செல்வநாயகம் கபிலன் புத்தூர், வீரவாணி நரசிம்ம கோயில் உண்டிலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய சந்தேகநபர், அயர்ந்து தூங்கியதால் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் சென்று உண்டிலை உடைத்துத் திருடிய மேற்படி நபர், அந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஆள்நடமாற்றம் அற்ற இடத்தில், தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியின் கரையில் நிறுத்திவிட்டு, ஓரமாக நித்திரை கொண்டுள்ளார். வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளை அவதானித்து தேடுதல் நடத்தினர். இதன்போது, ச…
-
- 2 replies
- 515 views
-
-
வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம் வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி : முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரித்துவிட்டு அமைச்சர்களுக்காக கார் கொள்வனவு செய்வதற்கு கோடிக் கணக்கில் செலவிடப்படுகின்றதே இது நியாயமா? பதில் அவ்வாறு எண்ண வேண்டாம். யதார்த்ததை புரிந்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்களுக்கு கட்டாயமாக வாகனம் இருக்க வே…
-
- 0 replies
- 357 views
-
-
மயிலிட்டியிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடித்தால் நிலைமை என்னாகும்?கேட்கிறார் முதல்வர் சி.வி கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய் போய்விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். …
-
- 3 replies
- 437 views
-
-
முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாயமாகிவிட்டன (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்ன…
-
- 0 replies
- 239 views
-