ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
மயிலிட்டியிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடித்தால் நிலைமை என்னாகும்?கேட்கிறார் முதல்வர் சி.வி கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய் போய்விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். …
-
- 3 replies
- 438 views
-
-
முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாயமாகிவிட்டன (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்ன…
-
- 0 replies
- 240 views
-
-
சாலாவ பகுதி மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டம் (ஆர்.யசி) கொஸ்கம- சாலாவ இராணுவமுகாம் வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்துள்ள தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை விரைவில் புனரமைத்து தருமாறு கோரி மக்கள் இரண்டாவது நாளாகவும் இன்றும் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக இன்று கொழும்பு- அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டது. கொஸ்கம- சாலாவ இராணுவமுகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்று அதனால் அப்பகுதி மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் இடம்பெற்று வீதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று மீண்டும் பாதைகள் திறக்கப்பட்டன. எனினும் மக்கள் மீது இ…
-
- 0 replies
- 431 views
-
-
நிதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெப்பு தோல்வியில் முடிந்தது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 51 வாக்குகளும் எதிரான 145 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/174331/ந-த-யம-ச-சர-ம-த-ன-நம-ப-க-க-ய-ல-ல-ப-ர-ரண-த-ல-வ-#sthash.oz6p0a52.dpuf ஜே.வி.பி ஆதரவு நிதியமைச்சர் ரவி கருண…
-
- 1 reply
- 377 views
-
-
தூசணத்தைத் தோற்கடிப்போம்: பிரதமர் அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை தூசணம் எனவும் அதனைத் தோற்கடிப்போம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 35 பேர் இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/1742…
-
- 2 replies
- 527 views
-
-
இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களில் இரசாயனப் பாதிப்பு இருந்ததாக அறிக்கைகளில் சுட்டிக்காடப்படவில்லை எனவும் போரில் இரசாயன ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்தார். போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் இரு தரப்பினரும் ஆட்லறிகளைப் பயன்படுத்திய சூழலில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட…
-
- 3 replies
- 532 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர். இந் நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வேறு பொலிஸ் நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 530 views
-
-
தொடரும் கைது நடவடிக்கை, அச்சத்தல் மீனவர்கள்.! மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேசுவரம், தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து ஒரு படகு கைப்பற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்துள்ளதுடன் 6 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றைய மீனவர்கள் தாங்களும் சிறைப…
-
- 1 reply
- 264 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருடன் சீனா செல்கிறார் மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது. பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே சீனா செல்லவுள்ளனர். சீனா செல்லும் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/174291/ந-ட-ள-மன-ற-உற-ப-ப-னர-கள-ப-ர-டன-ச-ன-ச-ல-க-ற-ர-மஹ-ந-த#sthash.mmqw8GUy.d…
-
- 0 replies
- 226 views
-
-
ஒரே கல்லில் 2 மாங்காய்கள் விழுந்துள்ளன: விமல் குற்றச்சாட்டு கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமும் ஒலிவாங்கிகள் செயலிழந்த சம்பவமும் பல்வேறான சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது என்று கூறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இவ்விரு விடயங்களிலும் அரசாங்கம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை ஒன்றிணைந்த எதிரணி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'முகாமில், படையினர் வெகுவாக இல…
-
- 2 replies
- 312 views
-
-
வடகிழக்கு இணைப்பு மக்களின் அபிலாசையா? திருமலையில் சிவில் சமூகத்தினருடன் பிரித்தானியதூதுவர் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கை இணைக்கும்படி கோருவது மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலா என்று இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த தூதுவர் சிவில் அமைப்புக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய திருகோணமலை சிவில் அமைப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை எகேட் நிறுவன மண்டபத்தில் சந்தித்து உரையாடினார். இக்கலந்துரையாடலில் திருகோணமலை …
-
- 0 replies
- 261 views
-
-
குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி மட்டுவில் கையெழுத்து வேட்டை (சசி) முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கை…
-
- 0 replies
- 292 views
-
-
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்க…
-
- 4 replies
- 623 views
-
-
துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார் மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர். …
-
- 3 replies
- 512 views
-
-
ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுத்தாது – GTF ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுது;தாது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பான நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் இத…
-
- 1 reply
- 322 views
-
-
நான் தலைவராக இருந்திருந்தால் செனவிரத்னவிடம் விளக்கம் கேட்டிருப்பேன் : சந்திரிகா.! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கட்சியின் இரண்டாவது பதவிக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முன்னா…
-
- 0 replies
- 232 views
-
-
அரச அதிகாரிகளை கைதுசெய்வதில் சிக்கல் -அழகன் கனகராஜ் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச அதிகாரிகளைக் கைது செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்டும் நேரத்தில், சுனில் ஹந்துநெத்தி கேட்டிருந்த கேள்விகளை அடுத்து, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக எழுந்த சுனில் ஹந்துநெத்தி எம்.பி, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொட…
-
- 1 reply
- 288 views
-
-
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐ.நாவிடம் முறைப்பாடு செய்யப்படும் -TNA அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளுடன் சந்திப்பு நடாத்த எதிர்பார…
-
- 2 replies
- 294 views
-
-
ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு -எஸ்.அரசரட்ணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் ஆலயங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. இந்நிலை குறித்து பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம், …
-
- 12 replies
- 1.6k views
-
-
இராணுவ கிராமத்தில் 100 வீடுகள் சேதம் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பின்போது, அதற்கு அருகில் இருந்த இராணுவ வீரர்களின் கிராமத்தில் இராணுவ வீரர்கள் வசித்த 107 வீடுகளில் 40 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/174264/இர-ண-வ-க-ர-மத-த-ல-வ-ட-கள-ச-தம-#sthash.uZ431xF3.dpuf
-
- 2 replies
- 457 views
-
-
அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.! இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஜனாதிபதி ஊடகப் பரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் பார்வைக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்து வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த மாளிகை ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆளுனர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக காணப்பட்டது. 1948 இலங்கை சுதந்திரம…
-
- 5 replies
- 690 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. “உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியினாலேயே வேட்டையாடப்படுகின்றனர். எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதே ஒரே வழியாக இருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை செவிமடுத்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கோரிக்கையை தாம் தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னதாக தம்மைச் சந்தித்த முன்னைய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதி…
-
- 10 replies
- 402 views
-
-
சுவிஸ் குமாரின் தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மாறுமொரு உறவினர் ஆகியோரின் விளக்கமறியல் திகதி நீடிக்கப்பட்டு உள்ளது.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்திய போதே நீதவான் அவர்களின் விளக்கமறியல் திகதியினை எதிர்வரும் 22ம் திகதி வரை நீடித்து உள்ளார். கடந்த மாதம் 4ம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் …
-
- 1 reply
- 481 views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பாக இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. சந்திரிக்கா காணாமற்போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளும் என தான் எதிர்பார்க்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். கடும் யுத்தம் நடைபெற்ற தென் ஆபிரிகாகாவில் தவறு இழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில்அவ்வாறு நடைபெறவாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் ஏனெனில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தவறு இழைத்தவர்கள் தாமாக முன் வந்து தமது …
-
- 0 replies
- 388 views
-
-
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 30 வருடகால யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய பல தமிழ் கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகள் கிழக்குமாகாணத்தில் இருக்கின்றபோதும் அது குறித்து கவனம் செலுத்தாத கிழக்குமாகாண சுகாதார அமைச்சு 90 வீதமான நிதி ஒதுக்கீடுகளை முஸ்லீம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் மத்திய அரசங்கத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கடந்த மாதம் 1 குழு கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து தமிழ் சிங்கள வைத்தியசாலைகளை பு…
-
- 0 replies
- 395 views
-