ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது -எஸ்.ஜெகநாதன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்…
-
- 27 replies
- 2.7k views
-
-
இலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து இலங்கை இசைத்துறையில் தனக்கென தனியானதொரு முத்திரை பதித்து வருபவர் ராஜ். அவரது பாடல்கள் யுடியூப் உட்பட சமூகவலைதளங்களில் வெகு பிரபலம். குறுகிய காலத்தில் தனக்கான ரசிகர் வட்ட த்தையே உருவாக்கி வைத்துள்ளார் ராஜ். கடந்த வருடம் அவர் வெளியிட்ட சகோதர மொழி பாடலான “யன தெனெக’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. யுடியூப்பில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகம் தடவை அப்பாடல் பார்க்கப்பட்டுள்ள நிலையில் அப்பாடல் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு ஒஸ்கார் நாயன் ஏ.ஆர்.ரஹ்மானும் வாழ்த்து தெரிவித்துள்ளமையாகும். ரஹ்மானின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக ராஜ்ஜிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மி…
-
- 6 replies
- 806 views
-
-
சீ.எஸ்.என். தொலைக்காட்சி ராஜபக்ஸக்களுக்கு சொந்தமானதல்ல – நாமல் ராஜபக்ஸ சீ.எஸ்.என். தொலைக்காட்சி ராஜபக்ஸக்களுக்கு சொந்தமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ஸவின் காதலி தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதாகவும் அதுவே அந்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் காணப்படும் தொடர்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ஸ அடிக்கடி தொலைக்காட்சி சேவைக்கு விஜயம் செய்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். காதலி ஒர் உதவியைக் கோரினாலும் எந்தவொரு காதலனும் அதனைச் செய்வர் என தெரிவித்துள்ளார். கார்ல்டன் என்ற பெயர் ராஜபக்ஸக்களினால் கா…
-
- 0 replies
- 266 views
-
-
மாகாண சபையைப் புறக்கணிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கண்டனம் மாகாண சபையைப் புறக்கணித்து மக்கள் சார்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வாயன்று தெரிவித்திருக்கின்றார். யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது மக்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். உதாரணமாக அரசாங்க அலுவலர்கள் இராணுவத்திற்குப் பயந்து மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்குவது மக்களைப் பாதிக்கின்றது என்றும் அவர் எடுத்துக் கா…
-
- 0 replies
- 210 views
-
-
தடை விதித்தவர்களே அதனை நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்மீது தடை விதித்தவர்களே அதனை நீக்கினார்கள். இத்தகைய நிர்வாக மனநிலை மாற்றம் வரவேற்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததையடுத்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த 20ம் திகதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவருக்கும் முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது முதலமைச்சரால் கடற்படை அதிகாரி மீது கடும் வார்த்தை பிரயோகங்கள் ப…
-
- 0 replies
- 380 views
-
-
மஹிந்தவை தொடர்ந்து ராஜித குடும்ப ஆட்சி : பதவியை மனைவியிடம் கொடுங்கள் : சங்கம் காட்டம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை வேறோடு அழித்த போதும் தற்போதுள்ள சுகாதார அமைச்சரின் குடும்ப ஆட்சியை அழிக்க முடியாதுள்ளது. தனது மனைவி மற்றும் மகனின் பேச்சுக்கு தலையாட்டுபவராக சுகாதார அமைச்சர் இருப்பாராக இருந்தால் குறித்த அமைச்சை அவரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு போகலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டு பொதுமக்களை நிர்க்கதிக்குள்ளாக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை. இதனாலேயே வெள்ள அனர்த்தங்களில் சிக்குண்ட மாவட்டங்களில் நாம் எவ்விதமான தொழிற…
-
- 0 replies
- 314 views
-
-
சிகரட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கேள்விகேட்டனர் : ஜனாதிபதி கூறுகிறார் (ப.பன்னீர்செல்வம்) அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை. இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை நினைவுபடுத்தினார். இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நான் சுகாதார அமைச்சராக கடந்த ஆட்சியில் 5 வருடங்கள் பணியாற்றினேன். இதன்போது எனக்கு அதிகளவில் கசப்பா…
-
- 0 replies
- 333 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பனருமான நாமல் ராஜபக்ஷ கூட்டாட்சியில் சிலருக்கு நீதி கிடைத்திருப்பினும் அரச அதிகாரிகளுக்கு நீதி தொடர்பாக பல பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளார். நேற்றைய தினம் ஒளிபரப்பு ஊடகமொன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே கூட்டாட்சி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேற்படி கருத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கையில், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல விதமான குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன. நாளை கைது செய்யப்படுபவர் தொடர்பாக இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து பகிரங்கமாக அறிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 250 views
-
-
சொல்வதைச் செய்கிறார்கள் இல்லை -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அமைச்சர்கள் இங்கு வருகின்றனர். உறுதிமொழிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை நடைமுறைப்படு…
-
- 0 replies
- 254 views
-
-
TNT வெடிமருந்துடன் நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் தடை செய்யப்பட்ட TNT ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், செவாய்க்கிழமை தெரிவித்தனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய TNT ரக வெடிமருந்தைக் கொண்டு சென்ற போது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் T…
-
- 0 replies
- 279 views
-
-
அரச மருத்துவர்கள் நான்கு மணித்தியால பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு கோரியும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய நியமனங்கள் தொடர்பிலான பட்டியல் தயாரிப்பில் பாரியளவில் சர்ச்சைகள் காணப்படுவதாகவும், அமைச்சர் ராஜித இந்த விவகாரத்தில் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள…
-
- 0 replies
- 209 views
-
-
சம்பூர் சம்பவத்தைக் காரணம் காட்டி கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரங்களை எவரும் பறிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் சம்பூர் கடற்படை அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு இடம்பெற்றது. இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில், "சம்பூர் மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் நாம் ம…
-
- 0 replies
- 252 views
-
-
இந்திய மீனவர்கள் 29 பேர் கைது ! சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேர் கல்முனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 29 பேரே இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அட்டாளைச்சேனை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அட்டாளைச்சேனை கடற்படை முகாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர மேலும் தெரிவித்தார். htt…
-
- 0 replies
- 233 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோபமடைந்த சி.வி.கே -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (31) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் எதிர்காலத் திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் தொடர்பில், திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளால் அனுமதி கோரப்பட்டது. இதற்காக திட்டங்கள் தொடர்பான கையேடு, கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. இதில் செங்குந்தா சந்தை கட்டடம் 25 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப…
-
- 0 replies
- 326 views
-
-
வலிகளைச் சுமந்த மண்ணிலிருந்து முதல் படைப்பாளி உருவாகவேண்டும்! கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்களது கலையை உலகிற்கு எடுத்துச் ச…
-
- 0 replies
- 181 views
-
-
போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் வடக்கில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வடக்கில், குறிப்பாக யாழ். குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதா…
-
- 0 replies
- 235 views
-
-
மட்டுவில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டன பேரணி (சசி) சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக் கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன் போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது . இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உ…
-
- 0 replies
- 199 views
-
-
கிளிநொச்சியில் வீட்டு கிணற்றில் எடுக்கப்பட்ட ஆயுதங்கள் : விபரங்கள் வெளியாகின கிளிநொச்சி, இரத்தினபுரம் பிரதேசத்தில் வீட்டு கிணற்றொன்றில் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாதவை எனவும் யுத்த காலகட்டத்தில் புதைக்கப்பட்டவை எனவும் இராணுவம் அறிக்கை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி, இரத்தினபுரம் பிரதேசத்தில் உள்ள வீட்டு கிணற்றொன்றில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது அங்கிருந்து ஒருதொகை ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற சம்பவம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குற…
-
- 0 replies
- 240 views
-
-
3 ஆம் திகதிக்குள் வட. மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி பணிப்பு வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது நோக்கில் அவர்களுடைய காணிகளை இனம்காணும் செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறுவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே ஜனதிபதி உரிய அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிகளை …
-
- 0 replies
- 314 views
-
-
இயக்கம்: செறீன்; சேவியர் | நடிப்பு: அன்னபூரணி, ஹரிஸ் மூஸா | படத்தொகுப்பு: பீ.லெனின் ஆண்டு-2016 | நீளம்-100 நிமிடங்கள் | நாடு-இந்தியா, இலங்கை | சான்றிதழ்-PG | வடிவம்-எண்மருவி (டிஜிடல்) யூன் 9, 2016 வியாழன் மாலை 06.00 மணி - பிரின்ஸ் சார்ளஸ் சினிமா, லண்டன் ... https://www.princecharlescinema.com/events/scars-of-tomorrow-muttvupulliyaa/ சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு போர் முடிந்ததன் பின்னதாக அங்கு என்ன நடக்கின்றது என்பதை அங்கிருந்தே சொல்கின்ற முதலாவது திரைப்படைப்பு இதுவாகும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இழப்புக்களி…
-
- 0 replies
- 586 views
-
-
“சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” விழுதுகள் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்: ஒலி - ஒளி வடிவில் செவ்வி இணைப்பு- “சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” என www.gtbc.fmல் "விழுதுகள்" நிகழ்வில் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132662/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 319 views
-
-
ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயிற்றுவிக்கப்பட்ட பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போதும் அரசியலில் உள்ளதாக ஈரோஸ் அமைப்பின் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கு ஆயுதப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டதில் ஈரோஸ் அமைப்புக்கு பாரிய பங்குண்டு. மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பஷிர் சேகுதாவூத், மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அயுப் கான், திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பஷிர் அமீர் ஆகிய மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆயுத மற்றும் அரசியல் ரீதியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 333 views
-
-
மைத்திரியுடன் இணைந்து செயற்படத் தயாராகிறார் மஹி்ந்த? [Tuesday 2016-05-31 09:00] மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அவர்கள் சில நிபந்தனைகளையும், யோசனைகளையும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டா…
-
- 0 replies
- 397 views
-
-
சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமை, முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ‘கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரியுடன் முரண்பட்டமையினால் முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்பட்டது. இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் சில ஊடகங்களும், அமைப்புக்களும் திரிபுபடுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்தை ஏற்படுத்த முற்பட்டன. குறிப்பாக இணையதளங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான கருத்த…
-
- 1 reply
- 183 views
-
-
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லிருந்து 6 ஆகக் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில், 24 வாக்காளர்களின் குறைவினாலேயே இந்த நிலைமைஏற்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2016ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கான பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த ஆண்டு தகுதியுடைய சகலரையும் பதிவு செய்ய வைப்பதன்மூலம், இந்த எண்ணிக்கை மாற்றத்தைச் சரி செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நிர்…
-
- 3 replies
- 531 views
-