ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன. மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயா…
-
-
- 7 replies
- 440 views
- 1 follower
-
-
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
15 NOV, 2024 | 06:47 PM கொழும்பு தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்கு பட்டியலில் 655,289 வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை முறியடித்துள்ளார். விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக பிரதமரின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய…
-
-
- 2 replies
- 531 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள் ரீ.எல்.ஜவ்பர்கான் நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட ம…
-
-
- 7 replies
- 625 views
-
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …
-
-
- 41 replies
- 2k views
- 2 followers
-
-
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வா…
-
-
- 15 replies
- 1k views
- 3 followers
-
-
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ! By Shana on Friday, November 15, 2024 “ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://www.battinews.com/2024/11/blog-post_170.html
-
- 1 reply
- 387 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் அடங்களாக 145 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. எனினும், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்கள…
-
- 2 replies
- 898 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய போராட்டம் தொடரும் - இரா.சாணக்கியன் பகிரங்கம் Vhg நவம்பர் 15, 2024 தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் எவ்வித மாற்றமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியில்(ITAK) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் களுவாஞ்சிகுடியில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் மேலும் தெரிவிக்கையில், இது என்னுடைய வெற்றி அல்ல ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களுடைய வெற்றியாகும். நாடு முழுவதிலும் திசைகாட்டி சின்னத்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் வாக்கு அதி…
-
- 0 replies
- 780 views
-
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி! Vhg நவம்பர் 15, 2024 நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளு…
-
- 10 replies
- 572 views
-
-
15 NOV, 2024 | 08:44 PM (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (15) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை முதன்முதலாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சக ஜனநாயக நாடாக, இந்தியா இந்த ஆணையை வரவேற்கிறது மற்றும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198886
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார். தற்போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என தெரிவிக்கின்றது. தேசியப்பட்டியல் எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் …
-
- 6 replies
- 615 views
- 1 follower
-
-
15 NOV, 2024 | 03:37 PM அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவ…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார். கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார். ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், ம…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
சரத்வீரசேகர -நிமால் தோல்வி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார் இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார். 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் 35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். https://www.virakesari.lk/article/198860
-
- 1 reply
- 878 views
- 1 follower
-
-
பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார். https://thinakkural.lk/article/312161
-
- 1 reply
- 320 views
-
-
பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு ஆறுமுகன் புவியரசன் பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன - 208,547 , கிட்ணன் செல்வராஜ்- 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார - 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார- 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். …
-
- 0 replies
- 853 views
-
-
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
-
-
- 8 replies
- 751 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளத…
-
-
- 3 replies
- 306 views
- 1 follower
-
-
15 NOV, 2024 | 10:02 AM ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/198851
-
- 2 replies
- 250 views
- 1 follower
-
-
15 NOV, 2024 | 12:02 AM பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198745
-
- 2 replies
- 503 views
- 1 follower
-
-
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198730
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார். வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார்! எல்போர்ட் நாடாளுமன்றமும…
-
- 3 replies
- 371 views
- 1 follower
-
-
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு! ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறம…
-
- 0 replies
- 211 views
-
-
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வியாழக்கிழமை (24) அம்பாந்தோட்டை, டீ.ஏ.ராஜபக்ஷ தேசிய பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். எமது அணிக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டைக் கட்டியெ…
-
- 3 replies
- 347 views
- 1 follower
-