Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெயாவின் தேர்தல் அறிக்கையில் இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை! இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டு வைத்த குறித்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் தமிழக…

    • 1 reply
    • 697 views
  2. வடக்கு மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது; விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திர ராஜா முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார். யாழ். வலயத்தில் இருந்து சும…

    • 1 reply
    • 249 views
  3. சக்கர கதிரையில் அவைக்கு வந்த எம்.பி -அழகன் கனகராஜ் நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30க்கு கூடியது. அவையில், இரு பக்கங்களும் நிரம்பியிருந்தன. குறைநிரப்புப் பிரேரணை மீது வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 38 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இரவு 10 மணியளவில், ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக நாட்hளுமன்றச் செயலாளர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம், இன்று வெள்ளிக்கிழமை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையிலெயே, அவையின் இரு …

  4. வாக்கெடுப்பை ஆராய சம்பந்தன் தலைமையில் குழு -அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்த் தரப்பினர்கள் எழுந்துநின்றுகொண்டு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தமையால், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய, சற்றுமுன்னர் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினர் வாத விவாதம் செய்தனர். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய் குறைநிறப்புத் தொகை பிழையானது என்றும் அத்தொகைக்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பின்னர், அறிவிக்கப்பட்ட பெறுபேறு தவறு என்றும் எதிரணியினர் சுட்…

  5. 114 கிலோ கேரள கஞ்சாவுடன் இந்தியர்கள் ஐவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய இந்தியர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக்கொண்டிருந்த மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்திய கடற்படையினர், அதிலிருந்து 114 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இந்த படகிலிருந்து இந்திய மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் பதினைந்து வயது…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இஸ்ரேல் உள்விவகார அமைச்சின் நடவடிக்கைகளை அந்நாட்டு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காலம் கடந்த விண்ணப்பம் என்ற அடிப்படையில் விண்ணப்பங்களை நிராகரிக்க உள்விவகார அமைச்சிற்கு அதிகாரம் கிடையாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளரின் புகலிட விண்ணப்பமும் மிகவும் நிதானமாக பரிசீலனை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்து ஒராண்டுக்கு பின்னர் விண்ணப்பம் செய்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் இஸ்ரேலிற்குள் பிரவேசித்த இலங்கையர் ஒருவரின் புகலிடக் கோரிக…

    • 0 replies
    • 291 views
  7. வடக்கில் 65000 வீட­மைப்புத் திட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாகக் கைவிட வேண்டும். அதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எடுக்க வேண்டும் என நேற்று சபையில் எதிர்­க்கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி.எம்.பி.யுமான அநுரகுமார திஸா­நா­யக்க தெரி­வித்தார். பிர­த­ம­ருக்கு வாக­னங்கள் கொள்­வ­ன­வுக்கு 6000 இலட்சம் ரூபாவை செல­வ­ழிக்கும் அரசு மக்கள் மீது வரிச்­சு­மை­களை அதி­க­ரித்­துள்­ளது என்றும் அவர் குற்றம் சாட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற குறை நிரப்புக் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அநு­ர­கு­மார திஸா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் வடக்கில் யுத்­தத்தால் …

    • 0 replies
    • 246 views
  8. இஸ்­லா­மிய ஷரீஆ வங்கிச் சட்­டங்­களை உள்­வாங்­க வேண்­டு­மென மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை நுண்­நி­தி­ய­ளிப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்; நுண்­நிதி அளிப்பு சட்ட மூலம் கொண்டு வரப்­பட்­ட­மைக்கு நாம் வர­வேற்­ப­ளிக்­கின்றோம். இலங்கை மத்­திய வங்­கிக்கு கீழ் நுண்­நி­தி­ய­ளிப்பு நிறு­வ­னங்கள் பதிவு செய்­யப்­பட்­டாலும் அவை தமக்கு விரும்­பி­ய­வாறே செயற்­ப­டு­கின்­றன. இதனால் சாதா­ரண பொது மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுக்­கின்­றனர். இவ்­…

    • 0 replies
    • 310 views
  9. நாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜாயல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் நீர்கொழும்பிலிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். இதில் 9 ஆண்களும் ஒரு பெண்ணும் மற்றும் 2 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk…

  10. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை கிராமங்கள் உவர் அடைந்து வருவதன் காரணமாக இக்கிராமங்களிலுள்ள குடிநீர்க் கிணறுகள் உவர் நீராக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்கிராமத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கும் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற சதுப்புநில உவராறு மழைக்காலங்களில் பெருக்கெடுத்து பரவுவதன் காரணமாகவே ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்கள் உவர் அடைந்து வருகின்றன. உவர் பரம்பலைத் தடுப்பதற்கு அணைகள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள் புதுக்குடியிருப்ப…

    • 1 reply
    • 339 views
  11. அமைச்சர் சுவாமிநாதன் - கூட்டமைப்பு எம்.பிக்கள் சொற்போர் உக்கிரம்! போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது. மாதிரி வீடு அமைக்கப்பட்டது முதலே இந்த முறுகல்நிலை இருந்து வருகின்றது. குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கு முட்டுக்கட்டைகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் சுவாமிநாதன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் வன…

  12. சிறீலங்கா பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுஜித் மானவடு இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெஸ்பேவவில் நேற்றுமுன்தினம் காலையில், இவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமானப் பணியொன்றை மேற்பார்வையிடுவதற்காக சென்றவேளை தலையில் மரக்குற்றியொன்று விழுந்து மேஜர் ஜெனரல் சுஜித் மானவடு படுகாயமடைந்தார். படுகாயமடைந்த சுஜித் மானவடு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே மூன்று மணிநேர நரம்பியல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து இன்று காலை மரணமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளா…

  13. 2,076 போத்தல் கசிப்பு, இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலை 03 மணியளவில் கட்டைக்காடுப் பகுதியில் தர்மபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.டி.என் சத்துரங்க தலைமையிலான விசேட குழு, குறித்த பிரதேசத்துக்குச் சென்று நடத்திய சோதனையில் 08 கசிப்பு பேரல்களிலிருந்த 2,076 போத்தல் கசிப்பு கட்டைக்காடு குளத்திலுள்ள புற்பற்ரைக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/171556#sthash.zUw2wQks.dpuf

    • 0 replies
    • 225 views
  14. இன்று சபையில் கழன்று விழுந்த பொத்தான் ; நாளை பல்­லா­கவும் மாறலாம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் சபையில் இடம்­பெற்ற மோத­லின்­போது கழன்று விழுந்த பொத்தான் யாரு­டை­ய­தென கண்­ட­றி­வ­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெனக் கோரிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் துஷார எம்.பி. உரி­மை­யாளர் யார் என்­பதை கண்­ட­றி­வ­தற்­காக அந்த பொத்­தானை சபையில் சமர்ப்­பித்தார். அத்­துடன் குறித்த பொத்தான் யாரு­டை­யது எனக் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் எதிர்­கா­லத்தில் பொத்தான் பல்­லாக அல்லது கையாக மாறும் நிலை­மையும் ஏற்­ப­டலாம் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற நுண் நிதி…

  15. காணாமல் போனோர் தொடர்பில் காரியாலயம் : 7 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு [ Friday,6 May 2016, 02:45:32 ] காணாமல் போனவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் காரியாலயம் தொடர்பில் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைப்பதற்கு காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் குழு தீர்மானித்துள்ளது. இந்த கோரிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படவேண்டிய கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் ஐ.பி.சி செய்திக்கு தெரிவித்தார். கலந்…

  16. மைக்ரோ ஃபினான்ஸ் எனப்படும் நுண்கடன் நிதி நிறுவனங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதனை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இத்தகைய நுண்கடன் நிறுவனங்களால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கடந்த சில வருடங்களாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாகவும் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட…

  17. ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான், மஹிந்தவுக்கு எதற்கு இராணுவம்? - சரத் பொன்சேகா கேள்வி [Wednesday 2016-05-04 07:00] 'அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்' என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். 'அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்' என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். நாடாளும…

    • 3 replies
    • 555 views
  18. அரசாங்கம் தப்பியது -அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற 5 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பியது. பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்தன. - See more at: http://www.tamilmirror.lk/171509/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A4-#sthash.5Rf23W14.dpuf

  19. மட்டக்களப்பு எல்லையில் அத்துமீறிய சிங்களக்குடியேற்றம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து அப்பிரதேசத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவொன்று இன்று காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்தனர். இதில் மட்டக்களப்பு செங்கலடிப்பிரதேச செயலர் பிரிவு மற்றும் கிரான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்ச…

    • 0 replies
    • 690 views
  20. வைத்தியத்துறை உட்பட பல்வேறுபட்ட துறைகளில் 30,000பேருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான உடன்படிக்கையொன்று இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது. அமெரிக்க வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு பதிவு பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களிடையே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தின்போது இலங்கை சார்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஜி.எஸ்.விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர். தாதியர்களாக இணைக்கப்படுபவர்கள் 3வருட கால ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் முதலாவது குழு விரைவில் அ…

    • 0 replies
    • 306 views
  21. ஒக்சிஜன் பைகளைக் கடைகளில் வாங்குவதற்கு நாமும் இடமளிப்பதா, என்று சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி inShare சூழல் பாதுகாப்பு தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இன்று ஆரம்பமான, வாயு முகாமைத்துவம் தொடர்பான தேசிய செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மகாவெலி அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு, வாயு முகாமைத்துவ கேந்திர நிலையம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் என்பன இணைந்து இந்த…

  22. யாழில் இருவர் மீது வாள்வெட்டு! நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத நபர்கள் இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூரச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர். எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும் முயற்சியினை கைவிட்டு விட்டுச் செல்லும் போது, அந்த வீதியால் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ சாரதி மீதும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். மதிவேந்…

  23. 'ஹோட்டல் அறையில் ஒரு பெண் விடியும் வரை தங்கியிருந்தார்' அழகன் கனகராஜ் 'இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கியிருந்தார்' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் தம்புளையில் நடைபெற்ற இந்திய - இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது, ஜுலை 18ஆம் திகதி இரவு, இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்…

  24. வாக்கு வாதத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்ட ஐ.தே.கட்சி எம்.பிக்கும் ஐ.தே.கட்சியை சார்ந்த அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் சபையில் உறுப்பினர்களிடையே சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய் மூல கேள்வி பதில் நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி புத்திக பத்திரணவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பதிலளித்த போதே இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஆரம்பித்தன. கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கேள்வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.