Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கூட்டமைப்பை பிரிக்க சம்பந்தனும் துணை?" -எம்.றொசாந்த் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் 1ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என நடத்தப்பட்டாலும், அங்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் பு…

  2. மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர் (ப.பன்னீர்செல்வம்,-ஆர்.ராம்) மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார். உலகில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி., முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி…

    • 1 reply
    • 443 views
  3. தமிழ் மக்களின் இழப்புக்கான நீதி தேடலில் நோர்வே பங்களிப்பு வழங்கும் [ Wednesday,4 May 2016, 03:30:19 ] தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நோர்வே அரசிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு கௌரவமான இறுதித் தீர்வைப் பெற்றுத்தரவும், இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த மனித படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை கோருவதற்குமான தார்மீகப் பொறுப்பு நோர்வே அரசிற்கு இருப்பதை தமிழ் மக்கள் பேரவை…

  4. தமிழ்நாட்டுக்கு ஒரு கருணாநிதி; ஈழத்துக்கு ஒரு சம்பந்தர் என்று சொல்லும் அளவில் இருவரினதும் பக்காப்பொய்யும் நடிப்பும் உச்சத்தைத் தாண்டிவிட்டன. தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கணிக்காத ஒரு மனிதர்தான் சம்பந்தர் என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவில் அவரின் செயற்பாடு அமைந்துள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுங்கள் என்று கேட்டால், சிறைச்சாலைத் திறப்பு என்னிடமா? இருக்கிறது என்று ஒரு மனிதன்- தமிழன் கேட்பதாக இருந்தால் அதை மன்னிக்க முடியுமா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு கூறிய இரா.சம்பந்தர் யாழ்ப்பாணத் தில் நடந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,பங்காளிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர…

    • 5 replies
    • 500 views
  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி உடைப்பதற்காக பலர் முயற்சித்து வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இதுவே தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற முடியாமல் போனமைக்கான வரலாற்றுத் தவறு. இதனை நாங்கள் உணர வேண்டும். இதனை உணராதவரை எமது உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது' என்றார். 'எந்தப் போராட்டமும் ஓர் இரவில் முடிந்து விடுவதில்லை. எந்தப் போராட்டத்தாலும் ஓர் இரவில் எதனையும் பெற முடியாது. போராட்டம் என்பது த…

    • 0 replies
    • 270 views
  6. 'முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்':அமைச்சர் விஜயகலா விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இறுதிகட்ட போரில் ஏராளமானோர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்புகள் கூறுகின்றன. அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியாத் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை…

  7. கருணா பிளவை நீலன் கூறினாரா..? பிரபாகரன் தாமதம் ஏதனால்!! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய வட்டமேசை அமைந்துள்ளது. இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியற் துறைப் பெறுப்பாளர் தயாமோகன் அவர்கள் விளக்குகிறார். நன்றி ;தமிழரசு மற்றும் langkasri குழுமம் http://battinaatham.com/description.php?art=3800

    • 2 replies
    • 1.3k views
  8. பியால் நிசாந்த, பிரசன்ன ரணவீர ஆகியோரே என்னை தாக்கினர் (காணொளி இணைப்பு) எமது உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை நான் தடுக்கச் சென்றேன். இதன்போது பியால் நிசாந்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் என் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் சரத் பொன்சேகா உரையாற்றி கொண்டிருக்கும் போது எதிரணியினர் சிலர் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். இதன்பின்னர் சந்தித் சமரசிங்க எம்.பி.யை சில பாராளுமன்ற உறுப்பினர் நிலத்தில் தள்ளி தாக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய வைத்தி…

  9. சுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வடமாகாண விவசாய நீர் வழங்கல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள …

  10. இரு பெருபான்மை கட்சிகளும் சிறுபான்மையினரை நசுக்கலாம் : மனோ (எம்.சி.நஜிமுதீன்) நாட்டில் இன்று இரு பெரும்பான்மைக் கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்துகின்றன. அதில் நாமும் அங்கம் வகிக்கிறோம். எனினும் இரு பெரும்பான்மைக் கட்சிகளினதும் இணைப்பு சில வேளைகளில் சிறுபான்மையினரை நசுக்குவதிலும் ஆர்வம் காட்டலாம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி பரிபூரண ஆதரவை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரின் பிரதிநித்துவத்தை பாதிக்கும் வடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற…

  11. 'ஜனாதிபதியை நாங்கள் தேவதூதனாகவே பார்க்கின்றோம்' -எம்.றொசாந்த் 'வலி. வடக்கு பிரதேசத்தில் 6 மாத காலப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என கடந்த டிசெம்பர் மாதம் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே ஜனாதிபதியை நாங்கள் தேவதூதனாகவே பார்க்கின்றோம்' என வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்தோர் சார்பாக குணபாலசிங்கம் என்பவர் தெரிவித்தார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின எழுச்சிப்பேரணிக் கூட்டம், யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 'கடந்த மாதம் வலி. வடக்கு பிரதேசத்தில் நடேஸ்வரா கல்லூரி விடுவிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் செ…

  12. தமிழர்களின் நிலத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதை தடுப்பதற்காக இதில் ஆர்வம் உள்ளவர்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்து தமிழர்கள் விற்கும் நிலங்களை இந்த நிதியம் வாங்குவதன் மூலம் நிலம் பறிபோவதை தடுக்க முடியும் .கஷ்டமான விடயம் ,நிலம் பறிபோனபின் தீர்வு வந்தும் என்ன பிரயோசனம் இதற்குரிய ஆரம்ப நிதியாக கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினகள் ,மாகாண உறுப்பினர்கள் தாங்கள் விற்கும் வாகன பத்திரம் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை வழங்கலாம்அவ்வாறு செய்யும் பொது நாங்களும் எங்களுடைய பங்களிப்பை வழங்கமுடியும் பலரையும் ஊக்குவிக்க முடியும் .மண்ணில் உள்ளவர்கள் தான் முன்வரவேண்டும்

    • 3 replies
    • 614 views
  13. ஹிந்தி நடிகர்கள் இலங்கை கிரிக்கட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கட்போட்டி விரைவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் சுற்றுலா அபிவிருத்தி சபையும் பல்வேறு பிரசார வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் தற்போது ஹிந்தி நடிகர்களைக் கொண்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது. அந்தவகையிலேயே பொலிவூட் நட்சத்திரங்களையும் இலங்கை கிரிக்கெட் விற்பன்னர்களையும் கொண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துவதற்கு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஹிந்தி நடிகர்கள் பக்கத்திலிருந்து இது தொடர்பான ஏற்பாட…

  14. சரத்பொன்சேகாவின் உரைக்கு எதிராக கூச்சல், குழப்பம் ..! சபை நடவடிக்கை ஒத்திவைப்பு அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது எதிரணியினர் அவரை உரையாற்ற விடாமல் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். http://www.virakesari.lk/article/5914

    • 1 reply
    • 362 views
  15. மே தினத்தால் 20 மில்லியன் வருமான இழப்பு.! தென் அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யாமையல் மேதினத்தன்று 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மே தினத்தால் தெற்கு அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யப்படவில்லை. இதனால் 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தவோ துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது கட்சிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www…

  16. வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், கொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்கள் கலந்துக்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் யாழ். மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்ப…

  17. காயமடைந்த எம்.பி வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே, அவையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சற்றுமுன்னர் மாற்றப்பட்டார். - See more at: http://www.tamilmirror.lk/171312/%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-#sthash.ZEWYg1mW.dpuf

  18. விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன்!- கருணா [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 02:05.11 AM GMT ] தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளேன் என கருணா தெரிவித்துள்ளார். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த மாதம் உருவாக…

  19. எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட் சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினம் நேற்று திங்கட்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; 2005 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்தது. அதனை எவரும் மறுக்க முடியாது. தேர்தல்கள் நடந்துவிட்டால், ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருத முடியாது. தேர்தல்கள் நட…

  20. தமிழர்களுக்காக சிங்களவர்களை அழிக்கின்றார் வி.நிரோஷினி தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் தமிழ்த்தலைமைகளை சந்தோஷ-ப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கிறார்' என்று தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆலோசகர் பியகம சுசில தேரர், 'தான் ஒரு சிங்களவர் என்று ஜனாதிபதி உணர்ந்தால், இனவாதக் கருத்துக்களை பரப்பும் சி.வி, சம்பந்தன் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், …

    • 1 reply
    • 305 views
  21. எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – சித்தார்த்தன் – TNAஐ பிளவுபடுத்த தமிழரசுக் கட்சி முயற்சி – சிவாஜிலிங்கம்: TNAஐ பிளவு படுத்துவது யார்? சுரேஸ் கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்த தமிழரசு கட்சி எடுக்கும் முயற்சிகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கண்டும் காணாமலும் இருப்பதன் ஊடாக தமிழரசு கட்சியின் செயலுக்கு அவரும் துணை போகின்றாரா ? என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பினை சேர்ந்தவருமான எம்.கே.சிவாஜிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினம் என அறிவிக்கப்பட்ட மேதின நிகழ்வுகளில் தமிழரசு கட்சி தவிர்ந்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளி கட்சிகள் எவையும் பங்கு கொள்ளவில்லை. அது தொடர்பில், இன்று யாழ்…

    • 0 replies
    • 517 views
  22. வரட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு சிறுபோக நெற்செய்கையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வீண்விரயத்தைத் தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடரும் வரட்சி, சிறுபோக நெற்செய்கையில் தாக்கத்தினைச் செலுத்தாவிட்டாலும் கூட, குளங்களின் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் பயிர்ச்செய்கையின் இறுதிக்கட்டங்களில் நீர்; நெருக்கடி ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. எனவே, நீரினை சிறந்தமுறையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிறுபோகத்தில் பெரும் வெற்றியினை பெறமுடியும்' என அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/171221/%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%…

    • 0 replies
    • 375 views
  23. யாழ்ப்பாணத்தில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் விலையானது சடுதியாக அதிகரித்து, 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. செய்கூலி, சேதாரமற்ற கட்டித்தங்கமே இவ்வாறு விற்கப்படுகின்றது. எதிர்வரும் 9ஆம் திகதி அக்ஷயதிருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தங்கத்தின் விற்பனையானது அதிகரித்துக் காணப்படும். அதனை எதிர்வுகொண்டு தற்போது தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளதாக மக்கள் தரப்பால் கூறப்பட்டது. ஆனால், தாங்கள் கொள்முதல் செய்யும் தங்க பிஸ்கட்களின் வ…

    • 0 replies
    • 451 views
  24. விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி விங் கொமாண்டர் ஒருவர் உட்பட 4 விமானப்படையினருடைய மரணத்துக்குக் காரணமாக இருந்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் எதிரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொம்படி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் முதற் தடவையாக விசாரணைக்குக் கொண்டு வரப்…

    • 0 replies
    • 254 views
  25. சிறீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் இற்கு ஐநாவின் உதவிச் செயலர் பதவி வழங்கப்படவுள்ளது. ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டதின் உதவிச் செயலாளராக எரிக்சொல் ஹெய்ம் நியமிக்கப்படவுள்ளார் என Dagens Næringsliv நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் பாரிஸில் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பில் பணியாற்றி வருகின்றார். ஐநாவின் பொதுச் செயலர் பான்கிமூன் இது தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் ஐநாவில் வெளியிடவுள்ளார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தநிறுத்த காலப்பகுதியில் இரண்டு நாட்டினதும் சமாதானத் த…

    • 0 replies
    • 423 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.