Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் தமது காணி என அத்துமீறி நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மிரட்டி காணியை விட்டு வெளியே செல்லுமாறு கோரியதற்கிணங்க பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். இது தொடர்பாக குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதுடன், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி வழங்கினார். இதன்போது எறாவூர் பொலிஸார் சமூகம் அளித்திருந்தனர். குறித்த பிரதேத்தில் அத்துமீறி மக்களை மிரட்டிய முஸ்லிம்கள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவ…

  2. சம்பூர் நிலக்கரி மின் நிலையம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணை, நேற்றையதினம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.நாகேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவிருந்தது. கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கூடியது. சபை அமர்வுக்கு, ஆளுங்கட்சி சார்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். எதிர்க்கட்சி சார்பாக, முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்;வை உட்பட மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தனர். இந்…

    • 1 reply
    • 423 views
  3. யாழிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற காரில் நான்கு கோடி பெறுமதியான கஞ்சா! பிரதேசவாசிகளுடன் சேர்ந்து இருவரை துரத்திப் பிடித்த நவகத்தேகம பொலிஸார் (மது­ரங்­குளி நிருபர்) நவ­கத்­தே­கம, வன்­னி­அ­மு­ன­கொலே எனும் பிர­தே­சத்தில் சொகுசு வாகனம் ஒன்­றி­லி­ருந்து சுமார் 220 கிலோ கேரள கஞ்­சா­வுடன் இரு­வரை நேற்று காலை கைது செய்­துள்­ள­தாக நவ­கத்­தே­கம பொலிஸார் தெரி­வித்­தனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து குறித்த கேரள கஞ்­சாவை கொழும்பு நோக்கி எடுத்துச் சென்று கொண்­டி­ருந்த போதே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் கேரள கஞ்­சா­வுடன்…

  4. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக இதே நோக்கத்தில் விடுதலைப் புலிகளிள் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ராம் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் என்பவர் ராமின் நெருங்கிய சகா என்றும் இருவரும் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் வன்னி யுத்தத்தின் பின்ன…

    • 0 replies
    • 271 views
  5. யாழில் பெற்றோல் தாராளமாக விநியோகம் யாழில் பெற்றோல் தாராளமாக விநியோகிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 18 பவுஸர்களில் 118,800 லீற்றர் பெற்றோல் நேற்று எடுத்துவரப்பட்டதையடுத்தே யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கி தாராளமாக விநியோகிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ்.குடாநாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவியமையால் வாகன சாரதிகள் பாதிப்புக்குள்ளாகினர். ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்றைய தினம் தலா 6,600 லீற்றர் கொள்ளவுடைய 18 பவுஸர்களில் பெற்றோல் ய…

  6. வடமாகாண சபைக்கு எதிராக மனுத்தாக்கல் வடமாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான வடமாகாண சபையின் முன்மொழிவுகளுக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைப் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான வடமாகாண சபையின் முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த இரு கட்சிகளிடமும், வடமாகாண முதலமைச்சரிடமும் விசாரணை ந…

  7. வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்வதற்கு எவ்வித தடையும் கிடையாது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.ஒரு சில இணைய ஊடகங்கள் மக்களை திசை திருப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணைய தளம் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் பழைய செய்தியொன்று புதிய திகதியில் பிரசுரமானதாகவும் எனினும் வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல எவ்வித தடையும் கிடையாது என தெரிவ…

    • 1 reply
    • 178 views
  8. சம்பந்தனை கைது செய்வதனால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா – அகில விராஜ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை கைது செய்வதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் பிரவேசித்த சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும், சமஸ்டி முறைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றிய வட மாகாணசபை உறுப்பினர்களையும் கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஆட்சி அதிகா…

  9. இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்த கண­வனை மீட்­ப­தற்கு பல­ரிடம் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்தேன் முல்­லைத்­தீவு வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்த எனது கணவர் திரு­கோ­ண­மலை புல்­மோட்டை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பலர் தெரி­வித்­தனர். அவ்­வாறு தெரி­வித்த அவர்கள் கண­வனை மீட்டுத் தரு­வ­தற்கு பணம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர். அவர்கள் கோரிய பணத்­தினை வழங்­கி­யி­ருந்தும் இன்­று­வரை எனது கணவன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போன மச்­ச­யக்­காளை கண்ணன் என்­ப­வ­ரது மனைவி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளித்­தார். கிளி­நொச்…

  10. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுகின்றனர் மே 18ஆம் திகதி இடம் பெறவுள்ள முள்­ளி­வாய்க்கால் நினைவு தினத்தை குழப்­பவே முன்னாள் போரா­ளிகள் கடத்­தப்­ப­டு­வதும் விசா­ர­ணைக்கு அழைப்­பதும் இடம்­பெ­று­கின்­றது. கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற நட­வ­டிக்கை போன்றே தற்­போதும் இடம்­பெற்று வரு­கின்­றது என வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார். முன்னாள் போரா­ளிகள் கைது மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்­பான தென்­னி­லங்கை கருத்­துக்கள் தொடர்­பாக கேட்­ட­போது அவர் இதனைத் தெரி­வித்­தி­ருந்தார். குறித்த விட­யங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரி­…

  11. நாடு திரும்பினார் மஹிந்த.! தாய்லாந்துக்கு சுற்றுப் பயணத்தினை முடித்து கொண்டு ஜீ.எல்.பீரிஸ் உடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு 11.40 மணியளவில் அவர் யுஎல் 889 விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார் என எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார். தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  12. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவிளைப்பின் போது அடையாளம் காணப்பட்ட விபசார விடுதியிலிருந்த இரண்டு தாய்லாந்து பெண்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த இருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததையடுத்தே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில், மாசஜ் நிலையம் என்ற போர்வையில் இடம்பெற்ற விபசார விடுதியை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, இரண்டு தாய்லாந்து பெண்களும் உள்ளூரைச் சேர்ந்தை 7 பெண்களும் குறித்த விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்ப…

    • 0 replies
    • 579 views
  13. 'யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாக எனக்கும் முறைபாடுகள் கிடைத்துள்ளன. இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது' என யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார் யாழ். மாவட்ட சிவில் சமூக கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26)இடம்பெற்றது. இதன் போது மேற்படி விடயத்தினை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு மாவட்ட செயலாளர் கொண்டுவந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'குறிப்பாக கொள்ளை சம்வங்கள், வேறு பல குற்ற செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்கு வருவதில்லை எனவும் தகவல் வழங்கி 12 மணித்தியாலங்கள் கழித்து வருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன…

    • 0 replies
    • 215 views
  14. மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப் பிடித்த மேற்படி நபர், அவற்றின் தோல்களை உரித்து இறைச்சியாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர், சந்தேக நபர் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது, கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/170779…

    • 0 replies
    • 246 views
  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை மிகவும் அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சி முறைமையையே கோரி வருகின்றனர் என அவர் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கிரோட் வோல்ஸ்ட்ரோமை சந்தித்த போது தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை அவசியம் என வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த யோசனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/170764

    • 0 replies
    • 302 views
  16. பாலியல் துஷ்பிரயோகம்: காத்தான்குடியில் பொலிஸ் புலனாய்வாளர்கள் கைது இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இருவரும் வேறு பிரதேசத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்று காத்தான்குடி காவல்துறை கூறுகின்றது. கடந்த ஞாயிறன்று இரவு நடந்துள்ள இந்த சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் பெண், தற்போது மட்டக்களப்பு அரச மருத்துமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதான குறித்த ப…

  17. யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார் அமைச்சர் றிசாட் பதியுதீன். நேற்று திங்கட்கிழமை (25) சுபஹ் தொழுகையின் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லீம்கள் வாழும் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டார். மக்களை சந்திக்க சென்ற அமைச்சர் தலைக்கவசத்துடன் இருந்தமையினால் அநேகமானவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. எனினும் இறுதியாக அப்பகுதியில் தற்போதைய வெப்பம் காரணமாக தலைக்கவசத்தை கழற்ற வேண்டிய தேவை அமைச்சருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தலைக்கவசத்தை கழற்றியவுடன் மக்கள் அ…

  18. புலிகளின் முன்னாள் தளபதி ராம் தடுத்து வைப்பு புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவன், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையிலேயே பொலிஸாரினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170606/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AE-…

  19. “புலிகளால் பிடிக்கப்பட்ட என் இரண்டு பிள்ளைகளும் இல்லை" தாயார் உருக்கம்.. மகள் எங்கே எனக் கேட்டு அடிக்கச் சென்ற என் கணவனும் புலிகளால் கைது செய்யப்பட்டு பங்கர்வெட்ட அனுப்பப்பட்டார்” பாடசாலை சென்று வரும் போது விடுதலைப்புலிகளால் 2006,2008 இல் கட்டாய ஆட்சேர்பில் பிடித்துச்செல்லப்பட்ட எனது மகன் மற்றும் மகள் இருவருரையும் இதுவரையும் காணவில்லை என கிளிநொச்சி கந்தபுரம் கண்ணகிநகரைச் சேர்ந்த தாய் மனோன்மணி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போதே குறித்த தாய் இவ்வாறு தெரிவித்துள்ளார். 18 வயதுடைய மகன் யோகேஸ்வரன் திவ…

  20. சம்பந்தன், விக்னேஸ்வரனின் கூற்றுக்கள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை: அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் எதைச் சொன்னாலும் நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. வட, கிழக்கு பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மூலமே தீர்வு காணப்படும் என்று கல்வி அமைச்சரும் ஐ.தே.கட்சியின் தேசிய தொழிலாளர் சங்கத் தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஊடக ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கவே சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மாறாக ஊடகங்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதற்கு அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பிட்ட கோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

  21. சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயார் முறைப்பாடு? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் காணாமல்போனோா் தொடா்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமா்வில் தொிவித்துள்ளாா். இதனையடுத்து ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்திற்கு முறைப்பாடு செய்த தாயாருடன் சென்றனா். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று திங்க…

  22. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டிக்க கூட்டமைப்பு தீர்மானம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்று வவுனியா தாயக அலுவலகத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இது தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்…

  23. சிலர் சமஷ்டி என்றால் பிரிவினை என்பதால்தான் பிரச்சினை ஒரு அமைச்சர் என்ற முறையில் உயர்ஸ்தானத்தை வகிக்கும் சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இங்கு வந்தது எமக்கு பெருமை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட வட மாகாண முதலமைச்சர், நீங்கள் மத்திய வறுமானம் பெறும் நாடு என்ற ரீதியில் எங்களால் எந்த நன்மையும் செய்ய முடியாதுள்ளது என, சுவிடன் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த போது, நாடு என்ற ரீதியில் நாம் மத்திய வறுமானம் …

  24. 'பொலிஸார் தூங்குவதற்கே இடமில்லை, இதில் வெற்றிடங்களை நிரப்புவது எவ்வாறு' -சொர்ணகுமார் சொரூபன் 'பொலிஸார் தங்குவதற்கு, தூங்குவதற்கு நிரந்தரமான கட்டடமோ அல்லது காணிகளோ யாழ். மாவட்டத்தில் இல்லை. இருந்தும் எமது கடமைகளை தொடர்ந்து செய்கிறோம்' என்று யாழ். மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட சிவில் சமூக கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற போது பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 'யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் தற்காலிக கட்டடங்களிலும் வீடுகளிலும் இயங்கி வருகின்றன. பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீடுகள் தங்களுக்கு மீண்டும் வேண்டும் என உரிமையாளர்கள், நீதிமன்றில் வழக்கு தாக்கல் சௌ;துள்ளனர். புதிய காணிகளையும…

  25. துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்தில் தற்போது சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறுவதில்லை. சம்பந்தப்படும் சிறுமியின் சம்மதத்துடனேயே இடம்பெறுகின்றது என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற சிவில் சமூக குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில், பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறைப்பாடு என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.