Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடுவாழ் இலங்கையர்கள் 1,500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இரட்டைக் குடியுரிமைகளை வழங்கினார். இரட்டை குடியுரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளை கடந்த மகிந்த அரசு இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 6000 வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிக்கும் உரிமையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமைகளும் இரட்டைக் குரிமையைப் பெறுவோருக்கு கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் தகுதியானோருக்கு இரட்டைக் க…

  2. ஆனைக்கோட்டையில் இராணுவத்தினர் காணி அளவீடு; யாழ். பிரதேச செயலகம் முற்றுகை [ Monday,11 April 2016, 06:29:50 ] யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை - கூழாவடி பகுதியில் பொதுமக்களின் காணியை இராணுவத்தினர் அளவீடு செய்ய முயற்சித்ததைக் கண்டித்து, யாழ். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை 11 மணியளவில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது ஐபிசி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முதலாம் இணைப்பு யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை சுவீகரிப்பதற்கு, இராணுவத்தினர் அளவீடு செய்ய முற்பட்டபோது, பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து…

  3. "துட்டகைமுனு எல்லாளனின் வீரத்தை மத்தித்து சிலை வைத்தார். அதேபோன்று சிலை அமைக்க கோரி தனிமனித பிரேரணை" 11 ஏப்ரல் 2016 "துட்டகைமுனு எல்லாளனின் வீரத்தை மத்தித்து சிலை வைத்தார். அதேபோன்று சிலை அமைக்க கோரி தனிமனித பிரேரணை" துட்டகைமுனு எல்லாளனின் வீரத்தை மத்தித்து சிலை வைத்தார். அதேபோன்று சிலை அமைக்க கோரி தனிமனித பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றில் கொண்டு வரவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான ஒரு நாள் பிரகடனப்படுத்த…

  4. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கும் வியூகத்தில் மஹிந்த ராஜபக்ஸ? 10 ஏப்ரல் 2016 ஆவணப்படம்: அரசியலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் வியூகமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வகுத்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் கூட்டு அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். நல்லட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தின் அதன் வழியாக, தாம் அரசியலுக்குள் மீளவும் வலுப்பெறும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதி…

  5. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதிப்பத்திரங்கள் பறிமுதல் செய்ய முடிவு [ Monday,11 April 2016, 03:38:59 ] புதுவருட பிறப்பு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதி அனுமதிப்பத்திரங்களை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னரும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்து, மீண்டும் தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாநாயக்கு தெரிவித்துள்ளார். எனினும் இன்று முத…

  6. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவு வரைவு நிறைவேற்றம் [ Monday,11 April 2016, 02:55:56 ] தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வுத்திட்டம் ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே லக்ஸ்மன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் சில திருத்த…

  7. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை இந்த வருட இறுதிக்குள்? [ Monday,11 April 2016, 02:33:57 ] ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரீலங்கா நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட மேல் நீதிமன்றத்தின் ஊடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://ibctamil.com/news/index/21916

  8. Started by MEERA,

    • 1 reply
    • 576 views
  9. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு இன்று யாழ் பொதுநுலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றதன் பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ப.லக்ஸ்மன் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/A…

    • 2 replies
    • 422 views
  10. நீண்ட காலத்திற்கு பின்னர் அரசாங்கம் நல்ல காரியமொன்றை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அங்குனுகொலபலஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வற்கு சீனா பாரியளவில் உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் இந்த அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை முடக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீனாவை இந்தஅரசாங்கம் விமர்சனம் செய்திருந்த போதிலும் தற்போது சீனாவின் உதவியை நாட வேண்டியேற்பட்டுள்ளதாகத் தெரி…

  11. வட மாகாண முதலமச்சரிடம் பேச்சு மட்டுமே செயலில் எதுவுமில்லை என இந்து கலாச்சார மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நலன்கள் தொடர்பில் வட மாகாண முதலமச்சரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மக்களுக்கு 65000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை நிராகரித்து வட மாகாணசபை அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படவில்லை எனவும், ஜெனீவாவை திருப்திபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிட…

  12. விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை, இயற்கை பூச்சிகொல்லியைப் பயன்படுத்தி வந்த குடாநாட்டு மக்கள் தற்போது குறுகிய காலத்தில் அதிகளவான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும், மேற்கொண்ட முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்போது யாழ்குடாநாட்டு மக்கள…

    • 1 reply
    • 729 views
  13. வடமாகாண சபை நடவடிக்கை எடுக்குமா? குளோபல் தமிழ் செய்தியாளர் போருக்குப் பிந்தைய சூழலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றது. சட்டவிரோதமான இந்த மது உற்பத்தியை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவானவர்கள் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளனர். கசிப்பு உடலுக்கு கடும் தீயை ஏற்படுத்தும் சட்டவிரோத மதுபானமாகும். இதனால் பல மரண சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைய நாட்களில், கசிப்பு அருந்தும் பழக்கமுடைய, 50 முதல் 60 வரையானவர்கள் திடீர் மரண…

    • 0 replies
    • 267 views
  14. மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டூர் 14ஆம் கொலணியில் நடைபெற்ற நிகழ்வின் போது தேசியக்கொடி தலை கீழாக ஏற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை வேளையில், விவசாய ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார். இந்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர ஹாபிஸ் நசீர் அஹமட் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். ஆனால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் அது தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளதை உணர்ந்த பின்னர், மீண்டும் தேசியக்கொடி சரிவர ஏற்றப்பட்டது. …

  15. மட்டு மாவட்டத்தில் சில பிரதேசசெயலக பிரிவுகளில் காணித்துண்டுகள் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழங்கப்பட்ட காணிகளுக்கு தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களுக்கே இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலக பிரிவில் ஊத்துச்சேனை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஆத்துச்சேனை கண்டத்தில் 601 பேருக்கு காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 601 பேரில் 37 தமிழர்களுக்கும், 564 முஸ்லிம் மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கு மிகவும் குறைவாக வழங்கியதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதேவேளை, மட்டக்…

    • 0 replies
    • 383 views
  16. யாழ்ப்பாணம் தென்மராட்சி - வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு 9 மணியளவில் இடம் பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்திய கல்லூரிக்கு அரு கிலுள்ள வீதியூடாக குறித்த நால் வரும் பணித்துக் கொண்டிருக்கை யில் இடைமறித்த ஆயுத குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் நேற்றிரவு 11 மணியவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் …

    • 0 replies
    • 422 views
  17. முப்பது வருடகால யுத்தம் நிறைவடைந்து நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி நகர்த்திச் செல்லாமல் மீண்டும் இலங்கையில் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடவே வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலானவர்களும், தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலானவர்களும் முயற்சி செய்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்தார். இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டுவருதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் தேசிய இனப்பிரச்சினைக்கானத் தீர்வுத்திட்ட வரைபுக்கான முன்மொழிவுகளை கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மாகாண சபையில் சமர்ப்பித்தார். இதில் மொழிவாரியாக இலங்கை இரண்டு (தமிழ், சிங்களம்) மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் எ…

    • 0 replies
    • 445 views
  18. 65000 வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டது ; சீ.வி. விக்னேஸ்வரன் [ Sunday,10 April 2016, 05:10:27 ] 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் தான்தோன்றித்தனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்திட்டம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம், உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் எமது பங்குபற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், எம்மை மதிக்கவில்லை என்பதற்காக தாம் கோரவில்லை எ…

  19. சமஸ்டித் தீர்வை முன்வைக்கும் கூட்டமைப்புக்கு ஜேர்மனி ஆதரவு! [Sunday 2016-04-10 08:00] இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டித் தீர்வை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மனி உறுதுணையாக இருக்கும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டித் தீர்வை முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மனி உறுதுணையாக இருக்கும் என்று அந்த நாட்டு ந…

  20. திருக்கேதீஸ்வர ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை - மறைக்கப்பட்ட உண்மைகள் அம்பலம் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தளங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சொந்தமான பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டடுள்ள உண்மைகள் அம்பலமாகியுள்ளது. குறித்த ஆலயத்திற்கு சொந்தமான கன்றுகளுடன் கூடிய பசுக்கள், மற்றும் ஏனைய எருதுகளும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் விற்கப்படுவதை கண்டித்தும், வதை செய்யப்படுவதை கண்டித்தும், இறைச்சிக்காக வதை செய்யப்பட்ட ஆவினங்களின் ஆத்மா சாந்திக்கான ஒன்று கூடிய பிரார்த்தனை கடந்த 3 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போது ஆலயத்திற்கு சொந்தமான கன்றுகளுடன் கூடிய பசுக்கள், மற்றும் ஏனைய எருதுகளும்…

    • 0 replies
    • 551 views
  21. கோத்தபாய ஏன் அமைதியாக உள்ளார்? 2020ம் ஆண்டு ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வரவேண்டும் என்ற கனவில் கோத்தபாய ராஜபக்‌ச காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதைய அரசியல் களத்தில் முட்டி மோதாமல் அமைதி காக்குமாறு அவரின் ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் நெருக்கடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது மஹிந்த ராஜபக்‌ச தீர்த்து வைப்பர். எனவே வரும் காலத்தில் தீர்மானமிக்க தகுதியான வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ச நிறுத்தப்பட சந்தர்ப்பம் உண்டு. எனவே கோட்டா அமைதியாக இருந்து தனது மதிப்பையும் வாய்ப்பையும் அதிகரிக்க வேண்டும். தவிர மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜப…

    • 0 replies
    • 523 views
  22. மகிந்த ராஜபக்ச போன்ற தலைவரை உலகில் எங்கும் தேட முடியாது! - ஜனாதிபதி தேர்தலில் தோற்று வீட்டுக்கு செல்ல ஹெலிகப்டர், பாதுகாப்புக்கு தான் விரும்பிய எண்ணிக்கையில் இராணுவத்தினர் மற்றும் குண்டு துளைக்காத வாகனத்தை எடுத்துச் சென்ற தலைவரை வேறு எந்த நாட்டிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்டம் பிபிலை தொகுதியின் மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்றத்தில் கோஷமிட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர…

    • 0 replies
    • 530 views
  23. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லாமல் தனது மாவட்டத்தில் டியுசன் கொடுத்து கொண்டு உழைத்து கொண்டு திரிகிறார் என வாக்களித்த மக்கள் ஆதங்கப் படுகின்றனர். பாராளுமன்றம் செல்ல வாக்களித்த மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தனது தொழிலையே இவர் செய்து கொண்டிருப்பது மாவட்ட மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. அண்மையில் இவரது டுயுசன் கட்டவுட்கள் நகர வீதி முழுவதும் காட்சிப் படுத்தப் பட்டிருத்தமை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருத்தது. பாராளுமன்றம் சென்று இன பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என கனவு கண்டார்கலாம் ஆனால் இலக்கணம் சங்ககாலம் சங்கமருவிய காலம் என தமிழரின் தீர்…

    • 14 replies
    • 1.9k views
  24. கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவுப் பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி, கல்வி ஆர்வலா்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. இந்த நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது. குறித்த பாடசாலையின் பொது அறிவுப் பரீட்சைக்கான கேள்வித்தாளில் “பசங்க” திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. பொது அறிவுக்கும் சினிமாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் இந்த பரீட்சைத்தாளில், குறித்த வினா உள்ளடக்க…

    • 27 replies
    • 3.1k views
  25. மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு வயல் பிரதேசத்தில் பொதுமக்கள் சிலருக்கு சொந்தமான வயல் நிலங்களை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அத்துமீறி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேற்படி பிரதேசத்தில் வயல் செய்கை நடவடிக்கையில் மேற்கொண்ட விவசாயிகள்வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து சாட்சியங்களை பதிவு செய்யும் முகமாக பொலிசார் குறித்த பிரதேசத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சகிதம் நேரடியாக சென்று சாட்சியங்களை பதிவு செய்தனர். இதன்போது அங்கு 2 ஜேசிபி இயந்திரங்கள் வயல் நிலங்களை துப்பரவு செய்யு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.