Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தலைகீழாக நின்று ஆர்பாட்டம் உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் சுயலாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் பல தடைவைகள் உடனடியாக, உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்கவில்லை. ஆகவே இன்று தலைகீழாக பிரதேச சபையின் முன்னால் நின்று தெரிவிக்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர் தெரிவித்தனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால…

  2. ஜனாதிபதி நாளை மட்டு விஜயம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்யும் ஜனா­தி­பதி அன்­றைய தினம் பிற்­பகல் 2 மணிக்கு ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு ள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் கைத்­தறி உற்­பத்தி தொழிற்­சாலை ஆகி­ய­வற்றை திறந்து வைக்­க­வுள்ளார் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் வருகை தொடர்­பாக ஆராயும் விசேட கூட்­ட­மொன்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தலை­மையில் ஏறா­வூரில் நடை­பெற்­றது. இதில் பாது­காப்பு துறை உய­ர­தி­கா­ரிகள…

  3. 80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன் – ஹெல உறுமய குற்றச்சாட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க, “வடக்கு மாகாண சபையை மீளமைத்து, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதற்கு விக்னேஸ்வரன் ஒத்துழைப்பை வெளிப்படுத்தவில்லை. …

  4. வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை முத்திரையிட்டு மூடப்பட்டது கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் முன்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கடத்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள், பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு, இந்த இரகசிய அறைக்கும் போடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் இந்த அறையை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீத…

  5. புத்தரின் போதனையை போதித்தாராம் சம்பந்தன்! – வியந்துபோனாராம் ரணில்! [Wednesday 2016-03-30 22:00] புத்தரின் போதனைக்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனக்கு ஞாபகமூட்டினார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார். புத்தரின் போதனைக்கு அமைய செயற்படாமல் விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை என்றும், விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரசமைப்பு தொடர்பான கருத்தரங்கை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட…

    • 1 reply
    • 511 views
  6. வீட்டின் உரிமையாளர் தப்பியோட்டம் என்கின்றனர் பொலிசார்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- சாவகச்சேரியில் வீடொன்றிலிருந்து தற்கொலைகுண்டு அங்கிகள், கிளைமோர் குண்டுகள், வெடிமருந்துகள் மீட்பு: சாவகச்சேரியில் வீடொன்றிலிருந்து தற்கொலைகுண்டு அங்கிகள், கிளைமோர் குண்டுகள், சி4 வெடிமருந்துகள் போன்றவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவினரின் குழுவினர் சோதனைகளை மேற்கொண்ட வேளை இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர். நூற்றிற்கு மேற்பட்ட 9 எம்எம் துப்பாக்கிரவைகளும், கிளைமோர் குண்டு பற்றறிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தப்பியோடி விட்டதாகவும் பொலிஸார…

    • 1 reply
    • 464 views
  7. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாமல் ஆட்சியாளர்கள் அதனை பந்தாடியமையாலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் தலைதூக்கியதுடன், பிரபாகரன் என்ற இளைஞர் ஆயுதமேந்தினார்'' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனவாத, பிரதேசவாத, குலவாத செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் கட்சியை விஸ்தரிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் அடிமட்ட கூட்டங்கள் மற்றும் இளைஞர் மாநாடுகளை நடத்தியிருந்தோம…

    • 0 replies
    • 303 views
  8. ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது. 1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார். தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய விஸ்வலிங்கம் அவர்கள் ஒப்பது வயதிலேயே தட்சணாமூர்த்தியை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளை அவர்களிடம் தவிலைக் கற்றுக…

    • 1 reply
    • 691 views
  9. யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். - http://www.tamilmirror.lk/169145/-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE…

    • 6 replies
    • 702 views
  10. நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை அமைக்கும் முயற்சி நடந்து வருவதை வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்புகள் உறுதி செய்துள்ளன. புத்தர் சிலை அமைப்பது என்றவுடன் ஆளுந்தரப்பு உடனடியாகத் தலையிட்டு கருத்துக்கூறுவது இலங் கையில் வழமை. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் ஆளுநரும் 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று நயினாதீவில் அமைப்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். எமது வடபகுதி முழுவதிலும் புத்தர் சிலைகளை அமைப்பதில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே. வட பகுதியில் எங்கு? அரசமரம் இருந்தாலும் அதைச் சுற்றி சுவரிட்டு புத்தர் சிலையை நிர்மாணிப்பது என்ற பணி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சியில் சர்வசாதாரணமாக நடந்தேறியது. வடபகுதியில் இராணுவ முகாம்கள் எங…

    • 1 reply
    • 606 views
  11. பலாலி தெற்கு கம்பாவத்தைப் பகுதியில் 3 சிறு பொதிகளில் கஞ்சாவை வைத்திருந்த 23 வயதுடைய பெண் மற்றும் 53 வயதுடைய ஆணொருவர் ஆகியோர் புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கம்பாவத்தை பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த ஒருவரை விசாரணை செய்ய முற்பட்ட போது, அவர் தன் வசம் வைத்திருந்த பொருள் ஒன்றை அருகில் நின்றிருந்த யுவதியிடம் கொடுத்துள்ளார். பொலிஸார் அதனை வாங்கிப் பார்த்த போது, அதற்குள் 3 சரைகளில் கஞ்சா இருந்துள்ளது. இருவரையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். - http://www.tamilmirror.lk/169166#sthash.TvVPMrnn.dpuf

    • 0 replies
    • 363 views
  12. கிளிநொச்சியில் அடிப்படைவசதியற்ற நிலையில் தட்டுவான்கொட்டிக் கிராமம்! குளோபல் தமிழ் செய்தியாளர்:- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தட்டுவான்கொட்டிக் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பின்தங்கிய கிராமம் ஆகும். ஏ-9 வீதிக்கு அண்மையில் இருந்தாலும் இந்தக் கிராமம் ஒரு பின் தங்கிய கிராமமாகவே இன்னமும் இருக்கிறது. 99குடும்பங்களைச் சேர்ந்த 347பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கல்வி, அடிப்படைவசதி, குடிநீர், போக்குவரத்து என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த மக்கள் 1980களின் இறுதிப் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுக்க மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போரினால் பெரும்பாலான காலங்கள் தமது சொந்த நிலத்தை விட்டு அகதிகளாக …

    • 0 replies
    • 274 views
  13. முல்லைத்தீவு மாவட்டம், காசிநகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து அங்கு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காசிநகர் பகுதியை அண்மித்த குமுழமுனை பகுதியில் கடந்;த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய காடழிப்பு பெரும் போராட்டங்களின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தும் காடழிப்பு நடைபெற்று வருவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இராணுவத்தின் இந்த காடழிப்பு நடவடிக்கை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்…

  14. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகித்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜெட்விங்க் குழுமத்தின் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார். அத்துடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் ஒன்றின் திறப்பு விழாவிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்தார். இதற்காக முன்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். எனினும் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்…

  15. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீர்கொழும்பு போருதொட்ட பிரதேச முஸ்லிம் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த மக்கள் சந்திப்பு போருதொட்ட தக்கியா வீதியில் இடம்பெற்றது. மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கு வாழ் முஸ்லிம் மக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வினவினர். இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா அங்கு உரையாற்றுகையில் பொதுபலசேனாவின் பிரச்சினை காரணமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ச அரசா…

  16. சர்வதேச நாடுகளில் பல்வேறு அதிகார பகிர்வு முறைகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று நடந்த அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கின்றேன். இதற்கு முன்னர் நாம் கொண்டு வந்த அரசியலமைப்பை விட வித்தியாசமானதாக இம்முறை அரசியலமைப்பு அமையும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதான இரு கட்சிகளும் இணைந்து தற்போது அரசாங்கம் அமைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த மக்…

  17. எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படாமை உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு எதிராக முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி இன்று ஜெனிவா செல்லவுள்ளது. ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்திடம் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு செய்யவுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியினை பிரதிநிதித்துவம் செய்து மூவரடங்கிய குழு நாளை அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தை சந்தித்து 53 பேரின் கையொப்பங்களுடனான முறைப்பாட்டை கையளிக்க உள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154419&category=TamilNews&language=tamil

  18. 'தமிழர்கள், வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி அங்கு குடியேறி குட்டித் தமிழகம் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோல, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகள் வாங்கலாம்' என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்;க்கிழமை (29) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆளுநர், நிகழ்வு முடிந்து வெளியில் வந்தபோது, 'அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு என்பவற்றுக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தொடர்பில் உங்கள் நடவடிக்கை என்ன?' என ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அ…

    • 0 replies
    • 468 views
  19. அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர். புதிய அரசியலமைப்பை சிறிலங்கா வரையவுள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், யுஎஸ்எயிட் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று வோட்டர் எட்ஜ் விடுதியில் இந்தக் கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட…

    • 1 reply
    • 507 views
  20. நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள் நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன. நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சிறிலங்கா கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார். கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோ…

  21. வட்டுக்கோட்டை தீர்மானம் - விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானம். ஈழத்தமிழ் இனத்தின் வெகுமானம் காக்கும் தீர்மானம். இது வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் வரலாறு படைக்கும் தீர்மானம். மா. க. ஈழவேந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (இலங்கை) நாடு கடந்த தமிழீழ அரச உறுப்பினர் (கனடா பேராளர்) இலங்கை என்பது ஒரு நாடு அல்ல. மாறாக இரு நாடுகளின் உள்ளடக்கம்- ஒரு தீவு. இலங்கையின் தென்பகுதி சிங்கள உடன்பிறப்புக்களுக்கு சொந்தம் என்பதை ஏற்கும் நாம் வடக்கை, கிழக்கை, வடமேற்கை கட்டி ஆண்டவன் தமிழன் என்பதற்கு வரலாறு தரும் சான்றுகள் கொண்டு நிலை நாட்டுகிறோம். விரிவஞ்சி மேலும் விளக்க விரும்பவில்லை. விஜயன்…

    • 1 reply
    • 527 views
  22. அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இரண்டு வர்த்தக நாட்களில் 1.1 சதவீதமான சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்துள் ளது. அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளி யிடப்பட்ட நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 145.56 ரூபா வாக காணப்பட்டதுடன் அதன் விற் பனை பெறுமதி 149.54 ரூபாவாக காணப்பட்டது. கடந்த வாரம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 143.91 ரூபாவாகவும் விற்பனை விலை 147.87 ரூபாவாகவும் காணப்பட்டது அதன் படி இரண்டு வர்த்தக நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 1.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வாக பதிவா…

    • 0 replies
    • 508 views
  23. சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு அமைத்தே தீருவோம். இப்படி உறுதிபடக் கூறியிருக்கிறார் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய. 'மின்தடை' தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட உறுதி பூணுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாட்டின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. எனவே மின் உற்பத்தி நி…

    • 0 replies
    • 267 views
  24. இந்திய அதிகாரிகளின் அறிவுரையின் பிரகாரம் பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியவள கண்காணிப்புப் பணிகளுக்கு அண்மையில் இந்தியாவின் சார்பில் சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி தியான் சாஸ்திரி தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர். இக்குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலைய சூழலானது சர்வதேச விமான நிலையமொன்றுக்கான சூழலைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பலாலியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும், அதற்காக காணி சுவீகரிப்பு மேற்கொள்வதை இடைநிறுத்துமாறும் குறித்த குழுவின் அறிக்க…

  25. இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரமும், சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டுமென ஸ்பெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரி போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்ஸ் லோபெஸ் டேனா தெரிவித்துள்ளார். கடந்த 23ம் திகதி மார்ச் மாதம் பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது. பிரித்தானிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரித்தானியாவின் பல தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்ப்பாட்டாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.