ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்! ஜனாதிபதி எச்சரிக்கை! வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவே செய்வார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலிகளின் தனி ஈழத்திற்கான கருத்தை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாது. தனிநாட்டுக்கான கோரிக்கையை செயலிழக்கச் செய்ய வேண்டுமாயின் இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசு என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைய…
-
- 0 replies
- 304 views
-
-
வவுனியா பிரதேசத்திற்கு இனவாத அமைப்பான சிங்க லே வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது. வவுனியா, அவுரந்துலாவ பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்க லே அமைப்பின் தலைவர் ஜம்துரே சந்திரரட்ண தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். அதன் பின்னர் அப்பகுதியில் சிங்க லே அமைப்பின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதார வைத்திய நிலையம் ஒன்றினையும் திறந்து வைத்தனர். அத்துடன் அப்பகுதியில் வாழும் விசேட தேவைக்குட்பட்டோர், வறுமைக்கோட்டிற்குட்பட்டோர், பன்சலையில் கல்வியைத் தொடரும் மாண…
-
- 0 replies
- 365 views
-
-
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கையில் கூறும் தகவல் என்ன? அவற்றில் உண்மை உள்ளதா? புலிகளின் தலைவர், பொட்டு அம்மானை கொழும்பு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் நம்பகத்தன்மை உள்ளதா..? நந்திக்கடல் பகுதிக்கு கருணா சென்று வந்தார் அவர் கூறியது என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர். http://www.tamilwin.com/show-RUmuyDRcSXlo0D.html
-
- 0 replies
- 615 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த சூழ்நிலையும் இன்று வடக்கில் இல்லை என்று யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். பலாலி பாதுகாப்பு தளத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இடையில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது தமிழ் ,சிங்கள ஊடகவியலாளர்கள் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி ஊடகத்துறை அமைச்சர் பரணவிதாரன மற்றும் முப்படை பிரதானிகளும் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலின் போது ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கி…
-
- 0 replies
- 338 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ ஆகியோரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது கோத்தபாய அல்லது சமலை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த யோசனைக்கு மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை என பல்லேதலவின்னவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=154297&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 459 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக் கூடியவரல்ல. அவ்வாறு செயற்பட்டால் அதற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை. தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகிறது. தலைவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதி தூய்மையானவர். தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அரசியல் செய்யவில்லை. அவ்வாறு செய்தால் அவருக்கு எதிராகவும் போராடுவதற்கு அஞ்சப் போவதில்லை” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews…
-
- 0 replies
- 427 views
-
-
சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், சம்பூர் பிரதேசம் சிறிலங்கா படையினரின் வசம் வந்ததையடுத்து, 2007ஆம் ஆண்டு, அங்கு பாரியதொரு கடற்படைத் தளத்தை சிறிலங்கா கடற்படை அமைத்திருந்தது. 237 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த இந்த தளம் 2013ஆம் ஆண்டு எஸ்.எல்.என்.எஸ் விதுர என்று பெயரிடப்பட்டது. பொதுமக்களின் காணியில் அமைக்கப்பட்டிருந்த இந்த தளத்தின், ஒரு பகுதி, கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டது. கடந்…
-
- 0 replies
- 335 views
-
-
எச்சரிக்கை : இலங்கையில் விஷ அமில மழையை பொழியும் அழகிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்றுவது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையில் அமையப்போகின்றது. முழு உலகமே அனல் மின் நிலையத்திட்டத்தை கைவிடுகையில் இலங்கை மாத்திரம் அதனை ஆதரிப்பதையிட்டு சர்வதேசம் வியப்படைந்துள்ளது. எவ்வாறாயினும் உத்தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்களுக்கும் இயற்கைக்கும் அழிவைத்தர போகின்றது என சூழலியளாலர் கலாநிதி எப். ரணில் சேனாநாயக்க தெரிவித்தார். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 529 views
-
-
மன்னாரில் விசாரணைகள் ஆரம்பம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக தற்போது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளுக்கு கலந்து கொண்டு சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேரூக்கு இவ்வாற…
-
- 0 replies
- 298 views
-
-
விசேட அனுமதியைப் பெற்று சந்தேக நபர்களை சந்திக்கலாம் -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கதைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரினார். இதன்போதே, ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக செயற்பட முயற்சிக்கின்ற போதிலும் அதற்கு தடையாக அவர்களில் சிலர் செயற்படுகின்றனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில் நேற்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் (26) நடைபெற்ற மூன்று அடுக்கு தொடர்மாடி கட்டட அமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், வீடமைப்பு தொடர்பில் அவர்கள் பல்வேறு ஆட்சேபனையான கருத்துக்களை முன்வைத்திருப்பது மன வேதனையளிக்கின்றது. சில ஊடகங்களும் அண்மைக்காலமாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கி…
-
- 0 replies
- 374 views
-
-
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தந்தையை இழந்த 1,459 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக, வலயக் கல்வித்திணைக்களத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளில் 32,245 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த கால யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் சுமார் 1,459 மாணவர்கள் தந்தையை; இழந்த நிலையில் உள்ளனர். இதனை விட 585 மாணவர்கள் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில், சிறுவர் இல்லங்களில் தங்கியிருந்து கல்வியை தொடர்கின்றனர். இந்தத் தொகையில் அதிகமானோர் யுத்த காலத்தில் தந்தையை மாத்திரம் அல்லது தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்தவர்கள் ஆவர். இவற்றை விட 444 மாணவர்கள் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்;களாக காணப்பட…
-
- 0 replies
- 273 views
-
-
வெள்ளரிப்பழத்துக்குச் செல்வாக்கு... வெப்பத்தைத் தணிக்கும் அதிக நீர்த்தன்மையுள்ள வெள்ளரிப்பழத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகமாக உள்ளமையினால் மாநகர சந்தை சதுக்கம் மற்றும் வீதிகள் என மக்கள் கூடும் இடங்களில் வியாபாரிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களைக் கட்டிக்கொண்டு விற்பனை செய்கின்றனர். சுமார் 2 கிலோகிராம் எடையுள்ள வெள்ளரிப்பழம் ஒன்று, ரூபாய் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகின்றது. இன்று திங்கட்கிழமை (28) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியால இடைவெளியில் மட்டக்களப்பில் 31.7 பாகை செல்சியஸ் …
-
- 0 replies
- 379 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை – சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படக்கூடியவரல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு செயற்பட்டால் அதற்கு எதிராகவும் குரல் கொடுக்க அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.தலைவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்…
-
- 1 reply
- 293 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை இலக்கு வைத்து விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு கட்சி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பேசப்படுகிறது. தாம் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் அரசியல் தனக்கு தற்போது கசந்து விட்டது எனவும் நிமல் சிறிபால டி சில்வா சில மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக…
-
- 1 reply
- 408 views
-
-
இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்காவான அம்பாந்தோட்டை, ரிதியகம சபாரி பூங்க நாளைய தினம் திறந்து வைக்கப்படவிருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் 2008 ஆம் ஆண்டு நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவுக்கும் செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கரில் அமைந்துள்ள, இந்த சபாரி பூங்காவில், சிங்க வலயம், உலக விலங்கின வலயம், ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்கள் உள்ளன. சபாரி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதுடன் நாளைய தினம் முதல் அவற்றை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyDRbSXloyA.html
-
- 1 reply
- 515 views
-
-
'ஈழக் கனவை எறிகணைகளால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது' '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்த ரீதியில் எல்.ரீ.ரீ.ஈ, தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை. எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பது, துப்பாக்கிகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது கேட்கப்ப…
-
- 0 replies
- 731 views
-
-
தனிமைப்பட்டிருந்த இலங்கைக்கு இன்று வலுமிக்க நண்பர்கள்! ஒரு காலகட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை இன்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு வலுமிக்க நண்பர்கள் இருப்பதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். சுதந்திரத்துக்கு பின்னர் கட்சி பேதங்களால் பிளவுப்பட்டிருந்த இலங்கையில் மாற்று அரசியல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,ஜனாதிபதித் தேர்தலின்போது தம்மை பொதுமக்கள் தெரிவுசெய்ததன் அடிப்படையில் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாக த…
-
- 0 replies
- 354 views
-
-
போர்ட் சிற்றியை நிறுத்தினால் பெருந்தொகை நட்டஈடு சீனாவுக்கு கொடுக்கும் நிலை ஏற்படும்! சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டத்தை இடைநிறுத்தினால் சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திற்கு மாதாந்தம் 30 தொடக்கம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்த வேண்டி வரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நட்டஈட்டுத் தொகை இலகுவான தொகையல்ல எனவும், இந்தத் தொகையை மாதாந்த அடிப்படையில் பல வருடங்களுக்கு செலுத்த வேண்டி வரும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். போர்ட் சிற்றி திட்டம் தொடர்பாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன எனவும், இவை இலங…
-
- 0 replies
- 196 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவுத்தூபி! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்த ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவு தூபியொன்று யாழில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊடக பணியின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ். மாநகரசபை மற்றும் சுப்பிரமணியம் பூங்கா சூழலில் பிரதான வீதியில் இந்நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 44 ஊடகவியலாளர்கள் ஊடக பணியின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நினைவாக குறித்த நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபியை நேற்றைய தினம் மாலை 6.30 மணிக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜ…
-
- 0 replies
- 287 views
-
-
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினால் தொடர்ந்தும் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேபோன்று பொதுநலவாய மாநாடு ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட போது அம்மாநாட்டில் கலந்துகொள்ள பல வெளிநாட்டு தலைவர்கள் தயக்கம் காட்டினர். பொதுநலவாய நாடுகளின் சில தலைவர்கள் தமது வருகையை தவிர்த்துக் கொண்டனர். இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட…
-
- 1 reply
- 649 views
-
-
இராணுவப் பகுதியில் பெண்களை அவதானமாக அழைத்து வந்திருக்க வேண்டும்! இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து இராணுவப் பகுதியில் பெண் பிள்ளைகளை அழைத்து வந்தபோது பெற்றோர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட விசாரணைகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற போது, காணாமல் போன தன்னுடைய மகள் தொடர்பில் தந்தை ஒருவர் சாட்சியம் வழங்கிய வேளை, அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு நகரத்தில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் 19 வயதான தன்னுடைய மகள் இறுதிப்போரின் ப…
-
- 10 replies
- 1.1k views
- 2 followers
-
-
யாழ். பொதுநூலகத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பொலிஸ் நெத' புகைப்பட கண்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை நேற்று பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். பொலிஸ் யாழ்ப்பாண பிரிவு மற்றும் குற்றப்பதிவு திணைக்கள புகைப்படக்கூடம் என்பன இணைந்து இக் கண்காட்சியை 26, 27, 28ஆம் திகதிகளில் யாழ். பொதுநூலகத்தில் நடத்துகின்றன. இக் கண்காட்சியில் 156க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான இனங்காணப…
-
- 0 replies
- 555 views
-
-
இந்திய வீட்டுத் திட்டத்தால் 'கடனாளியாவதாக' சம்பூர் மக்கள் கவலை போர் காரணமாக 10 வருடங்களுக்கு முன்னர் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் அண்மையில் தான் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வாழ்கின்றனர் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் இந்திய-உதவி திட்ட வீடுகளை பெறுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இந்திய-உதவி வீடொன்றை நிர்மாணிப்பதற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. 2009-ம் ஆண்டு செய்யப்பட்ட செலவின மதிப்பீட்டுத் தொகையில் 7 வருடங்கள் கழிந்த பின்னரும் வ…
-
- 0 replies
- 271 views
-
-
'செய்தியாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது': ஊடக அமைச்சர் இலங்கையில் முன்னைய அரசாங்க காலத்தைப் போன்று ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல்கள், கொலைகள் போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காது என்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உறுதி அளித்திருக்கின்றார். 'ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை. ஊடக சுதந்திரத்தை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம்' என்றார் கயந்த கருணாதிலக்க. 'எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்பட்டத்தக்க வகையில் எமது ஆட்சி நிர்வாகம் நடக்கும். ஊடகவியாரளர்களின் …
-
- 0 replies
- 363 views
-