Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு - செல்வநாயகம் கபிலன் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த அஞ்சலிங்கம் தர்மதேவா (வயது 60) என்ற ஒய்வுபெற்ற பேருந்து நடத்துநரே இவ்வாறு வெப்பப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர். கடந்த 15ஆம் திகதி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவரைப் பார்க்க வந்த இவர், உறவினர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு, அன்று மதியம் வந…

  2. மைத்திரி- மகிந்த ஒன்றிணைந்தாலே நாட்டுக்கு விடிவு! மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தற்போது அரசியல், பொருளாதார, சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வரவேண்டும். இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிக்குமார் ஈடுபட வேண்டும். …

  3. கிளிநொச்சியில் 80 வீதமான உத்தியோகத்தர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்! கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களில் தாம் உட்பட 80 வீதமானவர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தினால் கடந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து பிரிவுகளிலும் முதல் பத்து நிலைகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கப்பட்டதோடு, மாவட்டத்திலிருந்து பல்கலை கழக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 36 பேருக்காண கல்விக்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையா…

  4. 79 வயதான பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 24 வயதான விமானப்படை சிப்பாயை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/168885/-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.nnZ7MoWH.dpuf

    • 0 replies
    • 440 views
  5. முஸ்லிம்களை குறிவைக்கும் மஹிந்த அணி! - அடுத்த கூட்டம் பேருவளையில்!! மஹிந்த அணியான பொது எதிரணியின் அடுத்தகூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பேருவளையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசுக்கு எதிராக பொது எதிரணி உறுப்பினர்கள் கடந்த 17ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட சு.க. உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தினேஷ் குணவர்தன எம்.பி. விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இத…

    • 0 replies
    • 405 views
  6. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் இசைநிகழ்ச்சியா?... ஏ.ஆர். ரகுமானுக்கு எதிர்ப்பு ஏ.ஆர்.ரகுமான் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார். தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 23 ம் தேதி இலங்கையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் ஒருபக்கம் களைகட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. சென்னை முழுவதும் ஒரு அமைப்பு "தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டு சென்னை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ம…

  7. தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள தீர்வுத் தீட்டம் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக மட்டுமே இருப்பதாகவும், இந்த திட்டமானது முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டமாக இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்றுமாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவை மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து வெள…

  8. சம்பூர் அனல் மின் நிலையம் குறித்து இந்தியாவுடன் ததேகூ பேச்சு March 27, 2016 01:44 pm திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பூரில் மின்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில் அதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினை ஏற்படலாம் என்று அங்குள்ள மக்கள் என்னிடம் தெரிவித்ததோடு, இந்த விடயம் தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சுமத்தினர் என, சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அனல் மின்சார நி…

    • 1 reply
    • 397 views
  9. வடக்கு நோக்கிய பயணம் ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளவே! நாட்டின் எதிர்கால நலம் சார்ந்து வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்கம் நட்புறவினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்ற்பாடுகளினை முன்னெடுத்து வருகின்றார்கள். எங்களுடைய வடக்கு நோக்கிய பயணம் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளல் ஆகும். ஊடக அமைச்சர் என்ற வகையில் நான் தீர்வு வழங்கவுள்ளேன் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஊடகலியலாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஊடக செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கிறின் கிறாஸ் கொட்லில் இடம்பெற…

  10. இனவாத அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புகளில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளது? இனவாத அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன மற்றும் மதவாத அடிப்படையில் தூண்டுதல்களை மேற்கொண்டு அதன் ஊடாக பிளவுகளை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்கும் வியூகமொன்றை மஹிந்த தரப்பு முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.முப்படையினர் மற்றும் பௌத்த பிக்குகளே இந்த முயற்சிக்கான பகடை காய்களாக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்…

  11. இலங்கை அணி வீரர்கள் விளையாடுவதனை பார்ப்பதில் பெருமிதம் - ஜனாதிபதி இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் திறமைகள் பெருமிதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருபதுக்கு 20 நடப்பு உலக சாம்பியன்களான இலங்கை அணி நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணியுடன் தோல்வியைத் தழுவி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் அணியை தைரியப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி டுவிட்டரில், நேற்றைய தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். வெற்றியோ தோல்வியோ இலங்கை அணி வீரர்களின் அபராமான திறமைகளை கண்டு களிப்பதில் தாம் பெருமிதம் அடைவதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த த…

  12. தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்! கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்? மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் சர்­வ­தேச பொறி­மு­றை­யினை நாடி­ய­போது அதனை தேசத்­து­ரோகம் எனவும் நாட்டைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்சி எனவும் முன்­னைய அர­சாங்கம் கடு­மை­யாக சாடி வந்­தது. எனினும், அந்த அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்து தற்­போது கூட்டு எதி­ர­ணி­யாக இயங்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது பாரா­ளு­மன்ற உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்து வரிந்­து­கட்டிக் கொண்டு சர்­வ­தே­சத்­தினை நாடப்­போ­கின்­றமை விசித்­திரமாக­வுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமது ஜன­நா­யக உரி­ம…

  13. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் இருக்கின்றார்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், தொடர்புடையவர்களை கைது செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கை வாழ் 30க்கும் மேற்பட்ட அடிப்படைவாத முஸ்லிம்கள் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையிலும் சவால்களை…

    • 1 reply
    • 296 views
  14. தனக்கு பணம் தேவையில்லை என்றும் தனது முன்னோர்கள் தனக்கான பணத்தினை தேடிக் கொடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். அம்பாறை- கஞ்சிக்குடியாறு தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்றக் கிராமங்களில் மீள்குடியமர்தப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘எனக்கு பணம் தேவையில்லை எனது மூதாதையர் பணம் கொடுத்துள்ளனர், நானும் 45 வருடகாலம் சட்டத்தரணியாக கடமையாற்றியவன். இறைவன் எனக்கு கொடுத்தது போதும் நான் உங்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை. அரசியல்வாதிகளிடம் இருந்து பணத்தை எடுக்கவில்லை மிக தெளிவாக இந்த மேடையில் சொல்ல…

  15. தொலைபேசியில் கதைத்த அண்ணா எங்கே -சண்முகம் தவசீலன் 'இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, கடைக்கு சென்ற அண்ணா காணாமல் போயிருந்தார். நாங்கள் அவரை பல இடங்களில் தேடியும் இல்லை. இதன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் பம்பைமடுவில் இராணுவமுகமில் இருப்பதாக தொலைபேசியில் கதைத்தார்' என சகோதரி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வின் 3ஆம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இடம்பெற்றது. தனது அண்ணா ஐந்து வருடங்களின் பின்னர் 2014ஆம் ஆண்டு தொலைபேசியில் கதைத்ததாக கூறி அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த சகோதரி கோரிக்கை விடுத்தார்…

  16. ஈஸ்டர் திருநாளில் ஒப்பற்ற அருள்கிட்ட பிரார்த்திக்கிறேன்.! மனித உயிர் ஒப்பற்றது என்பதனாலேயே அனைத்து தியாகங்களை விடவும் உயிர்த தியாகம் உன்னத தியாகமாகக் கருதப்படுகின்றது. மனிதாபிமானத்தையும் மிஞ்சிய தேவத்துவத்தினை அடைந்து கொள்வதற்காக யேசுக்கிறிஸ்துநாதர் செய்த மாபெரும் தியாகத்தின் புண்ணியத்தன்மையினை அனுஷ்டிக்கும் முகமாகவே உலகவாழ் கிறிஸ்தவர்கள் யேசுக்கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் மேலும், ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பு, கருணை மற்றும் கௌரவம் என்பவற்றிலேயே இயேசுக்சிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் மகிம…

  17. ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் இன்னொரு முயற்சி ஒற்றையாட்சிக்குள், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமை ஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டில் வெளியிட்ட கருத்து, மேம்போக்கானதாக ஒதுக்கிவிடத்தக்க ஒன்று அல்ல. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஒருபக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை அது உள்ளடக்கியதாக இருக்குமா, இல்லையா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒற்றையாட்சி பற்றிப் பேசியிருக்கிறார். மாகாணசபைகள், அதிகாரப்பகிர்வு, ஒற்றையாட்சி இந்த மூன்றும் தான் ஜனாதிபதியின் உ…

  18. கிளிநொச்சியில் வீடு தீக்கிரை கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஜீவா பரிகாரி வீதியில், நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் வீடொன்றிற்கும் கடையொன்றிற்கும் தீவைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் உயிர்த்த ஞாயிறு விசேட இரவுநேர வழிபாட்டிற்கு சென்றிருந்த வேளை, சில விசமிகளால் இந்த நாசகார வேலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதில் வீட்டிலிருந்த பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.அத்துடன், கடையிலிருந்த பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு,கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

  19. விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அவர்கள் அனைவரையும் நோயற்ற மக்களாக மாற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொரகஹகந்த வேலைத்திட்டத்தின் கீழ் மெதிரிகிரியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, விவசாயத்துறை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். சில விடயங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் இலாபங்களுக்காக விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தாது, அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளின் பொருளாதா…

  20. தமிழர்களிடம் சமஷ்டி என்ற பேச்சு வரும் போது தெற்கில் பிரிவினை வாதம் வலுப்பெறுகிறது! இனங்களுக்கிடையில் ஒற்றுமை என்று நாம் கருதுகின்ற போதிலும் தமிழர்களிடம் சமஷ்டி என்ற பேச்சு வரும் போது தெற்கில் பிரிவினை என்ற வாதம் வலுப்பெறுகின்றது. இந்நிலை சீர் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கை தகவல் திணைக்களத்தின் ஏற்ப்பாட்டில் வடமாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிபட்டறை நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் …

  21. இந்த ஆண்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைபுதிய அரசு காட்ட வேண்டும் என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்குத் தவறுமாக இருந்தால் சர்வதேசத்திலே எமது நிலைப்பாட்டை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.இவ்வாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த அரசு செய்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றோம். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இந்த அரசு செய்யும் என்பதற்காக சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றோம். அதில் தவறு இழைக்கப்படுமாயின், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் சென்று இந்தத் தீர்மானத்தை இல…

  22. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கான முற்கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அதிவேக வீதி மேற்பார்வை மற்றும் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதென அந்த பிரிவின் பணிப்பாளர் அனுர தம்மிக்க குமார கூறியுள்ளார். முற்கொடுப்பனவு முறையின் மூலம் வாகனங்கள் அதிவேக வீதியூடாக தொடர்ந்து பயணத்தை முன்னெடுக்க இயலும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த புதிய முற்கொடுப்பனவு முறையில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக வாகனப் பதிவு சான்றிதழின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திர பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவ…

  23. ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய சூழ்நிலையில் அனைவரதும் கேள்வியாக உள்ளது. அண்மையில் யாழ் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்து நீதிமன்ற வாசலையும் தட்டியுள்ளமை தான் பெற்றோர்களின் அண்மைய அதிர்ச்சிக்கு காரணம். இதற்கு உதாரணமாக அண்மையில் குறித்த பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நான்கு வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட முடியும். முதலாவது, பாடசாலை வளாகத்தில் இருந்த அதிபரின் வீடு (விடுதி) தாக்கப்பட்டமை. இரண்டாவது, தட்டாதெரு வாள்வெட்டு சம்பவம். மூன்றாவது, O/L மாணவன் ஒருவனின் வகுப்புக்குள் நுழைந்து…

    • 2 replies
    • 792 views
  24. இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர். மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி பார்க்கும் நிலையாகவே அமைந்துள்ளது. ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செ…

  25. யுத்தத்தில் எனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்து விட்டேன். மற்றைய மகன் காணாமல் போய்விட்டார். அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரை கண்டுபிடித்து தாருங்கள் பரணகம ஆணைக்குழுவிடம் தாய் ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். முல்லைத்தீவில் நடைபெறும் காணாமற்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு அதிகாரிகள் உங்களுடைய மகன் உயிரோடு இருப்பாரென நம்புகிறீர்களா என வினவியபோது, எனது மகன் உயிரோடுதான் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்தார். அவரை நாங்கள் தொடர்ந்து தேடுவோம், அதுவரை உங்களுக்கு ஏதாவது உதவிகள் கொடுப்பனவுகள் செய்ய வேண்டுமா என வினவியதற்கு, இல்லை நான் கொடுப்பனவை விரும்பவில்லை. எனக்கு பிள்ளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.