Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமரின் 67 ஆவது பிறந்ததினம் இன்று (படங்கள் இணைப்பு ) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று அலரிமாளிகையில் கொண்டாடினார். http://www.virakesari.lk/article/4524

  2. அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக அதிகார பகிர்வு கிடைக்கும். சி.வி.நம்பிக்கை அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அதனால் இரண்டு மாகாணங்களிலும் குடியேற்றங்களை மேற்கொள்ள கூடாது என மத்திய அரசாங்கத்தை கோருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபையில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெ…

  3. படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் குடும்பத்திற்கு இராணுவ குடியிருப்பில் வீடு? படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் குடும்பத்திற்கு இராணுவ குடியிருப்பில் வீடு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் குடும்பத்திற்கு வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இராணுவ குடியிருப்பு பகுதியிலையே வீடமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வவுனியாவில் இராணுவ குடும்பங்களுக்கு என இராணுவ குடியிருப்பு தொகுதி புதிதாக கட்டப்பட்டு எதிர்வரும் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த இராணுவ குடியிருப்பில் உள்ள வீடோன்றே படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்…

  4. சி.வி.க்கு சுகமில்லை -எம்.றொசாந்த் தனக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற 32ஆவது முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக நான் கலந்துகொள்ளவில்லை என்பது முற்றுமுழுதாக பொய்யெனவும், சுகயீனம் மாத்திரமே காரணம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 32ஆவது முதலமைச்சர் மாநாடு கடந்த 21ஆம் திகதி காலி ஹிக்கா ட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/168758/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B2-%E0%…

  5. சம்பந்தனால் முடியாதா? -எம்.றொசாந்த் 'வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்…

  6. யாழ். இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்களின் உடமைகள் மீது நடத்திய தாக்குதலானது கண்டிக்கத்தக்கது என கல்லூரியின் ஆசிரியர் கழகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தது. யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே ஆசிரியர் கழகம் இக்கண்டனத்தை தெரிவித்தது. இது குறித்து அக்கழகம் மேலும் கூறுகையில், கல்விப் பாரம்பரியத்தின் 125 ஆண்டுகள் கடந்தும் பல்லாயிரக்கணக்கான சமுதாய வல்லுனர்களை உருவாக்கி வருகின்ற யாழ். இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி கல்லூரி அதிபரின் வீடும் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டது. தற்போது புதன்கிழமை (23) கொக்குவில்…

  7. புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பதினோராவது சந்தேக நபரின் தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பதினோராவது சந்தேக நபரின் தாயார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தில் நேற்று புதன் கிழமை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டில் தனது மகனுக்கும் மாணவி கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது மகனை குற்றத்தடுப்பு பொலிசார் வேண்டும் என்றே வழக்கில் சிக்க வைத்து, தற்போது தனது மகனை அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தி வருகின்றார்கள் என குறிப்பிட்டு உள்ளார். மாணவி கொலை வழக்கு தொடர்பில் கடந்த 3ம் திகதி பதினோராவது சந்தேக …

  8. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க கொழும்பு தெரிவித்துள்ளார். “நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக மரண தண்டனை விதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறைச்சாலைகளில் இடப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரண தண்டனை கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 600 பேர் வரையில் மேன்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 30 பேர் பெண்கள் …

    • 2 replies
    • 573 views
  9. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டம் ஏப்ரலில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வகையில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கான யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதலாவது கூட்டத்தில் 7 பிரதித் தவிசாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்தோடு, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நீதியமைச…

  10. பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து தங்க நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவரை வவுனியாவில் இன்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திய குறித்த நபர் தன்னை ஒரு பணக்காரனாக அடையாளம் காண்பித்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும், கோடீஸ்வரனாகவும் முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதனை உண்மையென நம்பிய வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒ…

  11. டோர்ச் லைட்டுடன் அவைக்கு வந்தார் எம்.பி அழகன் கனகராஜ் அவைக்கு, டோர்ச் லைட்டுடன் நேற்றுப் புதன்கிழமை வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி, டோர்ச் லைட் வெளிச்சத்தை அங்கும் இங்கும் பாய்ச்சினார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சின் கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார். அவரது உரையின் நிறைவில் எழுந்த, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி, 'மின்சாரம் தடைப்பட்டமையால் மக்கள், பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அதனை நிவர்த்திக்க, அரசாங்கத்திடம் போதியளவான வேலைத்திட்டம் இல்லை. என்னிடம்…

  12. 'ஹிந்தி' மொழியால் சபையில் சிரிப்பொலி அழகன் கனகராஜ் 'சபாநாயகர் அவர்களே! உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? கேள்வி கேட்டிருக்கும் எம்.பிக்கு ஹிந்தி தெரியுமா? எனக்குத் தெரியாது', என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சரி, ஹிந்தி மொழியில் மூன்று அல்லது நான்கு வாக்கியங்கள் கூறுங்கள்' என, கேள்வி கேட்டிருந்த எம்.பியைப் பார்த்துக் கேட்டமையால் சபையில் நேற்று புதன்கிழமை (23) சிரிப்பொலி எழுந்தது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில கேள்விகளைக் கேட்டிருந்தார். கேள்விகளின் பிரகாரம், தமது விஜயத்தின் போத…

  13. இந்திய மீனவர்கள் மூன்று பேர் கைது -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், புதன்கிழமை (23) இரவு 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள…

  14. தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் அழகன் கனகராஜ் என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்' என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'பயங்கரவாதிகளிடம் யாழ்ப்பாணம் விழுந்த போது, அதனை மீட்டெடுக்க யாரும் முன்வரவில்லை. க…

  15. சீனாவுடன் புதிய திட்டங்கள் : பிரதமர் இலங்கையின் எதிர்காலத் திட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஆற்றியிருந்த உரை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பிரித்தானியா வெளியேறினாலோ மத்திய கிழக்கில் வீழ்ச்சி ஏற்பட்டாலோ அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த பிரதமர், கடந்த காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் முழுமையான விபர…

  16. யாழ். கண்காட்சியில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம்! இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ். பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய அரிய புகைப்படங்கள், இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமான மத்திய வங்கி மீதான…

  17. நாட்டின் சிலப் பகுதிகளில் மின் தடை லக்ஷபான முதல் பலாங்கொட வரையிலான அதிவலு கொண்ட மினச்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக நாட்டின் சிலப் பகுதிகள் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/4496

  18. பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் பலாலி விமான நிலையத்தை மேலதிக காணிகளை சுவீகரிக்காமல் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியிலுள்ள மக்கள் மேலதிக காணி சுவீகரிப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே விமான நிலையத்தை காணிசுவீகரிப்பின்றி தரமுயர்த்துவதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஏ. நடராஜனை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிலைய அதிகார சபைக்யின் ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலாலி விமான நிலையத…

  19. மன்னாரில் அதிகரிக்கும் பொலிஸ் நிலையங்கள்! நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் இன்று காலை வங்காலை பொலிஸ் நிலையம்' வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு ஏற்ப மன்னார் வங்காலை கிராமத்தில் புதிய பொலிஸ் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மன்னார்…

  20. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக மக்களின் காணி சுவீகரிக்கப்பட மாட்டாது! யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் போது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் நடராஜன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தின் ஓடு தளத்தை பெரிதாக்காது, விமான நிலையத்தை அபிவிருத்திச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் கடந்த 15 ஆம் திகதி இலங்கைக்கு சென்ற சென்னை விமான நிலைய பணிப்பாளர் தீபக் சாஸ்திரி உட்பட 5 உறுப்பினர்கள் அடங்கிய குழு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் போது தொழிற்நுட்ப ரீதியாக உ…

    • 1 reply
    • 437 views
  21. திறமைச் சித்தி பெற்ற மட்டு.புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் திறமை சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அருட்சகோதரி அருள் மரியா தெரிவித்தார். எமது கல்லூரியில் 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி 9 பாடங்களிலும் 9 ஏ திறமை சித்திகளை 14 மாணவிகளும் ,9 பாடங்களிலும் 8 ஏ சித்திகளை 16 மாணிவிகளும்,9 பாடங்களிலும் 7ஏ சித்திகளை 13 மாணவிகளும் திறமை சித்தி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கல்லூரியில் 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட…

  22. பிரித்தானிய தமிழர் பேரவையினரால் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 23 ம் திகதி மார்ச் மாதம் 2016 இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செயப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை சர்வதேச நாட்டுத் தலைவர்களுக்கு அறியப்படுத்தவும் அவர்களின் அழுத்தங்கள் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினையும் பெற்றுக் கொள்ளும் முகமாகவும் இன் நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டுள்ளது. இந் நிகழ்விற்கு அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தலைமை வகிப்பதுடன் பிரதம விருந்தினராக தெற்காசிய நாடுகளுக்…

  23. பிரஸல்ஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்துக்கு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154025&category=TamilNews&language=tamil

  24. கருங்கல்லால் பிரகாசிக்கவுள்ள திருக்கேதீச்சரம்! மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத்து திருத்தலத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் இடம்பெற்று வரும் ஆலயத்தின் உட்பிரகார மண்டபத்திருத்தப்பணியின் கருங்கல் பொருத்தும் வேலைகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி ஆலயத்தின் உட்பிரகார மண்டபத்திருத்தப்பணியின் கருங்கல் பொருத்தும் வேலைகளினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். இதன்போது இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.ஞானசோதி, திருக்கேதீச்சரத்து ஆலய சபையினர், ஆலய…

  25. அரசாங்கம் சட்ட ரீதியானது அல்ல! பௌத்த பிக்குமார் 48 பேரையும் 9 இராணுவத்தினரையும் சிறையில் அடைத்துள்ள தற்போதைய அரசாங்கம் சட்டரீதியான அரசாங்கம் அல்ல என படையினரை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒரு சட்டரீதியான அரசாங்கம் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்து காட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் சட்டரீதியானது அல்லாத எதுவாக இருந்தாலும் அதனை தகப்பன் பெயர் தெரியாத ஒன்று என்றே கருதப்படுகிறது. வெள்ளையர்களுக்க…

    • 3 replies
    • 696 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.