ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
தாஜூடினின் கொலைச் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/9440
-
- 0 replies
- 243 views
-
-
வடமாகாண சபையில் குழப்பம்! வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொண்டு வந்த பிரேரணையால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று ஆரம்பமாகியது. இதன்போது, 8 உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதத்தை பிரேரணையாக முதலமைச்சர் முனவைத்தார். இதன்பின்னர், வடமாகாண சபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வந்த உறுப்பினர்களில் முக்கியமானவரான கேசவன் சயந்தன் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தினார். …
-
- 0 replies
- 385 views
-
-
பயங்கரவாத தடைச் சட்ட கைதிகள் ஐவர் விடுதலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய கொழும்பு நீதவானால் இன்று புதன்கிழமை (24) விடுவிக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/166798/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-#sthash.qms6WP6m.dpuf
-
- 4 replies
- 495 views
-
-
இரானுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலைப் புலிகளின் சுமன் பண்ணை விடுவிப்பு:- 24 பெப்ரவரி 2016 முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற சுமன் பண்ணை கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளால் விவசாயப் பண்ணையாக நடாத்திவரப்பட்டது. 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் பண்ணையை கைப்பற்றி நேற்றைய தினம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்து தங்களது விவசாய நடவடிக்கைகளை நடாத்தி வந்திருக்கின்றனர். இன்றைய தினம் மேற்படி பண்ணையானது அங்கு இருந்த இராணுவ உயரதிகாரியினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நேரடி பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்ற போக…
-
- 1 reply
- 583 views
-
-
யானைக்குட்டி பரிசு: இலங்கை மீது வன விலங்கு ஆர்வலர்கள் விமர்சனம் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ அவர்களுக்கு இலங்கை அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். இலங்கை யானைக்குட்டி ( ஆவணப்படம்) இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜான் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள் ஐந்தே வயதான இந்த குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரிப்பது என்பது கொடுமையானது என்று கூறினர். நந்தி என்ற இந்த யானையை நியூசிலாந்தில் இருந்து வந்த விலங்கு மருத்துவர்கள் ப…
-
- 0 replies
- 434 views
-
-
கிளிநொச்சியில் வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் தலைமறைவு பொலீஸார் தேடுதல் கிளிநொச்சி பெரிய பரந்தன் தாரணி குடியிருப்பில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை பொலீஸார் தேடி வருகின்றனர். குடும்பத்தின் வறுமையை பயன்படுத்தி 14 வயது பாடசாலை மாணிவியான இந்தச் சிறுமயை கர்ப்பமாக்கிய நபர் தற்போது தலை மறைவாகியுள்ளார். புhதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார்;. தந்தையும் தாயும் கூலித் தொழிலுக்கு செல்கின்றவர்கள் எனவும், இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர் சிறுமியை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்ப…
-
- 0 replies
- 367 views
-
-
வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவாசிகள் கிழக்கு மாகாணத்தில் மூதூர், வெருகல் மற்றும் வாகரை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சில கிராமங்களில் ஆதிவாசி பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர் இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், தங்களின் வேட்டையாடும் உரிமைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் வாழும் ஆதிப் பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் வாழும் பிரதேச காடுகளில் வேட்டையாடுதற்கும் வேட்டையாடிய இறைச்சி உணவை சேமித்து வைப்பதற்கும் புதிய அரசியல் சாசனம் மூலம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் கர…
-
- 0 replies
- 428 views
-
-
சர்ச்சையில் மார்ஸ் சொக்லெட்: இலங்கையிலிருந்து மீளப்பெற தீர்மானம் : அதிர்ச்சியில் மக்கள் இலங்கை உட்பட 55 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மாஸ் சொக்லெட்டுகளை மீளப்பெறுவதற்கு மார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக மார்ஸ் சொக்லெட் தொடர்பில் நுகர்வோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் தனது இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்த, மில்லியன் கணக்கான மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) தொடர்பில் மீள் பரிசோதனை செய்யவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனது. மார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான ஸ்னிகர் சொக்கலேட்டில் சிவப்பு நிற பிளா…
-
- 0 replies
- 268 views
-
-
புலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் இந்தவருடத்தின் ஏபரல் மாத முடிவுக்குள் விசாரணை செய்து தீர்ப்புக்களை வழங்க அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி இதுகுறித்த தீர்மானத்தை இன்று அரிவித்தார். இதன்படியே புலிகள் அமைப்பில் இருந்த பலருக்கு எதிராக அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் மிக முக்கியமான 5 சம்பவங்கள் குறித்த வழக்குத் தீர்ப்பு இந்த வருடம் எப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படவுள்ளன. அனுராதபுரம் விமானப்படை தளத்துக்கு வான் வழியூடாகவும் தரை வழியூடாகவும் ஒரே ந…
-
- 0 replies
- 331 views
-
-
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: இந்தியா, இலங்கை பக்தர்கள் குவிந்தனர் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் கச்சத்தீவுக்கு சென்ற பக்தர்கள். படம் எல்.பாலச்சந்தர். கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் தொடங்கியது. இந்தியா இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை 4 மணியளவில் தொடங் கியது. இத்திருவிழாவை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் துணைத் தூதர் என்.நடராஜன், நெடுந்தீவு மறை மாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …
-
- 18 replies
- 1.1k views
-
-
தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத் தனியான முஸ்லிம் மாகாணமொன்று தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நடைபெற்ற அரசியல் சாசனத்திற்கான கருத்துக் கோரும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரங்களை கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கை மீள இணைத்தல் மற்றும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்குதல் குறித்த கோரிக்கைகளை தமிழர்கள் இன்னமும் கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று முஸ்லிம்களும் தாயக கொள்கைகளை கைவிட முடியாது எனவும் தனி மாகாணமொன்றின் மூலமே முஸ்லிம்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்த…
-
- 16 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை! யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்ப…
-
- 13 replies
- 885 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்தீர்வு வரைவு தயார்! - நாடாளுமன்றில் செல்வம் எம்.பி தகவல் [Wednesday 2016-02-24 07:00] இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கான தரமான வரைவு தயாராகவுள்ளது. தற்போது அதனை வெளிப்படுத்தினால் கடும் போக்காளர்கள் தவறாக பயன்படுத்தி இலாபம் அடைந்து விடுவார்கள் என்பதற்காகவே இரகசியம் காக்கப்படுவதோடு இராஜதந்திரமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கான தரமான வரைவு தயாராகவுள்ளது. தற்போது அதனை வெளிப்படுத்தினால் கடும் போக்காளர்கள் தவறாக பயன்படுத்தி இலாபம் அடைந்து விடுவார்கள் …
-
- 1 reply
- 317 views
-
-
ஜோன் கீயை வரவேற்ற போது... February 24, 2016 மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியுஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜோன் கீ நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். எதிர்வரும் 26ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=2061&mode=head
-
- 0 replies
- 497 views
-
-
ஆசிய பிராந்தியத்தில் இலங்கை பிரகாசிக்கும் ஔியாக தெரிகிறது! ஆசிய பிராந்தியத்தில் இலங்கை ஒரு உண்மையான பிரகாசிக்கும் ஔியாக தமது நாட்டின் பார்வையில் தெரிவதாக, நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்த ஜோன் கீ, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதன்பின்னர் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் சவாலான விடயங்கள் மற்றும் கடந்தகால ஊழல் போன்றவற்றை இலங்கை ஜனாதிபதி மிகவும் திறம்பட கையாள்வதாக நியூஸிலாந்துப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 412 views
-
-
பிரபாகரன்களை உருவாக்குதல் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப் போராட்டங்களை முன்னொடுக்கும் நோக்கிலானது அல்ல. மாறாக, தங்களுடைய அரசியல் ஆளுமைக் குறைபாட்டையும், பொறுப்பற்ற தனங்களையும் மூடி மறைப்பதற்கானது. ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், நேரடியாக தாக்கம் செலுத்திய அரசியல் பரப்பு முடிவுக்கு வந்து ஆறரை ஆண்டுகளாகிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் ஏ…
-
- 0 replies
- 453 views
-
-
29 ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம்! [Wednesday 2016-02-24 07:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் மே மாதம் முதல் வாரத்தில் தூதுக்குழுவொன்று இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அ…
-
- 1 reply
- 371 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த 16 இலங்கையர்கள் கைது சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றமையால் அந்நாட்டு விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 இலங்கைப் பிரஜைகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (23) கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கடந்த 2012ஆம் ஆண்டு சட்டவிரோமான முறையில் படகு மூலம்; அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். வாழைச்சேனை, உடப்பு, மட்டக்களப்பு, சிலாபம், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆண்டிமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 33 மற்றும் 40 வயதுக்குட்டவர்களே இவ்வாறு அவுஸ…
-
- 0 replies
- 315 views
-
-
வடக்கில் ஹர்த்தால்: இரண்டு மணிநேர கடையடைப்பு! இ.போ.ச பஸ்கள் மட்டும் சேவையில்! வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் முகமாக இன்று வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வவுனியா, யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்.வர்த்தகர்கள் இன்று…
-
- 1 reply
- 475 views
-
-
மாகாண அபிவிருத்தி அமைச்சராகிறார் பொன்சேகா! ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாளை அல்லது சனிக்கிழமையன்று மாகாண அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்யவுள்ளார். http://onlineuthayan.com/news/9368
-
- 0 replies
- 213 views
-
-
யாழ்.பிரதேச செயலரை இடமாற்றம் செய்க; இல்லையேல் தீக்குளிப்பேன்! யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேறி வாழும் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு, காணிப் பிரச்சினைகளுக்கு யாழ்.பிரதேச செயலர் பாரபட்சம் காட்டி வருகின்றார். இவரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் எமது மக்களின் நல்வாழ்வுக்காக நான் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என பொது மகன் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் கலந்துரையாடலின்போதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளு…
-
- 0 replies
- 341 views
-
-
வவுனியா மாணவி பாலியல் தாக்குதல், கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் ஹரிஸ்ணவி என்ற 13 வயது மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் பாலியல் குற்றம் புரியப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. வவுனியா ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரினார்கள். வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏ9 நெடுஞ்சாலையை மறித்து வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்து சாலை மறியலும் நடத்தப்பட்டது, வவுனியா பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் மதியம் ஒரு மணி…
-
- 2 replies
- 475 views
-
-
இலங்கை ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் என ஜெர்மனி நம்பிக்கை: 24 பெப்ரவரி 2016 இலங்கை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் என ஜெர்மனி அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ள பூரண அளவில் ஆதரவளி;க்கப்படும் என ஜெர்மனிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் முனைப்புக்களுக்கு சில காலம் எடுக்கும் என ஜெர்மனிய ராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அதிகளவான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஐரோப்பிய விஜயம் முதலீடுகளை மேல…
-
- 0 replies
- 301 views
-
-
ஹட்டன் – வட்டவளையில் வீடு திடீர் தாழ் இறக்கம்; 10 பேர் இடம்பெயர்வு [ Wednesday,24 February 2016, 05:20:17 ] ஹட்டன் - வட்டவளை பகுதியில் வீடொன்று இன்று விடியற்காலை முதல் திடீர் தாழ் இறங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த 10 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டவளை நகர பகுதியிலுள்ள இந்த வீடு 01 அடி அகலத்தில் திடீரென நிலம் தாழ் இறங்கியுள்ளது. இதனால் அருகிலுள்ள வீடுகள் மண்ணில் புதையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த வீட்டிலிருந்த 3 குடும்பங்கள் பாதுகாப்பு …
-
- 0 replies
- 299 views
-
-
மஹிந்த அமைத்த மைதானத்தில் திருமண வைபவங்களை நடத்த பத்தாயிரம் வாடகை [ Wednesday,24 February 2016, 03:16:09 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் சூரியவெவவில் நான்காயிரத்து 283 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திருமண வைபவங்களுக்கு வாடகைக்கு விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் குறித்த மைதானம் பத்தாயிரம் ரூபா கட்டண அறவீட்டுடன் திருமண வைபவங்களுக்கு வழங்கப்படுவதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்வி நேரத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாறிசி ஜயசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இது தொடர்பில் கேள்வி…
-
- 0 replies
- 330 views
-