ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
நாங்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நீதியினை வழங்கி வருகின்றோம்! சமூகம் பாதுகாக்கப்படவேண்டியது. அதற்காக நாங்கள் சுந்திரமாகவும் நியாயமாகவும் நீதியினை வழங்கி வருகின்றோம் என யாழ் மேல் நீதிமன்ற அதிபதி ம.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 10ஆவது ஆண்டு நிறை முன்னிட்டு “தசவிழா” நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், யாழ். பல்கலைகழகத்தில் ஒரு பிரிவாக கடந்த பத்து வருடங்களாக இயங்கி வருகின்ற சட்டப் பிரிவை இன்னும…
-
- 0 replies
- 362 views
-
-
ஆவா குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! மூவர் கைது; காயத்துடன் ஒருவர் தப்பியோட்டம் வாள்கள், கத்திகளுடன் முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுடன் யாழ்ப்பாணம் -இணுவிலில் நின்ற 'ஆவா' குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயத்துடன் தப்பித்தார். மூவரை கைது செய்து கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இணுவில் காரைக்கால் சிவன் கோயில் பகுதியில் நேற்று மதியமளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர் குழு ஒன்று ஆயுதங்களுடன் நடமாடுவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரை கண்டதும…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கைப் பயணம் குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் விளக்கமளிப்பார் அல் ஹுசேன் [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016, 02:28.03 AM GMT ] ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடரில், தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடரில் தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. பேரவையின் 31ஆவது கூட்டத் தொடரின் முதல் அமர்வில் நிகழ்த்தவுள்ள நீண்ட உரையில், செய்ட்…
-
- 0 replies
- 364 views
-
-
அடுத்த வருடம் கச்சதீவில் அழகிய ஆலயத்தில் வழிபாடு! திருப்பலியில் அறிவித்தார் யாழ்.ஆயர் அடுத்த வருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திடைய உற்சவத்தின் போது, கச்சதீவிலே புதிதாக அமைக்கப்பட்ட அழகிய அந்தோனியார் ஆலயத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றுக்காலை ஆலயத்தின் வருகை தந்த ஆயர், அங்கு திருச்சொரூப வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து திருப்பலிக்காக தயாராக முன் பலர் எ…
-
- 0 replies
- 255 views
-
-
ஜேர்மனி ஆட்சி முறைப்படி அதிகாரப்பகிர்வு? [Monday 2016-02-22 07:00] புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் விடயத்தில் ஜேர்மனியிலுள்ள ஆட்சிமுறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் விடயத்தில் ஜேர்மனியிலுள்ள ஆட்சிமுறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. குறிப்பாக அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்திலுள்ள அதிகாரங்களை அவ்வாறே வைத்திருப்பது என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் தி…
-
- 0 replies
- 526 views
-
-
அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பம்! [Monday 2016-02-22 07:00] அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதேவேளை, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதேவேளை, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதப் போர…
-
- 0 replies
- 349 views
-
-
திருகோணமலையில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை பயிர்ச்செய்கை ; அரச அதிபர் [ Monday,22 February 2016, 03:03:30 ] திருகோணமலை மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தென்னை பயிர்ச்செய்கை சபையின் திருகோணமலை மாவட்ட பிரதேச முகாமையாளர் கே.வை.எம்.சுமித் பண்டார தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட விவசாய குழுக்கூட்டம் அண்மையில் மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பான செயற்பாடுகள், நீர்ப்பாசன திணைக்கள நிலவரங்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. மாவட்டத்தின் 80 வீ…
-
- 0 replies
- 515 views
-
-
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை [ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2016, 05:17.08 AM GMT ] விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என கூறி சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது. மும்பாய் பொலிஸார் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இது தொடர்பில். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குமார்பிள்ளை என்பவரை கைதுசெய்தனர். குமார்பிள்ளைக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனவே. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக மும்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குமார்பிள்ளை பிரித்தானியா, தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள வ…
-
- 2 replies
- 520 views
-
-
பலாலி விமானநிலையத்தை பூநகரி நோக்கி நகர்த்த முடியும் [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 08:40.39 PM GMT ] மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற வேண்டும். அவர்களின் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்பட பின்னரே அபிவிருத்தி தொடர்பில் ஆராய வேண்டும் இவ்வாறு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விமான நிலையத்தை வேறுபகுதிக்கு மாற்றி அப்பகுதியை அபிவிருத்தி செய்யமுடியும் எனத் தெரிவித்தார். வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அன்மையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில், பலாலி விமானநிலையம் தொடர்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாகவே…
-
- 10 replies
- 1.1k views
- 2 followers
-
-
சிங்கள இரத்தம் கலப்படம் கொண்டது ; ரெஜினோல்ட் குரே [ Sunday,21 February 2016, 04:53:02 ] சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என வடமாகாண புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று …
-
- 1 reply
- 535 views
-
-
சமஷ்டி உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை! வடக்கு முதலமைச்சர் -உரிமையை கொடுத்தால் சேர்ந்தே வாழலாம் சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்துசெல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்துசெல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்…
-
- 2 replies
- 424 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் என்னை மீறியே இடம்பெற்றன :மஹிந்த (எம்.ஆர்.எம்.வஸீம்) நான் இனவாதியல்ல. என்னை முஸ்லிம்களிடமிருந்து தூரப்படுத்துவதற்கு சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பில்லை. என்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம் பெற்றதாக கூறப்படும் அநீதிகள் என்னை மீறி நடைபெற்றவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் முஸ்…
-
- 1 reply
- 489 views
-
-
வேடர், பறங்கியர் தெலுங்கரின் கருத்துகளும் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் இலங்கையில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகவுள்ள வேடர், பறங்கியர் மற்றும் தெலுங்கர் ஆகிய இனங்களின் கருத்துக்களும் எண்ணங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் கிழக்கு மாகாணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. குறி சொல்வோர் உலக தாய் மொழி தினமாகிய இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இந்தக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேடர், தெலுங்கர்…
-
- 0 replies
- 530 views
-
-
வடக்கிலும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை பிரயோகித்திற்கு எதிராக யாழ்ப்பாணத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பட்டதாரிகள் இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர்கள், எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நல்லாட்சி அரசாங்கம் தீர்வு திட்டத்தினை வழங்க வேண்டுமே தவிர, ஜனநாயகம் என்ற பேரில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், பட்டதாரிகளாகிய நாம் அரசியல்வாதிகளுக்கோ அதிகாரிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல, மத்திய மற்றும் மாகா…
-
- 0 replies
- 347 views
-
-
கரையோர இரட்டை வழி ரயில் பாதை காலி வரை நீடிக்கப்படும் கரையோர ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காக களுத்துறை வரை இருக்கும் இரட்டை வழி ரயில் பாதையை காலி வரை நீடிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கிய புதிய ஆறு ரயில் பயண சேவைகளை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய பயண சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், காலியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நெரிசல்களை இதன…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கைக்கு எதிரி நாடுகள் கிடையாது : ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கைக்கு தற்போது உலகில் எதிரி நாடுகள் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒஸ்ட்ரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான விஜயங்கள் பெரும் வெற்றியளித்துள்ளதாகவும் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியாக பல நன்மைகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாகவும் பாரியளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு நாடும் எந்தவொரு அமைப்பும் இலங்கைக்கு எதிரியாக செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 357 views
-
-
யாழில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பம் ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியது. “நட்புறவும், தெளிவும்” என்ற தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரணர்கள் ஜம்போரியில் பங்குபற்றுகின்றனர். இதுதவிர 5 வெளிநாடுகளில் இருந்து 17 தலைவர்களும் 110 சாரணர்களும் தேசிய சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்வதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 2000 முதல் 2500 வரையான சாரணர்கள் 4 பிரிவுகளாக முகாம்களை அமைத்து சாரணீய நடவடிக்க…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல் 'ஆர்ப்பாட்டம் செய்யாதே, ஊர்வலம் நடத்தாதே என்ற நேரடி அச்சசுறுத்தல்கள், அகாலவேளை தொலைபேசி அழைப்புகள், இரவு நேர கதவு தட்டல்கள்' (கோப்புப் படம்) இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரிடமிருந்தே தொலைபேசி மூலமாகவும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐம்பது பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து …
-
- 0 replies
- 353 views
-
-
இரண்டு பஸ் நேர்க்கு நேர் மோதி விபத்து! [ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2016, 05:21.05 AM GMT ] அட்டன் கொழும்பு பிரதான வீதியில் நேற்று (20) மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லதண்ணியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது. கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விப…
-
- 0 replies
- 336 views
-
-
அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும் - நிலாந்தன்:- 21 பெப்ரவரி 2016 இம்மாதம் 11ஆந் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி றோகான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தென்னிலங்கையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலின்போது றோகான் எதிரிசிங்க கென்னியநாட்டு உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். கென்யா நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக குட…
-
- 0 replies
- 290 views
-
-
ஹம்பாந்தோட்டையில் 1,000 ஏக்கரில் சீனா முதலிடும் 21-02-2016 09:53 AM ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு, சுமார் 1,000 ஏக்கர் நிலத் தொகுதி தேவை என்று சீனா கோரியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீன நாட்டின் முதலீடுகள், கூடிய விரைவில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/166563#sthash.WxMGK5FP.dpuf
-
- 0 replies
- 356 views
-
-
எக்நெலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் கோதபாய கைது செய்யப்படலாம் 21 பெப்ரவரி 2016 லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எக்நெலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எக்நெலிகொடவை கைது செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்படாமல் எஞ்…
-
- 0 replies
- 419 views
-
-
இராணுவ முகாம் கழிவுகளால் இறக்கும் மாடுகள்! - வடமராட்சி கிழக்கு மக்கள் அதிர்ச்சி Top News [Sunday 2016-02-21 09:00] வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டு பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில்- அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்பற்ற வகையில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை உண்ட பல மாடுகள் இறந்துள்ளன. இதனால் பிரதேச மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். இவ்வாறு, கழிவுகளை உட்கொண்ட 11 மாடுகள் உயிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டு பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில்- அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்…
-
- 0 replies
- 423 views
-
-
காணி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதில் சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கவிற்கும் இடையில் மோதல் [ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2016, 03:05.10 AM GMT ] காணி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் காணி அமைச்சு பதவி வெற்றிடமாகியுள்ளது. குணவர்தன வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சுப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது காணி ராஜாங்க அமைச்ச…
-
- 0 replies
- 276 views
-
-
விஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச! [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 08:07.33 AM GMT ] சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ச கடந்த முதலாம் திகதி பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார். விமல் வீரவன்ஸ வசித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால், கட்டப…
-
- 0 replies
- 287 views
-