ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
வடமாகாண நிபுணர் குழு தொடர்பில் விவசாய அமைச்சர் நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டும் என நீதவான் உத்தரவு மல்லாகம் நீதிமன்றில் வடமாகாண விவசாய அமைச்சர் முன்னிலையாகாத நிலையில், அடுத்த தவணையில் வடமாகாண நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் மன்றில் ஆஜார் ஆகி விளக்கமளிக்க வேண்டும். என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு இட்டுள்ளார். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்த பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை நீ அப்பகுதியினை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்…
-
- 3 replies
- 397 views
-
-
பூநகரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியும் -சொர்ணகுமார் சொரூபன் வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது என்பது மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும். பலாலியைச் சுற்றி இரு…
-
- 8 replies
- 937 views
- 1 follower
-
-
விடுதலை புலிகளின் தொடர்புடைய குண்டர் குழுவை சேர்ந்த ஒருவர் கைது [ Friday,19 February 2016, 04:52:15 ] தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்த தாக கூறப்படும் குண்டர் குழுவைச் சேர்ந்த குமார் பிள்ளை என்ற நபர் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மும்பையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் குறித்த நபர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வசேத பொலிஸாரான இண்டப்போலினால் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவித்தை தொடர்ந்து குமார் பிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியொருவர் கூறியுள்ளார். குறித்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளத…
-
- 2 replies
- 462 views
-
-
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படையணி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று முல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் 58ஆவது படையணியின் முகாமில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அரசு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலைமை காணப்படுகின்றது. …
-
- 48 replies
- 2.6k views
- 1 follower
-
-
உத்தேச இலங்கை- இந்திய ஒப்பந்தம்: எதிர்ப்பு வலுக்கிறது புதிய ஒப்பந்தம் மூலம் உள்ளூர் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறது அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவுக்கான ஒப்பந்தம் (ECTA) தொடர்பில் இலங்கையில் தொழில்சார் நிபுணர்களும் வணிகத்துறை சமூகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் அடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது தான் அதற்கு காரணம். இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக, மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், தொழில்நுட்ப தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வணிக சமூகத்தினரை உள்ளடக்கிய 45 பி…
-
- 0 replies
- 421 views
-
-
ஜனாதிபதியின் ஆஸ்திரிய விஜயத்தின் முதல் நாள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்திரியா நாட்டிற்கான விஜயத்தின் முதல் நாள் இன்றாகும். ஜேர்மனிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அந்த விஜயத்தை நேற்று நிறைவு செய்துகொண்டு ஆஸ்திரியா நோக்கி சென்றார். ஜனாதிபதி ஜேர்மனிக்கான தனது விஜயத்தின் போது அந்தநாட்டு சென்சியூலர் ஏஞ்சலா மேர்கல் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பல்வேறு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டது. இவேளை தனது ஆஸ்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட அதிகாரிகள் பலரை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். ஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்வி…
-
- 1 reply
- 381 views
-
-
அறிக்கைகளை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பொலிஸார் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இன்று வெள்ளிக்கிழமை (19) கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு காலமாகியும் எவ்வித அறிக்கைகளையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், அடுத்…
-
- 0 replies
- 274 views
-
-
கடமைகளை பெறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை,வடமாகாண ஆளுநர் செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/166471/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-#sthash.VjUtPB…
-
- 1 reply
- 368 views
-
-
சர்வதேச விசாரணை இடம்பெற்றால் மகிந்தவை தண்டிப்பர்; தனி நாடும் கோருவர் (விடக்கூடாது என்கிறார் விமல்) இறுதிப்போர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை நடத்துமாயின் அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்படுவார் என தெரிவித்த விமல் வீரவன்ச, இதன்மூலம் நிகழ்ந்த உயிரிழப்புக்களை நிரூபித்து தமிழர்களும் தனிநாட்டை கோருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்து விடும் என எச்சரித்துள்ளார். திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவத்தார். அவர் மேல…
-
- 2 replies
- 361 views
-
-
யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது! யாழ். பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் நேற்று இரவு 8மணியளவில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றைய இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களும் ஆவர். குறித்த நபரிடமிருந்து 26கிலோ கேரள கஞ்சாவுடன் ( 45 லட்சம் பெறுமதியான) இரண்டு மோட்டார் சைக்கிள்களும், மூவரின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்.நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு …
-
- 1 reply
- 348 views
-
-
சந்திப்பு... ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனில் வசிக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இலங்கைப் பிரஜைகளை, கடந்த 17ஆம் திகதியன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. (பட உதவி: ஜனாதிபதி செயலகம்) - See more at: http://www.tamilmirror.lk/166468/%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.A9EM8BtX.dpuf
-
- 1 reply
- 583 views
-
-
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டை வாங்கிக் கொள்ளத் தயார்!: வலி.வடக்கு மக்கள் தெரிவிப்பு! வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த எங்களை எங்களுடைய சொந்த நிலங்களில் சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக மீள்குடியேற்றுங்கள். இல்லையேல் சொந்த நிலங்களுக்குள் கடல் வழியாகவும், தரை வழியாகவும் உள்நுழைவோம். இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டையும் வாங்கிக் கொள்ள நாங்கள் தயார். மேற்கண்டவாறு வலி.வடக்கு மக்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு காலக்கெடு விதித்திருக்கின்றார்கள். நேற்றைய தினம் யாழ்.மாவட்…
-
- 1 reply
- 241 views
-
-
மூன்று வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை 3 வருடங்களாக, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லையெனக் குற்றஞ்சாட்டி, முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 மனுக்களும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர், அந்த 3 வழக்குகளியிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். - See more at: http://www.tamilmirror.lk/166465/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B7-%E0%AE%B0-%E0…
-
- 0 replies
- 266 views
-
-
விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிள் அடையாள அட்டையை பெறுவது தடுக்கப்படுகிறது: 19 பெப்ரவரி 2016 பலவருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிள் தேசிய அடையாள அட்டையை பெறுவதை வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த அதிகாரிகள் தடுப்பதாக மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம், கபே ஆகிய அமைப்புகளின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பிரதேச அதிகாரிகள் இதனை தடுத்துவருகின்றனர், பயங்கரவாத தடைச்சட்டத்தி;ன் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் சமூகத்திற்குள் மீள உள்வாங்கப்படுவதற்கு இந்த அதிகாரிகள் தடையாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில…
-
- 0 replies
- 448 views
-
-
இந்திய செய்மதி திட்டத்துக்கு இலங்கை மாத்திரம் உடன்பாடு [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2016, 04:38.43 AM GMT ] 2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியினால் முன்வைக்கப்பட்ட செய்மதி திட்டத்துக்கு இலங்கை மாத்திரமே உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் உட்பட்ட ஏனைய நாடுகள் இன்னும் தமது உத்தியோகபூர்வ உடன்பாட்டை வெளியிடவில்லை. இந்தநிலையில் குறித்த செய்மதி திட்டத்தை பயன்படுத்தி இந்தியா, தமது முக்கிய தரவுகளை கண்டுபிடித்துவிடுமா என்ற அச்சம் காரணமாகவே பாகிஸ்தான் அதற்கு உடன்பாட்டை வெளியிடாமல் இருந்து வருகிறது. இதேவேளை குறித்த செய்மதிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய் ஆய்வினை மேற்கொள்ள உள்ளது:- 19 பெப்ரவரி 2016 பிரான்ஸை சேர்ந்த பல்தேசிய சர்வதேச எண்ணெய் நிறுவனமான டோட்டல் அடுத்த மூன்று மாதகாலப்பகுதிக்குள் இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய் ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தியமைச்சர் சந்திமா வீரக்கோடி இதனை தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பான ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய் ஆய்வினை மேற்கொள்வதற்கான முயற்சிகள் 2012 ம்ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டன, எனினும் பல முட்டுக்கட்டைகள் காரணமாக இதற்கான ஓப்பந்தம் தற்போதே கைச்சாத்திடப்பட்டுள்ளது. டோட்டல் நிறுவனம் இதற்காக 25 மில்லியன் அ…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசியா உதவி [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2016, 03:57.13 AM GMT ] போரின் தாக்கங்களுக்கு உதவும் வகையில் மலேசிய நாடாளுமன்ற குழு ஒன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் தலைமையிலான இந்த உபகுழு, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் தொடர்பில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகள் தொடர்பில் ஆராயவுள்ளது. இதன் அடிப்படையில் தமது நாடு உதவிகளை மேற்கொள்ளும் என்று மலேசிய அரசாங்கம் …
-
- 0 replies
- 456 views
-
-
பன்முகக் கலைஞர் அரசையா காலமானார் கலைஞர் அரசையா யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அரசையா என அனைவராலும் அழைக்கப்படுகின்ற, பன்முகக் கலைஞர் திருநாவுக்கரசு தனது 90 ஆவது வயதில், புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். தமிழ்ப்பற்றாளராக அறியப்பட்ட அரசையா, தமது இளமைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் அபிமானியாக இருந்தார். கட்சி நடத்திய சட்டமறுப்பு உண்ணாவிரதப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார். பின்னாளில், அவர் மேடை நாடகங்களை எழுதும் எழுத்தாளராக, மேடை நாடக நெறியாளராக, திரைப்பட நடிகராக, புகைப்படக் கலைஞராக, வில்லுப்பாட்டுக் கலைஞனாக, சிற்பியாக, ஒப்பனைக் கலைஞனாக மிளிர்ந்தார் என்று பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார். கடந்த ந…
-
- 6 replies
- 876 views
-
-
22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு [ Friday,19 February 2016, 02:49:47 ] தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். எனினும் அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய்யாமல் தடுத…
-
- 0 replies
- 247 views
-
-
வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி! - மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் உறுதி [Friday 2016-02-19 07:00] வலி.வடக்கில் மீள்குடியேற்றமே விரைவில் இடம்பெறவேண்டும். அதன் பின் னரே,அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம், பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கில் மீள்குடியேற்றமே விரைவில் இடம்பெறவேண்டும். அதன் பின் னரே,அபிவிருத்தி …
-
- 0 replies
- 254 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் தவறானால்: அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் [ Friday,19 February 2016, 02:47:10 ] மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்க்கவே தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் ஒரு கருவியாக பயன்படுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் சர்வதேச நாடுகளிடம் இருந்து கிடைக்காத உதவி மைத்திரிபாலவின் ஆட்சியில் கிடைப்பது தொடர்பாக ஜ.பி.சி.தமிழ் செய்தி வினவியதற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு உதவிசெய்ய தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா அரசாங்க…
-
- 0 replies
- 323 views
-
-
சம்பூர் அனல் மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு [ Friday,19 February 2016, 03:02:19 ] திருகோணமலை சம்பூர் அனல் மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் துணை அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை சம்பூரிற்கு விஜயம் செய்து அனல் மின்நிலையம் அமையவுள்ள இடங்களை பார்வையிட்டனர். இதன்போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவிடம் அனல் மின்நிலையத்தை வேறிடத்திற்கு மாற்றம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர், மக்களுக்கோ சுற்றாடலுக்கோ பாதிப்பு இன்றி …
-
- 0 replies
- 230 views
-
-
Yarl IT Hubஇன் 2016ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான Yarl IT Hubப்பானது சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினூடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge-இனை வெற்றிகரமாக நடாத்தி வருகின்ற நிலையில், வட மாகாணத்தின் எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறையினரை இலக்காகக் கொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான Yarl IT Hub இன் முதலாவது ஒன்றுகூடலானது Yarl IT Hub-இன் புதிய தலைமுறையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஒன்ற…
-
- 3 replies
- 677 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் வவுனியாவில் தாக்குதல் வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு ஏழரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சை…
-
- 0 replies
- 321 views
-
-
விழுந்து நொருங்கியது கூகுள் பலூன் அதிவேக இணைய சேவைக்காக இலங்கை வான் பரப்பில் பயன்படுத்தப்பட்ட கூகுள் பலூன் நேற்று பழுதடைந்து விழுந்துள்ளது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சிகளுக்காக இலங்கையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முன்தினம் காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது. விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத வான் பரப்பில் நிலை கொண்டிருக்கும் இந்த பலூன் வான் வெளியில் பழுதடைந்து நேற்று மலையகத்தின் புஸ்சல்லாவ பகுதியில் விழுந்துள்ளது. இந்த பல…
-
- 1 reply
- 531 views
-