Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீீர்வுத்திட்ட வரைவை மாவை சேனாதிராசாவிடம் நேரில் கையளித்தது தமிழ் மக்கள் பேரவை! [Thursday 2016-02-04 07:00] தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரி…

  2. இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 03:28.35 AM GMT ] தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தனிப்பட்ட வைத்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது சம்மேளனம் கருத்துக்களை கூறவில்லை என்று குற்…

  3. காலிமுகத்திடலில் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் : கூட்டமைப்பு பங்கேற்பு, மகிந்த அணி புறக்கணிப்பு இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பா…

  4. கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு - சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு:- 04 பெப்ரவரி 2016 புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர். நீதியரசர்களான விஜித் கே.மலல்கொட, தேவிகா தென்னகோன் அடங்கிய குழு, வழக்கை எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. கே.பி என்றழைக்கப்ப…

  5. மஹிந்தவின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் உள்ளது (எம்.ஆர்.எம்.வஸீம்) அபேராம விகாரையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நாட்டில் மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்தன தெரிவித்தார். தற்போது மஹிந்த ராஜபக்ஷ்வின் முகத்தை பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கின்றுது. அவர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கோரி எங்களுடன் பாத யாத்திரை மேற்கொண்டவர். ஆனால் அதிகாரத்துக்கு வந்ததன் பிறகு அவரின் நிலைப்பாடு மாறிவிட்டது. தற்போது செய்த குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்து வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாள…

  6. ஊடகங்கள் முன் அழுது புலம்பியோ அராஜகம் செய்தோ தப்பிக்க முடியாது! சி.எஸ்.என். தொலைக்காட்சியை ஆரம்பிக்க 2,340 இலட்சம் ரூபா பணம் எங்கிருந்து வந்ததென மகிந்த ராஜபக்ஷ குடும்பம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்களின் முன் அழுது புலம்பியோ அல்லது அராஜகம் செய்தோ குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநயக்க தெரிவித்தார். நாட்டில் இடம்பெறுகின்ற கைதுகளின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். எந்தக் கைதுகளின் பின்னணியிலும் நாம் இல்லை. குற்றம் செய்பவர்களை மீது தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டுவோம். ஆனால் குற்…

  7. தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன் எம்.றொசாந்த் தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

  8. கே.பி வழக்கு:இந்தியாவின் ஒத்துழைப்பை பெற நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கே பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குக்கு இந்தியப் போலீசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இ…

  9. புலி - மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எத…

  10. தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பதில் பிரச்சினையில்லை - அரசாங்கம் [ Tuesday,2 February 2016, 04:19:58 ] சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபேயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் எந்தவொரு அரச நிகழ்விலும் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் இசைக்க முடியும் என பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியுள்ளார். தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது புதிய நிகழ்வு அல்லவென சுட்…

  11. பதவி விலகுகிறார் ஆளுநர் பளிகக்கார! : வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் குரே! வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிகக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிகக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார் எனக் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. h…

    • 6 replies
    • 709 views
  12. சர்ச்சைகளுக்கு மத்தியில் சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது Published by MD.Lucias on 2016-02-03 07:54:25 இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரை…

    • 7 replies
    • 818 views
  13. ரணில் - சரத் பொன்சேக்கா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடப்படும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/2750

  14. யாழில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், ஏ.ரீ.எம். இயந்திரத்தை மோதித்தள்ளிய பஸ்:படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில்; மாணவனின் நிலைமை கவலைக்கிடம்! 2016-02-03 20:52:12 (பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பாரிய வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை மோதி விட்டு அருகிலிருந்த தனியார் வங்கியின் தானியங்கி (ஏ.ரி.எம்) இயந்திரத்துக்கு ப…

  15. வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ். விஜயம் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். விஜயம் மேற்கொண்ட தூதுவர் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர் . இலங்கை நாட்டில் தூதுவராலயங்கள் இல்லாத நாடுகளின் தூதுவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.இவர்கள் வடமாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் வடபகுதிக்கான விஜயத்தை இன்றைய தினம் மேற்கொண்டிருந்…

  16. கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் காலவரையறையற்ற பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் தங்களது அலுவலகத்தினை மூடியதோடு 31 கிளைகள் மற்றும் இரண்டு உற்பத்தி ஆலைகள் என்பவற்றையும் மூடி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கூட்டுறவுச் சங்கங்களோடு ஒப்பிடுகையில் வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் முதன்மை நிறுவனமாக இயங்கிய சங்கத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் சங்கம் மிக வேகமாக வளர்ந்து வந்ததோடு, வட மாகாணத்தில் சிறந்த பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமாகவும் தமது சங்கம் திகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சங்கத்தில் ஊழல் மோசடி எனத் தெரிவித்து உள்ளக கணக்காய்வ…

    • 0 replies
    • 343 views
  17. கெஹலிய ரம்புக்வெல்ல யாழ். நீதிமன்றில் ஆஜர் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் லலித், குகன் காணாமல் போயிருந்தனர். லலித் மற்றும் குகன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மகிந்த அரசாங்கத்தின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இருவரும் அரசாங்கத்தின் தடுப்பில் இ…

  18. பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்! [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 03:00.12 AM GMT ] பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடும் வழங்கப்படவில்லை. தற்போது …

  19. பாதுகாப்பற்ற கடவைகளின் வீதிகளை நீக்குவதற்கு மக்கள் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கடவைகள் உள்ள வீதிகளை நீக்குவதற்கு புகையிரதத் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வீதிகளை நீக்குவதற்காக அநுராபுரத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். வடக்கின் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுமார் 240 புகையிரதக் கடவைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 10 சதவீதமானவை புகையிரதக் கடவைகள் மாத்திரமே பாதுகாப்பான கடவைகள் என்பதுடன் ஏனையவை பாதுகாப்பற்ற கடவைகளாக இருந்தன. …

  20. விளையாடிய போது சிறுவன் மயக்கமடைந்ததால் அச்சமடைந்து வயிற்றில் கல்லைக் கட்டி பாழடைந்த கிணற்றுக்குள் போட்டேன்' - சம்பூர் சிறுவன் மரணம் தொடர்பில் 15 வயது மைத்துனன் வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர், தோப்பூர் மூதூர் நிரு­பர்கள்) சம்பூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சம்பூர் 07, கடற்­படை முகா­முக்கு அருகில் உள்ள பாழ­டைந்த விவ­சாயக் கிணற்­றி­லி­ருந்து ஆறு வயது சிறு­வனின் கொலை தொடர்பில் அவ­னது 15 வய­தான மைத்­துனன் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். சம்பூர் 07, மீள் குடி­யேற்றக் கிரா­மத்தில் தனது மாமாவின் வீட்டில் (இறந்த சிறு­வனின் வீடு) தங்­கி­யி­ருந்து கல்வி நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வந்த தங்க புரம் கிளி­வெ…

  21. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மஹிந்த கடும் எதிர்ப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய கீதம் ஒரு மொழியில் பாடப்பட வேண்டுமெனவும் இரண்டு மூன்று மொழிகளில் பாடப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த…

  22. கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய ஓடுபாதையை அமைக்க நடவடிக்கை [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 06:08.58 AM GMT ] கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான ஓடுபாதையொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போது காணப்படுகின்ற விமான ஓடு பாதையானது மிகவும் பழைமை வாய்ந்தது எனவும், இந்த ஓடு பாதையை மேலும் ஒன்றோ அல்லது இரண்டு வருடங்களுக்கு பயன்படுத்த முடியாது எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விமான ஓடு பாதையை தொடர்…

  23. கண்டி மாவட்டத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் 191 யோசனைகள் [ Wednesday,3 February 2016, 07:17:58 ] கண்டி மாவட்டத்திலிருந்து 191 யோசனைகள் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, அக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியர்கள், முன்னாள் நகரசபைத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்நதவர்களிடிருந்து இவ்வாறான கருத்துக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மற்றும் கம்பஹா மா…

  24. வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை – பிரதமர் வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற ஆசிய பிராந்திய வலய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் விசாரணை ஒன்றில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் என்ற போதிலும் தீர்ப்பு அளிக்கும் செயன்முறையில் பங்களிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் பங்கெடுக்க அனுமதியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

  25. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம் [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 01:47.23 AM GMT ] சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யக்கூடிய கைதிகளின் பெயர் பட்டியல் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.