Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிகழ்ச்சி நிரலை வெளியிடாது சீனா பறக்கிறார் மகிந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார். இந்தத் தகவலை அவரின் ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட உறுதிப்படுத்தினார். ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார் என்றும் அவர் கூறினார். எனினும், மகிந்த ராஜபக்ச அரசியல் மட்டத்திலான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார் என அறியமுடிகின்றது. அவரது பயண நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மிகவும் இரகசியமான முறையில் நிகழ்சி நிரல் தயாரிக்கப்…

  2. ஹிருணிகாவை கைது செய்ய முடியாது! கொழும்பு-09, தெமட்டகொடயில் இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவைக் கைது செய்யுமாறு, எதிரணியினராலும் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுவரும் கோஷத்துக்காக, அவரைக் கைது செய்ய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், மகிந்த ர…

  3. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஓராண்டு கால ஆட்சிக்கு பான் கீ மூன் வாழ்த்து:- 08 ஜனவரி 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் காண்பித்து வரும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்த அரசாங்கம் காண்பித்து வரும் சிரத்தை வரவேற்கப்பட வேண்டியத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடைக்கால நீதிப்பொறிமுறைமை ஒன்றின் மூல…

  4. ஏழாயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் – அமைச்சர் சுவாமிநாதன் [ Friday,8 January 2016, 03:15:48 ] யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் பொதுமக்களின் சுமார் ஏழாயிரம் ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த நிலங்களை தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். அண்மைக் காலமாக பொது மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்படும்போது, அது அவர்களின் மீள்குடியேற்றத்தையும் விரைவுபடுத்தும் எனவும்…

  5. தன்னைக் கொல்ல முற்பட்டவருக்கு மன்னிப்பு வழங்கவுள்ள ஜனாதிபதி January 7, 2016 02:39 pm ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக, தெரியவந்துள்ளது. 2005 – 2006ம் ஆண்டு காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தபோது, இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை - மன்னம்பிடிய பகுதியில் வைத்து, குறித்த நபர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து இவ்வாறு அவரைக் கொலை செய்ய முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக பிரதிவாதிக்கு 10 வருடங்கள் சிறைதண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொலன்னறுவை …

  6. மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கலாம்! மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என நோர்வே வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் போகே பிரன்டேவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மிதமான அரசியல் நகர்விற்கு தனது பாராட்டுதலை தெரிவித்ததோடு, மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் எனவும் நோர்வே வெளிவிவகா…

  7. பசில் ராஜபக்ஸ மீளவும் அரசியலில் களமிறங்கக்கூடிய சாத்தியம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-08 ஜனவரி 2016 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீளவும் அரசியலில் களமிறங்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக இவ்வாறு அரசியலில் மீள் பிரவேசம் செய்ய பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான இந்த அரசாங்கம் மீது பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சியொன்றின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உரு…

  8. மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு வீர வணக்க நாள்! 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார் ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது …

  9. ஸ்ரீலங்காவிலிருந்து நாடு திரும்பிய கொரிய நாட்டு பிரஜைகள் அறுவர் டெங்கு நோயால் பாதிப்பு [ Friday,8 January 2016, 05:09:35 ] ஸ்ரீலங்காவிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய கொரிய நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அறுவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொரிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை ஸ்ரீலங்காவில் தங்கியிருந்த கொரிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினரிடையே இவ்வாறு டெங்கு நோய் பரவியுள்ளது. இந்த நிலையில் ஏனைய மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே டெங்கு நோய் பரவியிருக்கலாம்…

  10. வவுனியாவில் இன்புளுவன்சா ஏ வைரஸ் தாக்கம்: அவதானமாக இருக்குமாறு கோரிக்கை [ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2016, 03:16.12 AM GMT ] வவுனியா மாவட்டத்தில் மூவருக்கு இன்புளுவென்சா ஏ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்புளுவென்சா ஏ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேசிய நோய் தடுப்பு பிரிவு மற்றும் தேசிய ஆராய்ச்சி மையத்தினது அறிக்கைகள் குறித்த மூவரும் இன்புளுவன்சா ஏ என்ற வைரசின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு,…

  11. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சரின் அறிவுருத்தல் கடிதத்தில் உத்தரவு! கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அடைமழை ஆரம்பித்துள்ளதால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கதன சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிய கடிதம் ஒன்றை மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளாதாக முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இன்று தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில், நேற்று பெய்த மழையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாரியளவிலான பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தும் சென்றுள்ளனர். அவர்களுக்கான நிவாரனங்களையும், உலர…

  12. வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும்! - பிரதமர் ரணில் அழைப்பு புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு தெற்கு பகுதிகளின் அபிவிருத்திக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ள பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். அங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் சனிக்கிழமை (நாளை) பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இடம்பெறுகிறது. இதன்போது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை முன்வைக்கப்படவுள்…

  13. கோத்தபாயவிடம் நேற்றும் விசாரணை! ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பாரிய ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்தார். நேற்று காலை 9.00 மணிக்கு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான கோத்தபாய ராஜபக் ஷ மாலை 4.00 மணி வரை அங்கு தங்கியிருந்து வாக்கு மூலம் அளித்தார். http://www.whathits.com/seithy

    • 0 replies
    • 334 views
  14. புதிய அரசியலமைப்பில் சுயாட்சி அதிகாரங்கள் இடம்பெறாது! புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சுயாட்சி அதிகாரங்கள் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படாது என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தல், சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல் ஆகிய திருத்தங்களை உள்ளடக்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பு குறித்து நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றி அதன் பின்னர் மக்களின் கருத்துக்களை அறியும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளத…

    • 0 replies
    • 306 views
  15. இரு தசாப்த ஓட்டம் ஓய்ந்தது - ஏ-340 விமானத்தின் இலங்கைக்கான இறுதி சேவை இலங்கை விமான நிறுவனத்தில் இரு தசாப்த காலங்களுக்கும் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட, ஏ-340 என்ற வகையைச் சேர்ந்த விமானம் இன்று தனது இறுதிச் சேவையை மேற்கொண்டுள்ளது. நான்கு இயந்திரங்கள் கொண்ட குறித்த வகையான விமானங்கள் ஏழு கடந்த 21 வருடங்களாக இலங்கை விமான நிறுவனத்தில் சேவையில் இருந்தன. மேலும் ஆசியாவிலேயே முதன் முதலில் இதனை போக்குவரத்துக்காக அறிமுகப்படுத்தியது இலங்கை எனவும் இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வகை விமானங்கள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலாக உயர் தொழிநுட்பத்திரன் கொண்ட ஏ - 330 -300 என்ற எயார் பஸ் விமானங்கள் போக்குவரத்துக…

  16. விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 2 வருடங்கள் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். புனர்வாழ்வு காலத்தில் அதிகளவான காலத்தை தமிழினி சிங்கள மொழியை கற்பதற்காகவே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய குறிப்புகளில் “இப்படியான உன்னதமான …

    • 9 replies
    • 752 views
  17. கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து தமிழ் இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழுவினர் அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளனர். காங்கேசன்துறை இராணுவ முகாமில் பணியாற்றும் மறவன்புலவைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகினார். காயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்ச…

  18. தனது வாகனத்தில் ஒட்டப்பட்ட சிங்க லே (சிங்கள இரத்தம்) என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை சிங்கள சாரதி ஒருவர் கழற்றி எறிவதை காணக் கூடிதாக உள்ளது. இந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டியமையால் இரு வாரங்களாக தனக்கு எவ்வித ஓட்டங்களும் ( hire) கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். முகப் புத்தகம் உள்ளிட்ட சமூக வலையமைப்புகளில் பல்வேறு வழிகளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனவாத முரண்பாட்டினைத் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது. இலங்கையில் தனி சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில், ஸ்ரீ என்ற எழுத்து வாகனங்களில் பொறிக்கப்பட வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்க…

  19. இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்' : பசில் இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஓராண்டுக்கு முன்னர் புதிய ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தவர், பின்னர் இலங்கை வந்திருந்தபோது, அவர் மீது நிதி…

  20. வீட்டில் சட்டி, முட்டி, பானைகளை எண்ணிக்கொண்டிருப்பதால் தான் ஊடகங்களில் தோன்றுவதில்லையாம்! வீட்டில் உள்ள சமையல் அறையில் இருக்கும் சட்டி, முட்டி, பானைகள் என சமையல் பாத்திரங்களை எண்ணிக்கொண்டிருப்பதால், தற்போது தான் ஊடகங்களில் தோன்றுவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்சாரத்தில் இயங்கும் சமையல் அறை மற்றும் கழிப்பறை உபகரணங்கள் பற்றி தன்னிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதால், இவ்வாறு தான் அவற்றை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டு…

  21. எமது மீன் வங்கிகள் இரண்டு அழிவடைகின்றன -எம்.றொசாந்த் யாழ்ப்பாணத்தின் மீன் வங்கிகள் எனப்படும் வடமராட்சி கடல் மற்றும் நெடுந்தீவு கடல் ஆகியன இந்திய மீனவர்களின் தடை செய்யப்பட்ட உபகரணங்களின் பயன்பாட்டால் அழிவடைவதால் எதிர்கால சந்ததியினருக்கு மீன் வளம் இல்லாமல் போகவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தலைவர் கே.என்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்கள் மீனவர்கள…

  22. கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது. ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் மண்ணெண்ணை ஊற்றி விறகை தீமூட்டியுள்ளார். அதன்போது அவர் உடுத்தியிருந்த சேலையிலும் தீப்பிடித்துள்ளது. கண்பார்வையற்ற அவர் திடீரென எற்பட்ட தீ விபத்தால் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்சை பயனளிக்காது கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார். …

  23. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி விட்டு வெளியில் வரும் போது ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய இதனை கூறியுள்ளார். கோத்தபாயவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகும் நாளைய தினம் கறுப்பு கொடிகளை ஏற்றவும் கறுப்பு உடைகளை அணியும் கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmuyBTbSWjv3D.html

    • 3 replies
    • 503 views
  24. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,கொலைச் சம்பவங்களுடன் தொடர்புள்ள சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை 2015 இல் 88 வீதம் நிறைவு செய்யப்பட்டதாவும் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2014 ஆம் ஆண்டு 544 கொலைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் கடந்த வருடத்தின் மு…

    • 1 reply
    • 363 views
  25. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும் மேலும் மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்ட 468 ஏக்கர் நிலப்பகுதியில் வறுத்தலை விளான், தையிட்டி, பளை வீம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.