ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இயற்கை எய்தினார் வவுனியா மூத்த பிரஜை சதாசிவம் ஐயா! வாழ்வியல் சாதனையாளராக 104 வயது வரை வாழ்ந்த வவுனியா சதாசிவம் ஐயா இறைவனடி சேர்ந்தார். வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் செவ்வாயன்று குருமண்காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 104. இந்த வயதிலும் முதுமையின் தளர்ச்சியுடன் தானாகவே நடமாடி, தனது தேவைகளைப் பூர்த்தி செய்து நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புபவர்களுக்கு ஓர் உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். அனலைதீவு அவருடை சொந்த இடம். எட்டு பிள்ளைகளைக…
-
- 0 replies
- 667 views
-
-
விடுவிக்கப்பட்ட பகுதியில் இன்னமும் அகற்றப்படாத கண்ணிவெடிகள் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதமளவில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீமன்காமம் தெற்குப் பகுதிகளில் உள்ள காணிகளில் இன்னமும் அகற்றப்படாத நிலையில் கண்ணிவெடிகள் காணப்படுகின்றது. குறித்த பகுதி மக்கள் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் குறித்த பகுதிகளில் கண்ணிவெடி விழிப்பூட்டும் குழுவால் கண்ணிவெடிகள் இன்று இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 438 views
-
-
25 வருடங்கள் கழிந்தும் பாவனைக்கு உகந்த கிணறு தையிட்டியில்! இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு தையிட்டி தெற்குப் பகுதியில் கடற்கரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பாரிய கிணறு சேதங்கள் இன்றி பாவனைக்கு உகந்த நிலையில் இன்னமும் காணப்படுகிறது. குறித்த பகுதியில் இவ்வாறு இரண்டு கிணறுகள் உள்ளது. ஒரு கிணறு மூன்று கிணறுகளுக்கு சமனான பாரிய கிணறாக இருக்கிறது. இந்த பகுதியின் ஏனைய பகுதிகள் கடற்கரை பகுதிகளாக இருப்பதனால் அப்பகுதி உவர் நீராக காணப்படுகிறது. இப்பகுதிகளுக்கு இக்கிணறுகளில் இருந்தே நீர் விநியோகிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 664 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் கலந்துகொண்ட மூவரிடம் விளக்கம் கேட்போம்: சிவில் சமூகம் மட்டக்களப்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் இலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமது உறுப்பினர்கள் மூன்று பேரும் நிர்வாகத்தின் அனுமதி இன்றியே அந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் பொதுச் செயலாளரான த.வசந்தராஜா உட்பட ஒரு சில உறுப்பினர்கள் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்கள…
-
- 1 reply
- 590 views
- 1 follower
-
-
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. யோஷித்த ராஜபக்ஸ கடற்படை சீருடையை அணிந்திருந்த சந்தர்ப்பத்தில், நாமல் ராஜபக்ஸ அவருடன் இணைந்து எடுத்த ஷெல்பி புகைப்படமே இவ்வாறு பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்யும் விதத்திலான சகோதரரொருவர் இருக்கின்றமை பெருமை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்றிரவு (29) சிங்கள மொழியில் இந்த கருத்தை பகிர்ந்திருந்தார். எனினும், இன்றைய தினம் அதே பகிர்வு ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனினும், இந்த புகைப்படத்திற்கு சார்ப…
-
- 1 reply
- 531 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்! – பிரதியமைச்சர் அஜித் பெரேரா [Wednesday 2015-12-30 08:00] 1972 அரசியலமைப்பு போன்று புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். நிறைவேற்று அத…
-
- 0 replies
- 519 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் அமைதியைக் குழப்ப முயற்சி! - ராஜித சேனாரத்ன [Wednesday 2015-12-30 08:00] வடக்கிலும், தெற்கிலும் சில அடிப்படைவாதிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொலைகள் மற்றும் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விபரங்கள் வெளியாவதால் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்ச…
-
- 0 replies
- 356 views
-
-
தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு விசுவாசமாக இருக்கி;ன்றார்கள் - மாவை சேனாதிராஜா தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு விசுவாசமான முறையில் இருக்கின்றார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சிகள் குழுக்கள் உருவாக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அசைக்க முடியாத விசுவாசத்தைக்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இன்றி புதிதாக உருவாக்கப்படும் கட்சிகள் அமைப்புக்கள் வடக்கில் நீடித்து நிலைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் இதற்கு முன்னரும் பல்வேறு அமைப்புக்கள் கட்சிகள் உர…
-
- 0 replies
- 365 views
-
-
'வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளதாக செய்தி: பரபரப்புக்காக வெளியிடப்பட்டது' -எம்.றொசாந்த் வடமாகாண சபை கலைப்படவுள்ளதாக பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியானது, தனியே பரபரப்புக்காக வெளியிடப்பட்ட செய்தியாகும். இது சபையின் சிறப்புரிமையை மீறும் விடயமாகும். இது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை (30) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 'ச…
-
- 0 replies
- 446 views
-
-
சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தடை சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக மத்திய கலாசார நிதியத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரஷாந்த குணவர்தன தெரிவித்தார். புராதான சுவர் பகுதி ஒன்று உடைந்ததன் காரணமாக, அதனை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். கெமராவில் இருந்து வெளியாகும் வெளிச்சம் (flash) ஓவியங்களை பாதிப்பதன் காரணமாக இந்த தீர…
-
- 0 replies
- 376 views
-
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தலில் தொடர்புடைய மற்றுமொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபேரத்ன எனப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளர் பிரகீத் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் சார்ஜண்ட் தர அதிகாரியாக இருந்துள்ளார். அதன் பின்னர் சில வருடங்களுக்குள்ளாக அவருக்கு லெப்டினன்ட் பதவி வரை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்தேக நபர் இதற்கு முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட நாட்களுக்கு அண்மைய நாட்களில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப்…
-
- 0 replies
- 422 views
-
-
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை, எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளையான் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதவான் ஏ.எம்.ரியால் இந்த உத்தரவை பிறப்பித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பி…
-
- 1 reply
- 607 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கோணல் பக்கங்கள் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் மேல் மட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பரபரப்புக்களைத் தாண்டிய பதற்றமான சூழ்நிலையொன்றை தமிழ் மக்கள் பேரவையின் வருகை பதிவு செய்திருக்கின்றது. இந்தப் பதற்றமான சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் பேரவையும், அதன் ஆதரவுத்தளமும் எதிர்த்தளமும் கடந்த சில நாட்களாக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் வருகையும், அதனை முன்னிறுத்தி எழுந்துள்ள 'பதற்றமும்' தாக்கம் செலுத்தியிருப்பது மாதிரியான தோற்றப்பாட்டினை இன்னமும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. புதிய அமைப்பொன்றின் வருகை பதிவு செய்யப்பட்டு பத்து நாட்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில், இவ…
-
- 0 replies
- 540 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவில் வழக்கறிஞர் சிவா பசுபதி? [ Wednesday,30 December 2015, 02:29:24 ] பிரபல வழக்கறிஞர் சிவா பசுபதியை அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவில் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயின் சமாதான முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபையின் வரைபில் முக்கிய பங்காகற்றிய சிவா பசுபதி தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகின்றார். அவரை நிபுணர் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் அவருடன் தொடர்பு கொள்வதற்கு எற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பேரiவைக்கு நெருக்கமான உறுப்பினர்கள் தெரிவித…
-
- 1 reply
- 481 views
-
-
தெற்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்களவர்கள் போராட வேண்டும்! - ஞானசார தேரர் [Wednesday 2015-12-30 08:00] வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ் மக்கள் போராடுவதைப்போல தெற்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்கள மக்களும் போராட வேண்டும். வடக்கிற்கு ஒரு நியதியும் தெற்கிற்கு ஒரு நியதியும் இருக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ் மக்கள் போராடுவதைப்போல தெற்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு சிங்கள மக்களும் போராட வேண்டும். வடக்கிற்கு ஒரு நியதியும் தெற்கிற்கு ஒரு நியதியும் இருக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 675 views
-
-
சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் மஹிந்த! - எஸ்.பி. தகவல் [Wednesday 2015-12-30 08:00] ஜெனீவாவில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்தத் தீர்மானித்ததாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார். சாத்திரங்களை நம்பியே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை முற்கூட்டியே நடத்தியதாகக் கூறப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்தாலும், அதிகாரத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக ஜெனீவாவில் ஏற்பட்டிருந்த சவாலை சமாளிக்க முடியும் என அவர் நம்பியதாலேயே முற்கூட்டியே தேர்தல் நடத்தினார். ஜெனீவாவில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்கூ…
-
- 0 replies
- 440 views
-
-
வரக்காபொலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட ஐவர் பலி [ Wednesday,30 December 2015, 03:08:52 ] கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காப்பொல தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பேரூந்து ஒன்றும் வான் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் வராக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மூன்று பெண்களும் வான் சாரதியும் சிறு குழந்தையொன்றும் உயிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்மாந்துற…
-
- 0 replies
- 519 views
-
-
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்- யாழ்ப்பாணத் தம்பி:- 30 டிசம்பர் 2015 இந்த வாசுதேவ நாணயக்காரவுக்கு என்ன பிரச்சினை? மைத்திரியை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டாராம். இப்ப இருக்கிற ஆட்சி தனக்குப் பிடிக்கேல்லையாம். மகிந்ததான் தலைவராய் வரவேணுமாம்.. மகிந்த ஆட்சிதான் தனக்குப் பிடிக்குமாம்.. கடத்தல்களும் கொலைகளும் தான் வாசுவுக்கு விருப்பமோ? பிறகென்ன மகிந்தவின்டை ஆட்சி பிடிக்கும் என்றால் அதுதானே அர்த்தம். ஆனால் அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் எண்டுற மாதிரி மகிந்த ஆட்சிக்கு தெய்வம் ஆப்பு வைச்சுப்போட்டுது.. ஆனால் எங்கடை இடதுசாரிப் போராளிக்கு போர்க்குணம் தீரேல்லை. மகிந்தவை மறுபடியும் கொண்டுவர ஆசைப்படுகிறார். ஆனால் அச்சாணி இல்லாத தேர் மு…
-
- 0 replies
- 692 views
-
-
5000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஒரு சில தினங்களில் புதிய நியமனங்கள்! [ புதன்கிழமை, 30 டிசெம்பர் 2015, 03:51.44 AM GMT ] எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக இருந்து வருகி…
-
- 0 replies
- 485 views
-
-
வெளிநாட்டு கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் - எஸ்.பி.நாவீன்ன: 30 டிசம்பர் 2015 வெளிநாட்டு கலைஞர்கள் இலங்கையில் நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென கலாச்சார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நடிக, நடிகையர், இசைக் கலைஞர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து உள்நாட்டில் நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டுமாயின் கலாச்சார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் எமது நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வெளிநாட்டு கலைஞர்களை அழைத்து இலங்கையில் நிகழ்ச்சி நடாத்தும் தரப்பினர் சுய தணிக்கையொன்றை பின்பற்ற வேண்டுமெ…
-
- 0 replies
- 409 views
-
-
'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்- 'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உப-தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளிவந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை. அது உண்மைக்கு புறம்பானது. இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடப…
-
- 1 reply
- 691 views
-
-
மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார். என்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம். இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். தனது குரலின் வசீகரத்தன்மையாலும் சோகத்தினாலும் தமிழர்கள் எல்லோரினதும் மனங்களில் இடம்பிடித்த ஒரு மாபெரும் போராளிக்கலைஞனை பெற்ற வீரத்தாய். http://www.asrilanka.com/2015/12/28/31141
-
- 6 replies
- 771 views
-
-
யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இது முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை... 1968ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுத்த இந்த ஓட்டுத் தொழிற்சாலை…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தென்மராட்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும், இதன்காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவி…
-
- 0 replies
- 885 views
-
-
ஆடையின்றி வீதியில் செல்லவா ஆசை? அண்மையில் கொழும்பில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் பலர் தமது கருத்துக்களால் எனக்கு சேரு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டி இந்த நாட்டிலே கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறு சேறுபூசும் நபர்கள் கோரிக்கைவிடுப்பது இந்நாட்டில் ஆடைகள் இன்றி வீதியில் செல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த விடயத்தால் நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்படும் எனவும் தான் அவர்களிடம் கேள்வி எழு…
-
- 0 replies
- 694 views
-