ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹகின் வடமாகாணத்திற்கான இன்றைய விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத் தளபதி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி இரணைமடு வரை வந்ததாகவும், சீரற்ற காலநிலை காரணமாக விஜயத்தை இரத்து செய்ததாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கின் முல்லைத்தீவுக்கான இன்றைய பயண…
-
- 2 replies
- 852 views
-
-
2009, 2013 இல் கடற்படையினர் 178 ஆயுதங்களை தொலைத்தாக குற்றச்சாட்டு [ Wednesday,2 December 2015, 03:17:53 ] 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான 170 க்கும் அதிகமான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. 178 ஆயுதங்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவன்கார்ட் நிறுவன ஊழியர் சங்கப் பேச்சாளரும் முன்னாள் வர்த்தக கப்பல் பாதுகாப்பு நிறுவன முகாமையாளருமான ஒய்வுபெற்ற லெப்ரினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். கடற்படையினரிடம் இருந்தே இந்த ஆயுதங்கள் காணாமல் போனதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் காணாமல் போன அரசாங்கத்திற்கு சொந்தமான 167 ஆயுதங்களை கடும் சிரமங்களுக்கு மத்…
-
- 0 replies
- 285 views
-
-
கோத்தபாயவைக் கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்! - பௌத்த பிக்கு எச்சரிக்கை [Wednesday 2015-12-02 07:00] முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முத்தெட்டுவே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அ…
-
- 0 replies
- 232 views
-
-
கிளிநொச்சியில் மீண்டும் மழை வெள்ளம்- மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழையினால் மாவட்டத்தின் சில கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களின் முன்னர் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம், கனகாம்பிகைக்களம், பரந்தன், சிவபுரம், உமையாள்புரம், தட்டுவான்கொட்டி போன்ற சில கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளப் பெருக்கை தொடர்ந்து கனகாம்பி…
-
- 0 replies
- 1k views
-
-
குடை பிடித்தவாறு பரீட்சை எழுதும் மாணவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்கள் குடை பிடித்த வாறு பரீட்சை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாடசாலையில் அமைக்கப்பட்டு உள்ள ஓலைக் கொட்டகைக்குள் வகுப்புக்கள் நடைபெற்று வந்தான. அக் கொட்டகைக்குள்லையே தற்போது மாணவர்களுக்கு மூன்றாம் தவணை பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. தற்போது வடக்கில் பெய்து வரும் கடும் மழைக்கு ஓலைக் கொட்டகைகள் ஈடு கொடுக்க முடியாது அதனுள் மழை நீர் ஒழுக ஆரம்பித்து உள்ளது. அதனால் கொட்டகைக்குள் இருந்து பரீட்சை எழுதும…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் எச்ஐவி தொற்று தொடர்ந்து அதிகரிக்கிறது எச் ஐ வி தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொற்றுநோய்த் தடுப்பு திட்ட இயக்குநர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அனைத்துலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான 4 பேர் ரத்தப்பரிசோதனைகளின் மூலம் புதிதாக அடையாளம் காணப்படுவதாகவும் ஆனால் வாரமொன்றுக்கு மேலும் 5 பேர் பரிசோதனை…
-
- 4 replies
- 971 views
-
-
கிளிநொச்சி ஆனந்த நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் கணவன் வெளியில் சென்றிருந்த வேளை நபர் ஒருவர் புகுந்து, தனியாக நின்ற வீட்டுப்பெண் முன் தனது ஆடைகளை களைந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்ட அப்பெண் அவலக்குரல் கொடுத்ததை அடுத்து, குறித்த நபரை அக்கிராம இளைஞர்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைத்தனர். அதன்போது அந்த நபர் இராணுவப் புலனாய்வாளர் என கூறியுள்ளார். கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கிளிநெச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். குறித்த நபர் இராணுவ புலனாய்வாளர் இல்லை என்றும் புலனாய்வாளர்களுடன் தொடர்பை பேணிவந்துள்ளார் எனவும், இவர் வவுனியாவை சேர்ந்தவர் தற்பொழுது கிளிநொச…
-
- 0 replies
- 712 views
-
-
யாழ்.கோண்டாவில் பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாடசாலை மாணவன் புகைவண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வாரம் கோப்பாய் பகுதியை சேர்ந்த இ.செந்தூரன்(வயது18) என்ற பாடசாலை மாணவன் தமிழ் அரசிய ல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தனது பாடசாலை கொப்பியில் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு புகைவண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த கடிதம் உயிரிழந்த மாணவனாலேயே எழுதப்பட்டது. என பெற்றோர், சகோதரர்கள் மற்றும் பாடசாலை நண்பர்கள் உ றுதிப்படுத்தியிருக்கும் நிலையில், அந்…
-
- 0 replies
- 954 views
-
-
மாகாண / மத்திய கல்வி அமைச்சின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் கல்லூரி ஒன்றின் முன்னாள் அதிபர் கடந்த 2012 ஆம் ஆண்டு 13 இலட்சத்து 85 ஆயிரத்து 837 ரூபாவை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளாது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு ஒன்றுக்கு அதிபராக பதவியுயர்வு வழங்கியது போன்று இடமாற்றம் செய்யப்பட்டமை கல்விச் சமூகத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2012 கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்தவர் அக்காலப்பகுதியில் யுனிசெப் …
-
- 0 replies
- 805 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும் தயார்! - ஜனாதிபதி மைத்திரி [Tuesday 2015-12-01 09:00] புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அஞ்சப் போவதில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது அளி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிங்களவர்களை அரவாணிகளாக்காதீர் : நாங்கள் சிங்கங்கள் கெஹெலிய மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை"அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதி பதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ் பைகள் மற்றும் 200 கிராம் நிறை யுடைய 11 ஒடியல்மா பைகளையும் கைப்பற்றி காலாவதியான பொருட் களைப் பயன்படுத்தியதாக கூறி குறித்த விடுதி முகாமையாளருக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு ஒன்றரை வருட காலமாக நடைபெற்று வரும் நிலை யில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவரும் மன்றில் சாட்சியமளிக்கும் போது தாம் குற…
-
- 3 replies
- 775 views
-
-
கருணாவை நிற்பாட்டு பிரபாவிடம் கூறினேன்..! கட்சியை சீ.வியிடம் ஒப்படைக்கத் தயார்...! சங்கரி [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 12:49.42 AM GMT ] விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன். அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். tamilwin.com
-
- 1 reply
- 1.3k views
-
-
தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித நெகிழ்வுப் போக்கும் கிடையாது – ஜனாதிபதி தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித நெகிழ்வுப் போக்கும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரான்ஸில் தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நிலையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கையின் நன்மதிப்பை மீளவும் கட்டியெழுப்ப தம்மால் இயன்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் பாதகமான ஓர் நிலைப்பாடே காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 3 replies
- 816 views
-
-
வட மாகாண மர நடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு, அப்பகுதியில் புதிய முறையில் மாந்தோப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மாங்கன்றுகளை நடுகை செய்யும் பணியையும் தொடக்கி வைத்துள்ளார். குறைந்த இடைவெளிகளில் மாமரக்கன்றுகளை நாட்டி, குறைந்த உயரமுள்ள மரங்களாக அவற்றைப் பராமரித்துக் கைகளாலேயே பழங்களைப் பறிக்கும் அடர் மாமரச்செய்கை என்னும் புதியமுறை பல்வேறு ந…
-
- 0 replies
- 665 views
-
-
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றில், சித்திரவதை கூடம் ஒன்று காணப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறு்பபினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அப்பதிவு இங்கே பிரசுரமாகின்றது http://www.colombomirror.com/tamil/?p=6482
-
- 0 replies
- 958 views
-
-
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னெடுத்த ஜேர்மன் தூதரகம் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு “ எய்ட்ஸ் நோயை ஒழிப்போம் ” என்ற தொனிப்பொருளில் இலங்கையிலுள்ள ஜேமர்ன் தூதரகம் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையானது சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெற்று வோக்ஸ்வாகன் காரில் பேரணியாக சென்று நகரின் ஏனைய பகுதிகளுக்கும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர். ஜேர்ஹன் மூர்ஹாட் கலந்துகொண்டு உரையாற்றினார். …
-
- 0 replies
- 561 views
-
-
அரசாங்கம் பலவிதமான உறுதிமொழி களை அளித்துவந்திருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கத்தின் மீதான எமது சந்தேகங்கள் நியாயமான வையென தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகளாகின்ற நிலை யில் எமது மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றம் நிதி ஏற்பாட்டு நிறுவனத்தின் ஏற் பாட்டில் வட இலங்கையின் போரின் பின்னரான காணிப்பிரச்சினைகளைப் புரிந்துகொள் ளல் எனும் தலைப்பில் யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையா…
-
- 0 replies
- 626 views
-
-
முட்டுச் சந்து மப்றூக் மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சி, பலரின் அரசியலை முட்டுச் சந்துகளில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இத்தனை சீக்கிரத்தில், ஆட்சி பீடத்திலிருந்து மஹிந்த தூக்கி வீசப்படுவார் என்று யார்தான் நினைத்தார்கள். அதனால், கண்ணை மூடிக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பயணித்த பல அரசியல்வாதிகள், இப்போது முட்டுச் சந்துகளில் நின்று கொண்டிருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் செல்லப் பிள்ளைகளாகத் திரிந்த அரசியல்வாதிகளுக்கு, இப்போது தங்களுடைய அரசியல் சூனியமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதிலிருந்து விடுபடாது விட்டால், அவர்களின் 'கடை'களைக் காலி செய்வதைத் தவிர, வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், மஹிந்தவுடன் ஒட்டிக்கொண…
-
- 0 replies
- 887 views
-
-
மாவீரர் நினைவேந்தல்: சொல்லாத செய்திகள் தெய்வீகன் மாவீரர் வாரம்; உலகெங்கும் இம்முறையும் எழுச்சியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தில் அதற்கான தடைகள் அறிவிக்கப்பட்டபோதும் அவற்றையும் மீறி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் 'மாலை 06.05 மணிக்கு விளக்கேற்றுங்கள்' என்று தலைப்பு செய்தியுடன் ஐந்து முழுப்பக்கங்களில் மாவீரர்நாள் சிறப்பு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடுமளவுக்கு - 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் - மிகவும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன. நல்லாட்சி, நல்லிணக்கம…
-
- 0 replies
- 801 views
-
-
கோட்டாவை கைதுசெய்யுமாறு பரிந்துரை சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இவர்களுக்கெதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்து நீதவான் முன்னிலையில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆல…
-
- 0 replies
- 607 views
-
-
விடுதலையே வேண்டும்; விசேட நீதிமன்றம் வேண்டாம்!- தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டம் [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 01:28.04 AM GMT ] நாம் விடுதலையையே கேட்கின்றோம். விசாரணையைக் கேட்கவில்லை. எமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படுவதை எதிர்க்கின்றோம். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவுகள் ஊடாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான அமைக்கப்படும் விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் 1…
-
- 0 replies
- 624 views
-
-
தமிழருக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது : சாடும் ராவணா பலய தமிழ் மாணவன் உயிர்த் தியாகம் செய்ததை வைத்துக் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிராபரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கிவிட்டால் என்னவாகும் என்பதை ஜீரணிக்க முடியாது என்று ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி செயலாளரை ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து த…
-
- 3 replies
- 1.1k views
-
-
காணிகளை மீள வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவது தொடர்பில், எந்தவித நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள காணிகள் கூட கடந்த அரசாங்கம் வழங்குவதற்கு சம்மதித்திருந்த காணிகளே தவிர, புதிதாக ஒன்றையும் கொடுக்கவில்லையென அவர் குறிப்பிட்டார். அத்துடன், வடக்கில் இராணுவ மயமாக்கலினூடாக சிங்கள மயமாக்கல் செயற்பாடே இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்…
-
- 0 replies
- 505 views
-
-
வட மாகாணத்தில் உள்ள 46 சிறுவர் இல்லங்களில் 2694 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்:- 01 டிசம்பர் 2015 வட மாகாணத்தில் உள்ள 46 சிறுவர் இல்லங்களில் 2694 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வட மாகாண சிறுவர் திணைக்களப் பணிப்பாளர் விஸ்வரூபன் தெரிவித்தார். வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் யுத்தம் உள்ளிட்ட பல காரணங்களினால் பல சிறுவர்கள் மாகாணத்தின் 46 சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு உள்ள சிறுவர் இல்லங்களில் 1830 பெண் பிள்ளைகளும் 864 ஆண் சிறுவர்களுமாக மொத்தம் 2694பேர் பராமரிக்கப்படுகின்றனர். இவ்வாறு தங்கியுள்ளவர்களில் அதிகப்படியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 682 பெண்களும், 268 ஆண்களுமாக 950 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 210 பெண்களும், 43 ஆண்க…
-
- 0 replies
- 782 views
-