Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெடுங்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் குடிபோதையில் அட்டகாசம் புரிந்த நிலையில், நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப் பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இந் நிலையில் காலையில் பாடசாலைக்குச் சென்ற அதிபர், பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்டதுடன் காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிபரினால் வலய கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்…

  2. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு 200இல் 2000(இரண்டாயிரம்) மரங்களை நடுவோம் என்னும் செயற்றிட்ட மரநடுகை விழா இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், சிறப்பு விருந்தினராக யாழ்.கல்வி வலய தொழில்நுட்ப பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேலினி பாலேந்திரா ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் மத்திய கல்லூரியின் சிநேகிதப் பாடசாலைகளான வேம்படி மகளீர் கல்லூரி யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்க…

    • 19 replies
    • 1.8k views
  3. இலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் தெரிவிக்காமல் இருப்பது குறிதது கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்று விசாரணை குழுக்களிடம சாட்சியமளித்தும், இறுதியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டார்கள். இறுதி யுத்த…

  4. வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது வேண்டத்தகாத பல செயல்கள் வேகமாகப் பரவி வருவது, அச்சத்தையும் மன வேதனையையும் தருகின்றது. போதை பொருள் பாவனை, சிறுவர் துஷ;பிரயோகம், வேண்டத்தகாத இணைய பக்கங்களில் நுழைந்து உணர்வுகளைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயம், படிப்பில் அக்கறையின்றி புலனுணர்வு சார்ந்த விடயங்களில் பொழுதைக் கழித்து கல்வியை இழந்து, உடல் உளத் தூய்மைகளையும் இழக்க வேண்டிய ஒரு காலமாக இந்தக் கால கட்டம் மாறியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'விழுமியங்கள் இணைந்த தலைமைத்துவம்' என்னும் தொனிப்பொருளில் அதிபர்களுக்கான பயிற்சிப் பட்டறை, கைதடியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் சனிக்கிழமை (07…

  5. திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சி…

  6. யாழில் போதைப் பொருள் தொடர்பில் முறையிட விஷேட தொலைபேசி இலக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூகவிரோத செயல்கள் தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக விசேட தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் அளவுக்கதிமான போதைப் பொருள் பாவனைகளும் சமூகவிரோத செயல்களும் தலைதூக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்தும் முகமாக விசேட முறைப்பாட்டு செயற்பாடொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போ…

  7. முஸ்லிம் அரசியலின் சிறுபிள்ளைத்தனங்கள் மொஹமட் பாதுஷா முஸ்லிம்களின் அரசியலானது, அதிகப்படியான குத்துவெட்டுக்கள், குழிபறிப்புக்கள், வசைபாடல்கள், காட்டிக் கொடுப்புக்கள், மட்டம் தட்டுதல் என்பவற்றுக்கு மேலதிகமாக, பல்வேறு சிறுபிள்ளைத்தனங்களையும் கொண்டிருக்கின்றது. அரசியலில் அரிச்சுவடி பயில்வோர் மட்டுமன்றி, தாம் எல்லாம் தெரிந்த அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டிருப்போரும் கூட, அடிமட்டத் தொண்டர்கள் போல, கத்துக்குட்டி அரசியல்வாதிகளைப் போல நடந்து கொள்வதைப் பார்த்து, மக்கள் முகம்சுழித்த சம்பவங்கள் ஏராளம். அப்படியொரு சம்பவம் அண்மையில் நடந்தேறியது. சிறுபிள்ளைத்தனங்களுக்கு இது நல்லதோர் அண்மைக்கால உதாரணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூ…

  8. மாலைதீவில் கைதானவர் இலங்கை இராணுவ வீரர் இல்லை மாலைதீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஸ்னைபர் துப்பாக்கிச் சூட்டாளர் இலங்கை இராணுவத்தினைச் சேர்ந்தவர் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த ஸ்னைபர் துப்பாக்கிச் சூட்டாளர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டிருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், கைது செய்யப்பட்டுள்ள நபர் முப்படை உறுப்பினர் அல்லவென்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக க…

  9. கோத்தாவைக் கைது செய்ய முடியும் : ராஜித தெரிவிப்பு அவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வெளியிடப்பட்டிருந்த விசாரணை அறிக்கையின்மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்ய முடியும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவன்கார்ட் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அரசின் கருத்துகள் அல்ல.இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவன்கார்ட் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அ…

  10. நயினாதீவை நாகதீப எனப் பெயர் மாற்றி வரலாற்றை திரிபுடுத்தும் செயற்பாடு இடம்பெறுகின்றது. இந்த செயல் கண்டனத்துக்கும் கவலைக்கும் உரியதாகும். எனவே நாகதீப என மாற்றப்பட்ட பெயரை மீணடும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். - இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியிருக்கின்றது. வட மாகாண சபையின் நேற்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீப வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீப தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமான…

  11. 2016ல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் முக்கிய உடன்படிக்கை கைச்சாத்து - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 07 நவம்பர் 2015 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக முக்கியமான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் படவுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமன்றி முதலீட்த்துறை தொடர்பிலும் இந்த உடன்படிக்கையின் ஊடாக கவனம்செலுத்தப்பட உள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன் தெரிவித்…

  12. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். "எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் எம்மிடம் தெரிவித்ததையடுத்தே கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை 17 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தோம். எனினும், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது விடுதலை தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு…

  13. குழந்தையின் வாயில் இறந்த நிலையில் ஒட்டிப் பிறந்த சிசு! [Saturday 2015-11-07 09:00] காலி மாமோதரை வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த நிலையில் ஒட்டியிருந்த கருவை, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 26ம் திகதியன்று இந்த குழந்தை பிறந்தபோது அதன் வாயில் இறந்த இரட்டை குழந்தைக்கான கரு இறந்த நிலையில் இணைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த குழந்தை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காலி மாமோதரை வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த நிலையில் ஒட்டியிருந்த கருவை, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 26ம் திகதியன்று இந்த குழந்தை பிறந்தபோது அதன் வாயில் இறந்த இரட்டை குழந்தைக்கான கரு இறந்த நிலையில் இணைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த குழந…

  14. மகிந்தவின் 70 ஆவது பிறந்தநாள் விழா - மைத்திரிக்கும் அழைப்பு! [Saturday 2015-11-07 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் ந…

  15. காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வுகள் டிசம்பர்மாதம யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது: 07 நவம்பர் 2015 காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரையும் யாழில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். ஆணைக்குழுவினால் விண்ணப்பபடிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கான விசாரணை அமர்வில், 2539 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் 501 விண்ணப்பங்களும், வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 219 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பகுதியில் 558 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்ப…

  16. ws - 0 நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும் வகையிலான நிகழ்வுகள், கடந்த செவ்வாய்க்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) நடைபெற்றன. நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வங்களாவடி துறைமுகத்தை வந்தடைந்த கலசங்கள் மற்றும் ஆசனங்கள் ஊர்வலமாக எடுத்துச்…

    • 5 replies
    • 676 views
  17. இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 இன் முதலாவது சட்டம் எனவும் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை இறுதி எச்சரிக்கை வழங்க முடியும் எனவும் அதன் பின்னர் அதே தவறை மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மீண்டும் செய்யும் பொழுது அவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தினை மீறியமைக்காக அவருக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும்…

  18. லைக்கா குழுமத்தின் லைக்கா ஹெல்த் உதயமாகியுள்ளது:- 06 நவம்பர் 2015 லைக்கா மொபைல் குழுமத்தின் மற்றொமொரு அங்கமாக லைக்கா ஹெல்த் உருவாக்கம் பெற்றுள்ளது. நேற்றையதினம் நொவெம்பர் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 1 West Ferry Circus, Canary Wharf, London E14 4 HD எனும் முகவரியில் அமைந்துள்ள லைக்கா ஹெல்த், நல நிலையம் லண்டன் மாநகர மேயர் பொரிஸ் ஜோன்சனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. லைக்கா ஹெல்த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர். மன்பிரீத் குலாத்தி இந்த லைக்கா ஹெல்த் நல நிலையம் குறித்து தெரிவிக்கையில்; உயர்ந்த தரத்திலான அதிநவீன சேவையை மருத்துவத்துறைக்கு கொண்டுவருகின்ற வகையில் இந்த நல நிலையம் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார். லைக்கா ஹெல்த்தின் வளர்ச்சித்திட்டத்தி…

  19. விஜயதாஸ ராஜபக்ஷ VS சரத் பொன்சேகா: மானநஸ்ட வழக்கு வழக்கு தொடர முடிவு பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எவன்காட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பா…

  20. அவன்ட்கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட 3 அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை அவன்ட் கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று அமைச்சர்களையும் பதவிநீக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அலரிமாளிகையில் நேற்று கடும் அமளிதுளியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அமைச்சர்கள் திலக்மாரப்பன, விஜயதாச ராஜபக்ச மற்றும்உள்துறை அமைச்சர் வஜிரஅபயவர்த்தன ஆகியோரை பதவிநீக்குமாறு பல அமைச்சர்கள் பிரதமரை கோரியுள்ளனர். மூன்று அமைச்சர்களிற்கும் காட்டப்பட்ட எதிர்ப்பு காரணமாக பிரதமர் அதிர்ச்சியடைந்த நிலையில் க…

  21. தமிழ் இலக்கிய விழா கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டு தகவல் தொழில்நுட்பம், இளைஞர் விவகார அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் பண்பாட்டுப் பேரணி, திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியைச் சென்றடைந்தது. இக்கலைப் பண்பாட்டுப் பேரணியில் தமிழ்த் தாய் அலங்கரிக்கப்பட்டு அலங்கார ஊர்தியில் வலம் வந்தார். (படங்கள்: எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்) - See more at: http://www.tamilmirror.lk/158509/தம-ழ-இலக-க-ய-வ-ழ-#sthash.Xuga4nOn.dpuf

  22. இலங்கை மீனவருக்கு உதவிய அமெரிக்கக் கடற்படையினர் தொழில்நுட்ப கோளாறினால் நடுகடலில் நிர்கதிக்குள்ளாகிய இலங்கை மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தி்ல் நேற்று நிர்கதிக்குள்ளான நிலையில் இலங்கை தேசிய கொடியுடனான படகிலிருந்த 6 மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். நிலப்பரப்பிலிருந்து 300 கடல் மைல் தூரத்தில் வைத்து மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் உணவின்றியும், குடி நீரின்றியும் இலங்கை மீனவர்கள் இருந்துள்ளதாக அமெரிக்க கப்பலின் கட்டளைத் தளபதி ஜே.ஜே.குமீன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், அவர்களின் படகின் இயந்திரத்தை உயிர்பிப்பதற்கு உதவிகளை செய்துள்ளதாக சர்வதேச தக…

  23. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் படிப்படியாக விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று மாலை கூட்டமைப்பு நடத்திய சந்திப்புகளின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் நேற்று உறுதியளித்தார் என்றும் அவர் கூறினார். மேலும், 30 தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் எனவும், குற்ற…

  24. முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் கடழிப்பு மற்றும் சட்டவிரோத மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பிட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 'வடக்கு மாகாண சபையின் 37ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் விஷேட பிரேரணையொன்றை முனவைத்து உரையாற்ற்pனார். முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்துக்காக பெருமளவு காடு…

  25. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொலைநோக்கு சிந்தனையிலான மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீடொன்றில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பளிஹகார, மழை நீர் சேகரிப்புத்த தொட்டிக்கான அடிக்கல்லை நாட்டி இந்தத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தத் திட்டத்தில் வடக்கில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலில் வேலணை, ஊர்காவற்றுறையில் தலா 200 தொட்டிகளும், மருதங்கேணியில் 50 தொட்டிகளும் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு தொட்டியும் 76 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் உள்ளுர் மேசன் தொழிலாளர்களின் மூலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மேசன் தொழிலாளர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.