Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்க முயற்சி! [Saturday 2015-10-31 07:00] விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமைப்பு ஒன்று தீர்மானித்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமை…

  2. புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் முன்னெடுக்கப்படும்:- 31 அக்டோபர் 2015 புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதிப்பு குறித்து புதிய அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம், தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய வகையில் சீனாவுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கையை எந்தவொரு தரப்பும் தங்களது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு அபிவிருத்த…

  3. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம்:- 31 அக்டோபர் 2015 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், சில வேளைகளில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவில்ல…

  4. மக்கள் நலன் சார்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க அரச அதிகாரிகள் முன் வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையினால் இன்றைய தினம் மன்னார் மாவட்ட தஷினா மருதமடு அரச தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கயில், இந்த நடமாடுஞ்சேவை மக்களின் நலன் கருதியே நடைமுறைப்படுத்தப் படுகிறது. நாங்கள் எமது காரியாலயங்களில் இருந்து கொண்டு உங்களை அங்கு வாருங்கள் என்பதிலும் பார்க்க உங்களைத் தேடி நாங்கள் யாவரும் வந்துள்ளோம். மூலை முடுக்குகளில் உள்ள உங்களுட் சிலரை இங்கு அழைத்து வர பிரயாண வசதியுஞ் செய்து தந்துள்ளோம். இதன் முழு நன்மையையும் பெற்றுக் கொள்வது…

  5. கிளிநொச்சி, பூநகரி சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சமூகச்சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பிரதேச சபை இணைந்து செயற்படவேண்டும் என பூநகரி பிரதேச செயலர் சி.த.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார். இவ்விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக கூறினார். சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஒரு சுற்றுலா மையப்பகுதியாக மாறிவரும் நிலையில் சமூக சீர்கேடுகள் நிகழ்வதற்கான ஒரு களமாகவும் மாறிவருகின்றது. மதுபான விற்பனை, மது அருந்துதல், தகாத முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு இடம்பெறுகின்றன. இது தொடர்பில் பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என மாவட்டச் செயலர் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளார். http://www.tamilmirror.l…

  6. பெற்றோர்கள் வெளிநாடு செல்வதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலை செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் சித்திபெற்ற மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய மண்ணடபத்தில் நடைபெற்றது. இந்நிகவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அவர் தொடரந்து உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசமானது யத்ததினால் பல இழப்புக்களைச் சந்தித்திருந்து. இந்தவகையில் கதிரவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றிருப்து மி…

  7. கருணா - சங்கரி கூட்டணியின் மர்மம் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், இணைந்து கொள்ளப் போவதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, ஊடகங்களில் ஒரு பரபரப்புத் தென்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்து சென்ற கருணா, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதும்- பின்னர், பிரதி அமைச்சர், சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் கடந்தகால வரலாறு. ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி, கருணாவையும் பாதித்தது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அவர், செல்லாக்காசாக மாறிய நிலையில் தான், சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்த…

  8. கிழக்கில் தொழில் வாய்ப்புக்களுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கார்லோட்டே ப்ளண்டெல் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை மட்டக்களப்பு ஈஸ்டலகூன் விடுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த சந்திப்பின்போதே உயர் ஸ்தானிகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேற்படி சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துள்ளார். அத்துடன், சட்டரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவிற்குள்…

  9. சுன்னாகத்தில் கைகலப்பு: ஒருவர் சாவு சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரு உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கல்லெறியாக மாறியதில், குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய இரத்தினம் தயாபரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கந்தரோடைப் பகுதியில் நேற்று மாலை இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்த்தகராறு தீவிரமடைந்து, ஒருவருக்கொருவர் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்மோது ஒருவர் எறிந்த கல்லானது மற்றையவரின் தலையைப் பதம் பார்த்ததையடுத்து, அவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்…

  10. மனவேதனை அளிக்கிறது: மஹிந்த மனவருத்தம் பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை சமுகமளித்திருந்தார். சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்…

  11. ஆறுதல் பரிசு ஒருவாறாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக யாருக்கும் வழங்கப்படாதிருந்த இப்பதவிக்கு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீரை நியமித்ததன் மூலம், இப் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பறிகொடுப்பதில் இருந்து மு.கா தற்காத்துள்ளது. அதுமட்டுமன்றி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் இந்த சமூகத்துக்கு மறைமுக செய்தியொன்றைச் சொல்வதற்கு மு.காவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர், பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் வெற்றிடமாகிய அப்பதவியை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து வெற்றிடமாகவே வைத்த…

  12. சந்திரிக்காவுக்கு எதிரான விளம்பரத்துக்கு பாரிய தொகை செலவிட்ட மஹிந்த தரப்பு [ வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2015, 02:14.33 AM GMT ] கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி- சந்திரிக்கா தரப்புக்…

  13. மகிந்த, கோத்தா, மற்றும் முப்படையினருக்கும் தண்டனை கிடையாது ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கொழும்பில நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் காப்பாற்றப்படுவார்கள். ஐ.நா. மனித உர…

  14. கோத்தபாயவே அதிகளவு நிலங்களைக் கொள்ளையிட்டவர்! - அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு [Friday 2015-10-30 08:00] தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் பொதுமக்களை முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் காணிகளை அபகரித்தமையே நாட்டில் இன்றுவரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் பொதுமக்களை முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் காணிகளை அபகரித்தமையே நாட்டில் இன்றுவரை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வகையில் நேற்று மு…

  15. இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்கின்றது - பிறீடம்ஹவுஸ் 30 அக்டோபர் 2015 இணையசுதந்திர விடயத்தில் இலங்கை சாதகமான திசையில் நகர்வதாக பிறீடம்ஹவுஸ் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அமைப்பு இணையசுதந்திரம் தொடர்பாக 65நாடுகளை ஆய்விற்குட்படுத்தியுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம இணையசுதந்திரம் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக வீழ்ச்சியடைந்து வருவது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு அந்த அமைப்பு இலங்கை,ஜம்பியா ஆகிய இரு நாடுகள் மாத்திரம் இதற்கு விதிவிலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பாக 4 முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரீடம்ஹவுஸ் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரியில் ஜனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன தெரிவுசெய்யப்பட்டமை,பல இணையத்தளங்களின் மீண்டும் செய…

  16. இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார். பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட…

  17. இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாத…

    • 3 replies
    • 784 views
  18. மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 - 18 வருடங்கள்:- 30 அக்டோபர் 2015 (அக்டோபர் 30 இன்றுடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 20 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகள…

  19. நல்லாட்சியா?... பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், நேற்று(29) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு பிரதிப் டில்ருக்ஷன) - See more at: http://www.tamilmirror.lk/157858/நல-ல-ட-ச-ய-#sthash.ILXJmHVx.dpuf

  20. கைதிகளுக்குப் பிணைவேண்டாம் உடனடி விடுதலையே அவசியம் தமிழ் அரசியல்கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் கொழும்பு அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக வழக்குகள், விசாரணைகள் இன்றியும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோரி 12 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை சிறைச்சாலைகளில் ஆரம்பித்திருந்தனர். போராட்டம் சிறைகளுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் உறவுகளாலும், ஏனைய அமைப்புகளாலும் தொடர்ந்து முன்ன…

  21. 1983ம்ஆண்டுமுதல் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 1983ம் ஆண்டு முதல் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டுமே விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு முதலே யுத்தம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார…

  22. அரசாங்கத்தை கவிழ்க்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய அமைச்சர்? மேல் மாகாணத்தின் மாவட்டம் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அமைச்சர் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். எதிர்வரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கவிழ்த்து, புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இந்த அமைச்சர் திட்டமிட்டுள்ளார். எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக…

  23. மஹிந்தவின் இளைய புதல்வர் கொழும்பு பல்கலை விரிவுரையாளர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டு உள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓரு ஊழியர் என ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இது குறித்து கருத்துதெரிவித்துள்ள அவர் தான் கொழும்பு பல்கலைகழகத்தில் ஒரு பட்டப்பின்படிப்பு மாணவன் மாத்திரமே என தெரிவித்துள்ளார்.சௌதம்டன் பல்கலைகழகத்தில் ஆரம்பித்த தனது பட்டப்பின்படிப்பு ஆய்வை கொழும்பு பல்கலைகழகத்தில் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பல்கலைகழகத்தில் ரோகித பணியாற்றுகின்றார் என பல சமூகஊடகங்களில் தகவல்வெளியான பின்னரே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்திகளில் கொழும்புபல்க…

  24. இந்தியாவின் தமிழக மாநில முதலமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஜெயராமிற்கு அஞ்சப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்தள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மஹி;ந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு எந்த வகையிலும் நாம் அஞ்சப் போவதில்லை எனவும், அத்து மீறல்களில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெனீவா தீர்மானத்தின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் படையினர் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.