Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யு.என்.கபிரேட் நிறுவனத்தின் 2.9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் பொது நோக்கு மண்டபம், செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.விஜயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மண்டபத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் கிராம அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் கண்காட்சியை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் பார்வையிட்டார். இதன்போது தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கரைச்சி பிரதேச செ…

  2. ws - 21 -சண்முகம் தவசீலன் பாடசாலை மாணவர்கள் இடைவிலகுதலை முற்றாக நீக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் 'சாதிக்கும் சந்ததி' செயற்திட்டத்தின் 15ஆம் கட்ட நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு ரூபாய் 4 இலட்சம் பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள், முல்லைத்தீவு, கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே 17 இல் முள்ளிவாய்க்காலில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தொடங்கிய இச்செயற்திட்டம் இன்று அதன் 14 கட்டங்களில் 920 மாணவர்களை உள்ளீர்த்துள்ளது. இதன் அடுத்த பகுதியாக வறுமையொடு தொலைதூரத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருகின்ற மாணவர்கள…

  3. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமூதாயம் சார் சீர்திருத்த மாவட்ட அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு, திங்கட்கிழமை (26) நடைபெற்றது. தேசிய கைத்தொழில் பயிலுனர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் வளவாளர்களால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்;;சாட்டுடன் தொடர்புபட்டு, நீதிமன்றில் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூதாயம்சார் சீர்திருத்த கட்டளைகளுக்கு அமைவாக பணிகளில் ஈடுபட்டு வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களுக்கான தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி, தொழில்;களில் ஈடுபடுத்தும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மூன்றாம் நிலைத்தொழி…

  4. கேபி பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு: வழக்கை தீர்க்க ராஜபக்ஷக்களிடம் பணம் பெறவில்லை! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பற்றிய தகவல் உள்ளடக்கிய அறிக்கை சட்டமா அதிபரால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜெயசூரியவால் இது குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கேபியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த அறிக்கையின் நகல் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என, இதன்போது …

  5. பிரார்த்தனை... கடந்த 25 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலைகளினால் காணாமல் போனோர் தொடர்பான பிரார்த்தனையும் கோரிக்கை முன்வைப்பும் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காணாமல் போனோர் ஒன்றியத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடத்தப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/157687/ப-ர-ர-த-தன-#sthash.rDXrKhCp.dpuf

  6. நீண்டு கொண்டே போகும் இனவாதிகளின் கரங்கள் ஜ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தீர்மானத்துக்கு எதிராகப் பெரும்பான்மையின மக்களை அணி திரட்டுகின்ற செயற்பாடுகள் தெற்கில் வலுப்பெற்று வருகின்றன. இதன் பின்னணியில் மகிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது. "புதியதொரு சிங்கள தேசத்தை உருவாக்குவோம்'' என்ற தொனிப்பொருளில் பரப்புரை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. போர்க்குற்றங்கள் தமிழர்களுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டுள்ளதால் அவை தொடர்பான நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை இனவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் நீதியானதும், நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முன்னாள் ஆட்சியாளர்களும், படையினரும் குற்றவாளிகளென …

  7. ஜெனிவாத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நடந்த இரண்டு நாள் விவாதம் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் மீதான நாடாளுமன்ற இரண்டு நாள் விவாதத்தின்போது பல உறுப்பினர்கள் தமது காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். என்றாலும் நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளக விசாரணை அறிக்கைகள் விவாதத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருந்ததோடு அறிக்கைகள் மறைத்து வைக்கப்படுவதற்கு இடம்தராமல் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருந்தன. போரின்போது நிகழ்ந்த செயற்பாடுகளின் உண்மையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும், மோதலினா…

  8. யாழ்.வருகை தந்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவீனமயமாக்கப்பட்டு வரும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டார். அங்கு நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்கள்,தொடர்பாகவும் அவர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டம்,மற்றும் எல்லே விளையாட்டினை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவே இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 120 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கவை. எமது நாட்டின் தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் நாம் இதனை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்த அவர் எதி…

  9. போரினால் மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற முடியவில்லை : யாழ்.ஆயர் சுட்டிக்காட்டு போரினால் பல்வேறு துறைகளில் முன்னேற முடியாமல் வடமாகாண மாணவர்கள் இருந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக விசேடவசதிகளை வடமாகாணத்தில் ஏற்படுத்தி மாணவர்களை தமது விருப்பத்திற்கிணங்க துறைகளை தெரிவு செய்து ஆற்றலை வெளிப்படுத்த இடமளித்தது பாராட்டத்தக்க விடயம் என யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தார். விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை அவரின் இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் எதுவும் தேவைப்படுகின்றதா? என்று ஆயரிடம் க…

  10. அச்சுவேலி பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் அச்சுவேலி வெட்டுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக சேறு, குப்பைகள் மண்டிக்கிடந்த இக்குளத்தின் புனரமைப்பு பணிகள், கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இக்குளம் ஆழமாக்கப்பட்டுள்ளதுடன், கரைகளில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு புற்கள் பதிக்கப்பட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கிடைக்கப்பெற்ற 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் புனரமைப்புக்கு பிரதேச சபை 5 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியதுடன் பிரதேசமக்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டுள்ளது. இக்குளம் புனரமைக்கப்பட்டமையால் மழை காலங்களில் தேங்கும் நீரைக்கொண்டு இப்பகுதி…

  11. தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி, தாய்வானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் அவரை சந்திப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எ…

  12. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு கிடைத்த எதிர்க்­கட்சி தலைவர் பதவி என்­பது பிர­த மர் கொடுத்த பிச்­சை­யாகும். அது உரி­மை ­யாகக் கிடைக்­க­ வில்லை எனத் தெரி­வித்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் யார் யார் நம்­பிக்கை இழந்­துள்­ளார்­களோ அவர்கள் அனை­வரும் எம்­முடன் இணைந்து கொள்­ளலாம் என்றும் குறிப்­பிட்டார். தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் குறித் துக் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு தற்­போது கிடைத்­துள்ள எதிர்க்­கட்சி தலைவர் பதவி உரி­மை­யாக கிடைக்­க­வில்லை. இது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொடுத்த பிச்சை. இப்­ப­தவி வேறு ஒரு­…

  13. சிறை­களில் இருக்கும் புலி­களை விடு­வித்து நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இவர்­களை விடுதலை செய்தால் புலி­க­ளுக்கு அர­சாங்­கமே அங்­கீ­காரம் கொடுப்­ப­தற்கு சம­மா­னது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. இவர்­களை விடு­வித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்­ப­மாகும் எனவும் அவ் இயக்கம் எச்­ச­ரித்­தது. நீண்­ட­கா­ல­மாக தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் அது குறித்து மஹிந்த ஆத­ரவு அணியின் முக்­கிய அமைப்­பான தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்­திடம் வின­வி­ய­போதே அவ் அமைப்பின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேல…

    • 0 replies
    • 1.1k views
  14. "புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார். அவ்வேளை …

  15. பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில் 27-Oct-2015 10:02 am இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று விசாரைணகளை நடத்தி வருகின்றது என்றும், இந்த விசாரணைகளை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் கண்காணித்து வருகின்றார் என்றும் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். மேற்படி குழு எதிர்வரும் ஜனவரி இறுதியில் விசாரணை அறிக்கையைத் தன்னிடம் ஒப்படைக்கும் என்றும், அதன்பி்ன்னர் பெப்ரவரியில் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படு…

  16. 2016 தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பெப்ரவரிக்குள் கிளிநொச்சி மைதானம் பூா்த்தியாக்கப்படும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது . 2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை கிளிநொச்சியில் நடாத்தும் வகையில் கிளிநொச்சி மைதானம் புனரமைப்பு பணிகள் பூா்த்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா். இன்று 27 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சா் கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு மைதானத்தை பா்ாவையிட்ட போதே ஊடகவியலாளா்களிடம் இவ்வாறு தொிவித்தாா். 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின…

  17. பொலிஸிற்கு உதவிய சிறுவன் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை…

  18. தமிழரிடம் அரசியல் தலைமை இன்மையே சமூக சீரழிவுக்கு காரணம் கண்ணின் அசைவிலும் அல்லது வீரச்சொல்லிலும் நீ இதைச் செய் என்று கட்டுப்படுத்தும் தேசிய தலைமை தமிழ் மக்களிடம் இல்லை. இதுவே சமூகம் சீரழிவதற்கு பிரதான காரணமாக அமைகின்றது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். இன்று யாழ்.இந்து ஆரம்பபாடசாலை நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமூக பயம் என்பது பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும்.குறிப்பாக அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டும் ஆனால் பிள்ளைகள் அரசியல் தலைமைத்துவத்திற்கு பயப்படுவதுமில்லை. அடுத்து குருவிடம் அவர்களுக்கும் பயப்படுவதில்லை.பாடசாலையில் குரு மாணவனை தண…

  19. நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்OCT 27, 2015 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார். சந்திரனுக…

  20. சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை செப்­டெம்பர் மாதத்தில் 1,43,374 ஆக பதி­வாகி உத்­வேகம் மிக்க வளர்ச்­சியை கொண்­டி­ருந்­த­துடன் 35.9 சத­வீதம் கொண்ட ஆண்­டிற்கு ஆண்டு வளர்ச்­சியைப் பதி­வு­செய்­த­தோடு சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­களில் அவ­தா­னிக்­கப்­பட்ட வளர்ச்­சி­யினைப் பிர­தி­ப­லிக்­கின்ற விதத்தில் சுற்­று­லா­வி­லி­ருந்­தான வரு­வாய்கள் 228 மில்­லியன் டொல­ராக 31.9 சத­வீதம் கொண்ட மிக உயர்ந்த வளர்ச்­சி­யினைப் பதி­வு­செய்­தன. அதன் படி, முதல் மூன்று காலாண்­டு­க­ளிலும் சுற்­று­லா­வி­லி­ருந்­தான ஒன்­று­சேர்ந்த வருவாய் 1,763 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில் 2,095 மில்­லியன் டொல­ராக 18.8 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதேபோல், ஆண…

  21. சட்டவிரோதமாக மணலை கடத்த முயன்றவரை துரத்தி பிடித்த பொலிசார் சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை கடத்தி செல்ல முற்பட்டவரை நெல்லியடி பொலிசார் சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று கைது செய்துள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை அகழ்ந்து கன்ரர் ரக வானகத்தில் ஒருவர் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார். அவ்வேளை சட்டவிரோத மணல் மண் கடத்தலை தடுக்கும் நோக்குடன் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிசார் குறித்த வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது சாரதி வாகனத்தை நிறுத்தாது மிக வேகமாக வாகனத்தை செலுத்தி தப்பி செல்ல முயன்றுள்ளார்.அதனை அடுத்து பொலிசார் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர். குற…

  22.  'த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு' ஏ.பி.மதன் இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'த…

  23. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள எண்; ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இலத்திரனியல் அடையாள அட்டையை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து உள்ள அனைத்து தகவல்களும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையில் உ…

  24. வேர்களை மறந்த விழுதுகளின் அரசியல் ப. தெய்வீகன் நீங்கள் சிங்கள இராச்சியத்தை நிறுவ முற்பட்டால் நாங்கள் தமிழீழ இராச்சியத்தை தோற்றுவிப்போம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்துள்ளார். மாவை சேனாதிராசா ஒரு பழுத்த அரசியல்வாதி. பன்னெடுங்காலமாக இலங்கை அரசியலில் முக்குளித்து முழுதும் கண்டவர். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அவரது பயணம் நீண்ட வரலாறு கொண்டது. பதின்ம வயதுகளிலேயே தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயற்பட்டவர். இப்போது போலவே அப்போதும், இவரும் இவர் போன்றவர்களும் முழங்கிய மேடைப் பேச்சுக்களினால் வசியம் கொண்ட பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது வரலாறு. இளைஞர்…

  25. அநு­ரா­த­பரம், - கட பனஹ – முதிதா மாவத்­தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரி­மை­யா­ள­ரான கின்னஸ் சாதனை கராத்தே வீரர் வசந்த சொய்ஸா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் எட்டு பேர் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். நேற்றுக் காலை இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் சம்­பவம் தொடர்பில் மேலும் 15 பேரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட எட்டு பேரில் வசந்த சொய்ஸாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய இருவரில் ஒருவரும் அநுரதபுரத்தின் இரு வேறு விடுமுறை விடுதிகளின் உரிமையாளர்களும் அடங்குவதாகவும் தனிப்பட்ட விவாகரம் இக்கொலைக்கு காரணம் என தெரியவந்து…

    • 0 replies
    • 468 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.