Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பேசப்பட உள்ளது. 21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றக உள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளி;ட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்க…

  2. தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா? "இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி ப…

    • 11 replies
    • 1.5k views
  3. இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில் 3ஆம் இணைப்பு - முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- GTMN இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பயணம் குறித்து இலங்கைக்கான இந்தியாவின் யாழ் துணைத்தூதரகம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை... இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் எனவும், பயணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தனி…

  4. அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலையுடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் இ…

  5. கொழும்பின் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படனர் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று தெரிவித்துள்ளனர். இன்று இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். காணமற்போனவர்களின் குடும்பத்தினர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாதநிலையில் உள்ளனர் இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலிற்கு உள்ளாகியுள்ளனர் என அவர்கள் சார்பில் ஆஜரானசட்;டத்தரணியொருவர் தெரிவித்தார். இதனை செவிமடுத்த நீ…

  6. சமூக வலைத்தள பதிவுகளை கட்டுப்படுத்தப் புதிய சட்டம் சமூக வலைத்தளங்களில் தனிநபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்றங்களுக்கு எதிராகப் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன் வழக்குகளின் கால தாமதத்தைக் குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தொடரின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள…

  7. சனல்-4 வீடியோக்களில் உண்மைத் தன்மை உண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரிட்டனைச் சேர்ந்த "சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட, "நோபயர் சூன்' (போர் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தில் காணப்படும் காட்சிகளில் உண்மைத்தன்மை இருக்கலாம் என்று மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரின்போது காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே, போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக வெளியாகியிருக்கும் காணொலிகள் உண்மையானவையாக இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும்…

  8. ஜனாதிபதி மாமா எனது தந்தையைத் தாருங்கள் ஜனாதிபதி மாமா தயவு செய்து எனது தந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று காணமற்போன பொலிஸ் அதிகாரியின் பிள்ளை விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்துள்ளார். வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி குணதிலக்க என்பவரே காணாமற் போயிருந்த நிலையில், இது தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால பொலிஸ்மா அதிபருக்குப் பணித்துள்ளார். புதையல் தோண்டுதல் தொடர்பாக ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி, ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார். இந்த நிலையில் காணாமற்போயிருந்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஞாயிறு தேசிய பத்திரிகையில் ஒரு செ…

    • 2 replies
    • 680 views
  9. மலேசிய வெளிவிகார அமைச்சின் குழுவொன்று யாழிற்கு விஜயம் மலேசிய வெளிவிகார அமைச்சின் 05 உயர் அதிகாரிகள் அடங்கிய குழு வொன்று இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர். இன்று முற்பகல் யாழ் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவகத்திற்கு சென்ற இவர்களை வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வரதீஸ்வரன் வரவேற்றார் இதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை யாழ் கோயில் வீதியில் அமைந்துள்ள அவரின் வாசஸ்தலத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாணத்திற்கு தேவைப்படும் வீட்டு திட்டங்கள் மற்றும் கட்டிட நிர்மாண வேலைத்திட்டங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர். பின்னர் ஊட…

  10. எம் தேசத்துக்காக தன்னைத்தந்து முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழீழத்தின் பெண் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

  11. பொறுப்பற்ற சமூகத்தின் உருவாக்கம் இலங்கையில் மதுப் பொருட்களின் விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சுற்றுலா மையங்கள் மற்றும் நவீன பல்கலாசார சூழல் கோலொச்சும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் சனத்தொகையின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்தைத் தாண்டியவை. ஆனாலும், யாழ்ப்பாணமே இதில் முன்னணியில் இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் அதிகரிப்பு பல மடங்காகியிருக்கின்றது. கல்வி, கலாசாரம், பண்பாடு, சமூக விழுமியங்கள் பற்றி அதிகமாக அக்கறை கொள்ளும் ('அலட்டிக் கொண்டிருக்கும்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்) சமூகமாக தன்னை தொடர்ந்தும் முன்…

  12. வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது பொரளை பகுதியில் வைத்து சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான 111 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/10/21/வெலே-சுதாவின்-சகோதரி-உட்பட-மூவர்-ஹெரோயினுடன்-கைது

  13. ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரங் களைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் அழைக்கப் பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை அறிவித்ததாகச் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி ஸ்ரீலால் தன் தெனிய தெரிவித்தார்.இதன்போது, ரவிராஜ்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 6 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு சந்தேகநபரை அரசதரப்பு சாட்சியாக நியமிப்ப தற்கு சட்டமா அதிபர் தீர்மான…

  14. மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது! பாதுகாப்புச் செயலாளர் [ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2015, 12:08.15 AM GMT ] மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, அவ்வாறான எந்தவொரு வைபவத்துக்கும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை…

  15. மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம் 21-10-2015 03:40 இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கையானது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி…

  16. பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்களுக்கு புலிகளே காரணம்! - என்கிறது ஆணைக்குழு [Wednesday 2015-10-21 08:00] இறுதிக்கட்டப் போரின் இறுதி 12 மணி நேரத்தில் ஏற்பட்ட பொதுமக்களின் அதிகளவான உயிரிழப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே காரணமாகவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின் இறுதி 12 மணி நேரத்தில் ஏற்பட்ட பொதுமக்களின் அதிகளவான உயிரிழப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே காரணமாகவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிக்கை நேற்றையதினம்…

  17. ஐநாஅரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- 21 அக்டோபர் 2015 ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு அடுத்த சில நாட்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் சமீபத்திய அமர்வின்போது இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் அவர் இலங்கையின் சமாதானத்தைகட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார். மேலும் 24ம் …

  18. பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/157033/ப-ள-ள-ய-ன-ந-ட-கள-தட-த-த-வ-த-த-வ-ச-ர-க-க-நடவட-க-க-#sthash.ItXwbZs7.dpuf

  19. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கைதுசெய்து பின்னர் விடுவிப்பது வழக்கம் இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் அந்தோனிமுத்து அவர்கள் தெரிவித்திருக்கின்றார். இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மூன்று கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. நாலாம் கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை இந்திய அரச தலைவர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதகளுக்கிட…

    • 0 replies
    • 1.6k views
  20. அவென் கார்ட் கப்பலுக்கு சீல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அவென் கார்ட் கப்பல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசா ரணை நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக, கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலிலுள்ள ஆயுதங்களைப் பரிசோதனை செய்வதற்காக குற்றப்புல னாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று கப்பலுக்குள்பிரவேசித்திருந்தனர்.காலி துறைமுகப் பொலிஸார் மற்றும் காலி நீதவான் நீதிமன்றம் என்பவற்றின் அனுமதியுடன் இந்த பரிசோதனையை மேற் கொண்டுள்ளது. குறித்த விசாரணையின் பின்னர் ஆயுதகளஞ்சியத்துக்கு சீல் வைக்கப்பட்டது. கப்பலிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டிருந்தது. கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்த கப்பல் தொடர்…

  21. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படைவீரர் அப்ரூவராக மாறத் தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக (அப்ரூவராக) மாற இணக்கம் தெரிவித்துள்ளார். சந்தேக நபரை அரசாங்க சாட்சியாளராக மாற்ற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரவிராஜ் கொலையுடன் தொடர்…

  22. யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனாலையே குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் யாழ் பொலிசாரிடம் கையளித்து உள்ளனர். http://www.globaltamilnews.net/GTM…

  23. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக தொலை பேசியில் வலியுறுத்திய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் எழுத்துமூலமான உத்தரவாதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். சிறைச்சாலைகளில் உண்ணா விரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப ;படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை…

  24. யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்ததனை விடவும் குறைவானதாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் நீதவான்களை அனுமதிப்பது சில வேளைகளில் சிக்கல் மிகுந்ததாக அமையக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்களில் ஏற்கனவே வெளிநாட்டு நீதவான்கள் பங்களிப்புச்செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், யுத்தக் குற்றச் செயல் குறித்த விசாரணைகளில் ஆலோசனை பெற்றுக் கொள்வதாக அல்லது விசாரணை அமர்வுகளில் வெளிநாட்டு நீதவான்களை உள்வாங்கிக் கொள்வதே த…

    • 37 replies
    • 2.1k views
  25. தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றும் இதுபற்றி சர்வகட்சிக் குழுக் கூட்டத்திலும் எடுத்துரைக்கப்படும் என்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இதில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சில கட்சிகள் இன்னும் இறுதிமுடிவை எடுக்கவில்லை. இந்நிலையில், லங்கா சமசமாஜக் கட்சியின் பங்குபற்றல் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது, "சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் எமது கட்சி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.