Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வித்தியா கொலை : பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போது வட மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும், மஹாலிங்கம் சிவகுமார் என்பவரை பொலிஸ் தடுப்பில் இருந்து வெளியேற்றி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கினை விசாரணை செய்யும், CIDயினரின் அறிக்கைக்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுக…

    • 1 reply
    • 1.4k views
  2. விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென மீண்டு வந்தனரா? இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணா மற்போனார்கள் என்று அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தளபதிகளில் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென தமது தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்று வெளியான தகவல்களை அடுத்து யாழ். குடாநாடு நேற்றுப் பெரும் பரபரப்பாக இருந்தது. விநாயகம் தற்போது மேற்கு நாடு ஒன்றில் இருக்கிறார் என்றும் விடு தலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார் என்றும் இலங்கை அரச படைகள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்தன. இறுதிப் போரின் போது அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்றும் பின்னர் காணாமற்போ…

    • 1 reply
    • 1.6k views
  3. இலங்கை விடயத்தில் சீனாவுக்கு வந்த சோதனை 1 இலங்கையுடனான உறவுகளை மீளவும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சீன அரசாங்கம், சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இது சீனாவுக்கு ஒரு சோதனை தான். முன்னர், இலங்கையில் இருந்து அரச தலைவர்களும் சிறப்புத் தூதுவர்களும் சீனாவுக்கு ஓடிய காலம் போய், இப்போது அங்கிருந்து இங்கு சிறப்புத் தூதுவர் ஓடி வரும் காலம் வந்திருக்கிறது. கடந்த 7ஆம் திகதி தொடக்கம், 9ஆம் திகதி வரை, சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக கொழும்பு வந்திருந்தார், அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அதே நாளில் தான்…

  4. நண்பர்கள் - உறவினர்களிற்கு உதவும் சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வரை.. நண்பர்கள் மற்றும் உறவினர்களிற்கு உதவும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை வெளிவிவகார அமைச்சு வரை பரவ ஆரம்பித்துள்ளது. படுகொலைசெய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க சிட்னிக்கான துணைதூதராக நியமிக்கப்பட்டார்.பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான ஓஸ்டின் பெர்ணாண்டோவின் மருமகன் மேஜர் வர்ணபால பிரிட்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார், அவர் பிரிட்டிஸ் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால…

  5. இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் இருந்த பகுதியில் இரு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளுக்கு அருகில் கிடந்த பொருட்களைக் கொண்டு அவை பெண்களுடையனவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணம் - அரியாலையின் முள்ளியிலேயே இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மணல் அகழ்ந்தவர்கள் இந்த எலும்புக்கூடுகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற ஒருவர் அதனைக் கண்டு தகவல் அளித்ததைத் தொடர்ந்தே இந்த விடயம் இப்போது வெளியே வந்துள்ளது. முன்னர் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த இந்தப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்றின் மண்டை ஓட்டில் துளை ஒன்றும் காணப்படுகின்றது. இது துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட அடையாளம…

  6. மதுபோதையில் சாரத்தியம் தென்மராட்சியில் அதிகரிப்பு தென்மராட்சி பிரதேசத்தில் மது போதையில் வாகனம் செலுத்து வோரின் எண்ணிக்கையும் மது அருந்திவிட்டு பொது இடங்களில் குழப்பம் விளைவிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த சாவகச்சேரி கொடிகாமம் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பயன் கிடைக்காத நிலையில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்கின்றனர். இருப்பினும் இவ்வாறான நிலைகளிலிருந்து எண்ணிக்கை குறைகின்ற நிலைகாணப்படவில்லை. சாவகச்சேரி நீதிமன்றிலும் மதுபோதையில் வாகனஞ்செலுத்துவோருக்கு அபராதம் விதித்தும் மது போதையில் பொது இடங்களில் குழப்பம் விளைவிப்போருக்கு 80 மணித்தியாலயங்கள் வரை சமுதாயப் பணியில் ஈடுபடுத்தியும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துச் …

  7. 35 பேரின் உடல்நிலை மோசம்! உண்ணாவிரதம் தொடர்கிறது! கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம் கைதிகள் கோரிக்கை [ சனிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2015, 01:16.23 AM GMT ] எமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமது விடுதலை தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உத்தியோக பூர்வமான முடிவொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் கோர…

  8. மொஹமட் சித்தீக், புலிகளுக்கு நிதியுதவி : சி.ஐ.டி 17-10-2015 09:17 AM தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் சித்தீக், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நிதியுதவி செய்திருப்பதாக குற்றப்புலனாய் பிரிவினர் (சி.ஐ.டி) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். சித்தீக்கின் மனைவினுடைய வங்கிக் கணக்கில் பலர், வைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே இது தொடர்பில் இன்டர்போலின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக இந்த வங்கிக் கணக்குகள் சித்தீக்கினால் நிர்வகிக்கப்பட்ட போதும் பின்னர் அவை மனைவியினால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சித்தீக், பாகிஸ்த…

  9. நல்லாட்சியிலும் தொடர்கின்றன தமிழர் விரோத நடவடிக்கைகள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடிய மர்வதன் மூலம் தமது வாழ்வை வளப்படுத்த விரும்பும் தமிழ் மக்களில் பலர், இன்னமும் அகதி முகாம்களிலேயே தமது வாழ்நாளைக் கழிக்க வேண்டியுள்ளது. அதற்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அந்த மக்கள், தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் மீள்குடியமர்வை வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதக் குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசு இரகசியமான முறையில் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க காலத்தில் இருந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இலங்கைத் தமிழர்கள் உண்மையிலேயே …

    • 3 replies
    • 1.2k views
  10. தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன் இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம் திகதிக்குள் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுடன் இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நீதியமைச்சரும் தானும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் முடிவில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின் கீழ் உள்ளவர்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என்று மூன்று பிரிவினராக…

    • 2 replies
    • 1.1k views
  11. பெய­ர­ளவில் இன்று அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்­றது. கிரீடம் சூட்­டப்­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்தன் இருக்­கிறார். வேண்­டு­மானால் சம்பந்தன் அந்த கிரீ­டத்தை வைத்­துக்­கொள்­ளட்டும். ஆனால் நாங்கள் எதிர்க்­கட்­சிக்­கு­ரிய வகி­பா­கத்தை வகிக்­கின்றோம் என்று ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஒரு மூத்த அர­சியல் தலைவர். எனவே அவர் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வைத்­துக்­கொள்­ளட்டும். அதன் மூலம் அவர் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக இருந்தால் எமக்குப் பர­வா­யில்லை. ஆனால் நாங்கள் எதிர்க்­க…

  12. 0 Views - 9 -சுப்பிரமணியம் பாஸ்கரன் எமக்காக பல தியாகங்களை செய்தவர்;களின் குடும்ப பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு, எங்கள் எல்லோரிடத்திலும் உள்;ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சின் 43 மில்லியன் ரூபாய் நிதியில் இருந்து, முன்னாள் போராளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்;களத்தினால் தெரிவு செய்;யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் …

  13. மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன், விபத்தொன்றில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயலும் மாணவர்கள் இருவர் பயணம் செத்த மோட்டார் சைக்கிள், ஜீப் வண்டியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருவர் மரணமடைந்துவிட்டதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/156764/ய-ழ-ம-ணவன-வ-பத-த-ல-பல-#sthash.BUBBvQei.dpuf

  14. இராணுவம் பிடிச்ச காணியை வாங்கி தரேலாத அரசு எப்பிடி இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்கும்? பொதுவாய் நாட்டை பாதுகாக்க எண்டு சொல்லித்தான் இராணுவங்களை ஒவ்வொரு நாடும் வைச்சிருக்குது. நாட்டின் பொருளாதார மையங்களிலையும் எல்லையளிலையும்தான் இராணுவத்தை நிறுத்தி வைப்பினம்.. ஆசியாவின் ஆச்சரியமான இலங்கையிலைதான் இராணுவத்துக்காக நாடு. ஒரு நாடு முழுக்க இராணுவம். தமிழர்களின்டை காணியை குடுக்கிறதிலை இராணுவம்தான் தடையாய் இருக்குதாம்.. இதை சாெல்ல உவையளுக்கு வெக்கம் இல்லையே? ஆக இதிலை நீங்கள் சில விசயங்களை ஒப்புக்கொள்ளுறியள். வடக்கு கிழக்கு எண்டுற தமிழர் மண்ணிலை இன்னும் ஆட்சி மாறேல்லை எண்டுறதை ஒப்புக்கொள்ளுறினம்.. அதாவது மகிந்த காலத்தில் தொடங்கின இராணுவத்தின்டை ஆட்சி தான் இன…

  15. அநுராதபுர சிறைச்சாலையில் சுயநிகைவிழந்த நிலையில் கைதி மருத்துவமனையில் அனுமதி அநுரராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த ஆர்.தவரூபன் (30) என்ற இளைஞர் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்றிரவு 9.20 மணியளவிலேயே சுயநினைவிழந்த நிலையில் இருந்த இவரை சிறைச்சாலை அதிகாரிகள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவரூபன் யாழ்ப்பாணம் குன்னாகம் பகுதழயைச் சேர்ந்தவராவார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124963/language/ta-IN/article.aspx

  16. சுன்னாகம் குடி தண்ணீர் விவகாரம் இழுத்தடிப்பு சுன்னாகம் குடிதண்ணீர்ப் பிரச்சினை தொடர்பிலான நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை இன்னமும் வடக்கு மாகாண விவசாய அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை. இந்த மாதத்தின் முதல்வாரத்தில் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த அறிக்கை இன்னமும் வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. நிபுணர்குழுவின் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று இன்னமும் திட்டவட்டமான திகதி குறிப்பிடப்படவில்லை. இந்த நிபுணர் குழுவை நியமித்த வடக்கு மாகாணசபையும் அது தொடர்பில் எந்தத் தகவல்களையும் இதுவரையில் வெளிப்படுத்தவும் இல்லை. பின்னணி சுன்னாகம் மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலந…

  17. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் : நவ. 7 க்கு முன்னர் நிரந்தர தீர்வு ; த.தே. கூ. சந்திப்பில் ஜனாதிபதி உறுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமக்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்க…

  18. உயிரோடு விளையாடாதீர்கள்!: கைதிகளின் போராட்டம் குறித்து ஒரே குரலில் இலங்கை தமிழ் நாளிதழ்கள்: இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உயிரோடு விளையாடதீர்கள் என்று இலங்கை அரசை நோக்கி இலங்கைத் தமிழ் நாளிதழ்கள் ஒரே குரலில் வலியுறுத்தியிருக்கின்றன. குளோபல் தமிழ் குழுமத்தின் உலக தமிழ் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இன்றைய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் குறித்த பார்வையை குளோபல் தமிழ் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம். தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் பிராந்திய தமிழ் நாளிதழ்களான யாழ் தினக்குரல், வலம்புரி, உதயன் நாளிதழ்களுடன் மற்றும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகை ஆகியன இன்றைய பத்திரிகை கண்ணோட்டத்தில்…

  19. அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டி மீது சாணகபூச்சு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் மீது இனம் தெரியாத நபர்கள் மாட்டு சாணகத்தை பூசியும் , அவற்றை கிழித்து அகற்றியும் உள்ளனர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு! , இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! என அந்த சுவரோட்டியில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. அந்த சுவரோட்டிகளை நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்கள் பல இடங்களில் கிழித்து அகற்றியுள்ளனர். அத்துடன் சில இ…

  20. 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் - அரசாங்கம்: 16 அக்டோபர் 2015 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். திகன ரஜவல்ல பிரதேசத்தில் 83ம் ஆண்டு கலவரத்தில் இடம்பெயர்ந்த 134 குடும்பங்கள் அம்பலோட் தோட்டத்தில் வசித்து வருகின்ற போதிலும், கடந்த கால அரசாங்கங்கள் அவர்களுக்கு சட்ட ரீதியாக காணி உறுதிகளை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணி உறுதிகள் வழங்கப்படாத காரணத்தினால் இவர்களினால் நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள…

  21. அனைவருடனும் பகை வளர்த்துக் கொண்டு வினைத்திறனுடன் செயற்படுவது எவ்வாறு? வடக்கு மாகாண முதலமைச்சர் எல்லோரையும் பகைத்துக் கொண்டு எவ்வாறு வடக்கு மாகாணசபையை வினைத்திறனுடனான சபையாக -மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சபையாக, செயற்பட வைக்கப் போகின்றார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. ஆடத் தெரியாதவள் மேடை கோணல்' என்ற கூற்றைப் போல் ஆளுநர் மீதும், பிரதம செயலாளர் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருந்த முதலமைச்சர், அதன் பின்னர் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும், ஆளுநரும், பிரதம செயலாளரும் இடமாற்றப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது ஆத்திரமடையக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அவரையும் பகைத்துக் கொண்டார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையை பகைத்த…

  22. அன்புக்குரிய சகோதரர்களுக்கு வணக்கம். நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிந்து தாளாத வேதனை அடைகின்றோம். இதுபோன்ற உண்ணாவிரதப் போராட்டங்களை நீங்கள் முன்பும் பல தடவைகள் நடத்தினீர்கள். இருந்தும் இலங்கையின் பேரினவாத அரசுகள் உங்களின் விடுதலை பற்றி இம்மியும் சிந்தித்தில. உங்களைக் கைது செய்தவர்கள் உங்களின் விடுதலை பற்றிச் சிந்திப்பார்கள் என்று நாம் எண்ணுவதும் மகா தவறு. உண்மையில் உங்களைப் பற்றி நாங்கள்தான் சதா நினைக்க வேண்டியவர்கள். இருந்தும் உங்களின் விடுதலைக்காக நாங்கள் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது எங்கள் அரசியல்வாதிகள் உங்களைப் பார்க்க வருவார்கள் இது முன்பும் பல தடவைகள் நடந்தன. உங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை நேரில் வந்து பார்த்தால் தங…

    • 0 replies
    • 365 views
  23. ரவிராஜ் கொலை தொடர்பில் கருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 16 அக்டோபர் 2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தளபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் என்படும் கருணா அம்மானிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொலை தொடர்பில் கருணாவிற்கு…

  24. பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு PRECIFAC (பி.ஆர்.இ.சி.ஐ.எப்.ஏ.சி) தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்களை நிராகரித்த ஆணைக்குழு, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றது. இந்த ஆணைக்கு அதிகாரபூர்வமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று ஆணைக்குழு நேற்று (15) வியாழக்கிழமை அறிவித்திருந்தது. ஆணைக்குழுவுக்கு வருகைத்திருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினரின் கடும் ஆட்சேபனையை அட…

  25. [ வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015, 11:23.30 AM GMT ] இராணுவத்தினர் பூநகரிப் பகுதியில் காணிகள் சுவிகரிக்க முயற்சிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீள் குடியேற்ற புனர் வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தொவித்துள்ளார். வாயால் கூறுவதையும் மற்றவர்கள் கூறுவதையும் கேட்டு நாம் எதனையும் செய்ய முடியாது .நாம் இது போன்பல விடயங்களை கேள்விப்பட்டுள்ளோம். இந்த வகையில் முல்லைத்தீவில் காடுகள் அழித்து குடியேற்றங்கள் நடைபெறுவது சம்பந்தமாகவோ அன்றி கடற்படையினர், இராணுவத்தினர் பூநகரிப் பகுதியில் காணிகள் சுவிகரிக்க முயற்சிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் நடைபெறுதல் பூநகரியில் பொது மக்களுடைய காணிகளை சுவிகரிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.