ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் மழையுடன் வீதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட வீதிகள் புனரமைக்கப்படாது மண்வீதிகளாக காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி நகரத்தில் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டபோதும் நகரத்தை அண்டிய உள்வீதிகள் பலவும் இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகள் மழையும் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. ஒரு பிரதேசத்தின் ஒரு கிராமத்தின் அன்றாட செயற்பாடுகளுக்கு வீதி அவசியமானது. எரிச்சலும் சினமுமாக அசௌரியங்களுடனேயே கடந்த ஆறுவருடங்களாக இந்த வீதிகளில் பயணிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் எவரும் பலமுறை கோரியும…
-
- 1 reply
- 336 views
-
-
உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர்களை குறை கூற முடியாது! ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் போன்றவர்களின் ஈடுபாடு, நீதியான விசாரணையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை கடந்த கால அனுபவங்கள் சிறப்பாக இல்லை என்பதால், உள்நாட்டு நீதி விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர…
-
- 2 replies
- 376 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமை குறித்த விசாரணைகளுக்காக இன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலரும் இதன்போது வாக்குமூலமளிக்க வந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு சென்று ஆணைக்குழு வாக்குமூலத்தை பதிவு செய்தது. இதன்போது அவர் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் இது குறித்து கட்சியின் செயலாளரிடமே வினவ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்ப…
-
- 0 replies
- 453 views
-
-
குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமர்வுகளின் ஆரம்பத்தில் இதே நிலைப்பாட்டை அல் ஹ_செய்ன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமைக்கு முற்றுப்புள்ளி வை…
-
- 0 replies
- 240 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய நீதி மன்றக் கட்டமைப்பு இலங்கையிடம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்ள நீதிமன்றக் கட்டமைப்பு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தக்கூடிய அளவிற்கு பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றின் ஊடாக குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உர…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சியும் மீட்சி தராதா? இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழினத்தின் போராட்டமா னது ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்று மூன்று தசாப்தகாலம் வரை அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போராக நடைபெற்று வந்தது. ஆயுதப் போராட்டம் இலங்கையின் கடந்தகால ஆட்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டு ஆறு ஆண்டு காலம் கடந்து விட்டது. முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற தமிழின விடுதலைப் போரில் தமிழினம் விடுதலை பெறாத நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரது காலத்தில் அரசுப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது இன்று வரையில் விடுதலைக்கான முடிவுக்கு காலம் வராத நிலையில் மைத்திரி ஆட்சியிலும் கேள்விக்குறியாக ஆகியுள்ளது. …
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் இறுதி யோசனையின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த ஆதரவை இந்தியா வெளிக்காட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தொடர்பான இந்த யோசனையை அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அனுசரணையில் முன்வைத்துள்ளன. இந்தநிலையில் யோசனையில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளடக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவை பொறுத்தவரை குறித்த வெளிநாட்டு நீதிபதிகளை தவிர்த்த ஒரு யோசனைக்கு அது ஆதரவளிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2016 இல் கமரூன…
-
- 0 replies
- 360 views
-
-
முப்படையினர் உள்ளிட்ட எமது நாட்டு பிரஜைகளை தண்டிப்பதற்கான அதிகாரமுள்ள நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமன்றி மக்கள் அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டில் அரசியல் அமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கே நீதிமன்ற அதிகாரத்தை செயற்படுத்த முடிய…
-
- 0 replies
- 273 views
-
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நால்வரைக் கைது செய்த, குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் மனைவியரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது கணவர்மாரை உடனடியாக விடுதலை செய்யுமாறு மனுவில் கோரியுள்ளனர். இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்…
-
- 0 replies
- 592 views
-
-
சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல்: இருவர் குற்றவாளிகள்; ஒருவருக்கு 300 வருடங்கள் சிறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயன் எ…
-
- 0 replies
- 230 views
-
-
சிறந்த பெண் சாரணியாக வேம்படி மாணவி அகில இலங்கை ரீதியில் சிறந்த பெண் சாரணி விருதை யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி யாழினி இராஜேந்திரன் பெற்றுள்ளார். இலங்கை பெண் சாரணி மன்றத்தால் இந்த ஆண்டே இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பது மாகாண பெண் சாரணிய அமைப்புகளிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் யாழினி சிறந்த பெண் சாரணி யாகத் தெரிவானார். யாழினி 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி சாரணிய விருதைப் பெற்றவராவார். யாழ்.மாவட்ட ஆணை யாளர் திருமதி நீலா தர்மகுலசிங்கத்தின் வழிநடத்தலில் குறித்த மாணவி போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். http://onlineuthayan.com/news/708
-
- 0 replies
- 437 views
-
-
அமெரிக்க தீர்மானத்தை மேலும் மென்மையாக்க இலங்கை தீவிர முயற்சி இலங்கையில் இறுதிப்போரின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற் றங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் இறுதி வரைவு இன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்தை மேலும் மென்மையாக்க,வலுவிழக்கச் செய்ய இலங்கை அரசு ஜெனிவாவில் நேற்று முதல் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. இதற்காக இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரிகள் பலர் ஜெனிவாவில் உள்ள அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே கலப்பு நீதிமன்றம் என்ற பதம் அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டு பொத…
-
- 0 replies
- 168 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் 12க்கு முன் வெளியாகும் ஐந்தாம் அண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. என். ஜே. புஷ்பகுமார இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றின் அடிப்படையில் சித்தியடையும் மாணவர்களுக்கு பிரபல்யமான பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், புலமைப்பரிசில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும். மேலும் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 340,926 பரீட்சார்த்திகள் தோற்றுயிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/719
-
- 0 replies
- 446 views
-
-
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி வவுனியாவில் பேரணி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கக் கோரி வவுனியாவில் இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து வவுனியா பேரூந்து தரிப்பிடம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறித்த பேரணியில் ‘ சிறுவர்களை வாழ விடுங்கள்’ ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் பேரணி இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்க்பபட்ட இப்பேரணியில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்கள், வடமாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, திவிநெகும அபிவிரத்…
-
- 0 replies
- 226 views
-
-
உதயனுக்கு மற்றுமொரு விருது கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் "உதயன்' பத்திரிகைக்கு நேற்று மற்றுமொரு விருது கிடைத்துள்ளது. இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்காக முன்னோடி சேவையாற்றிய எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் 30ஆவது ஆண்டு பூர்த்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வழங்கப்பட்ட ஊடாக சுதந்திரத்துக்கான எஸ்மன்ட் விக்கிரமசிங்க விருதே 'உதயன்' பத்தரிகைக்கு வழங்கப்பட்டது. பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் உதயன் சுடர்ஒளி குழுமத் தலைவர் ஈ.சரவணபவன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். துணிச்சலான ஊடகத்துக்கான இரண்டு சர்வதே…
-
- 0 replies
- 222 views
-
-
சுன்னாகம் தண்ணீர் பிரச்சினை: இறுதி அறிக்கை அடுத்தவாரம் சுன்னாகம் குடிதண்ணீர்ப் பிரச்சினை தொடர்பிலான நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் முற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நிபுணர் குழு குறித்த அறிக்கையை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன என்று குறித்த நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். அந்த அறிக்கையுடன் சுன்னாகம் கழிவு ஒயில் பிரச்சினை மற்றும் யாழ்.குடாநாட்டின் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டது என்று கூறப்படும் கழிவு ஒயில் நிலத்தடி நீரூடன் கலந்தமையால், வலிகாமம் பிரதேசத்தில் குடி…
-
- 0 replies
- 327 views
-
-
ஐ.நா. விசாரணை அறிக்கை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம் இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, அது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் என்பன இன்று ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வழங்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் உருவாக்கும் பரிந்துரை அடங்கிய 16 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அறிக்கையும், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக நிபுணர்களின் 261 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையும் இன்று விவாதத்துக்கு வருகின்றன. இலங்கை இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும…
-
- 0 replies
- 283 views
-
-
-
ஐ.நா அமைதிகாக்கும் பணி: இலங்கை தொடர்ந்து அர்ப்பணிக்கும் 30-09-2015 06:15 AM ஐ. நா அமைதிக்காக்கும் பணிக்கு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐ. நா அமைதிகாக்கும் படையின் காரணமாக இன்று உலகம் பாதுகாப்பாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் இப்பணியில் இருந்தபோது தங்களது உயிர்களைத் தியாகம் செய்த நூற்றுக்கனக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை நினைவுகூர்ந்து நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைச் செலுத்துவதோடு, அவர்களது பணிகளை அங்கிகரித்து பாராட்டுவோம் என்றும் தெரிவித்தார். ஐ. நா தலைமையகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஐ. நா அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உலகத் தலைவர்களின் உ…
-
- 0 replies
- 285 views
-
-
எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் மின் நிலையங்களை உள்ளடக்கிய சர்வதேச எரிபொருள் மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாரிய முதலீடுகளை முன்னெடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சக்தி அமைச்சின் விசேட பிரதிநிதிகள் இலங்கை வரத் திட்டமிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கு முன்பு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது இரண்டு நாட்டிற்கும் அத்தியாவசியமாக கருதப்படுகின்றது என்று…
-
- 2 replies
- 382 views
-
-
மிகுந்த வறுமையில் முல்லைத்தீவு மாவட்டம் 6 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க இலங்கை தொடர்பில் ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. Image captionமிகுந்த வறுமையில் முல்லைத்தீவு மாவட்டம்ஓப்பீட்டளவில், கொழும்பு மாவட்டத்தில் ஒன்று புள்ளி நான்கு வீதமானவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 30 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதேவேளை முல்லைத்தீவைப் போன்று யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகிய கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 13 வீதமானவர்கள் வறுமையில…
-
- 0 replies
- 668 views
-
-
புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ? Posted by eelamalar on September 25th, 2015 08:26 PM | சிறப்புச் செய்திகள் Fotor0917143537 விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்பஇ பச்சோந்திகளாக மாறிஸ.. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்களஇ். சிங்களப்படைகள் நெருங்க நெரு…
-
- 5 replies
- 5.6k views
- 1 follower
-
-
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தந்தையரை விடுதலை செய்யக் கோரும் பிள்ளைகள் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். அவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்ததைப் படங்களில் காணலாம். …
-
- 2 replies
- 406 views
-
-
நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் : கனடாவில் சுமந்திரன் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களின் முழு சம்மதத்தோடு, அவர்களை நியாயப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடாவுக்கு நேற்று விஜயம் செய்த சுமந்திரன், கூட்டமைப்பின் கனடா கிளை தலைமையகத்தில் இடம்பெற்ற ‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி அமெரிக்கா இலங்கை கூட்டாக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு சார்பாக இலங்கையும…
-
- 13 replies
- 1.2k views
-
-
கனடாவுக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்புரை ஆற்றியுள்ளார். நேற்று விஜயம் செய்த சுமந்திரன் எம்பி, பெரிய சிவன் கோவில் அரங்கில் திரு குகதாசன் (ததேகூ கனடா கிளை) தலைமையில் நடைபெற்ற “கலப்பு குற்றவியல் விசாரணை கோரி, அமெரிக்கா – இலங்கை கூட்டாக ஐநா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்” பற்றி சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமக்குரிய சந்தேகங்களை கேள்வி பதில் ஊடகவும் தீர்த்துக் கொண்டனர்.
-
- 5 replies
- 876 views
-