ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
போர்க்குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகிறது – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதிAUG 27, 2015 | 1:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் அடுத்தமாதம் 1ஆம், 2ஆம் நாள்களில் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐந்தாவது ஆண்டா…
-
- 1 reply
- 780 views
-
-
இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது – அமெரிக்கா இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள மனித உரிமை விவகார அதிகாரி டொம் மாலினோவ்ஸ்கீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தை தைரியமாக எதிர்நோக்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முழுமையான அளவிலும் நேர்மையாகவும் கடந்த கால பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பிலான அறிக்கையை வெளியிடும் போது, அறிக்கை தொடர்பிலான தமது பக்க நியாய…
-
- 0 replies
- 545 views
-
-
யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில் ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது நடைபெற்று முடிந்த தேர்தலின் போது அமோக வாக்குகளினால் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதிதிதியாக நாடாளுமன்றம் செல்கின்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு எதிர்வருங்காலங்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அடையாளங்கண்டு முன்வைக்குமாறும் கூறிக்கொண்டார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தழிழ் மக்களின் தேவைகள் மிக அதிகமாக இருப்பதற்கு மேலாக எம்மால் முன்வைக்கப்படுகின்ற மிக முக்கிய…
-
- 0 replies
- 311 views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளுக்கு ஜரோப்பிய குழு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனிடம் கலந்துரையாடிச் சென்றனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=876474226027808129#sthash.fQSyLSTf.dpuf
-
- 0 replies
- 505 views
-
-
புதிய அரசாங்கத்தில் சந்திரிகாவுக்கு முக்கிய பதவி! [Thursday 2015-08-27 07:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கவிற்கு புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டு அதன் பொறுப்பு சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளார். கடந்த 25ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சந்திரிக்காவிற்கு பதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்…
-
- 3 replies
- 562 views
-
-
கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்AUG 26, 2015by கார்வண்ணன்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேவேளை, நிஷா பிஸ்வாலுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகா…
-
- 10 replies
- 1.5k views
-
-
ராஜபக்சவின் தோல்வி சீனாவுக்கு சிறந்த பாடம்- கேணல் ஹரிகரன்AUG 26, 2015 | 11:26by நித்தியபாரதிin கட்டுரைகள் சீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் வெளியாகியுள்ள கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியுற்றதுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சவின் பிரதமராகும் கனவு சுக்குநூறாகியது. ஆகஸ்ட் 17 அன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தே…
-
- 3 replies
- 774 views
-
-
யாழ்.வணிகர் கழகத்தினால் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு யாழ்.பிரதேச செயலக ரீதியாக வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை இடைவிலகிய இடைவிலகும் ஆபத்தினை எதிர்நோக்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்களையும் வழங்கி வைத்தார். வறுமைக்கோட்டிற்குட்பட்ட 500 மாணவர்களுக்கான கற்றல் உகரணங்களை யாழ்.வணிகர் கழகம் அன்பளிப்பாக வழங்குகின்றது.இதன் பெறுமதி 10லட்சம் ரூபாவாகும். இதேவேளை வருடாவருடம் வணிகர் கழகம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அ…
-
- 0 replies
- 401 views
-
-
அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்களை நியமிக்கத் திட்டம் : பிரதமர் ரணில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர விசுவாசிகளான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன ய…
-
- 0 replies
- 287 views
-
-
பிரகீத் கடத்தல் குறித்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச ஊடக அமைப்பு வரவேற்பு! [Thursday 2015-08-27 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைது செய்யப்பட்டமையை வரவேற்பதாக நியூயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எக்னெலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத் தினால் தீர்வு காண முடியுமானால், பிரகீத்தின் குடும்பத்தவர்களின் நீதிக்கான நீண்ட முயற்சிக்கு சிறு ஆறுதலாவது கிடைக்கும் என அந்தக் குழுவின் ஆசியாவுக்கான ஒருங்கிணைப்பாளர் பொப் டயட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். எக்னெலிகொட விவகாரம் ஒரு சம…
-
- 0 replies
- 393 views
-
-
அடுத்தவாரம் ஆரம்பமாகிறது இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு! [Thursday 2015-08-27 07:00] இந்த வருடத்துக்கான பாதுகாப்பு கருத்தரங்கு எதிர்வரும் செப்டம்பர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறும் என்று இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் கருத்தரங்கு-2015 எனும் தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட சுமார் 350 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண உரையை ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்த ஆண்டுக்கான…
-
- 0 replies
- 265 views
-
-
மாந்தைப் புதைகுழி வழக்கில் திருப்பம்! - கண்டுபிடிக்கப்பட்டது மூடப்பட்ட கிணறு. [Thursday 2015-08-27 07:00] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக அது முன்னர் இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்ற புலனாய்வு தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது. ஆனால், காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் அங்கு அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் இருந்திருக்கவில்லை என்றும், அதற்கான பதிவுகளோ ஆவணங்களோ கிடையாது என்றும…
-
- 0 replies
- 318 views
-
-
மஹிந்த எங்களைத் தோற்கடித்து விட்டார்! பிரசன்ன சோலங்காராச்சி[Thursday 2015-08-27 07:00] சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் தமது செயல்பாடு வெற்றியளித்த போதும், மஹிந்தவால் தாம் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் முல்லேரியா பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும், அவிசாவளை தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான பிரசன்ன சோலங்கஆராச்சி. சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டே நாங்கள் போராடினோம். அதன் பின்னர் எங்களது நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற தேவைக்காக ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தோம். கடைசியில் பொதுமக்களின் ஆதரவுடன் நாங்கள்…
-
- 0 replies
- 354 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்! கபே அமைப்பு வலியுறுத்தல்[Thursday 2015-08-27 07:00] பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளபோதும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இன்னமும் நீக்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தனிநபர் சுதந்திரத்தில் பாதிப்புச் செலுத் துவதால் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாடு, சிவில் சமூகத்தின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்பதால் இது தனிநபர் சுதந்திரத்தில் பாரதூரமான பாதிப்பைச் செலுத்தும். அது மாத்தி…
-
- 0 replies
- 216 views
-
-
முக்கிய அமைச்சுக்கள் ஐதேக வசம்! - நிதி அமைச்சு ரணிலிடம்[Thursday 2015-08-27 07:00] புதிய தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் ஐ.தே.முன்னணிக்கும், ஏனைய அமைச்சுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நெடுஞ்சாலைகள், உயர்கல்வி, நீர்ப்பாசனம், கமத்தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்சுக்களை லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குவதற்கு இஇணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தேசிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி சூழல் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் வைத்திருக்க போவதாகவும் நிதியமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்படுமென்றும் தெரியவருகிறது. பெருந்தோ…
-
- 0 replies
- 456 views
-
-
கிரித்தலை இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள்! - இரகசியங்கள் அம்பலம்[Thursday 2015-08-27 07:00] கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்ட கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றினூடாகவும், எக்னெலிகொட தொடர்பில் கைதாகியுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணைகள் ஊடாகவும் இந்த சித்திரவதை கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்படலாம…
-
- 0 replies
- 266 views
-
-
http://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150826_internalinquriy_sampanthar?post_id=10205237150103094_10205875193453779#_=_ Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. உள்ளக விசாரணையை கூட்டமைப்பு ஏற்கிறதா? 26 ஆகஸ்ட் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:31 ஜிஎம்டி இலங்கையின் இறுதிகட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், உள்நாட்டு விசாரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பு சென்றுள்ள அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறையின், தெற்காசியப் பகுதிக்கான துணை செயலர் நிஷா பிஸ்வால் இதை பன்னாட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நில…
-
- 0 replies
- 238 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி?AUG 26, 2015 | 0:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா அதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்துப் பேசியதை, அவரது ஊடக…
-
- 6 replies
- 1.2k views
-
-
நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு அழைக்க வில்லை - சுரேஷ் பிரேமசந்திரன். தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.நீர்வேலியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதமர் தெளிவாக சொல்லி இருக்கின்றார் நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளக பொறிமுறையை தான் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். ஆனா தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேட்பாளர்கள் அனைவரும்…
-
- 2 replies
- 266 views
-
-
“சர்வஜன வாக்கெடுப்பு – 2020” ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு:[Wednesday 2015-08-26 18:00] கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோரிக…
-
- 0 replies
- 795 views
-
-
திருமலை சாம்பல் தீவு சல்லியைச் சேர்ந்த அழகராஜா தங்கரூபன் என்ற மீனவ இளைஞன் கடற்றொழிலுக்கு சென்றிருந்தபோது இனந்தெரியாத சிலரால் படுகொலைசெய்யப்பட்டதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு குறித்த சம்பவத்தை மேற்கொண்ட குற்ற வாளிகளை விரைவாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்தாக அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,…… சாம்பல்தீவு சல்லி பகுதியில் நேற்று (25.08.2015) மீன்பிடிக்கச்சென்ற தங்கரூபன் தன்னை இனந்தெரியாத சிலர் தாக்கிக்கொண்டிருப்பதாக தொலைபேசிமூலமாக தனது வீட்டுக்கு தெரிவித…
-
- 0 replies
- 557 views
-
-
26 ஆகஸ்ட் 2015 அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் உலங்கு வானூர்தி மூலம் புளியங்குளம் மதியாமடு விவேகானந்தா வித்தியாலத்தின் மைதானத்தில் சென்று இறங்குவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் குறித்த மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களுடன் அள…
-
- 0 replies
- 642 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 09 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். . மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 09 சந்தேக நபர்களையும் இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று இரத்த மாதிரி மரபணு பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் அதற்கு சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக விண்ணப்பித்து துரித கதியில் அதனை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கின் சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு அரச இராயன பகுப்பாய்வு திணைக்கள பணிப்பாளரிற்க…
-
- 0 replies
- 535 views
-
-
பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட முயற்சிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் முயற்சியில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள சிறிசேன தனது கட்சியை சேர்ந்தவர்களிற்கு தேசிய அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பை வழங்கிய போதிலும் அவர்கள் எவரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இரு தசாப்தங்களிற்கு மேல் ஆட்சியில் இருக்காத ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை, தங்களது வெற்றிக்கனியின் பெரும்பகுதியை தாங்களே சுவைப்பதற்கு அவர்க…
-
- 0 replies
- 242 views
-
-
எதிர்வரும் மூன்று மாத காலத்தில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தித்துள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு சகோதரிகள் தம்மை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பீரித்தி மற்றும் காந்தினி ராஜபக்ஸ ஆகிய சகோதரிகளே இவ்வாறு கோரியதாகத் தெரிவித்தள்ளார். எவ்வாறெனினும், சகோதரிகள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கியதாகத் கூறி அதன் ஊடாக தமக்கும் தமது உறவினர்களுக்கும்…
-
- 0 replies
- 282 views
-