Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது சமூகத்தின் அடையாளமாகவிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது சுயநலனிற்காக நாசமாக்கியிருப்பதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளரும் உதயன் நாளிதழ் உரிமையாளருமான சரவணபவனின் ஏற்பாட்டிலேயே அனைத்தும் நடந்துள்ளது. கடித தலைப்புக்கள் அங்கேயே அச்சிடப்பட்டுள்ளது.இறப்பர் முத்திரைகள் கூட அங்கிருந்தே தயாரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அப்பிரதிநிதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் பிரச்சார கூட்டமொன்று கரவெட்டி மாலுசந்தியினில் இன்றிரவு நடந்திருந்தது. அம்மேடையினில் சுயவிருப்பினில் கருத்து தெரிவிக்கப்போவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவ…

  2. இலங்கை பாராளுமன்ற தேர்தல் - 2015 எதிர்வரும் 17 ஆகஸ்ட் 2015 இல் இலங்கையில் மேலும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இத் தேர்தல்கள் அர்த்தமற்ற நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றம் சனநாயகப் போர்வையில் தமிழர் தேசியத்தின் அத்திவாரத்தையே அழித்தொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கின்றது. இதே பாராளுமன்றமே எமது மக்கள் மீது மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புத் தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றது. 70,000ற்கும் மேற்பட்ட எம் மக்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தாக்குதலுக்கான ஆணையை வழங்கியதும் இதே பாராளுமன்றமே. …

    • 0 replies
    • 1.1k views
  3. தமிழ் கைதிகள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மாற்றங்கள் செய்துள்ள போதிலும் படையினர் தொடர்ந்தும் தமிழ் கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்தி வருவதாகக் கற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் நடைபெற நான்கு நாட்கள் மட்டமே எஞ்சியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய பல இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வ…

  4. திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விஷேட வர்ததமானி அறிவித்தல் மூலம் விடுவிக்கப்பட்ட காணிகள் மீது தொடரப்பட்ட வழக்கினை இலங்கை உயர்நீதிமன்றம் சட்டமாதிபரின் வாதத்தினை தொடர்ந்து இரத்துச் செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் மீண்டும் குடியேறலாம். - தகவல் sooriyanfm காலை செய்திகள். காலையில் மனம் நிறைந்த செய்திகள்!!

    • 36 replies
    • 2.4k views
  5. ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளலுள்ள பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/151969#s…

  6. தேர்தலை முன்னிட்டு இராணுவம் தயார் நிலையில்! F தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்ட காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க படையினர் ஆயத்தமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய தேர்தல்களை போன்று இம் முறை தேர்தலிலும் அவசியம் ஏற்பட்டால் இராணுவ ஆதரவு பெற்று கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இராணுவ பிரதானியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?…

  7. தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 13,000 பணியாளர்கள் : பெஃப்ரல் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட சுமார் 13,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பெஃப்ரல்) தெரிவித்துள்ளது. கொழும்பு சினமன்; கிரான்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில், நாடு முழுவதுமுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 15,044,449 பே…

  8. நிறைவேற்று அதிகாரத்தைக் கைவிட மஹிந்த தயாராக இருக்கவில்லை! - சோபித தேரர்[Thursday 2015-08-13 06:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பில் நாம் பலமுறை வலியுறுத்தியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனைச் செய்யவில்லை என மாதுளுவாவே சோபித தேரோ தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கியிருந்தது. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது நாம் எட்டுத் தடவைக்கு மேல் இதனை வலியுறுத்தினோம். அவர் அதற்கு இணங்கவில்லை. இப்போது அது பற்றி அவர் பேசி வருகிறார். அதிகாரத்தில் இருந்த போது முடியாததை அதிகாரம் இல்லாத போது எவ்வாறு …

  9. இம்முறை நீதியான முறையில் தேர்தல்! - பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் [Thursday 2015-08-13 06:00] இம்முறை தேர்தல்கள் நீதியான முறையில் நடத்தப்படுவதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒப்பீட்டளவில் ஏனைய தேர்தல்களை விடவும் நீதியான முறையில் இம்முறை தேர்தல் நடத்தப்படுவதாகவே தென்படுகின்றது என பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் டொக்டர் ஜோர்ஜ் அபேலா தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் நீதியான முறையில் இம்முறைத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒப்பீட்டளவில் தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் குறைந்தளவில் பதிவாகியுள்ளன. இலங்கையில் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாகவே தென்படுகின்றது. …

  10. கொட்டடியில் அவதூறு பிரசாரம் செய்த ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு! [Thursday 2015-08-13 06:00] யாழ்.கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியில் தேர்தல் பிரச்சார மேடையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அவதூறாக பேசிய ஈ.பி.டி.பியினரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அந்தப் பகுதியில் ஈ.பி.டி.பியினர் நேற்றுமாலை பிரச்சார கூட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது அக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வவடிவேல் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் தொடர்பாக மிக கீழ்தரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசினார். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த விந்தனின் உறவினர்கள் மேற்படி வேட்பாளருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் விந்தனுக்கும் தெரியப்படுத்தினர். இதனையடுத்து …

  11. வித்தியா படுகொலை வழக்கில் இருந்து நழுவினர் சிங்கள சட்டத்தரணிகள்! [Thursday 2015-08-13 07:00] மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் புலனாய்வுப் பிரிவின் விஷேட பஸ் வண்டி மூலம் ஊர்காவற்றுறைக்கு கொண்டு வரப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிமன்றில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் உள்ளிட்ட உறவினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். எனினும் கடந்த தவணையின் போதும் அதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் வித்தியாவின் குடும்பத்தினர்ர் சார்பில் ஆஜரான எந்த சட்டத்தரணியும் நேற்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை. கடந்த தவ…

  12. மிரட்டல்களுக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்! - யாழ். அரச அதிபர் [Thursday 2015-08-13 07:00] யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்- 526 வாக்கெடுப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களில் இருந்து வாக்காளர்களை அவர்களுக்கு உரிய வாக்களிப்பு நிலையத்திற்கு கொ…

  13. தேர்தல் முடிவுகளில் தான் இனப்பிரச்சினைத் தீர்வு! - சர்வதேச அமைப்பு அறிக்கை [Thursday 2015-08-13 07:00] மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அந்த அமைப்பு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரச நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் சிறிசேன அரசின் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்குள் இருந்த பிளவுகளின் காரணமாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தன் கட்டுப்…

  14. யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்­தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உடுவில் பகு­தியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்­சுத்­தி­ணறி இறந்­துள்­ளது. குழந்­தையின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் சடலம் வைக்­கப்­பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்­தையின் முகத்தை கடித்து குத­றி­யுள்­ளன. இந்­நி­லையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­த­னையை மரண விசா­ரனை அதி­காரி நம­சி­வாயம் பிறேம்­குமார் மேற்­கொண்­டதை…

  15. ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த ஐந்து வருட காலப் பகுதியில் தேசிய அரசாங்கம் அமைப்பது என்ற தீர்வில் உள்ளதாக கூறுகிறது அவ்வாறு என்றால் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமா என்பது தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர் பிரிவினை சக்திகளை இணைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது தொடர்பில் சம்பிக்கவும் மாதுலுவாவே சோபித தேரரும் விளக்கம் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார். இதேவேளை பாராளுமன்றம் கலைத்து இரண்டு நாட்களில் ஒருவர் லண்டன் சென்று புலம்பெயர் புலிகளுடன…

  16. யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் புதன்கிழமை (12) இரவு சைக்கிளில் சென்றவரை வாகனம் ஒன்று மோதியதில்சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த விசாசித்தம்பி தெய்வநாதன் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவருடைய வீட்டில் குழாய்க் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, வீடு சென்றுகொண்டிருந்த இவரை வீதியில் சென்ற வாகனம் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்த இவரை, அவரது உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதனையடுத்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றும்போது உயிரிழந்துள்ளார். சடலம், யாழ். போதனா வைத்…

  17. ஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும் இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக சொல்லிய பிறகு,உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா மிரட்டிய பின்னர்,தனது பதவிகளை மேற்குலகம் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை ஐ.நாவின் தலைமைச் செயலகம் அனுமதித்த பின்னர்,இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக்கொண்ட பின்னர், ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்விதம் இந்த தேர்தலை எதிர்கொள்ள இயலும் என்பதை தீவிரவிவாதத்திற்கு உட்படுத்தும் காலகட்டம் இது. மே 17 இயக்கம் இந்த தேர்தலை எவ்விதம் அணுகுகிறது என்பதை குறைந்த பட்ச அளவில் முன்வைக்கிறோம். நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொற…

  18. மட்டக்களப்பு - வாழைச்சேனை - கோரலைப்பற்று பகுதியில் உள்ள மயிலங்கரைச்சல் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் சிங்கள குடும்பங்களுக்கு பிரித்தளிக்கப்படவுள்ளன. சிறிலங்காவின் இராணுவத்தினரும் காவற்துறையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களுக்கு சொந்தமான இந்த காணிகள் 1990ம் ஆண்டு பலவந்தமாக சுவீகரிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பின் கீழ் காணப்படுகிறது. இதனை மீட்கவும், மீள்குடியேறவும் காணி உரிமையாளர்களான தமிழர்கள் பாரிய முயற்சிகளை ஈடுபட்டு அநாதராவான நிலையில் உள்ளனர். எனினும் அவர்களின் காணிகளை அண்மையில் இந்த பகுதியில் குடியேற்ற நவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

  19. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆரவாளர்கள் கூட்டமைப்பின் வேட்பாளரான சிவமோகனின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குண்ட அவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினில் அயலவர்களால் மீட்டெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதே போன்று வவுனியாவினில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார கூட்டத்தினில் பங்கெடுக்க சென்று கொண்டிரந்த …

    • 0 replies
    • 959 views
  20. வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் ஆறு மணித்தியாலங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டில் விபத்துச் சம்பவம் போன்ற ஒன்றில் இலங்கையின் முன்னணி ரக்பி வீரரான வஸீம் தாஜுதீன் கொல்லப்பட்டார். ஆனால் இது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை எனவும், அதற்குப் பின்னால் மகிந்தவின் புதல்வரான யோசித ராஜபக்ச இருக்கின்றார்எ எனவும் சந்தேகிக்கப்பட்டநிலையில் குற்றப் புலனாய்வும் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் ஒருகட்டமாக, யோசித ராஜபக்ச மற்றும் வஸீம் தாஜுதீனின் நண்பியான யசாரா அபேநாயக்கவிடமும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். வஸீம…

    • 0 replies
    • 3.6k views
  21. முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபு…

  22. புலம்­பெயர் இலங்­கை­யர்­களை நாட்­டுக்குள் மீண்டும் வர­வ­ழைப்­பதும், அவர்­க­ளுக்­கான வாக்­கு­ரி­மையை வழங்­கு­வதும் சிக்­க­லான விட­ய­மாகும். இலங்­கைக்கு வெளியில் வாழும் இலங்­கை­யர்­களை மீண் டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் போது நாட்டின் பாது­காப்­பையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­தனர். எமது எதிர்­கால அர­சாங்­கத்­திலும் புலம்­பெயர் இலங்­கையர் தொடர்பில் ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் ஐ.ம.சு.மு.வின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை காரி­யா­லயத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்­டி­ருந்த கட்­சியின் ஊடகப்பேச்­சாள…

  23. புங்­குடுதீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொ­லை­ செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்தில் கைதுசெய்­யப்­பட்ட ஒன்­பது சந்­தேக நபர்­களில் நால்­வ­ருக்கு நேரடி தொடர்­புள்­ள­தா­கவும் ஏனையோர் அந்த கொடூ­ரத்­துக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­வர்கள் எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்­றுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ளது. வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுரை நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி எஸ்.லெனின் குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன் போதே இரு வேறு அனு­ம­தி­களின் பேரில் இரு மாதங்கள் சந்­தேக நபர்­களை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­தமை தொடர்­பி­லான அறி…

    • 0 replies
    • 1.2k views
  24. மட்டக்களப்பில் கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளதனால் கடலுக்குச் செல்லுதல் மற்றும் கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதனால் கடல் மீன் பிடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வாவியில் மீன்பிடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதனால் செத்தல், மணலை மற்றும் கோல்டன் மீன்கள் பிடிபடுவதாக வாவித் தொழிலாளர்கள் தெரிவித்தனர். வாவியில் மீன் பிடிப்போரும் வெப்பநிலை அதிரிப்பினால் வாவியில் நீர் வற்றியுள்ளதோடு நீரின் மேற்பரப்பும் வெப்பமேறுவதனால் இரவிலும் மற்றும் அதிகாலையிலும் மீன்களைப் பிடிப்பதாகத் தெரிவித்தனர். குறித்த வகையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.