Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் வலையமைப்பினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - நிமால் சிறிபால டி சில்வா[Tuesday 2015-06-23 07:00] புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். புலிகள் இலங்கையில் தோற் கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருகிறது. பணம் திரட் டப்படுகிறது. எமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் கா…

  2. சிங்கத்துக்கு சவால் விடுகிறதாம் பன்றிக் குட்டி! - மகிந்த யாப்பா கூறுகிறார்[Tuesday 2015-06-23 07:00] பன்றிக் குட்டி சிங்கத்திற்கு சவால் விடுவது போன்று அமைச்சர் ராஜிதவின் புதல்வர் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அண்மையில் ராஜிதவின் புதல்வர் சதுர சேனாரட்ன சவால் விடுத்திருந்தார். முடிந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டுமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு, சதுர சேனாரட்ன சவால் விடுத்திருந்தார். …

  3. Started by nunavilan,

    ரணம்

    • 0 replies
    • 431 views
  4. புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையை அடுத்து, அங்குள்ள மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் அந்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணையில் சிறிலங்கா காவல்துறையினர் இழைத்த தவறுகளும் இந்த விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபரை விடுவித்த மூத்த காவல்துறை அதிகாரியிடம், இந்த சிறப்பு விசா…

    • 0 replies
    • 402 views
  5. இதை யாரும் இணைத்தார்களா தெரியாது, ஆங்கிலத்தில் இருக்கும் இந்த இணைப்பின் சாரத்தை தமிழில் தர முயற்சிக்கிறேன். 2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் யுத்தத்தின் மூலம் வெல்லப்பட்ட பொது புலி பயங்கர வாதிகளின் சர்வதேச வலையமைப்பும் அனுதாபிகளின் நிதியாதரவும் இன்னும் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. தமிழ் தன்னார்வ நிறுவங்களின் மூலம் இந்த நிதி கையாளப்படுவதாகவும் சொல்லபட்டிருக்கு. மீதி ஆங்கிலத்திலேயே இணைக்கிறேன்: Despite the military defeat of the LTTE at the hands of the Sri Lankan government in 2009, the terrorist organisation’s international network of sympathizers and financial support continues, US Department of State said yesterday.…

  6. பெற்றோர்களின் அவதானம் பிள்ளைகள் மீது குறைவாக இருப்பதே வன்செயல்கள் அதிகரிக்க காரணம் என்கிறார் : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் பெற்றோர்களின் அவதானம் பிள்ளைகளின் மீது குறைவாக இருப்பதே சமூகத்தில் வன்செயல்கள் அதிகரிக்க காரணம் என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார். இன்று மாலை 4மணிக்கு யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், மாணவர்களுடைய நடத்தைகள் தொடர்பாக பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கைபேசிப்பாவனை இருக்கின்றது.அதனை அவர்களிடத்தில் இ…

  7. பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தையொட்டி பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவிகளுக்கு வாழ்வாதாரமாகத் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டமொன்றை வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின்; சம்மேளனம் முன்னெடுத்துள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது, வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார். மேலும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட கலப்பு இனமான சீ.ஆர்.ஐ–…

    • 3 replies
    • 348 views
  8. யாழ்ப்பாணத்தினில் தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய செயற்பாடுகள் மோசமான முறையில் இடம்பெற்றால் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் தயங்கமாட்டோம். பாடசாலை நேரத்தில் பாடசாலை சீருடையுடன் தேவையற்றமுறையில் வீதியில் திரிந்தால் அல்லது சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் பாடசாலை வளாகத்திற்குள்ளும் அ…

    • 0 replies
    • 214 views
  9. களப்புகளின் எல்லைகளை வரையறுக்க நடவடிக்கை நந்திக்கடல் உள்ளிட்ட வட மாகணத்தின் பிரதானமாக காணப்படும் களப்புகளில் எல்லைகளை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களப்புகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை களப்புகளை எல்லைப்படுத்துவதன் ஊடாக அதனை அண்மித்து வாழும் மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தப்படுவதோடு மீன்பிடியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து கொள்ளவும் முடியும் என எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளாவிய ரீதியில் சுமார் 74 பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள களப்புகளை …

  10. மைத்திரி வென்றது எப்படி? ஆராய்கிறாராம் பசில் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் 'யுக பெரலிய' என்ற நூலைப் படித்துள்ளார் எனவும், தமது அரசின் தோல்விக்கான காரணத்தைத் தான் ஆராய்ந்து வருகிறார் எனவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஒன்றரை மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து அண்மையில் பிணை வழங்கப்பட்ட பஸில் ராஜபக்‌ஷ,முள்ளந்தண்டு பாதிப்புக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியிலிருந்து ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் தெரிவித்தவ…

  11. தேசிய பாதுகாப்பினை விட்டுக்கொடோம்; ருவன் விஜயவர்த்தன தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படும் வகையில் அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசின் நடவடிக்கைகள் காரணமாக விடுதலைப் புலிகள் உருவாக்கம் பெறுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. ஐ.தே.க அரசுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி டி.பி விஜேதுங்க கூட கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை விரட்டி அடித்தார். - See more at: http://onlineuthayan.com

  12. த.தே.கூ ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்; வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஏனைய மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. த.தே.கூ அங்கத்துவ கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது . இதன்போதே இணக்கம் காணப்பட்டது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்குரிய தயார்ப்படுத்தல்களில் ஈடுபடவுள்ளது. ஒவ்வொரு அங்கத்துவ கட்சிகளுக்கும் எத்தனை ஆசனங்கள் ஒதுக்குவது என்பது குறித்து பல சுற்றுப் பேச்சுக்கள் தொடர்ச்சி…

  13. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியினில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி தடுக்கப்பட்டுள்ள நிலையினில் அங்கு உயிரிழந்த படையினரிற்கான நினைவு நடுகல்கள் அவசர அவசரமாக நாட்டப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் முன்னதாக சிறிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவார பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இதனருகினில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலை காணியினில் விகாரைக்கென கையகப்படுத்தப்பட்ட காணி சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் இழக்கப்பட்டுள்ளது. மறுபுறம் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுள்…

    • 0 replies
    • 393 views
  14. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஏனைய மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. த.தே.கூ அங்கத்துவ கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது . இதன்போதே இணக்கம் காணப்பட்டது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்குரிய தயார்ப்படுத்தல்களில் ஈடுபடவுள்ளது. ஒவ்வொரு அங்கத்துவ கட்சிகளுக்கும் எத்தனை ஆசனங்கள் ஒதுக்குவது என்பது குறித்து பல சுற்றுப் பேச்சுக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையிலேயே குறித்த சந்திப்பும் அமைகின்றது. இதன…

    • 0 replies
    • 269 views
  15. ஐ.நா மீதும் தமிழர்கள் நம்பிக்கை வைக்கமுடியாதுள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! ஐக்கிய நாடுகள் சபை இப்போது அரசியல்தான் செய்கின்றது. கடந்த மார்ச் மாத அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை வெளிவரவிருந்த போதிலும், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தினால் அது பிற்போடப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முதல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, விசாரணை அறிக்கை செப்டம்பரில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் பொதுத்தேர்தல் செப்டம்பரிற்கு முதலில் இடம்பெறும் பட்சத்தில் திட்டமிட்டபடி செப்டம்பரில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதேபோன்று, பொதுத்தேர்தல் செப்டம்பரில் இடம்பெறாதிருந்தால் அல்லது அடுத்தவருடத்திற்கு …

  16. அமெரிக்காவில் முன்னைய ஜனாதிபதிகளான நிச்சன் மற்றும் றேகன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை தெரிவு செய்யும் போது அவர்கள் தமது கொள்கைகளேயே கடைப்பிடிப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் சில நீதியரசர்கள் டேவிட் சூட்டர், அந்தோணி கென்னடி மக்களின் பக்கம் நின்று மக்களுக்கு உகந்த நீதியை வழங்கினார்கள். அதே போன்றுதான் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களையும் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்களும் முதலமச்சர் வேட்பாளராக தெரிவு செய்த போது தமக்கு ஏற்றால் போல் முதலமைச்சர் நடக்கவேண்டும் என எண்ணி இருந்தனர். ஆனால் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனோ அமெரிக்கா நீதியரசர்கள் போன்று மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு உகந்த படி தனது தீர்மானங்களை செ…

  17. 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இதன் போது பிரதமரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போட்டுக் கொள்வதற்காகவே தேர்தல் திருத்தச் சட்டம் ஒன்றை தாம் முன்வைத்ததாகவும் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.pathivu.com/news/41007/57/20-24/d,article_full.aspx

  18. பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை முற்றாக நிராகரிக்கின்றோம் - மனோ ற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை தாம் முற்றாக நிராகரிப்பதாக பிரதமரிடம் கூறியதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை குறித்து தமிழ் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில், "பிரதமரிடம் நாம் அனைவரும் எமது சிறு மற்றும் சிறுபான்மை பேரவையின் ஒருமித்த கருத்தை முன்வைத்தோம். இது இந்த நாட்டிலே இன்று இருக்கின்ற பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு…

  19. அநுராதபுரம் சிறைச்சாலை மற்றும் பம்மைமடு புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றுக்குச் சென்ற மைத்திரி அரசின் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தர்மசங்கடங்களிற்கு உள்ளாகியுள்ளார். ஜனவரி 08ம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தேர்தலின்போது சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என மைத்திரி அரசினால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.எனினும் இன்றுவரை ஒரு அரசியல் கைதிகூட விடிவிக்கப்படாத சூழலில் அனுராதபுரத்திற்கு தனது ஆதரவாளர்கள் சகிதம் விஜயகலா சுற்றுலா சென்றிருந்தார். கூடவே கோத்தாபாயவுடனான ஊழல் குற்றச்சாட்டுக்களினில் தொடர்புகு பட்டுள்ள டாண் தொலைகாட்சி ஊடகவியலாளர்களையும் அவர் அழைத்து சென்றுள்ளார்.விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெறவுள்ள் நிலையில் மீண்டும் அரச…

    • 3 replies
    • 3.9k views
  20. பிரதமர் ரணிலிடம் பணம் பெற்றதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பினில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தனது அமைச்சரான ஜங்கரநேசனின் தகவல் அடிப்படையினில் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது நெருங்கிய வட்டாரங்களிடையெ கவலை வெளியிட்டுள்ளார். தகவலை கொண்டுவந்திருந்த ஜங்கரநேசனிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா அல்லது நேரடியாக பணம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டதாவென தான் கேள்வி எழுப்பிய போதும் அமைச்சர் ஜங்கரநேசன் பணம் நேரடியாக கைகளினில் வழங்கப்பட்டதாக தகவல் வழங்கியதாகவும் இதையடுத்து விடயத்தை அம்பலப்படுத்த வேண்டியிருந்ததாகவும் முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய நிதி ஒதுக்கீட்டினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திர…

    • 7 replies
    • 624 views
  21. வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். வதிரி சந்திக்கு அண்மையில் காலை 7 தொடக்கம் 7.30 மணி வரைக்கும், பிற்பகல் 3 தொடக்கம் 3.30 மணி வரைக்கும், மாலை 5.30 மணியளவிலும் ஒன்று கூடும் இந்த இளைஞர் குழு பாடசாலை தனியார் கல்வி நிலைய மாணவிகளுடன் சேட்டை செய்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்களும் பல அசௌகரியங்களை சந்தித்தனர். இந்நிலையில் பொதுமக்களும் பொது அமைப்புக்களும் நீதிமன்றுக்கு அளித்த முறைப்பாட்டு புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையிலேயே குறித்த உத்தரவை நீதிவான் கணேசராஜ…

    • 0 replies
    • 227 views
  22. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதன் போது இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்துக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. http://www.pathivu.com/news/40999/57//d,article_full.aspx

    • 0 replies
    • 315 views
  23. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைக்கான சட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்துலக விசாரணையாளர்களுக்கோ சட்டவாளர்களுக்கோ இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். “உள்ளக விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான செயல்முறைகள் அனைத்தும், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக, ஓகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும். அனைத்துலக விசாரணைகள் நடத்துவதற்கு இது ஒன்றும் சியராலியோன் அல்ல. நீதித்துறை சுதந்தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே முழுமையான விசாரணைகளும் உள்நாட்டிலேயே இடம்பெறும…

    • 0 replies
    • 206 views
  24. அரசாங்கத்தின் உதவிகள் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்கவில்லை என்பதை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஒப்பு கொண்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம் காணிகள் சிலவற்றை விடுத்துள்ளது. ஆனால் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையால், காணி உரிமையாளர்களுக்கு எந்த சுபீட்சமும் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த விடயம் குறித்து பிரதமரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/40998/57//d,article_full.aspx

    • 0 replies
    • 233 views
  25. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 2014ம் ஆண்டுக்கான உலக தீவிரவாதம் சம்பந்தமான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் ஆட்சி காலத்தில் பொது மக்கள் மீதும், சமுக செயற்பட்டாளர்கள் மீதும் புலி முத்திரியை குத்து, கைது செய்வதற்காகவும், துன்புறுத்துவதற்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு எதிராக அமெரிக்க கடந்த காலங்களில் கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. எனினும் புதிய அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகயை எடுப்பதாக தங்களிடம் உறுதி வழங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/40987/57//d,article_full.aspx

    • 1 reply
    • 208 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.