ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல்முறை மாற்றம் சிறுபான்மையினரைப் பாதிக்கும் – கபே JUN 10, 2015 | 1:38by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா பிரதமரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச்சட்ட யோசனை சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளைப் பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை 225ஆக வைத்து தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125க்கு மட்டுப்படுத்துவது சிறுபான்மையினரையும் சிறிய கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
20 ஆம் சீர்திருத்தம்; மனோ கணேசன் தூக்கினார் போர்க்கொடி 20 ஆம் சீர்திருத்தச் சட்டத்தின் புதிய தேர்தல் முறையின் கணக்கை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்காது என அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் கருத்து வெளியிடுகையில், புதிய நிலைமைகளை ஆராய்வதற்காக சிறு கட்சிகளின் பேரவை கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை கூட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார். “திங்கட்கிழமை காலை வரை நாம் ஜனாதிபதியால் கட்சி தலைவர்களுக்கும் அமைச்சரவைக்கும் வழங்கப்பட்ட யோசனைகளையே பரிசீலித்து வந்தோம். அந்த யோசனையில் தொகுதிகள் 165 + மாவட்ட விகிதாசாரம் 31+ தேசிய விகிதாசாரம் 59 என்றே இருந்தது. “இந்நிலையில் திடீரென திங்கட்கிழமை மாலை புதிய கணக்கு அமைச…
-
- 1 reply
- 459 views
-
-
வெளிநாட்டு பேச்சுவார்த்தை: கூட்டமைப்பிற்குள்ளேயே சலசலப்பு! இலங்கை அரசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் சர்வதேச பிரதிநிதித்துவத்துடன் வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ள பல சுற்ற இரகசிய பேச்சு இலங்கையில் பலத்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தென்னிலங்கையில் மகிந்த அணியினர் அதற்கெதிரான பிரசார யுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்திலும் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த பேச்சுக்களை பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றும் மயற்சியா இதுவென கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து …
-
- 1 reply
- 436 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச் சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தினால் 10 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 30க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நிதியமமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் வெலிக்கடை படுகொலை குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி நிமல் நம்புவசம் தலைமையிலான அசோக விஜேதிலகஇ எஸ்.கே.லியனகே ஆகிய நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தன…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் இல்லையென கூறினர் - ஜனாதிபதி தேசிய மற்றும் சர்வதேசத் தேவைகளை அடையாளங்கண்டு தேசிய கல்விக் கொள்கையை சீர்செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். வெளிப்படையாக தொழில்நுட்பக் கல்லூரிகளைக் காணக்கூடியதாக உள்ள போதிலும்இ அங்கு அதிகளவிலான பாடநெறிகளைக் காண முடிவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கல்லூரிகள் என்று கட்டடங்கள் இருக்கின்ற போதிலும் அதன் மூலம் சிறந்த பிரதிபலன் நாட்டிற்குக் கிடைக்கின்றதா என்பதனை சிந்திக்க வேண்டுமென அவர்…
-
- 0 replies
- 588 views
-
-
இஸ்லாமிய வங்கிகளைத் தடை செய்யவேண்டும்- பொதுபல சேனா இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அந்த அமைப்பின் திலந்த வித்தானகே இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஷரியா வங்கி இலங்கையில் வேகமாக பரவி வருகின்றதாக கூறிய வித்தானகே இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார். பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத நம்பிக்கைகளை சம்பந்தப்படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் இதன் முலம் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். இலங்கை ஒரு ச…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கையுடனான இராணுவ உறவை தொடர்ந்தும் வலுப்படுத்த சீனா விருப்பம் இலங்கையுடன் நிலையான இராணுவ உறவுகளை பேணிவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் சான் வங்குவான் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல உதவிகளையும்,ஒத்துழைப்புக்களையும் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கவும் சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் சான் வங்குவான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சென்ற சீன நீர்மூழ்கிக் கப்பலை திருப்பியனுப்பிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது. எனினும் இலங்கையுடன் தொடர்ந்தும் இருக்கமான உறவுகளைப் பேணிவருவதற்கு வி…
-
- 0 replies
- 383 views
-
-
தேசிய, சர்வதேச தேவைகளை இனங்கண்டு கல்விக் கொள்கைகள் விருத்தி செய்யப்பட வேண்டும்! நாட்டின் கல்விக்கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதனை ஊக்குவிப்பது போன்று இனங்களுக்கிடையே நல்லுறவினை விருத்தி செய்ய தேவையான தொடர்புசாதன திறமைகளை விருத்தி செய்யூம் நோக்குடன் மொழிப் பாடங்களை கற்பிப்பது விருத்தி செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய கல்வி ஆணைக்குழு சபையின் உத்தியோகத்தர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சிங்கள ம…
-
- 0 replies
- 385 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் எத்தனை பேர் உடம்புகளில் செல் துண்டுகளுடன் திரிகிறார்கள்: கணக்கெடுப்பில் உண்மை இல்லை என்கிறார் :பேராசிரியர் சிவச்சந்திரன் இலங்கையை பொறுத்தவரையில், 90 வீதமானவர்கள் உண்மையை பேசுவதில்லை.எதனையும் தரவுகள் மூலம் கணக்கெடுப்பது கிடையாது.அண்ணளவாகவே கணித்து கூறுகிறார்கள் என பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார். ரில்கோ விடுதியில் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் உண்மை,நியாயம்,நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பாதிக்கப்பட்ட விதவைகள், காணாமல் போனோர,காணிகளை இழந்தோர் எத்தனை பேர் என தரவுகள் ஒழுங்…
-
- 0 replies
- 441 views
-
-
மனித உரிமை மீறல்கள் அனைத்தும் கடந்த கால அரசின் திட்டமிட்ட செயற்பாடு என்கிறார் : யாழ்.விரிவுரையாளர் விக்னேஸ்வரன் இலங்கையில் ஏற்பட்டிருப்பது நல்லாட்சி இல்லை. ஸ்கன்டிநேவியா போன்ற நாடுகளையே நாம் நல்லாட்சி நாடாக நோக்கலாமே தவிர இலங்கையை அல்ல.2009ஆம் ஆண்டிற்கு பின்னர் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் கடந்த கால அரசின் திட்டமிட்ட செயற்பாடு என யாழ்ப்பாண அரச அறிவியல் துறையின் விரிவுரையாளர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று ரில்கோ விடுதியில் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் உண்மை,நியாயம்,நல்லிணக்கம் தொடர்பான வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவி…
-
- 0 replies
- 376 views
-
-
நீதிமன்றம் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் புதிதாக இடம்பெறும் கைதுகள் நீதிமன்ற பணியாளர்கள் சிலரது கைத்தொலைபேசிகளில் பிடிக்கப்பட்ட காணொலிகள் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதனிடையெ சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களிற்கு ஆஜராக உள்ளுர் சட்டத்தரணிகள் பின்னடித்திருந்த நிலையில் பிணை பெற்றுத் தருவதாக கூறி தென்னிலங்கை வழக்கறிஞர் ஒருவர் கைவிட்டுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்டது. இதனையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் அன்றைய தினமே 130 பேரினை கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்…
-
- 0 replies
- 551 views
-
-
கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்; மட்டுநகரில் பாரிய பேராட்டம் மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தம…
-
- 8 replies
- 527 views
-
-
உள்நாட்டு விசாரணை தனிநாட்டுக்கு வழியமைக்கும்! - என்கிறார் விமல் வீரவன்ச [Tuesday 2015-06-09 07:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தலைமையில் இலங்கையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நிகழ்த்தப்பட்டதான விடயத்தை இலங்கை அரசே ஒத்துக்கொண்டாத மாறிவிடும். இது இந்த நாட்டில் தனிநாடு கோருவதற்கான நியாயப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் கருத்துவெளியிடுகையில் "சர்வதேச விசாரணைக்கு ஒத்துப்போகும் வகையில் உள்ளக விசாரணை நடத்தப…
-
- 3 replies
- 1.2k views
-
-
லண்டன் சந்திப்பு ஏன் இலங்கை அரசுக்கு அவசியமானது ? சிறிலங்காவில் இந்த வருட தொடக்கத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றியோ அல்லது அதற்கான தீர்வு பற்றியோ எந்தவொறு வார்த்தையையும் அத்தேர்தல் முடிந்து வெற்றிபெறும் வரை அதில் வெற்றியீட்டிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதிர்த்திருக்கவில்லை. அதற்கு அவரை ஆதரித்து நின்ற தமிழ்க் கட்சிகளால் கூறப்பட்ட காரணமோ அப்படி எதனையும் வெளிப்படையாக கூறினால் அது இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் அதனாலேயே தங்களது ஆதரவைக் கூட மைத்திரிக்கு இறுதி நேரத்தில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இப்படியொரு நிலை சிறிலங்காவில் இருக்கும் போதும் அது எந்தநேரத்திலும் ஒரு பொதுத் தேர்தல் ஒன்றை ச…
-
- 2 replies
- 726 views
-
-
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்! - மாவை சேனாதிராஜா [Monday 2015-06-08 19:00] ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜ…
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் தென் ஆபிரிக்கா நாட்டின் அரசியல் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் (ICET) விளக்க அறிக்கை [Tuesday 2015-06-09 07:00] தங்களின் சுயநலன் கருதாது, ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்தும், எங்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்றுவதோடு எங்களின் குறிக்கோளை அடைய உதவ சர்வதேச நாடுகள் எவை முன் வந்தாலும் நாம் அதை வரவேற்கிறோம். அந்த வகையில் சென்ற மே மாதம் 25ந் திகதி இலண்டனில் தென் ஆபிரிக்கா நாட்டின் உத்தியோகபூர்வமான அழைப்பின் பேரில் அவர்களது அரசியல் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் 14 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் 5 பிரதிநிதிகள் 2 மதியுரைஞர் அடகங்கலாகக் கலந்துகொன்டனர். அத்தோடு இந…
-
- 0 replies
- 866 views
-
-
இல்லாத புலிகள் மீது பழிபோட்டு தப்பிக்க முனையாதீர்கள்! - கொழும்பு கூட்டத்தில் விக்னேஸ்வரன் சீற்றம். [Monday 2015-06-08 20:00] இல்லாதவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கில் போதைப் பொருள் பாவனை, அதனூடான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். இதன்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நஸரிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு விரைவில் கிழக்கில் உதயமாகும் என எச்சரிக்கை விடுக்கும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதயகம்மன்பில, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கிழக்கில் தனி முஸ்லிம் நிர்வாக அலகு வழங்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும்போதே உதயகம்மன்பில இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கிழக்கில் கரையோர பிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படுவான்கரைப் பிரதேசத்தில் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள், தமது அன்றான வாழ்வாதாரத்துக்காக விறகுகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். (படப்பிடிப்பு: எஸ்.பாக்கியநாதன்) http://www.tamilmirror.lk/147922#sthash.bY6JnYo2.dpuf
-
- 0 replies
- 349 views
-
-
டக்ளசின் பாதுகாப்பிற்கு போடப்பட்ட வேகத்தடை நீக்கம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தகாலத்தில் அவருடைய பாதுகாப்பிற்காக பல்வேறு உண்மைக்கு புறம்பான காரணங்கள் கூறி சிறிதர் தியோட்டருக்கு முன்னாலுள்ள வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடை சில நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறிதர் தியேட்டருக்கு முன்னால் வேகத்தடை போடப்பட்டது. எனினும் குறித்த வீதித்தடை போடப்பட்டமைக்கு அதிக விபத்தே காரணம் என்றும் அதிகாரிகளால் கூறப்பட்டது. ஆனால் அந்தப்பகுதியில் அதிகரித்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை. எனினும் அப்போது ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தமையால் அவருடைய பாதுகாப்புக்கருதியே குறித்த தடை போடப்பட்டதாக பலர்…
-
- 11 replies
- 979 views
-
-
வெள்ளை வான் பாணியிலான கைதுகளை இலங்கை காவல்துறை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றமை உளவியல் ரீதியிலான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் காலம் சென்ற பிரபல பொருளியல் ஆசான் எஸ்.வரதராஜனின் மகன் வ.பார்த்தீபன் இன்று காலை இதே பாணியினில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல் வீசி தாக்குதல் மேற்கொண்டார் எனும் சந்தேகத்திலையே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக கைதுக்கான விளக்கத்தை வழங்கும் வீடியோ காட்சி ஒன்றினை அவர்கள் காண்பித்துள்ளனர். அவர் வெள்ளை வானில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டமையால் கடத்த…
-
- 0 replies
- 305 views
-
-
மன்னார் மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிரார்த்தினை ஒன்றினை முன்னெடுக்ப்பட்டது. http://www.pathivu.com/news/40724/57//d,article_full.aspx
-
- 0 replies
- 263 views
-
-
மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். யாழ்பாணத்தில் சற்று முன்னர் அவரை வெள்ளை வானில் வந்தவர்கள் இழுத்து ஏற்றி கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தில் இன்று அச்சமும் பரபரப்பும் நிலவுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. http://www.jvpnews.com/
-
- 0 replies
- 569 views
-
-
தமிழகத்தின் பல ஊர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்கள், உருவச்சிலைகளை பொலிஸார் கைப்பற்றி இருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கண்டித்துள்ளார். தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு 8-வது மாநாடு உலகத்தமிழர் வாழ்வுரிமை மாநாடாக வருகிற 14ம் திகதி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதில் கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு, நிறைவரங்கம் போன்றவை நடைபெறுகிறது. இதில் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். வடக்கு மாகாண குழு உறுப்பினர் ஆனந்தி அந்த நாட்டில்…
-
- 0 replies
- 323 views
-
-
இடமாற்றம் செய்ய கோரி மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டும் இதுவரை அவரை இடமாற்றம் செய்யாததை கண்டித்து இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதடியில் உள்ள வட மாகாண பேரவை கட்டடத்தில் இன்றைய தினம் 30 ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதில் மாகாண சபையில் வவுனியா அரச அதிபரை மாற்ற கோரி பிரேரணை நிறைவேற்றப்பட்டு இதுவரை குறித்த அரச அதிபரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து சபை அமர்வு ஆரம்பமானதும் உறுப்பினர்கள் தமது இருக்கைகளை விட்டு எழுந்து அவை தலைவர் முன்பாக சென்று சபை அமர்வினை ஆரம்பமாகதவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் பிரதமரை சந்தித்த போது, வவுனியா அரச அதிபரின் இ…
-
- 0 replies
- 278 views
-