Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையினில் தமிழ் தரப்புக்களும் ஆதரவாளர்கள் சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளன.கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தனிதனியாக சந்திப்புக்களை ஆரம்பித்துள்ளன. சுரேஸ்பிறேமச்சந்திரன் தரப்பின்; கட்சி ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல் இன்று யாழினில் நடைபெற்றிருந்தது இதில் சமகால அரசியல் கருத்துக்களை தானும் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரும் வழங்கினோம்.நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி ஆதரவாளர்களும் தமது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனதென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார். இதனிடையே இம்முறை சம்பந்தனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்க…

  2. உலக சுற்றாடல் தினத்தையொட்டி, கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் முகாமைத்துவ திணைக்களம், சுற்றாடல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுடன் இணைந்து நிலாவெளியிலுள்ள புறாமலை தீவை பாதுகாப்போம் என்னும் பெயரில் செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை (06) முன்னெடுத்தனர். இதன்போது திருகோணமலை வலய கல்வி பிரிவில் உள்ள 9 பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 20 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், நிலாவெளி கடற்கரையில் எளிமையான வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பாடசாலைகள் ஒன்பதுக்கும் தலா 10,000 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது. கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் சந்திரகீர்த்தி பி…

    • 0 replies
    • 584 views
  3. யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்த அதேயிடத்தைச் சேர்ந்த குளிர்பான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார். பாடசாலை செல்லும் சிறுமியை இளைஞன் இனிப்புக்கள் வழங்கி வன்புணர்வு செய்து வந்துள்ளான். இது தொடர்பில் அறிந்த சிலர், சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் இது தொடர்பில் தெரிவித்தனர். சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவே…

    • 0 replies
    • 402 views
  4. 2009ம் ஆண்டின் பின்னரே வடமாகாணத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னரே இது வடக்கில் பரவியுள்ளது. இதன் காரணமாகவே பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் வடமாகாணத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/40673/57//d,article_full.aspx

    • 3 replies
    • 540 views
  5. இம்முறை தேசியக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளமாட்டாராம் டக்ளஸ்! [sunday 2015-06-07 08:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படுவதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தீர்களா எனக் கேட்டபோது அவர் அதற்கு விடைதர மறுத்துவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=133509&category=TamilNews&am…

    • 1 reply
    • 304 views
  6. எந்த இடர் வரினும் சம்பூர் மக்களை மீளக்குடியேற்றுவோம்! - சம்பந்தன் உறுதி [sunday 2015-06-07 08:00] எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் சம்பூர் மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பாக சம்பூர் மக்களோ ஏனையவர்களோ சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. சம்பூர் மீள்குடியேற்ற விடயம் தொடர்பில் அரசு வலுவான முடிவுகளை எடுத்து வருகின்றது.சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு கட்டாயக் கடமை அரசுக்கு இருக…

  7. படையினர் வசமிருக்கும் முன்பள்ளி ஆசிரியர்களை மீட்டெடுக்க நியதிச்சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்கள் , வேதனம் தொடர்பாக நிரந்தர தீர்வுகளுக்கான நியதிச்சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை சபையின் விவாதத்திற்கு உட்படுத்தி நியதிச்சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ்…

    • 0 replies
    • 652 views
  8. பெற்றதாயைப் போன்ற சுதந்திரக்கட்சியை சீரழிக்கும் முயற்சிகளில் மகிந்த: - தயாசிறி குற்றச்சாட்டு! [sunday 2015-06-07 13:00] மகிந்த ராஜபக்ச இப்படி நடந்து கொள்வார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பெற்றதாயைப் போன்ற சுதந்திரக்கட்சியை சீரழிக்கும் முயற்சிகளில் அவர் இறங்குவது நல்லதல்ல. அவரது மேடைகளில் நான் இனிமேல் ஏறமாட்டேன். இப்படி அதிரடியாக அறிவித்துள்ளார் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர. வடமேல் மாகாணசபை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சமயத்திலேயே இப்படி கூறினார். ‘நான் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனேயே இருக்கிறேன். நான் சுதந்திரக்கட்சிக்காரன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மேடைகளில் ஏறுவதில்லைய…

  9. நாடாளுமன்றம் எப்போது கலைப்பு? - நாளை முடிவெடுப்பார் மைத்திரி [sunday 2015-06-07 08:00] நாடாளுமன்றம் என்போது கலைக்கப்படும் என்ற கேள்விக்கு நாளை உறுதியான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபையைக் கலைப்பது பற்றி நாளை ஜனாதிபதி காத்திரமானதொரு முடிவை எடுக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, அந்த வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும். தற்போதைய நிலைவரத்தின்படி 9ஆம் திகதி அனுதாபப் பிரேரணை மீதும், 10ஆம…

  10. கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு மூன்று கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை! [sunday 2015-06-07 09:00] நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம், அதில் அங்கம் வகிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்த விடயம் குறித்து தமக்கிடையே கூடி ஆராந்த இந்தக் கட்சியினர் அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தேர்தல் வேலைகளை ஐக்கிய தேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே ஆர…

  11. சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் நாளை போராட்டத்துக்கு அழைப்பு! [sunday 2015-06-07 09:00] மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை இது நல்லாட்சிக்கு அவமானம் என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. சமூக சேவை உத்தியோகத்தரது கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலேயே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் கொலையாளிகளை அண்மித்தும் அவர்களை கைது செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொலைக்கு கார…

  12. ஷிரந்தியின் சிரிலிய சவிய வங்கிக்கணக்கில் அரச பணம் ஒரு சதம் கூட இல்லையாம்! - மகிந்த ராஜபக்ச கூறுகிறார். [sunday 2015-06-07 09:00] ஷிரந்தியின் சிரிலிய சவிய வங்கிக்கணக்கில் அரச பணம் ஒரு சதம் கூட இல்லை என்று அவரின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எனது மனைவி சிரந்தியின் சிரிலிய சவிய வங்கிக் கணக்கில் அரச பணம் ஒரு சதம் கூட இல்லை. அவ்வாறு இருக்குமென்றால் அதனை அரசிடன்தான் நீங்கள் கேட்க வேண்டும். இந்த அபயராம விகாரயை நான் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்…

  13. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்? [sunday 2015-06-07 08:00] காணாமல்போனோர் விவகாரம் குறித்தும், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக உள்ளக விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சரும் அண்மையில் அறிவித்திருந்தனர். இதற்கமையவே இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கா…

  14. கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னிப்பகுதிகளில் கடந்த யுத்தத்தின் பின்னர் உளநலம் பாதிக்கப்பட்டோரின் தொகை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு உளநோய்க்காளோரில் பலர் தற்கொலை செய்து கொள்வதை காணமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள மலையாளபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களுக்குள் ஐந்து பேர்வரை உளநலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பரந்தனில் உள்ள கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றில் உளவள சிகிச்சைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெறவரும் மனநோயாளர்களின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது. http://www.virakesari.lk/art…

    • 0 replies
    • 239 views
  15. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நேற்று திடீரென மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 12-6-1999-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதியும், கடந்த ஜனவரி 29-ம் தேதியும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கான சிகிச்சையை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கிடையில், தனக்கு மருத்துவ சிகி…

  16. ஊழலற்ற நல்லாட்சியை கொண்டு வருவதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறும் மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராக எமது மக்கள் செயற்படவில்லை. பொலிஸாரும் இராணுவத்தினருமே நல்லாட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று சனிக்கிழமை(06) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாயில் பொதுமகனின் காணியை அபகரித்து பௌத்த தோரர் ஒருவரின் துணையுடன் அதில் விஹாரை அமைக்கும் செயற்பாடுகள் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதனை கண்டித்தும் தடுத்து நிறுத்துவதற்காகவும் குறித்த காணிக்குச் சொந்தமான உரிமையாளரும் பிரதேச வாசிகளும்…

    • 0 replies
    • 242 views
  17. வடபகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபார நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ஆபத்தான ஓளடதங்கள் குறித்த தேசிய கட்டுப்பாட்டுச் சபைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விடயத்தில் வடமாகாணசபையுடன் இணைந்துசெயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை இதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான சந்திப்பொன்று கொழும்பில் நாளை வடமாகாண முதலைமச்சரிற்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது. மாகாணசபையுடன் தொடர்புடைய சமூக பிரச்சினையொன்று தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன்,சேர்ந்து வடமாகாண சபை முயற்சிகள மேற்கொள்வது இதுவே முதற்தடவை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி படுகொலையின் பின்னர் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்து போது செய்யப்ப…

    • 0 replies
    • 152 views
  18. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஊடகமொன்றுக்கு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டு ஆத்திரமுற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினால், அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அரசியல் சாசனமோ அல்லது நீதியோ அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதியாவதற்கு தேவை என்மீது ஒர் துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே என்பதனை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன்.' 'அரசியல் சாசனத்தின் ஊடாகவும் நாட்டின் சட்டத்தின் ஊடாகவும் செய்ய முடியாதவற்றை துப்பாக்கித் தோட்டா ஊடாக செய…

    • 5 replies
    • 1k views
  19. வட­ப­கு­தியில் இவ்­வ­ருட முதல் காலாண்­டிற்குள் 23 பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும், 38 சிறு­வர்கள் பெற்­றோரால் புறக்­க­ணிக்கப்­பட்ட நிலையில் இருப்­ப­தாக உத்­தி­ யோ­க­பூர்வ தக­வல்கள் கூறு­கின்­றன. இதே­வேளை, உத்­தி­யோ­க­பூர்வ பதி­வு கள், முறை­யீ­டு­க­ளுக்கு உள்­ள­டங்­கா­மலும், மறைக்­கப்­பட்ட நிலை­யிலும் கணி­ச­மா­ன­ளவு பாலியல் வல்­லு­றவுக் கொடு­மைகள் அரங்­கே­றி­யி­ருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்கள் தெரி­விக்­கின்­றனர். வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பதிவு செய்­யப்­பட்ட பாலியல் கொடு­மை­களில் யாழ். மாவட்டம் முன்­ன­ணியில் உள்­ளது. யாழ். மாவட்­டத்தில் 10 சம்­ப­வங்­களும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 சம்­ப­வங்­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 5…

    • 0 replies
    • 309 views
  20. தமிழ்நாடு வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை வழிப்படும் மக்கள். http://www.pathivu.com/news/40597/57//d,article_full.aspx

    • 43 replies
    • 5.4k views
  21. கவுணாவத்தை வேள்வியில் 400 கடாக்கள் பலியிடப்பட்டன! [saturday 2015-06-06 20:00] கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன. இன்று அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள் மற்றும் கால் நடையாகவும் கடாக்களைக் கொண்டுவந்தார்கள். காலைமுதல் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து வெட்ட அனுமதி வழங்கினார்கள். …

    • 4 replies
    • 3.4k views
  22. 20வது திருத்தச்சட்டம் குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது! - என்கிறார் சம்பந்தன் [saturday 2015-06-06 20:00] புதிய தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது. அத்துடன் வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர். புதிய தேர்தல் திருத்த சட்டம் ஒன்று அமுலாக்கப்படும் போது, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்ட…

    • 2 replies
    • 418 views
  23. மியான்மார் ரொகிங்கா முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் ! [saturday 2015-06-06 09:00] மியான்மார் குடிமக்களாகிய ரொகிங்கா முஸ்லீம் மக்கள் மீதான மியான்மிய பௌத்த இனவாதிகளது வன்முறைகளுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, 2012ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணைக்கால அரசவை அமர்வின் போது, ரொகிங்கா முஸ்லீம் மக்கள் மீதான மனித உரிமைமீறல்களை கண்டித்து தீர்மானமொனறினை நிறைவேற்றி இருந்தோம். அத்தீர்மானமானது: ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமை…

  24. சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரோ அல்ல சிவாஜலிங்கம்:- இனப் படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியும். சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரோ அல்லவென் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் 67 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு இலங்கை அரசுகள் தீர்வெதனையும் தரவில்லை. இந்நிலையில் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுக்களினை இலங்கை அரசு நிராகரித்துவருவதுடன் சர்வதேச தரப்புக்களது நிதியில் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புக்கள் சிலவற்றை முன்வைத்து எமது கோரிக்க…

    • 0 replies
    • 394 views
  25. தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார். தமிழ்மிரருக்கு அளித்த விசேட செவ்வியொன்றில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம் முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல் பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய நிலையில் நாம் தேசிய …

    • 15 replies
    • 838 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.