ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
நாம் திராவிடர் என்ற இயக்கம் நேற்று 01.05.2015 காலை 9:00 மணிக்கு செல்லம் பிரிமியர் ஸ்தாபக மோகன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு செங்கலடி செல்லம் வாசஸ்தலத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வேப்பவெட்டுவான் , இலுப்பட்டி சேனை , பன்குடாவெளி , வந்தாறுமூலை , சித்தாண்டி , ஏறாவூர் ,கித்துள் போன்ற பகுதிகளிலிருந்து பெருமளவான பொதுமக்கள் , புத்தி ஜீவிகள் , கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் , இளைஞர்கள் , முதியோர்கள் என பலவகைப்பட்டோர் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர் . ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நல்ல அரசியல் தலைமைகள் கிடைக்காமை வருந்தத்தக்க விடயமாகும்…
-
- 2 replies
- 544 views
-
-
குடாநாட்டினில் தொடரும் குழு மோதல்களின் உச்சமாக மல்லாகம் சந்தி யினில் பாடசாலை மாணவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வாளால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளனர். மல்லாகம் மகாவித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்ற மாணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்;. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மல்லாகம் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த மாணவன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/39758/57//d,article_full.aspx
-
- 0 replies
- 324 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இன்று காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் கொண்ட குழுவினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அரசியல் செயல்முறைகளை வலுப்படுத்த…
-
- 0 replies
- 287 views
-
-
சிறிலங்காவில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால், அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார். லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தினால் நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். “ஊழல் தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்தவும், சொத்துக்களை மீட்கவும், உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களின் விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்ற எமது விசாரணையாளர்கள் தயாராக உள்ளனர். எமது சட்டவாளர்களும் உங்களின் சட்டவாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளனர். எந்தவொரு திருடப்பட்ட சொத்து அமெரிக்காவில் இருந்தாலும், அது உண்மை…
-
- 0 replies
- 314 views
-
-
சிறிலங்காவின் கடற்பரப்பில் இழுவை படகுகளை முற்றாக தடை செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்த யோசனையை தாங்கள் புறக்கணிக்கப் போவதில்லை என்று மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இந்த யோசனையின் உட்கிடக்கைகள் தொடர்பில் தாம் இன்னும் ஆராயவில்லை என்று கூறியுள்ளார். ஆனபோதும், இதுவரையில் தமிழகத்தை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் வடமாகாண மீனவர்கள் சம்பந்தமாக நேரடியாக குரல் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது யோசனையை முன்வைத்துள்ளமையை வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். இந்த யோசனையின் உட்கிடக்கைகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் தீர்மான…
-
- 0 replies
- 259 views
-
-
ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் காவல்துறை, குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு, அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டார். சிறிலங்கா அதிபரின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட, ஜோ…
-
- 0 replies
- 277 views
-
-
இன்று தாஜ் சமுத்திராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான செய்தியாளர் மாநாடு இரண்டு கேள்விகளுடன் முடிவடைந்தமை ஊடகவியலாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த செய்தியாளர் மாநாட்டிற்காக 4 மணிமுதல் ஊடகவியலாளர்கள் காத்திருந்த நிலையில் 6.30 மணியளவிலேயே செய்தியாளர் மாநாடு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆரம்பமான செய்தியாளர் மாநாடும் இரண்டு கேள்விகளுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் இரு கேள்விகளைன மாத்திரம் கேட்டிருந்த நிலையில் கெரி செய்தியாளர் மாநாட்டை முடித்துக் கொண்டு வெளியேறினார் கெரியிடம் எழுப்பட்ட வினாக்களில் இரண்டில் ஓன்று மாத்திரம் இலங்கை குறித்ததாக அமைந…
-
- 1 reply
- 510 views
-
-
EDITORIAL valampurii ஒருவரைப் பற்றி அறியவேண்டுமாயின் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பது ஒரு பொது நியதி.நல்ல மனிதர்களாக இருந்த பலர் பணம், பதவி, அதிகாரம் என்பவற்றால் மிக மோசமாகிப்போன வரலாறுகள் நிறையவே உண்டு. அப்படியானால் நல்ல மனிதர் என்போர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தமது உயர்ந்த பண்பு நிலையில் இருந்து ஒருபோதும் பிறழ்வடைய மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாற்றமடைந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களாகவே வாழ்வதென்பதும் இந்த உலகம் நமக்கு உணர்த்திய உண்மை. இந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் இயலில் நல்லவர் என்று அவரோடு கற்றவர்கள், உடன் பழகியவர்கள் சொல்வர். இதை இப்போது நாம் சொன்னால் சவுதித் தண்டனைப்படி சொன்ன வரை கல்லால் அடித்துக் கொல்ல…
-
- 0 replies
- 440 views
-
-
சிறுபான்மை மக்களை வஞ்சிக்க உத்தேசிக்கும் தேர்தல் முறை மாற்றம் இந்நாட்டிலே தொன்றுதொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய கட்சித்தலைவர் மனோ கணேசன்,எமது கடந்த கால தலைவர்களை போல் நாங்கள் ஒரு கோப்பை கோப்பிக்கு மயங்கி தமிழர்களின் உரிமைகளை தாரை வார்க்கப் போகின்றவர்கள் அல்ல. ஆகவே நாங்கள் இனி ஏமாற தயாரில்லை. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடும்போது ஒரு பெரும்பான்மை தலைவர், மனோ நீங்கள் சாகும் வரை தலைவராகவும், எம்பியாகவும், அமைச்ச…
-
- 0 replies
- 319 views
-
-
யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோளை முன்வைத்து யாழ் மறை மாவட்ட ஆயர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரால் யுத்தகால கட்டத்தில் கைப்பற்றிய தமிழ் மக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கதெனவும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கைப்பற்றப்பட்ட காணிகளில் ஆயிரம் ஏக்கர் விடுவி…
-
- 0 replies
- 349 views
-
-
யுத்தகால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அமெரிக்காவிற்கு உறுதி:- 02 மே 2015 இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – ஜோன் கெரி:- யுத்த கால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பொறுப்பு கூறல் போன்றவை …
-
- 0 replies
- 481 views
-
-
ஈழத்தின் மாபெரும் ஊடகப்படுகொலை தினம் : உதயன் குழுமத்தினால் அனுஸ்டிப்பு உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த அசாதாரண சூழலின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டனர். மேலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் திட்டம்,யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் 'உதயன் குழுமத் தலைவருமான' ஈ.சரவணபவனினால் ,இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் ஊடக சுதந்திர தின நிகழ்வும் - கண்காட்சியும் யாழ்.பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 10.20 மணிக்கு நிகழ்வுகள், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் 'உதயன் குழுமத் தலைவருமான' ஈ.சரவணபவனின் தலைமை…
-
- 0 replies
- 301 views
-
-
மருதங்கேணி பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை யாழ். மாவட்ட செயலகம் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மருதங்கேணி பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவையொன்று கடந்த வியாழக்கிழமை மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் பொலிஸ் திணைக்களம், நில அளவை திணைக்களம் ,கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் , தபால் திணைக்களம் , தேசிய வீடமைப்பு அதிகார சபை, புனர்வாழ்வு அதிகார சபை, ஆளடையாள அட்டை திணைக்களம், நிறுத்தல் அளவைகள் திணைக்களம். காணிப் பயன்பாட்டுத் திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, சிறு கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், சமுர்த்தி , பாவனையாளர் அ…
-
- 0 replies
- 305 views
-
-
கம்பன் விழா 2015 ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2015 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று மாலை ஆரம்பமாகியது. ஸ்ரீ ஐஸ்வர்யலக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து கம்பன் படம் ஊர்வலமாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. கம்பன் விழாவின் பிரதம விருந்தினராக மலேசியாவின் இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கலந்து சிறப்பித்தார். இராமநாடகக் கீர்த்தனை மற்றும் திருவாசக நூல்கள் வெளியிடப்பட்டன. அத்துடன், 2014 கம்பன் விழா நிகழ்வின் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி இரு அமர்வுகளாக நடைபெற்றன. காலை அமர்வில் தமிழ்நாட்டுப் புலவர் சண்முகவடிவேலின் இலக்கியப…
-
- 0 replies
- 346 views
-
-
ஜனாதிபதியுடன் கெரி சந்திப்பு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்னதாக வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினருடன் ஜோன் கெரி சந்திப்பு நடத்தியிருந்தார்.மேலும் தமிழ் தலைவர்களையும் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=858444011702875190
-
- 0 replies
- 232 views
-
-
எங்களை பிரிவினை வாதிகளென சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.அதில் முன்னிலையினில் எமது மக்கள் வாக்களித்த கூட்டமைப்பு தலைமையே இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். https://soundcloud.com/pathivunews/mrpkajenthirakumar-may-day-speech-01052015mp3 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின மே தின பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் நடைபெற்றது.முன்னதாக பருத்தித்துறை நகரினில் ஆரம்பமாக பேரணி ஊர்வலமாக கொட்டடி நடராஜா கலையரங்கில் நிறைவுபெற்றது.பதிவு இணைய செய்தி பேரணியில் பெரும் திரளான மக்கள் திரண்டு தமது ஆதரவை வழங்கி யிருந்தனர்.மே தினப் பொதுக்கூட்டம் காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் ச…
-
- 1 reply
- 568 views
-
-
55ஆவது வினாடியை கவனியுங்கள்
-
- 1 reply
- 543 views
-
-
வட மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி தமது சொந்த இடங்களை இழந்து அநாதரவான அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிப்போம்.மேலும் நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது அரசின் பிரதான நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்த காரணத்தை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் எம்மால் முட்டி மோத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரே…
-
- 4 replies
- 537 views
-
-
அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று 2ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரியுடன் வந்த 35 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்றார். http://www.tamilmirror.lk/145173#sthash.univ2zhz.dpuf
-
- 5 replies
- 403 views
-
-
பசில் – அத்துரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் பேச்சு லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரருக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சரை வைத்தியசாலையில் வைத்து சந்தித்த அத்துரலிய ரத்தின தேரர சுமார் ஐந்து மணித்தியாலங்கள் பேச்சுக்களில் ஈடுபட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனைக் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. கைதுசெய்யப்பட்டுள்ள ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து உரையாட சட்டம் அனுமதிப்பதாக நீதியமைச்சின…
-
- 0 replies
- 347 views
-
-
மைத்திரி ஆட்சியில் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு - ரணில் "சிறுபான்மையினரை அரவணைத்துக் கொண்டு மைத்திரி அரசு தொடர்ந்து பயணிக்கும். இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.'' இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். "2009ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய போர் நிறைவடைந்த போதும், மக்களின் பிரச்சினைகள் ஓய வில்லை. அதற்குப் பதிலாக இனவாதம் தழைத்தோங்கியுள்ளது. இவற்றுக்கு மைத்திரி அரசில் தீர்வு காணப்படும். தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் செயற்பட எமது அரசு நடவடிக்கை எடுக்கும்.'' என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22ஆவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்…
-
- 0 replies
- 319 views
-
-
நிரந்தர நியமனம் வழங்குங்கள் : உயர்தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் போராட்டம் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று நல்லூர் ஆலய சூழலில் போராட்டம் ஒன்றை நடத்தினர். கடந்த 2012 ஆம் ஆண்டு தமது நிரந்தர நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 228 பட்டதாரிகள் ஒன்றிணைந்து வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்த பட்டதாரிகள் ஒன்றிணைந்…
-
- 0 replies
- 207 views
-
-
மதிலுடன் மோதுண்டதில் தனியார் பேருந்து விபத்து : அதிஸ்டவசமாக உயிர்தப்பினர் பயணிகள் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து ஆறுகால் மடத்திற்கு அருகில் காலை இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் குறித்து தெரிய வருவது, தனியார் பேரூந்தின் சுக்கான் பழுதடைந்தமையாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பேருந்தின் சாரதி மிகவும் அவதானத்துடன் குறித்த பேருந்தை செலுத்திச் சென்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஸ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினர். http://onlineuthayan.com/News_…
-
- 0 replies
- 345 views
-
-
புதுயுகம் ஒன்றை உருவாக்குவேன்; ஜனாதிபதி மைத்திரிபால நேற்றுத் தெரிவிப்பு "இலங்கையின் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி வெளிநாடுகள் குறைகூறாத அளவுக்கும், அந்த விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிடாத வகையிலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் இங்கு பூரண ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் ஏற்படுத்தி புதுயுகத்தை உருவாக்குவேன்.'' இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் நேற்று ஹைப்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "புதிய ஆட்சி உருவாக்கப்பட்டு 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில் நாக்கள் வழங்கிய வாக்குறுகளை நிறைவேற்றியுள்ளோம். அதில் மி…
-
- 0 replies
- 292 views
-
-
பொதுத் தேர்தலை சந்திக்க இப்போதே தயாராகுங்கள்; மே தின நிகழ்வில் பிரதமர் ரணில் அறைகூவல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு நேற்று அறைகூவல் விடுத்தார் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க. அத்துடன் பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுத் தருமாறு பொதுமக் களிடம் வேண்டுகோள் விடுத்தார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசுஅமைப்பதே தமது நோக்கம் என்றும், தற்போது சிறுபான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுமக்கள் பெரும்பான்மைப் பலத்தைப் பெற கைக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 10ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, நிலையான பொருள…
-
- 0 replies
- 331 views
-