Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் இழுவைப் படகைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபருக்கு இரண்டு வருட சிறை தண்டனையும் 50,000 அபராதமும் விதிக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றில் விவாதத்திற்கு வரும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.tamilcnnlk.com/

    • 0 replies
    • 526 views
  2. [ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015, 11:22.46 AM GMT ] புதிய தேர்தல் முறைமையை அமுல்படுத்துவதினால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு 238 உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையின்படி11 தேர்தல் தொகுதிகளை கொண்டுள்ள யாழில் 11 ஆசனங்களும், 13 தேர்தல் தொகுதிகளை கொண்டுள்ள கண்டி மாவட்டத்தில் 13 ஆசங்களும் கிடைக்கும். இதனால் தற்போது 225ஆகவுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே காணப்பட்ட தொகுதிவாரி முறைமையின் கீழ் சிறுபான்மையினத்தவரை பிரதிநிதித்து…

    • 0 replies
    • 421 views
  3. 'தவறு எதுவும் செய்யவில்லையென நான் கூறவில்லை. சில தவறுகளைச் செய்தவர்களை, சில விடங்களில் இருந்து நாம் அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை அவற்றில் இருந்து விடுவித்தோம். இது தவறாகும். அவர்கள் செய்த தவறுகளுக்காக நாம் தண்டனை வழங்கவில்லை. அவற்றை நாம் மறைக்க முற்பட்டோம். நான் நினைக்கின்றேன், நான் இதனைச் செய்தது தவறு என்று. இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்'' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் மிகவும் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச குறிப்பிடும் குற்றவாளிகள், அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்த…

    • 2 replies
    • 714 views
  4. வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள 'ஆறுதல்' அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் …

    • 49 replies
    • 3k views
  5. மட்டக்களப்பு வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன் வளர்ப்பு செயற்திட்டத்தின் அறிமுகத்துடன், மீன்பிடி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டத்தை உணவு விவசாய தாபனம் (FAO)ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் முன்னெடுத்துள்ளது. முறையான தயார்ப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றுடன், இத் திட்டம் 2015 மார்ச் 17 ஆம் திகதி, மீன்குஞ்சுகள் கூண்டுகளில் இருப்புச் செய்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது. வாவிப் பகுதியில் அளவுக்கதிகமாக மீன்பிடித்தல் மற்றும் வளங்களின் சுரண்டல் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தணிக்கும் வகையிலும், மீன்பிடி சமூகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய புத்தாக்கமான நிலையான வினைத்திறன் வாய்ந்த பொருளாதார செயற்பாட்டு திட்டமாகவும் கூண்டுக…

  6. அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிங்களப் பேரினவாதம் வலுக்கத்தொடங்கியுள்ளது. அண்மைக் காலமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் தேசியவாத கொள்கைகள் மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் இன்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திலும் இதன் வெளிப்பாடுகளை காண முடிந்தது. முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் டலஸ் அழப்பெரும, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தேசிய கொடிகளை ஏந்தி கோசங்களை எழுப்பி வந்தனர். எனினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பயன்படுத்திய தேசிய கொடியானது திருத்தி அமைக்கப்பட்ட கொடியொன்றாகும். இந்த தேசிய கொடியானது சிறுபான்மை மக்களி…

    • 0 replies
    • 467 views
  7. 19 ஐ நிறைவேற்றும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிக்கே உள்ளது Thu, 04/23/2015 - 09:28 பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச்சட்­டத்­தினை நிறை­வேற்றிக் கொடுக்கும் பொறுப்பு ஜனா­தி­ப­திக்கே உள்­ளது. எமக்குக் கொடுத்த வாக்­கு­று­திக்கு அமைய 19ஆவது திருத்­தத்­தினை நிறை­வேற்­ற­வேண்டும். இல்­லையேல், அவரே பிர­தான பொறுப்­பாளி ஆவார் என பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரி­வித்தார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­ப­டா­விடின் அடுத்த கணமே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். எதற்கும் முகங்­கொ­டுக்கத் தயா­ரா­கவே உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த …

  8. காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு! - கொக்கிளாயில் பதற்றம். [Thursday 2015-04-23 07:00] முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று கடந்த செவ்வாயன்று காலை முறியடிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கூடியதால் அப்பகுதியில் ஒரு முறுகல் நிலை தோன்றியது. முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களும் வருகை …

  9. குழப்பங்களுக்கு காரணம் சந்திரிகா! - ரம்புக்வெலவின் கண்டுபிடிப்பு [Thursday 2015-04-23 07:00] நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பொறுப்பு என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி பிளவடைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரது செயற்பாடுகள் குறித்து முன்னாள் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்க எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது. சோமவன்ச அமரசிங்க, ரோஹன விஜேவீரவின் கொள்கைகளே பின்பற்றி வருகின்ற…

  10. ஐதேக பொய்ப்பிரசாரம்! - நிமல் குற்றச்சாட்டு. [Thursday 2015-04-23 07:00] 19 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாக ஐ.தே.க. பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது. ஐ.தே.க. வுக்குத்தான் 19 வது திருத்தத்தை நிறைவேற்றும் எந்தத் தேவையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 19 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்ட அவர் அரசாங்கம் எம்மிடம் வெற்றுக் காதிதத்தில் கையொப்பம் பெற முயல்வதாகவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த அவர், நாம் 19 வது திரு…

  11. "ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுளிடமிருந்து சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இலங்கை அரசு இடமில்லாமல் செய்துள்ளது'' என்று வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தமது சிறப்பான அணுகுமுறைகள் - நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச விசாரணையை இல்லாது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையை விடுவிக்கவும், இராணுவத்தினரைப் பாதுகாக்கவும் இவர்களின் செயற்பாடு, காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறினார். அரச தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் …

    • 4 replies
    • 638 views
  12. பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா வருகிறார்.உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை : இலண்டனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவரது பாட்டு கச்சேரி பற்றி எதையும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால் என்னைக் களங்கப்படுத்தும் வகையில் இந்தப் பாட்டுக் கூட்டமும், கச்சேரி ஏற்பாட்டாளர்களும் பேசி வருவதாக அறிந்து வருந்துகிறேன். 1960 ஆம் ஆண்டு நான் ஆதித்தனார் ஐயா தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தில் இயங்கிய நாட்களில் எனது தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடத்தொடங்கியவர் செல்லப்பா. இன்று வரை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எனது பாடல்களை பாடியே அவர் மக்கள் முன் அறிமுகமானார். அதனாலேயே "செல்வந்தர்" செல்லப்பா ஆனார். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் சிங்கள வெறி…

  13. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், இன்று அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர், ஹிரு தொலைக்காட்சியின் யாழ்ப்பாண செய்தியாளரான ந. பிரதீபன் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மூவரில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், தெரியவந்துள்ள அதேவேளை, மூன்றாமவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் யாழ். காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், கைது செய்யப்ப…

    • 3 replies
    • 678 views
  14. ராஜபக்ச அரசாங்கத்தின் பதவி வகித்த சிலர் அடுத்த சில நாட்களில் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நிதியைத் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடிய எந்தவொரு நபரும் தராதரம் பாராது கைதுசெய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறான குற்றவாளிகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வரையில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டாம்…

    • 0 replies
    • 631 views
  15. முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளை வெள்­ளிக்­கி­ழ­மையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் இரு­வரை கைது­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் பஷில் ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தை­ய­டுத்து அவ­ரது ஆத­ர­வா­ளர்­களால் ஆர்ப்­பாட்ட நட­வ­டிக்­கைகள் அல்­லது எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்றும் அவ்­வா­றான அதா­வது பொது நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான எத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கும் இட­ம­ளிக்க வேண்டாம் என அர­சாங்கம் பொலி­ஸாரை அறி­வு­றுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது. இதே­வேளை பா…

    • 0 replies
    • 383 views
  16. சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை முதல் ஊழல் தடுப்பு ஆணைக்குழவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 8.30 முதல் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அவர் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில் இந்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவி;கப்படுகிறது. இதேவேளை அவரும் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/39468/57//d,article_full.aspx

    • 0 replies
    • 460 views
  17. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டார். நிதி குற்றவியல் ஆணைக்குழு முன்பாக இன்று வாக்குமூலமளிக்கச் சென்ற பசில் ராஜபக்ச இன்று மாலை வரை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதன்பின்னர் பின்னரே பசில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ராஜபக்சக்கள் பலர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/2319-2015-04-22-12-00-05

  18. தேர்தல் பிரச்சார காலத்தின்போது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவும், மின்சாரக் கதிரைக்குச் செல்லவும் தயாரென வீராப்புப் பேசிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் செல்லுவதற்குத் தயங்குவதேன் எனப் பிரதி வெளிநாட்டமைச்சர் அஜித் பெரேரா இன்று கேள்வியெழுப்பியிருக்கிறார். “இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.…

  19. சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல் APR 23, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுக்காலை 11 மணியளவில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற அவரிடம், ஆறு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, நேற்றுமாலை பசில் ராஜபக்சவைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையினர், கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பசில் ர…

  20. கோத்தாவிடம் இன்று விசாரணை – முன்னிலையாகாமல் நழுவ முயற்சி APR 23, 2015 | 0:51by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். இந்தநிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, கொழும்பு பிரதம நீதிவான் நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக, அவரை இன்று முன்னிலையாகும்படி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று ஆணைக்குழுவின்…

  21. புதிய முறைமையின் கீழேயே அடுத்த தேர்தல் – அடம்பிடிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி APR 23, 2015 | 2:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்கும், தேர்தல் முறை மாற்றம் குறித்து புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்த, “20வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றத் தாமதம் ஏற்பட்டாலும், புதிய தேர்தல் முறைமையின் கீழேயே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்…

    • 0 replies
    • 411 views
  22. “நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த APR 23, 2015by கார்வண்ணன்in செய்திகள் தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் பெரியளவிலான குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர். இது ஒரு சூனிய வேட்டை போல இருக்கிறது. நானோ எனது குடும்பத்தினரோ சட்டரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை. முதலில், நான் சுவாசிலாந்தில், நிதியை வைத்துள்ளதாக கூறினர். பின்னர் ட…

    • 0 replies
    • 1.3k views
  23. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் அதிகாலையில் கைது APR 23, 2015 | 0:59by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், இன்று அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர், ஹிரு தொலைக்காட்சியின் யாழ்ப்பாண செய்தியாளரான ந. பிரதீபன் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மூவரில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், தெரியவந்துள்ள அதேவேளை, மூன்றாமவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. …

    • 0 replies
    • 389 views
  24. சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்! [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 04:28.50 PM GMT ] சிங்களத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் தமது கருத்திலும் தமது இனத்தின் பெருமைகளையும் வரலாற்றினையும் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் முனைப்போடு செயற்படுகின்றார்கள் என்பதை வரலாற்றுக்காலம் தொட்டே பார்த்து வந்திருக்கிறோம். இப்போது இலங்கை அரசியல் ஒரு குழப்பமான சூழலில் இருக்கின்றது. யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி என்று தெரியாமல் மக்கள் குந்தியிருந்து யோசிக்கின்றார்கள். யாரை வெட்டி வீழ்த்தி ஆட்சியை பிடிக்கலாம் என்று அரசியல்வாதிகள் மந்திராலோசனையில் மூழ்கிவிட்டார்கள். கட்சிகளுக்கு கட்சிகள் ஒரே பேச்சும், பெட்டிப்பரிமாற்றங்களும் தாராளமாய் நடந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு புறம் …

    • 0 replies
    • 466 views
  25. பாராளுமன்றை கலைத்து தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை April 22, 2015 02:20 pm 19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது, ச…

    • 0 replies
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.