Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் வலிகாமத்தில் கழிவு ஓயில் கலந்த நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்த முடியுமா?இல்லையாவென்பது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை வடமாகாணசபையிடமிருந்து எதிர்பார்த்து சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தினில் மக்கள் மற்றும் மாணவர்கள் குதித்துள்ளனர். சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளை சேர்ந்த நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என அனைத்து தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.எனினும் வடமாகாணசபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு உத்தியோகபூர்வமற்ற நிலையினில் ஊடகங்களிற்கு குறித்த நீரினில் அபாயமில்லையென அறிவித்திருந்தது. இது தொடர்பில் குழப்பகரமான அறிக்கைகளும் செய்திகளும் வெளியாகி வருவதால் இந்த சிக்கலில் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகா…

  2. அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாயக்கல்லூரி கிழக்கு மாகாணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார். பாலமுனையில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரிக்கு 2015—2016 கல்வி ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் திங்கட்கிழமை (6) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழ்மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியினூடாக விவசாயத்துறை சார்ந்த கல்வி ரீதியிலான அதிக வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைத்திருப்பதை எண்ணி…

    • 0 replies
    • 493 views
  3. ஆசிரியர் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி, மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியரான திருமதி. ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது 51) கடந்த 30ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த போது, வீதியில் பலத்த பாயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த ஆசிரியர் உயிரிழந்தார். அரிப்பு - நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து குறித்த ஆசிரியர் கடந்த 30ஆம் திகதி நான…

    • 0 replies
    • 372 views
  4. மைத்திரிக்கும் மகர இராட்சசனின் நோய் பரவுமா? இந்த கேள்வியை ஹொலிவுட் திரைப்பட தீவிர ரசிகர் ஒருவர் தன் நண்பரிடம் கேட்டுள்ளார். என்ன மகர இராட்சசனின் நோயா? அந்த நண்பர் மீண்டும் அவரிடம் கேட்டார். ‘ஏன் ஹொபிட் திரைப்படத்தில் வரும் மகரத்தின் நோய்…’ என்று அந்த தீவிர திரைப்பட ரசிகர் கூறினார். த ஹொபிட் என்பது ஹொலிவுட்டின் பிரபலமான திரைப்பட தொடராகும். அந்த தொடரின் மூன்றாம் பாகம் அண்மையில் தான் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் தொரின் என்ற ராஜ பரம்பரையின் மலையக ராஜதானி விட்டுப் போவதும் அதை மீண்டும் கைப்பற்ற தொரின் இராஜகுமாரன் செல்லும் பயணம் பற்றி சொல்லப்படுகின்றது. தொரின் தனது தந்தையாரின் மலையக இராஜதானி என்றழைக்கப்படும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த இராஜத…

  5. வடக்கு மாகாண முதலமைச்சரை பொய்யன் என பேசியதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 27வது மாகாணசபை அமர்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பார்த்து பொய்யன் என பிரதமர் கூறியிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்ற…

    • 0 replies
    • 490 views
  6. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் மண்முனை மேற்கு பிரதேசப் பொதுமக்களினால் நேற்று திங்கட்கிழமை கௌரவிக்கப்பட்டனர். கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான என்.சிறிநேசன், எஸ்.மகேந்திரகுமார், கே.ஹரிகரராஜ், மண்முனை மேற்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/143587#sthash.I14Rilje.dpuf

    • 3 replies
    • 504 views
  7. சுனாமிக்கு பின்னர் வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம், ஒரு வீட்டைக்கூட நிர்மாணிக்காமல் 1,470 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணை குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பொலிஸ் விசாரணை பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி மேவன் சில்வா தலைமையிலான குழுவே விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த விசேட குழுவினால் கடந்த இர…

    • 1 reply
    • 370 views
  8. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார். இதன்போது 1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் அமைச்சர் முரளிதரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது. ஆணைக்குழுவின் தலை…

    • 3 replies
    • 627 views
  9. விக்கி- ரணில், சம்பந்தன்- கஜேந்திரகுமார் சர்ச்சையின் பின்னணியில் யார்? [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 02:39.30 AM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் “வீடு” சின்னத்தில் போட்டியிடுகிறது. தமிழ் மக்கள் தேசிய முன்னணி தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் “சைக்கிள்” சின்னத்தில் தான் போட்டியிடுகிறது. எனவே இரண்டு அமைப்புக்களும் மாற வேண்டும். அத்துடன், விக்கி- ரணில் என்பது தனிப்பட்ட குரோதம். பாதிப்பிற்கு உள்ளாவது வாக்களித்த வட மாகாண மக்களே. சம்பந்தர்-கஜேந்திரகுமார் விவகாரத்தில் பகிரங்கப்படுத்தப்படாத சம்பவங்கள் பல புதைந்து போயுள்ளன என கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்ததுடன், இதுவரை வெளிவராத பல உண்மைகளை நிகழ்ச்ச…

    • 0 replies
    • 555 views
  10. 19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் APR 07, 2015 | 2:30by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக, நேற்று உயர்நீதிமன்றத்திடம் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் அறிவித்தார். அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத…

    • 0 replies
    • 308 views
  11. சிறிலங்கா அரசாங்கத்தின் வாய்ப்பேச்சுக்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம், தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் சர்வதேசத்துக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. நல்லிணக்கம், மனத உரிமைகள் போன்ற விடயங்கள் குறித்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும். அதுவே முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39018/57//d,article_full.aspx

    • 6 replies
    • 685 views
  12. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா அதிபர் முக்கிய பேச்சு APR 07, 2015 by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப்புடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தச் சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர், தாரிக் பதேமியும் கலந்து கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, சோதனைமிக்க தருணங்களில், ஒருவர் மற்றவருக்கு ஆற்றிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு பரஸ்பரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். தீவிரவாதப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் அளித்த ஒத்துழைப்புக்கு, சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அத்…

    • 0 replies
    • 342 views
  13. எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார் APR 07, 2015 | 1:56 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படப் போவது யார் என்பது குறித்து, இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார். அத்துடன், 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானமும், இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடும் போது, சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, அந்தக் …

    • 0 replies
    • 386 views
  14. மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் பெண்களுக்கு வலுவூட்டல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார் . மகிந்த அரசு பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கில் அப்பாவிகளை தான் கொன்று குவித்துள்ளது .போர் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் போரால…

    • 2 replies
    • 590 views
  15. நீதி­மன்றத் தீர்ப்பை உதா­சீனம் செய்து கூர­க­லவில் பள்­ளி­வா­சலை அமைத்­த­வர்­களை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்தும் பொதுபல சேனா பெளத்த குருமார் மீதான தாக்­கு­தலை கண்­டிப்­ப­தோடு இப் பிரச்­சினை தொடர்­பாக அரசு நியா­யத்தை பெற்றுக் கொடுக்க தவ­றி­விட்­ட­தா­கவும் தெரி­வித்­தது. இது தொடர்­பாக பொதுபல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தகவல் தரு­கையில், கூர­கல பிர­தேசம் 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க பெளத்த சின்­னங்கள் காணப்­பட்ட இட­மாகும்.இதனை தொல்­பொ­ருள் திணைக்­களம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தோடு அங்­கீ­க­ரித்­துள்­ளது. அங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பள்­ளி­வாசல் கட்­டப்­பட…

    • 0 replies
    • 280 views
  16. அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது தென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட பாக்கிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்க…

    • 2 replies
    • 882 views
  17. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ எதிர்காலத்தில் செயற்பாட்டு அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா மிரர் இணையத்தள பிரதம செய்தியாளர் நேற்று (06) நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அரசியல் ஈடுபடுவதற்கு அடிப்படையில் தமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை என்ற போதிலும், தற்போது அரசியலுக்கு வரவேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பல்வேறு காரணங்களையும், ஏராளமானோரின் வேண்டுகோள்களையும் கருத்திற்கொண்டு இறுதித் தீர்மானம் ஒன்றை தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எந்தக் கட்சியின் ஊடாக தான் அரசியலில் ஈடுபடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்ட…

    • 1 reply
    • 350 views
  18. விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சியிருக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பில் இன்று வெள்ளிக்கிழமை வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் காலை பதிவுகளை மேற்கொண்ட மக்கள் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கடந்த 25 வருடங்களிற்கு மேலாக தமது கால்படாத மண்ணை அவர்கள் கண்ணீருடன் இன்று பார்த்தனர். பெரும்பாலும் எல்லைகள் அற்ற காணிகளும் கட்டடங்கள் அற்ற தரவையும் பற்றைகள் படர்ந்த காடுகளுமே அவர்களை வரவேற்றிருந்தது. வெறுமனே காணிவிடுவிப்பு என்பதற்கப்பால் மீ…

    • 62 replies
    • 5.3k views
  19. இறுதிப் போரின் போது தமது உறவுகளை தொலைத்தவர்கள் இன்று கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமது உறவுகளை கண்டுபிடிக்க புதிய அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசாங்கம் இந்தப்பணியை செய்யத்தவறினால் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர். எமது பிள்ளைகளை தொலைத்து பல வருடங்கள் கழிந்துள்ளன. இந்தநிலையில் எமக்கு உரிய பதில் வேண்டும் என்று மன்னாரில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சார்ல்ஸ் என்பவர் குறிப்பிட்டார். எனது மகனை கொழும்பு சிறையில் கண்டதாக சிலர் கூறினர். எனவே அரசாங்கம் விரைவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து வந…

    • 0 replies
    • 318 views
  20. "தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது" ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்- தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார். சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,உறுதியுடனும் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் வல்வெட்டித்துறையில் அன்பேசிவம் அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட,வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்;:- கிழக்கு மாகாணத்தின் எல்லைக்கிராமங்களை காப்பாற்றும் வகையில் எல்லைக்கிராம மக்களுக்காக அன்பே சிவம் தனது கைகளை ஏந்தியிருக்கிறது கடந்த காலங்களில் ஒரு குறிப்பிடக்கூடிய அளவுக்கு அவர்களின் உதவிகள் கிழக்கு மா…

  22. உணவு பாதுகாப்பின்மையினால் இலங்கையில் அதிகம் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. இலங்கையில் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய கணக்கின்படி 25வீதம் தொடக்கம் 30வீதமான தொற்றுநோயாளர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். நாம் உணவுப்பாதுகாப்பு விடயத்திலும், சுகாதார தற்பாதுகாப்பிலும் அற்கறையற்றிருப்பதனாலேயே இவ்வாறான தொற்றுநோய்கள் மற்றும் தோற்றா நோய்களின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக நாங்கள் மாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம். என யாழ்.வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. உலக சுகாதார தினத்திற்காக இம்முறை உலக சுகாதார ஸ்தாபனம் உணவு பாதுகாப்பு என்னும் தலைப்பினை எடுத்திருக்கின்றது. இது எங்களுடைய யா…

    • 0 replies
    • 467 views
  23. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் யூலை மாதம் 06 திகதி வரைக்கும் மன்னார் நீதவான் இன்று ஒத்திவைத்துள்ளார். அத்துடன், அந்த புதைகுழி சட்டபூர்வமான மயானம் என வாதாடிவரும் இலங்கை காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறையினரை, அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி மற்றும் அப்பகுதியில் காணப்பட்டதாக கூறப்படும் கிணறு ஆகியவற்றை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்றது. இதன் போது மன்றில் முன்னிலையான குறித்த மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் காணப்பட…

    • 0 replies
    • 528 views
  24. உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய அவற்றின் 3ஆம் கட்ட காணிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நாளை செவ்வாய்க்கிழமை (07) சென்று பார்வையிடவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், திங்கட்கிழமை(06) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுக்கமைய வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அக் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்களிடம் கையளித்தார். இந்நிலையில் மிகுதிக் காணிகளினையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்த…

    • 0 replies
    • 463 views
  25. தன்னை மஹா பராகிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழித்தொழ…

    • 0 replies
    • 958 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.