Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சொல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கிய ஆதாரங்கள் உள்ளன! – மீண்டும் குற்றம்சாட்டுகிறார் மஹிந்த [Monday 2014-11-24 09:00] நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தளை சந்தியில் நடைபெற்ற வீதி அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கவில்லை என சொல்ஹெய்ம் மறுத்துள்ள போதிலும் பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த …

  2. 19 திருத்தம் குறித்த யோசனையை ஜனாதிபதி முன்னெடுக்க விரும்பினால் அதற்கு ஆதரவளிக்க தயார் - ரணில் : 24 நவம்பர் 2014 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களையும் , அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசமைப்பின் 19 திருத்தம் குறித்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க விரும்பினால் அவருக்கு அதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசமைப்பின் 19 திருத்தத்தை அவசர சட்டமூலமாக கொண்டுவந்தால் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19 வது திருத்தத்தை பாராளுமன்ற விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு கூட நாம் தயாராகவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் மு…

  3. அலைபேசியே சின்னம்? திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014 06:07 பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 'ம' பிரிவுக்கு பதிலாகவே பதிவு செய்யப்படவிருக்கின்றது. இதேவேளை, பொது எதிரணியின் சின்னமாக அலைபேசியை எதிரணியில் இருக்கின்ற பலர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134556-2014-11-23-15-40-30.html

  4. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர்மணி அவர்களும் அவருடன் தமிழீழ உணர்வாளருமான திலீபன் அவர்களும் நடைபெறப்போகின்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று நண்பகல் 13.00 மணி அளவில் சுவிஸ் சூரிச்விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவரை சுவிஸ் நாட்டில் வாழும் தமிழீழ உணர்வாளர்களும், தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்களும் உணர்வுடன் வரவேற்றனர். திரு.கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணாமித்தபோது தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சித்தளத்தை ஆரம்பிப்பதற்காக தனது பண்னை நிலத்தை வழங்கிய ஈழ…

  5. லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவினர் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ராஜபக்ஷவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த திட்டத்திற்காக கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஒரு இடத்தில் விசேட கணனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் வானொலி ஒன்றின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஒருவரின் கீழ் இயங்கும் இந்த கணனிப் பிரிவில் கடந்த காலத்தில் ஜே.வி.பியில் இருந்து விலகிய கணனி மற்றும் பிரசார பிரிவுகளில் பணியாற்றியவர்கள் சிலரும் இதில் இணைந்து செயற்படுகின்றனர். அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணனி பிரிவின் ம…

  6. பிரபாகரனுடன் இரகசிய ஒப்பந்தம் செய்தே 2005ம் ஆண்டு வெற்றி பெற்றார் மஹிந்த! - ரணில் குற்றச்சாட்டு. [Monday 2014-11-24 09:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை வாக்களிப்பில் பங்கேற்கச் செய்யாமல் தடுத்தே ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது. தேர்தல் வெற்றியின் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரம் தேவையெனக் கூறி படிப்படியாக அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேல…

  7. முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலிகளினால் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு தொடக்கம் மாஞ்சோலை, முள்ளியவளை ஊடாக, ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக ஆடுகளும் மாடுகளும் கூட்டமாக சுற்றித்திரிவது, படுத்துறங்குவது என்பவற்றினால் அவ்வீதிகளின் ஊடாக பயணிக்கும் பயணிகள் பல்வேறு அசளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் வீதியின் நடுவே நிற்பது மற்றும் படுத்துறங்குவது என்பவற்றினால் அடிக்கடி சிறு விபத்த…

  8. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் படையினரால் ஒட்டப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு மாட்டு சாணகம் வீசப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் 'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்தா', 'மகத்துவம் மிக்க ஜனாதிபதி மஹிந்தா' என குறிப்பிட்ட சுவரொட்டிகள் நீலம், சிவப்பு, பச்சை நிறங்களில் வடக்கு எங்கும்; நேற்று முன்தினமிரவு ஓட்டப்பட்டுள்ளது. இதில் வவுனியா, வைரவபுளியங்குளம், பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மஹிந்தாவின் சுவரொட்டிகள் மீதே சாணகம் வீசப்பட்டுள்ளது. இதே வேளை யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தாய் நாட்டின் தீர்ப்பு மகிந்த என்று எழுதப்பட்ட வர்ண சுவரொட்டிகள் படையினரால் அதே போன்று இரவோடிரவாக ஒட…

  9. "இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனவரி 8இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்போம்." - இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சூளுரைத்தார் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. "நான் ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன்" என்றும் அவர் கூறினார். 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்' என்ற கோஷத்துடன் கொழும்பு, மருதானை பூக்கர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமா…

  10. ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார். அட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி என்றும் சரி முக்கியமான தேர்தல் காலத்திலேயே நாங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றோம். நாங்கள் சிந்தித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்போம். மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்தி தான் ஆதரவு கொடுப்போம். அந்தவகையில் மலையக மக்கள் 200 வருடகாலமாக இன்னும் லயன் குடியிருப்புகளியிலே இருக்கின்றார்கள். இந்த லயன் முறையை மாற்றி காணி உரிமையோடு தனி …

  11. பாப்பரசரின் வருகையை அண்டி தேர்தல் நடத்தப்படாது என்று கத்தோலிக்கத் திருச்சபைக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பாப்பரசரின் பயணத்தை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையையும் உதாசீனப்படுத்தி வருகிறது. பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13ம் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை, சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி 8ம் நாள் நடத்தப்படவுள்ளது. அதிபர் தேர்தலுக்கும் பாப்பரசரின் பயணத்துக்கும் இடையில் ஐந்து நாட்களே இடைவெளி உள்ளது. தேர்தலுக்குப் பின்னர், அரசியல் ரீதியான குழப்பங்கள், வன்முறைகள் ஏற்பட்டால், அது பாப்பரசரின் பயணத்தைப் பாதிக்கும் என்று முன்னரே, கத்தோலிக…

  12. வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை தவிசாளர் சண்முகம் சிவகுமார் இன்று மாரடைப்பினால் காலமானார். நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட இவர் ஓய்வு பெற்ற கிராம சேவையாளராவார். கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் உப தவிசாளராக பெறுப்பேற்றார். அதன்பின்னர் முன்னாள் தவிசாளர் ஜெபநேசன் பதவி விலகியதையடுத்து 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தியோக பூர்வமாக தவிசாளராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://s…

  13. பரபரப்பான சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் கூட்டம் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் கட்சியின் தவிசாளரான அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உட்பட அனைத்து எம்.பிக்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், அரசாங்கத்தில் நீடிப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் ஹோட்டல் பலத்த பாதுகாப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. http://seithy.com/breifNews.php?newsID=121349&category=TamilNews…

  14. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டுமென, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்; தேவானந்தா பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம், பொது நூலகத்துக்கு அண்மையாகவுள்ள வளாகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டி நேற்று (22) ஏற்பாடு செய்யப்பட்ட, குடாநாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இந்த நிகழ்வானது யாழ். மாவட்…

  15. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது கட்சியின் பிரதான இலக்கு என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சியில் நேற்றிரவு பங்கேற்ற ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார். மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிடும் இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்றும் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதில்லை என்று ஜே.வி.பி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இந்தநிலையில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தற்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் பெயரிடப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜே.வி.பி. யின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்று வினாவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  16. வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ளது. இதன் போது இரண்டு தரப்பினையும் சேர்ந்த பலர் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே நாளைய தினம் நடைபெறவுள்ள வரவு செலுவுத் திட்ட வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமய வாக்கெடுப்பில் பங்கேற்க…

  17. சொந்த மக்களை மதிக்காமல், இனப் பிரச்சினையை தீர்க்காமல் யுத்தம் என்று முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக் கணக்கான மக்களை கொலை செய்தும் காணமல் போக வகை செய்தும் தனது நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது மஹிந்த அரசு. இவ்வாறு தான் விட்ட தவறுகளை சிந்திக்கும் நிலைக்கு இப்போது ஜனாதிபதி மஹிந்த தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியில் ஊடக செயலரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- மஹிந்த அரசு, இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தம் என்று சொல்லி பல லட்சக்கணக்காதன மக்களை கொலை செய்தது, பல ஆயிரக்கணக்காணவர்களை காணமல் போகச் செய்தது. சரணடைந்த பல ஆயிரக் கணக்கானவர்களை சிறையில் அடைத்தது. இவ்வளவ…

  18. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேனென மஹிந்த அறிவிக்க வேண்டும்; வாசு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவில் எதுவித மாற்றமுமில்லை. இருந்தும் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இடதுசாரி கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சம சமாஜக் கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியன அரசயலில் இடம்பெற்றுள்ள அதிரடி மாற்றங்களின் பின்னரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கின்றன. லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதானகவிடம் இது தொடர்பாக தொடர…

  19. பொது எதிரணியின் பின்னாலோ பொது வேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ, எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றேன். நாட்டு மக்களின் நலனுக்காகவே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இதனைக் குழப்புவதற்காக எம்மீது தேவையில்லாமல் பழி போடுகிறார்கள் என பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134406-2014-11-22-16-17-22.html

  20. எனது தந்தையான சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் எனக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டுச்செல்லும் நோக்கமில்லை என்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது குடும்பமும் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134464-2014-11-23-07-54-29.html

  21. எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரருக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொது வேட்பாளர் தெரிவின் பின்னர், சோபித்த தேரரை, மைத்திரிபால சிறிசேன சந்திப்பது இதுவுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது, எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134446-2014-11-23-07-03-42.html

  22. எவர் விலகிச் சென்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து அமைச்சர்கள் பலர் விலகிச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2014/11/22/எவர்-விலகிச்-சென்றாலும்-ஆட்சேபனையில்லை-அரசாங்கம்

  23. அரசியல் நிலை குறித்து கலந்துரையாடல் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்குழு நாளை திங்கட்கிழமை மாலை கொழும்பில் கூடுகின்றது. அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது குறித்தும் தீர்மானிக்கப்படுமென அமைச்சர் ரிஷாத்பதியுதீன் எகிப்திலிருந்து தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடமும் இன்றுகூடுகின்றது. இன்றைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும். http://www.virakesari.lk/articles/2014/11/23/அஇமகவின்-செயற்குழு-கூட்டம்-நாளை

  24. ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரியிடம் கையளிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அமரதாச தெரிவித்தார். விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் தமது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் அவதானித்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார். தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 4 திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைய நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி…

  25. ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்றால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும். 32 அரசியல் கட்சிகள் மற்றும் வெகுசன அமைப்புக்கள் இந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேசிய கொள்கையொன்றின் மூலம் நாட்டை நிர்வகிப்பதே இந்த இணக்கப்பாட்டின் முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/articles/2014/11/23/ரணிலை-பிரதமராக்கும்-ஒப்பந்தம்-அடுத்த-வாரம்-கைச்சாத்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.