ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- படைத்தரப்பின் கடுமையான நெருக்குதல்களைத் தாண்டி தமிழீழ மாவீரர் தின நினைவேந்தல் சுவரொட்டிகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களதும் கட்டடத் தொகுதிகளினிலும்; இன்று காலை அச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இச்சுவரொட்டிகளை மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பார்வையிட்டு சென்றிருந்தனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தினை இழுத்து மூட பாதுகாப்பு படைகள் அழுத்தங்கொடுப்பதாக தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமுள்ளது. இத்தகைய சூழலியே இச்சுவரொட்டிகளும் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டில் மாவீரர் வார காலப்பகுதியில் காரணமேதும் தெரிவிக்காது யாழ். பல்கலைக்கழகத்தை நிர்வாகம் இழுத்த…
-
- 1 reply
- 298 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியார் கொழும்பு:- விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக அதன் முக்கிய தலைவரான மாத்தையாவிற்கு தனது தந்தை ரணசிங்க பிரேமதாசா ஆயுதங்களை வழங்கியதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். நாட்டை பிரிப்பதற்காக அவர் மாத்தையாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை, விடுதலைப்புலிகளுக்கு ள் பிளவை ஏற்படுத்தவே அவர் ஆயுதங்களை வழங்கினார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தனத தந்தை விடுதலைப்புலிகளை பலப்படுத்துவதற்காக ஆயுதங்களை வழங்கினார் என்ற பொய்யான பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113709/language/ta-IN/ar…
-
- 0 replies
- 680 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசானுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுகுமார், உபசெயலாளர் சண் குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோரும் கட்சி தலைவர் மனோ கணேசனுடன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு பற்றி ஊடகங்களுக்கு மனோ கணேசன் தெரிவித்தாவது, சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும், அதை தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைப்பிலும், எதிர்கால அரசமைப்பிலும் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்ற உறுதியை அவரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளவே நாம் இந்த ச…
-
- 0 replies
- 454 views
-
-
வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற இந்து - கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பெளத்தம் ஆகிய நான்கு மதங்களுக்கும் பொதுவானதாக பெளத்த விவகார அமைச்சு என்று உருவாக்கப்பட்டுள்ளது. பெளத்த விவகார அமைச்சானது பெளத்த சமயத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றதே தவ…
-
- 0 replies
- 221 views
-
-
முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அண்மையில் இவா் கொழும்பில் இருந்து யாழ் வரும் போது ஏ-9 வீதியினில் பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இவா் பயணம் செய்த வாகனம் யானையுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனா். ஆனால் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவரது வழங்கு விசாரணை நடைபெற்ற போது வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியைக் குறுக்கு விசாரணை செய்யும் போது தவறான பக்கத்தால் வந்த வெள்ளை நிற டிப்பா் வாகனத்தினாலேயே விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த வழக்கு விசாரணையில் மாணிக்கசோத…
-
- 0 replies
- 255 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் யாழ்.சிறைச்சாலைக்கு முன் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீதர் திரையரங்கில் முடிவடைந்தது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவருடன் இலங்கை மீனவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக மீனவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டனர்.இதேவேளை விடுவிக்கப்படாத இலங்கை மீனவரின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் குருநகரை சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்ரியன்(வயது 38) மற்றும் ஞானப்பிரகாசம் துசாந்தன…
-
- 0 replies
- 223 views
-
-
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134136-2014-11-20-07-57-49.html 14 கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு: 1.30க்கு வர்த்தமானி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 14 கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் 1.30க்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்…
-
- 2 replies
- 518 views
-
-
Azzam Ameen @AzzamAmeen · "Stop illegal Presidential Election" Massive opposition JVP Protest underway in Colombo against President Rajapaksa (twitter)
-
- 4 replies
- 651 views
-
-
இலங்கை உட்பட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 18 இடங்களில் கடற்படை முகாம்களை சீனா அமைக்கவுள்ளதாகத ஊடகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியிலும் சீன கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள 18 கடற்படை முகாம்களில் ஒன்று நமீபியாவின் வெல்விஸ் வளைகுடா பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லெப்டினனட் கேர்ணல் மொனிக்கா ஷியா உறுதிப்படுத்தியாக த நமீபியன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. சீன கப்பல்களை திருத்துவதற்காகவும், எரிபொருள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த முகாம்கள் அமைக்கப்படுவதாக அந்தத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. htt…
-
- 1 reply
- 575 views
-
-
பிரித்தானியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர்களான குறித்த யுவதியும், யுவதியின் காதலனும் 3 வாரகால சுற்றுலா வீசா மூலம் நேற்று மாலை லண்டனிலிருந்து இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணித்து கொண்டிருந்த போதே யுவதி மீது குறித்த நபர் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவத்தில் 27 வயதுடைய எலினா பரீல் என்ற யுவதியே பாதிக்கப்பட்டதுடன், 41 வயதுடைய பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற இலங்கையரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 4 replies
- 596 views
-
-
மகிந்த ராஜபக்சவ ஒரு பெரிய மா மனிதராக காட்ட இதைவிடவும் ஒரு சந்தர்ப்பம் வருமோ? பிறகென்ன? இந்திய மீனவர்களுக்கு பொது மன்னிப்புக் குடுத்த மீனவ நண்பன் எல்லோ. இந்தியாவே என்ன மாதிரி? தமிழ் நாடே இனியும் போர்க்குற்ற இனப்படுகொலையாளி தீர்மானம் போடுவியளோ? தனி ஈழம் கேப்பியளோ? மகிந்த தூக்கு வளையில தொங்கிக் கொண்டு இப்பிடித்தான் கேக்கிறாராம்... மகிந்தவின்ட மனிதாபிமான உள்ளத்தை ஐந்து மீனவர்களின்ட தூக்கு கயறித்தை அறுத்து உயிர் பிச்சை போட்ட விடயத்தில மட்டுமில்ல ஈழத்தில நடந்த மனிதாபிமான யுத்தத்திலயும் நீங்கள் பாக்கலாம்... இது பொதுமன்னிப்பு மாதிரி அது மனிதாபிமான யுத்தம். நம்புங்கோ. எல்லாரும் நம்புவியள் எண்டு தெரியும்... மனிதாபிமான யுத்தத்த நடத்தி ஒன்றரை லட்சம் பேர இனப்படுகொலை செய்தவர் ம…
-
- 0 replies
- 467 views
-
-
பதுளையில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் சுமார் 200 பேர் வரை சிக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர், மீட்புப் படையினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மண் சரிவில் அந்தப் பிரதேசத்தில் இருந்த சுமார் 80 லயன் அறைகள் முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதோடு, ஒரு கோவிலும் மூடப்பட்டள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 12 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ள போத…
-
- 68 replies
- 5k views
-
-
வைத்திய நிபுணத்துவ சேவைகளுடன் கூடிய நடமாடும் மருத்தவ முகாம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. வைத்திய நிபுணத்துவ சேவைகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமுகாம் முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் எதிர்வரும் 21.11.2014 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையினால் நடாத்தப்படும் இவ் நடமாடும் மருத்துவ முகாம் எதிர்வரும் 21.11.2014 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேச மக்களின் நலன்கருதி அவர்களுக்கான வைத்திய…
-
- 0 replies
- 234 views
-
-
2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. இத்தகைய புறக்கணிப்புகளும் அழிப்புகளும் தேசிய இனமொன்றை அழிப்பதற்கான முயற்சியாக உள்ளன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி. சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டதான அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறிதரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், 2015ஆம் ஆண்டுக்கென விநியோகிக்கப்படவ…
-
- 0 replies
- 880 views
-
-
மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 66 பரப்பு காணி கடற்படையினரிடம் பறிபோயுள்ளது. கடற்படையினருக்கு காணியினை வழங்குவதற்கு குறித்த காணியின் உரிமையாளர் எழுத்து மூலமான சம்மதத்தினை வழங்கியதைத் தொடர்ந்து நில அளவைத் திணைக்களத்தினர் இன்றைய தினம் காணியினை அளவீடு செய்தனர். குறித்த காணியின் உரிமையாளர் மனமுவந்து காணியினை விற்பனை செய்ததால் அளவீடு செய்வதை யாரும் தடுக்க முடியாது என கடற்படையினர் தெரிவித்தனர். இதனை அங்கு நின்ற காணி உரிமையாளர் உறுதிப்படுத்தியதால் காணி அளவீட்டை தடுக்கச் சென்ற மக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட காலமாக தமது நிலத்திலே கடற்படையினர் ஆக்கிரமித்திருந்தனர், அதனை எப்போது மீளஒப்படைப்பார்கள் என்று தெரியாமல் இருந்தது இ…
-
- 3 replies
- 971 views
-
-
தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்கார்மேல் வீதி - குருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்ரன்ஜெயரோன் (வயது 31) என்பவரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயுள்ளார். கடற்றொழில் செய்யும் இவர் காலை கடைக்கு போவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என நேற்று செவ்வாய்க்கிழமை மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். http://www.pathivu.com/news/35457/57//d,article_full.aspx
-
- 2 replies
- 381 views
-
-
மகிந்த சகோதர ராச்சியத்தில் வடக்கில் பாலும் தேனும் வசந்தமாக ஓடுகிறது..... முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் மனைவி மற்றும் கணவனென இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதே வேளை கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முல்லைதீவு காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியொருவர் உள்ளிட்ட நால்வர்; வவுனியா சோதனை சாவடியில்இன்று மாலை கைதாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தம்பி என்றழைக்கப்படும் 37 வயதுடைய இ.சந்திரரூபன் முல்லைதீவிலுள்ள பிரபல கட்டட ஒப்பந்தகாரர் ஆவார். தனது ஒப்பந்த வேலைக்கென வங்கியில் எடுத்து வந்திருந்த 20 இலட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டில் அவரது பணியாளர்களான நால்வரும் தங்கியிருந்…
-
- 3 replies
- 763 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைனை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விமர்சித்திருந்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னர்சிட்டி பிரஸ் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மனித உரிமைகள் ஆணையாளர் பக்கச்சார்பாகவும், இரட்டை வேடம் அணிந்தும் செயற்படுவதாக குற்றம் சுமத்தி இருந்தார். இது தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பி இருந்த போதும், அதற்கு பதில் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னரும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆணையாளரை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத…
-
- 0 replies
- 360 views
-
-
இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை உற்பட பல கோரிக்கைகளை முன் வைத்து அமைதி ஊர்வலம் ஒன்றை மன்னார் தீவுப்பகுதியைச் சேர்ந்த 5 கிராம மக்கள் இன்று காலை முன்னெடுத்துள்ளனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை மற்றும் மன்னார் மாவட்ட ’வளர்பிறை’ பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து குறித்த அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர். குறித்த கிராமங்களின் இதுவரை இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைஇமற்றும் வீதி சீரின்மை ஆகிய பிரச்சினைகளை முன்வைத்தே இந்த அமைதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம்இஜிம்ரோன் நகர்இஜீவபுரம்இஉப்புக்குளம்இபள்ளிமுனை ஆகிய 5 கிராம மக்கள் இணைந்து குறித்த ஊர்வலத்தை …
-
- 0 replies
- 308 views
-
-
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை என்று யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் தெரிவித்தார். ஸ்கொட்லாந்து,கட்லோனிய நாடுகளின் பொது வாக்கெடுப்பு அனுபவங்கள் தரும் பாடங்கள் பற்றிய கலந்துரையாடலும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பொது மக்களின் பங்களிப்பை சாத்தியமாக்குவது தொடர்பிலான அரசியல் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பொது வாக்கெடுப்பு என்பதும் நிகழ்வு தான் அந்த ந…
-
- 0 replies
- 484 views
-
-
வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோருகிறது. 19 ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறித்த பிரேரணயினை சபையில் பிரேரித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 8தொடக்கம் 15 வருடங்களாக விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து 5வருடங்கள் ஆகியும் விடுதலை…
-
- 0 replies
- 314 views
-
-
வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு மன்னார் மாவட்ட அரச அதிபர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மன்னார் நகரின் சுற்றயல் கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், உப்புக்குளம், எமில் நகர், பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கண்டன எதிர்ப்பு பேரணியை வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பு, மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை, நேசக்கரம் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்தக் கண்டன பேரணி, மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆரம்பித்து புனித செபஸ்ரியார் வீதி வழியாக மன்னார் மாவட்ட செயலகத்தை அடைந்தது. அங்கு தமது க…
-
- 0 replies
- 291 views
-
-
எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோருகிறது.' இவ்வாறு இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் 19 வது மாதாந்த அமர்வில், அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது சந்தேகத்தில் …
-
- 0 replies
- 296 views
-
-
அதிகாரப்பூர்வமாக நமது நாடு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அறியப்பட்டுள்ளது. இதில் இன்று எஞ்சி இருப்பது இலங்கை என்ற பெயர் மட்டும்தான். ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் ஒழித்துவிட்டு ஒரு முடியரசு இங்கே தோன்றியுள்ளது. - என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றும்போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், இந்த நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை மீளமைத்து குடியரசை காப்பாற்றும் தேர்தலாகும். எனவே இந்த தேர்தல் கட்சி, நிறம், இனம், மதம் ஆகிய பேதங்களை கடந்த தேர்தலாக இருக்க வேண்டு…
-
- 0 replies
- 377 views
-
-
வடமாகாணசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான 13 மாகாணசபை உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அவர் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிவாஜிலிங்கத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார் என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரெலோ, ஈ,பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய ஒட்டுக்குழுக்களை சேர்ந்த 13 மாகாணசபை உறுப்பினர்க…
-
- 5 replies
- 1.2k views
-