ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
வடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலில் இல்லாமல் வடமராட்சியில் களமிறங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பங்கொண்டுள்ளார். கட்சி தலைமையும் அதனையே ஊக்குவித்துவருகின்றது. இது தொடர்பான ஆலோசனைகளை சம்பந்தன் நேரடியாக வழங்கியதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கான முன்னேற்பாடாக தனக்கு இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினரென்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவை வடமராட்சியின் நலத்தி…
-
- 10 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகமும், மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து ஜனாதிபதியின் பிறந்தநாளில் முதியவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கும் நிகழ்வை செவ்வாய்க்கிழமை (18) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தின. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் வடமாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்துவிட்டு மேலதிக நிதியை அரச…
-
- 1 reply
- 382 views
-
-
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு வெள்ளாங்குளம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் சொல்லாத செய்திகளும் இனி அரசாங்கம் சொல்லப் போகும் செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் கிராம சேவகர் ஜெபநேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடன் 6பேர் கைதானதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தடயவியல் ரீதியாக முக்கிய தடயங்களும், சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “இக்கொலைக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. விசாரணை முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் கொலைகுறித்த தகவல்களை நாங்கள் வெளிவிடுவோம்' எனவும் அஜித் ரோஹண கூறினார். கைதான ஏனை…
-
- 0 replies
- 520 views
-
-
மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 45 replies
- 3.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு இன்று விடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தனது 6 வருட பதவி காலம் முடிவதற்கு முன்னரே 2009 நவம்பர் 23 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 2010 ஜனவரி 26 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் மஹிந்த வெற்றிபெற்றார். எனினும் 2010 நவம்பர் 19ஆம் திகதியே ஜனாதிபதி இரண்டாவது முறைக்காக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் இரண்டாவது முறை பதவி காலம் நிறைவடைய இன்னும் 2 வருடங்கள் இருக…
-
- 0 replies
- 298 views
-
-
-எஸ்.சபேசன் நாவிதன்வெளி மத்தியமுகாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாசிப்பு பூங்கா கட்டடம் செவ்வாய்க்கிழமை (18) செலான் வங்கி முகாமையாளர் திருமதி. பிரேமினி மோகன்ராஜினால் திறந்து வைக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும், சிறுவர்களின் எழுத்தறிவினையும் வாசிப்பு பழக்கத்தினையும் அதிகரிக்கும் நோக்கில், கல்முனை செலான் வங்கியுடன் இணைந்து நாவிதன்வெளி வேல்ட் விஷன் நிறுவனம் இந்த வாசிப்பு பூங்காவினை அமைத்துள்ளது. இந்நிகழ்வில், செலான் வங்கி முகாமையாளர் திருமதி. பிரேமினி மோகன்ராஜ் வேல்ட்விஷன் கிழக்கு மாகாண வலய முகாமையாளர் அலக்ஸ் பென்ஜமின், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். நஜீம், பிரதேச சபை தவிசாளர் எஸ்.குணரெட்ணம், வேல்ட்விஷன் முகாமையாளர்கள் திரு.பிரேமசந்திரன்…
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கில் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களைப் போன்றே மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுகின்றனர் என நாடாளுமன்றில் கவலை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மலையக மக்கள் மத்தியிலும் திட்டமிடப்பட்ட இன சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுகள் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- "கொஸ்லந்தை, மீரியபெத்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எ…
-
- 0 replies
- 506 views
-
-
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் சிங்கள - பௌத்தத்தை மட்டும் மையப்படுத்திய அரசமைப்பு மாற்றப்படுவது அவசியம் என வலியுறுத்திய தமிழ் சிவில் சமூகத்தின் தலைவரும் மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், ஜனநாயக ரீதியில் அரசமைப்பு உருவாக்கப்பட்டு மூவினத்தையும் சரிநிகராக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்றே இருக்கவேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இது…
-
- 0 replies
- 424 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களூடாக ஆலயங்களில் பூசை செய்யுமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான இன்று ஆலயங்களில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளது. இவரது பிறந்தநாளன்று கட்டாயமாக ஆலயங்களில் விளக்கேற்றுமாறு கட்டளையிடும் அரசாங்கம் இந்த நாட்டிலே போரில் உயிரிழந்த 145,000 தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளை…
-
- 0 replies
- 228 views
-
-
படையினரது முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கான யாழ்.தேவி ரயில் சேவையானது 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பமாகுமென யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கிற்கான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது யாழ். ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து, யாழ்தேவியின் இறுதி எல்லையான காங்கேசன்துறை வரையில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட தெல்லிப்பழை புகையிரத நிலையம் வரையிலான ரயில் சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து காங்கேசன்துறை வர…
-
- 0 replies
- 321 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இளவரசர் சயிட் அல் ஹூசெய்ன் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆணையாளர் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்காத காரணத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும், ஏனைய ஒத்துழைப்பு வழங்காத நாடுகள் மீது இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளுக்கு உத்துழைப்பு ழவங்காத ஏனைய நாடுகள் மீது அழுத்தங்கள் பி…
-
- 2 replies
- 554 views
-
-
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கார்த்திகை மாதம் விசேடத்துக்குரிய புனிதமான மாதமாகும். ஏனெனில் இம்மாதம் 26ஆம் திக எமது தேசியத் தலைவர் பிறந்துள்ளார். இதேபோல் எமது …
-
- 7 replies
- 874 views
-
-
மாத்தளை மனித எலும்புக்கூடுகள் 1950 ஆண்டுக்கும் முந்தயவை என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் புளெரிடா மாநில எனலைட்டிக்ஸ் தொல்பொருள் ஆய்வு நிறுவகத்தினால் எலும்புக் கூடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1950ம் ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்களினதாகும் என மாத்தளை நீதவான் சம்பத் கமகே தெரிவித்துள்ளார். மாத்தளை வைத்தியசாலையில் கட்டிடமொன்றை அமைக்க குழி தோண்டிய போது பாரியளவில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக் கூடுகள் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களினது என ஜே.வி.பி கட்சி கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், குறித்த எலும்புக் கூடுகள் 1950ம் ஆண்டுக்கு முந்தய காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை எ…
-
- 0 replies
- 351 views
-
-
வவுனியா - ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் காணிப் பரப்பை ஆக்கிரமித்து, காவற்துறை நிலையம் ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஓமந்தை அபிவிருத்தி குழு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஓமந்தை - வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தின் அபிவிருத்தி குழுவிற்கும் குறித்த பிரதேச வாசிகளுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த வீட்டுத்திட்ட பகுதியில் ஒரு ஏக்கர் காணிகளை தங்களுக்கு வழங்குமாறு, காவற்துறையினர் பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரி இருப்பதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ள போதும், அதில் பலர் இன்னும் வீடுகளை நிhமாணிக்காதுள்ளனர். இதன் காரணமாகவே இந்த …
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஊன்று கோல்கள் மற்றும் மரக்கன்றுகள உட்பட பரிசில்களும் வழங்கப்பட்டன. வட மாகாண ஆளுநர் வரவேற்க்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.எ.சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானநதா, வட மாகாண பிரதம செயலாளர் உட்பட வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் ப…
-
- 2 replies
- 675 views
-
-
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, இன்று அம் மீனவர்களால் திரும்பி பெறப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மேற்படி மீனவர் பிரச்சினை தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=627163651818346065
-
- 0 replies
- 318 views
-
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்றையதினம் வெட்டுப்புள்ளியில் குறைப்பு இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 157 ஆக இருந்த வெட்டுப்புள்ளி தற்போது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு 150 புள்ளிகளாகவும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 149 புள்ளிகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய வெட்டுப்புள்ளி தமிழ் மொழி மூலத்தில் 152 ஆகவும் சிங்கள மொழி மூலத்தில் 157 ஆகவும் காணப்படுகின்றது. தமிழ் மொழி மூலத்தில் கொழும்பு, ஹம்பகா, களுத்துறை , கண்டி, மாத்தளை , மாத்தறை, காலி , குருநாகல், க…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு …
-
- 0 replies
- 707 views
-
-
மன்னார், மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்கள் நேற்று (17.11.14) திங்கட்கிழமை மதியம் முதல் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய அன்ரன் என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா மன்னார் பிரதேச செயலாளராக உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய கே.வசந்தகுமார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் கடந்த புதன் கிழமை இரவு முன்னாள்; புலி உறுப்பினர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திவிர விசாரனைகளின் போது …
-
- 0 replies
- 485 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:- ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார். இதேவேளை, மேல் மாகாணசபையில் அமைச்சர் பதவியை வகித்து வந்த கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடந்த நான்கு ஆண்ட…
-
- 0 replies
- 328 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு யுத்தம் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டுகொள்ளவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட அதிஸ்டான என்னும் நூலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதிய மீள ஒருங்கிணைவதில் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சுட்க்காட்டிய உயர் படையதிகாரிகளை ரணில் தலைமையிலான அரசாங்கம் கடுமையாக நடத்தியதுடன், இந்த விடயத்தை பெரிதாக கண்டுகொள்ளவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தலைவராக பரவலாகப் பேசப்படும் மகிந்த ராஜபக்சவின் 69ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பத்திரிகைகளில் வெளியான விளம்பரக் கட்டுரைகளில் சமதாதானத்தின் தந்தை என சித்திரிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் முள்;ளிவாய்க்கால் படுகொலையை மற்றும் கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றமைக்கு எதிராக குரல்கள் வலுத்துவரும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவை சமாதானத்தின் தந்தை என்றும் ஆசியாவுக்கு ஒளியூட்டியவர் என்றும் விளம்பரக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இலங்கையில் வெளியான அத்தனை தமிழ் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பெரும் பணச்செலவில் இந்த வண்ண விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்த பிறந்த நாள் வ…
-
- 0 replies
- 254 views
-
-
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி 25 புதிய பத்து ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இருபத்தைந்து மாவட்டங்களினதும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கலாசார அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் மற்றும் அது தொடர்பான சிறப்பு மலரையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதனையடுத்து ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்ததுடன் அதனையடுத்து வர்த்தக வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின…
-
- 0 replies
- 611 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அதிகளவு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக ஐ.தேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கேனும் போதியளவு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்களை உள்ளீர்க்கும் வீதம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதல்ல, போரின் பின்னர் வடக்கு கிழக்கு கல்வி அபிவிருத்திக்கு அரசாங்கம் வழங்கி வரும் பங்களி…
-
- 0 replies
- 445 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படாத நிலையிலும் ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் சட்ட விரோத பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இதன்ஒரு பகுதியாக அரசாங்க பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தில் பலவந்தமாக பதியும் நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். ஆளும்கட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் நியமனங்களை பெற்ற கல்வி அதிகாரிகள் பசில் சார்பில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதீயில் பல பாடசாலைகளுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிதாஸ் குரு சங்கமயவில் இணைந்துகொள்ளுமாறு வற்புறுத்திவருகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட …
-
- 0 replies
- 485 views
-