Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலையில், பிரேத பரிசோதனை…

  2. ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 48 மணி நேர கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். கோட்டே நாகவிகாரையில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் தொடர்பான பொது உடன்படிக்கை கையெழுத்திடப்படுவது இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பேச்சாளர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதில் ஏற்பட்டு வரும் தாமதத்தைக் கவனத்தில் கொண்டு நேற்றைய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடு…

  3. கடும் மழை, கடல் கொந்தளிப்புக் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் நெடுந்தீவு பயணசேவையில் ஈடுபடும் குமுதினிப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடவில்லை. தனியார் படகுகளே சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று கடும் மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குமுதினி படகு இயந்திரக் கோளாறால் பயணசேவையில் ஈடுபட முடியாத நிலையில் தனியார் படகுகளும் மேல்கூரை இல்லாமையால் மழை பெய்யும்போது பயணத்தில் ஈடுபட முடியாத நிலையே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://malarum.com/article/tam/2014…

  4. வயல்களிலுள்ள களைகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடுகளை வயல்களில் விட்டு களைகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பழைய காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதாவது, வயல்; வேளாண்மைகளில் ஆடுகளை விடும்போது, ஆடுகள் களைகளை மாத்திரம் உட்கொள்கின்றன. இதனால், களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தமுறை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட மாவட்ட வயல்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுணதீவு கண்ட வயலில் ஆடுகள் களைகளை உட்கொள்வதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜ.நேகா) . (படங்கள்: ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/133678-2014-11-17-05-34-57.html

  5. இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் - சர்வதேச ஆய்வு நிறுவனம் 18 நவம்பர் 2014 இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச ஆய்வு நிறுவனமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஆய்வு நடத்தும் நிறுவனமொன்று இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. பொருளாதாரம் மற்றும் சமாதானம் என்ற அமைப்பே இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ச்சியாக பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஏனைய தரப்பினரால் இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அங்கோலா, பங்களாதேஸ், புருண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, எத்தியோப்பியா, ஈரான், மாலி, இஸ்ரேல், மெக்சிக்கோ, மியன…

  6. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆதரவு 54 வீதத்தில் இருந்து 47 வீதமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலைக் இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு இருந்த மக்கள் ஆதரவு 7 வீதத்தினால் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத பின்னணியில் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளமை சிக்கலுக்குரியது என கருத்து கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை அறிவித்தால் ஜனாதிபதிக்கான மக்களின் ஆதரவு மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் இதனால், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி அவதானக்கு உள்ளாகலாம…

    • 2 replies
    • 623 views
  7. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு, மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவே, போர்க்குற்றங்கள் குறிதும் விசாரணை நடத்தும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் பணிகளை விரிவுபடுத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களை வரும் டிசம்பர் 31ம் நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்கும்படி, ஆணைக்குழுவின் …

  8. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம்; வடக்கு, கிழக்குக்கு வாசு பொறுப்பு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தேசிய மொழிகள் மற்றும் இன கல்வியிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜனாதிபதி இத்த தீர்மானத்தை அறிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113566/language/ta-IN/---.aspx#.VGgy_KW569o.facebook

  9. யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ் ரயில் நிலையம் ஒரு மாதத்தில் ஒரு கோடி 69 இலட்சத்து 415 ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாக யாழ்ரயில் நிலைய அதிபர் டி. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்கு சுமார் 26,000 பேர் பயணம் செய்துள்ளனர். தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரை சுமார் 21,000 பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7752#sthash.Ka0XsgNZ.dpuf

  10. கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது. சுன்னாகத்தில் அமைந்துள்ள மின்சார சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் கிணறுகள் பாதிக்கப்பட்டமை சம்பந்தமாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த வழக்கு விசாரணையில் தெல்லிப்பழை சுன்னாகம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரிகள் சுன்னாகம் பிரதேச சபையின் செயலாளர், வட மாகாண சுற்றுச் சூழல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர், நோத்பவர், உத்துறு ஜெனனி ஆகிய மின் உற்பத்தி நிறுவனங்களின் …

  11. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தின் தலைவர் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பி;ன்னர் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததுடன் கடும் மௌனத்தை கடைப்பிடிப்பது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ஏற்பாட்டின் கீழ் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்-டிரான் அலஸின் தந்தையின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர் நி…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டு இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், கப்பம்கோரல்கள் மற்றும் கறுப்புப் பண கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும். செல்வாசுக் நிறுவனத்திற்கும் புலிகளின் கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் க…

  13. யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட இந்த சுவரொட்டிகள் நாவற்குழியில் அமைந்துள்ள அரச உணவுக்களஞ்சிய பாதுகாப்பு சுவர்களிலே ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும் எந்த ஒரு அமைப்பினதும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=120933&category=TamilNews&language=tamil

  14. நோர்வே அரசு மீதும் தன் மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வேயின் முன்னாள் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் ஜனாதிபதி நேற்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நாளை வெளியிடவுள்ளதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை. அவர் பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120896&category=TamilNews&language=tamil

  15. வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் இலங்கை இராணுவத்தினரால் இன்று திங்கட்கிழமை மீண்டும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் வசித்து வரும் வலி.வடக்கு மக்களிற்கு நலன்புரி முகாம் அமைந்துள்ள காணிகளை சொந்த காணிகளாக்கும் நோக்கில் இந்த அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 40 பரப்பு நில அளவுள்ள மதவடி நலன்புரி முகாமில் 17 குடும்பங்கள் வசித்து வருவதுடன், 120 பரப்பு நில அளவுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 270 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நலன்புரி நிலைய காணிகளில் வசிப்பவர்களில், சொந்த காணிகள் வேண்டும் என கோரிய குடும்பங்களுக்கு தலா 1½ பரப்பு காணிகள் வீதம் பகிர்ந்…

  16. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள புனித பாப்பரசர் வடக்குக்கான விஜயமாக மடு மாதா ஆலயம் செல்லவுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் 14 ஆம் திகதி மடு மாதா ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொள்ளவுள்ளதுடன். ஒரு மணி நேரம் அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடுவாரென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=813393648417197720

  17. மானிப்பாய் சந்தைக்கு முன்பாகச் செல்லும் முத்துத்தம்பி வீதியில் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. குறித்த வீதியில் ஆட்களற்ற காணிகளின் இருபக்கங்களும் பற்றைகள் புதர்கள் காணப்படுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த வீதியால் செல்லும் பெண்களின் தாலிக்கொடி, சங்கிலியை அறுத்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடுவது நெடுநாளாகத் தொடர்கிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் திருடர்களிடம் இருந்து தப்பிக்க எச்சரிக்கை சுலோகங்கள் எழுதப்பட்டு வீதியில் தொங்கவிடப்பட்டுள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=505483648517890714

  18. அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின்…

  19. அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள்ளே நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் கட்சியிலிருந்து வெளியேறுமாறு வாக்களித்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=106223647817198654

  20. இறுதிப் போரின்போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால், புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்குழுவிடம் சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும் ரகசியமான முறையில் ஜெனீவா மனித உரிமைகள் குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் இராணுவத்…

  21. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜயசூரிய முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பிக்கு முன்னணியின் தலைவர் கிரம்பே ஆனந்த தேரர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரு ஜயசூரிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படாத பட்சத்தில் தாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி ஆகியவற்றை விட்டும் விலகப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கிராம்பே ஆனந்த தேரர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com…

  22. பாப்பரசரின் வருகையையொட்டி கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கான பாதுகாப்பை பொலிஸ் திணைக்களம் பலப்படுத்தி வருகிறது. கொழும்பில் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.ரீ.வி. கமராக்களுக்கு மேலதிகமாக சுமார் 09 மில்லியன் ரூபா செலவில் புதிதாக இரண்டு சீ.சீ.ரீ.வி. கமராக்களைப் பொருத்தவும் பொலிஸ் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் (க்ளோபல் பொஸிசன் சிஸ்டம்) என்னும் கட்டமைப்பினை உள்வாங்கவும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் தெமட்டகொடை, ஊருகொடவத்தை, கொழும்பு வெலிக்கட சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளை தெளிவாக கண்காணிக்கும் வகையிலும் பழைய பாராளுமன்ற சுற்று வட்டாரத்திலிருந்து காலி…

  23. கடற்படையின் தேவைக்காக மாதகலில் காணி சுவீகரிப்புக்காக நிலஅளவை செய்ய வந்த அதிகாரிகளை எதிர்த்து மக்களும் அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.pathivu.com/news/35411/57//d,article_full.aspx

  24. இலங்கையில் நடைபெறும் சார்க், ஆசியான் நாடுகளின் இராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை வரை சார்க், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பான SASEAN இராணுவ தளபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் இராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் இராணுவ தளபதி சுஹாக் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.http://www.pathivu.com/news/35410/57//d,article_full.aspx

  25. வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக உலக உணவுத் திட்டத்தின் வடமாகாண அதிகாரி க.றொய்ஸ் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார். இது தொடர்டபில் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன். இவ்வாற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.