Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டிருந்தால் சம்பந்தனிடம் சரணடைந்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி கன்னொறுவை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றிற்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் பயங்கரவாதத்தை ஒழித்து பிரிவினைவாதத்தை இல்லாமல் செய்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 20 அளவிலான பாராளுமன்ற ஆசனங்கள் காணப்படுகின்றன எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுலில் இல்லாமல் இருந்திருந்தால் சம்பந்தன் சரணம் கச்சாமி என இறைஞ்சி மன்றாடியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என அவர் தெரித்துள்ளார். பௌத்த மதத்தினர் புத்தங் சரணங…

  2. தமிழீழ காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் வன்மையாகக் கண்டித்துள்ளார். கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் தற்போதைய ஆட்சி யில் நடைபெ…

  3. தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இதனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான செந்தில் தொண்டமான் 'தி இந்து'விடம் உறுதி செய்தார். ராமேசுவரம் மீனவர்களான வில்சன், செல்வன் லாங்கெட், அகஸ்டன், லோயலோ, எமர்சன், பிரசாத் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் இருந்து ஹெராயின் கடத்தி வந்ததாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் அவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தமிழகத்…

  4. வெள்ளி, நவம்பர் 14, 2014 - 08:45 மணி தமிழீழம் | சயந்தன் இலங்கைக்கு வருகிறது ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல்! ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உருவாக்கப்படவுள்ள, தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களின் கலந்துரையாடலை முன்னிட்டே, பலஸ்டிக் கப்பற் படைப்பிரிவைச் சேர்ந்த Yaroslav Mudiry என்ற பெயருடைய இந்த நாசகாரி கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளது. கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேணல் டிமிற்றி மிக்கேலோவ்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நாசகாரிப் ப…

  5. வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப்பணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை வியாழக்கிழமை ஆரம்பித்துவைக்கப்படுமென நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132990-2014-11-12-07-19-34.html

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். இலங்கை அரசின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கையில் சீன ஆதிக்கத்தால் இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக அவர் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெறும் வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாத்தில் உரையாற்றும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்கள் குறித்து விரிவானதொரு உரையை நிகழ்த்தவுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120714&category=TamilNews&language=tamil

  7. நான் ஒரு சர்வாதிகாரி என எதிர்க்கட்சியினர் கோசம் எழுப்புகின்றனர். நான் நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாட்டை அபிவிருத்தி செய்யவுமே பயன்படுதி உள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குமாறு கோறும் எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அமர்வில் கலந்து கொள்ளாததை மறந்து உரையாற்றுகின்றனர். 1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இரண்டு வருவங்கள் சென்றது. ஆனாலும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற 24 மணித்தியாலமும் செல்லவில்லை. இன்று எதிர்க்கட்சியினர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க கோறி பாரிய ஆர்ப்பபாட்டங்களை நடத்துகின்றனர்…

  8. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது நாட்டிலுள்ள தூதரகங்களில் பணியாற்றும் உலக நாடுகளின்பாதுகாப்பு அதிகாரிகளை தனது தலைநகரத்திற்க்கு வருமாறு சீனா அரசாங்கம் தீடீர் உத்தரவொன்றை பிறப்பித்தது. அந்த சந்திப்பின் போது சீனா அதிகாரிகள் தமது நாட்டின் நீர்மூழ்கி விரைவில் மலாக்கா நீரிணையூடா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.- மலாக்கா நீரிணை என்பது இந்தோனேசியாவிற்க்கும்- மலேசியாவிற்க்கும் நடுவில் அமைந்துள்ள பகுதி,உலகின் பெருமளவு வர்த்தகம் இப்பகுதியூடாகவே இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர்-எதிரி நாடுகளின் கலங்களை கண்டுபிடித்து தாக்கி அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சீனாவின் அதிநவீன நீர்மூழ்கிகளில் ஒன்றான-ஹன்டர்கில்லர்- மலாக்கா நீரிணை பகுதியில் பயணம்செய்…

  9. யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இந்த மேலதிக ரயில் சேவையானது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளிலும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.40 மணிக்கு ஆரம்பமாகும் இநடத ரயில் சேவை, மாலை 5.30 மணிக்கு கொழும்பை அடையும். கொழும்பிலிருந்து யாழ்…

  10. ஒரே வலையில் சிக்கிய 20 இலட்சம் ரூபா பாரை மீன்கள்! [Friday 2014-11-14 09:00] மட்டக்களப்பு - களுவன்கேணி கடலில் நேற்று மீனவர் ஒருவரின் இழுவை வலையில் சிக்கிய சுமார் 20 இலட்சம் ரூபா மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் பிடிபட்டன. இழுவை வலையில் சிக்கிய மீன்களை பெரும் சிரமத்தின் மத்தியில் மீனவர்கள் கரைசேர்த்ததுடன் பிடிபட்ட மீன்களை மொத்த மீன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்தனர். பெருமளவிலான பாரை மீன்கள் பிடிபட்டதை அறிந்த பொதுமக்களும் பார்வையிடுவதற்காக கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூர் புன்னைக்குடா கடலில் 15 லட்சம் ரூபா பெறுமதியான பாரை மீன் பிடிபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=120720&category=Ta…

  11. தற்போதைய ஊழல் மிக்க அரசாங்கத்தைக் கவிழ்த்து அராஜக ஆட்சியாளன் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டிற்கு அனுப்பும் நேரம் நெருங்கி வந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். நேற்றுமாலை கொழும்பில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தற்போதைய ஊழல் மிக்க அரசாங்கத்தைக் கவிழ்த்து அராஜக ஆட்சியாளன் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டிற்கு அனுப்பும் நேரம் நெருங்கி வந்துள்ளது. இதற்காக பலமானதும், ஸ்திரமானதுமான ஒரு பொது வேட்பாளர் எம்மிடம் இருக்கினறார். இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த வேட்பாளர் மூலம் நாங்கள் இந்த நாட்டிலே ஒரு …

  12. வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “குறைந்தபட்சம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பொதுவேட்பாளர் முன்வந்தால் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும். அது சந்திரிகா குமாரதுங்கவாகவோ, ரணில் விக்கிரமசிங்கவாகவோ, அல்லது கரு ஜெயசூர…

  13. ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கிறாரா மைத்திரிபால?! நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவிடம் ஊடகவியலாளர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்த போதும் அமைச்சர் உறுதியான பதிலை கூறவில்லை. குறிப்பாக சமூகத்தில் பேசப்படும் விடயங்களே இவை என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக க…

    • 0 replies
    • 1.1k views
  14. கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 19ம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இரு…

  15. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் சீன நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் ஊடாக இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முனைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டுள்ள சட்டவிரோத ஒப்பந்தங்கள் அனைத்தும் எதிர்கட்சி ஆட்சிக்கு வந்ததும் இரத்துச் செய்யப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். நாட்டின் பாரிய திட்டங்களை சீனாவுக்கு தாரைவார்ப்பதன் மூலமாக இந்தியாவை ஓரம்கட்டுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம், திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்…

  16. யாழ்.மாவட்டத்தில் வங்கி கடன்களை வழங்குகிறோம் என்ற போர்வையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தாம் உளரீதியாக துன்புறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கம் போலவே நவம்பர் மாத கண்காணிப்பு யாழ்.மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் தாங்கள் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வருவதாக கூறுவதுடன், எங்கிருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், தொலைபேசி இலக்கத்தை மாற்றவேண்டாம். மாற்றினால் எமக்கு அறியத்தர வேண்டும் என கூறும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெறுகின்றன. இது குறித்து முன்னாள் போராளிகள் சிலர் தெரிவிக…

  17. எமது இனம் வாழ வேண்டும். எமது இனம் ஆளவேண்டும். அதற்காக எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்காக தமிழர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். மாமனிதர் நடராஜா ரவிராஜின் 8ஆம் ஆண்டு நினைவுப் பேருரைக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாவை.சேனாதிராஜா உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது. “தம்பி ரவிராஜ் அரச படைகளினால் கைதுசெய்யப்படும் இளைஞர்களுக்காகப் பேராடியவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து கொண்டு தமிழ் ம…

  18. 'தமிழகத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக உள்ளோம்; இலங்கை சென்றால், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது; அங்கு செல்ல விரும்பவும் இல்லை; இந்திய குடி உரிமை கிடைத்தால் போதும்' என, தமிழகத்தில், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்; இலங்கை வடக்கு மாகாண முதல்வர், விக்னேஸ்வரனின் அழைப்பை, அவர்கள் நிராகரித்து விட்டனர். இலங்கையில், தமிழர் வசிக்கும் பகுதிகளை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி, கடந்த, 1983ல், விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மோதல் மூண்டது. இலங்கைத் தமிழர்கள், பாதுகாப்பு கோரி, தமிழகம் வரத் தொடங்கினர்.கடந்த, 1983 முதல், 2010 வரை, நான்கு கட்டங்களாக, இலங்கையில் இருந்து, 3.04 லட்சம் தமிழர் கள், தமிழகம் வந்தனர்.இவர்கள், அகதிக…

  19. தமிழகத்தில் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்துகளின் அடிப்படையில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின்"தினத்தந்தி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக "விக்னேஸ்வரனின் கோரிக்கை' எனும் தலைப்பில் நேற்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது ; தமிழர்கள் எப்போதுமே இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வில் அதிக அக்கறை கொண்டவர்கள். இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இங்குள்ள தமிழர்களின் இரத்தம் கொதிக்கும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி வெற்றி பெற்றது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றிய…

  20. வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. எனவே அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் கைத்தொழில் வாணிபம் முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வடக்கில் கூட்டுறவுத்துறையின் வீழ்ச்சி குறித்து கருத்துக்களை முன்வைத்தார…

  21. சிங்கப்பூரின் மாபெரும் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையர்களுக்கு அங்கு பெருமளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாக அமாகி இன்டர்நஷனல் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.கே.சிறிமத் தெரிவித்தார். வெளிநாடொன்றில் ஆளுமை படைத்த இலங்கையர் ஒருவருக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். 'சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் வியாபார துறை என்பது இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் தயக்கம் காண்பித்திருந்தன. தற்போது இலங்கை தொடர்பில் அவர்கள் நேர்த்தியான அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அமாகி இன்டர்நஷனல் உடன் தொடர்பு கொண்டு,…

  22. யாழ்ப்பாணம், திருநெல்வேலி ஆராய்ச்;சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். நீளமான காம்புகளைக் கொண்ட இந்த மாங்காய் 250 கிராம் முதல் 325 கிராம் வரையான நிறையை கொண்டிருப்பதோடு முற்றிலும் நார்த்தன்மை அற்றதாகும். மஞ்சள் நிறமும் சிறந்த வாசனையும் சிறந்த சுவையும் கொண்டதாகும். இம்மரம் நாட்டப்பட்டு 3ஆம் வருடத்தில் காய் காய்க்கிறது. பின்னர் 200 காய்வரை காய்க்கும். ஏற்றுமதித் தரம் கொண்ட இந்த மரங்கள், சிறிய இடத்திலேயே வளைந்து வளரும் தன்மை கொண்டது. அதாவது 5 மீற்றர் தூர இடைவெளி போதும்…

  23. வடமராட்சி கட்டைக்காட்டு, முள்ளிப் பகுதியில் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் முள்ளியான் கட்டைக்காட்டுப் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நோக்குடன் பொலிஸார் சகிதம் வந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கு திரண்ட மக்களின் கடும் எதிர்ப்பினால் தமது முயற்சியைக் கைவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ இடத்தில் இராணுத்தினரும், கடற்படையினரும் பிரசன்னமாகியிருந்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் வடமாகாண சபை உறுப்பினர்களாக எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன், வல்வை நகரசபை உப தவிசாளர் சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் http://malarum.com/article/tam/2014/11/13/6813/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9…

  24. "அரசிடம் இறைமை இல்லை. அது மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. அந்த அடிப்படைக்கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 8ஆம் ஆண்டு நினைவுப் பேருரைக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன்…

  25. சம்பந்தன், ஹக்கீம் ஆகியோரை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகர் அவசர பேச்சுவார்த்தை 13 நவம்பர் 2014 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு கடந்த 8ம் திகதி நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நாட்டின் பிரதான சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு கட்சிகளும் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.