ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
44 ஆண்டுகளுக்கு முந்தைய உறுதிப்பத்திரம் வைத்துள்ள தமிழ் விவசாயிகளுக்கு அனுமதி இலங்கையில் திருகோணமலை, குச்சைவெளி பிரதேசத்திலுள்ள தென்னைமரவாடி கிராமத்தில் 1970க்கு முற்பட்ட காணி உரிமைப் பத்திரங்களை வைத்துள்ள தமிழ் விவசாயிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அதிகாரிகளை பணித்துள்ளார். தென்னைமரவாடி பகுதி தமிழ் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாதவாறு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆராயும் பொருட்டு மாகாண காணி அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமொன்றிலேயே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாவட்ட நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு திருகோணமலை …
-
- 0 replies
- 423 views
-
-
தமிழில்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- இலங்கை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரினால் சட்டத்தரணிகள் சங்கத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்காக இரு கேள்விகளை அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்க்கு தனக்கு தகுதியுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு கோரும் இரு கேள்விகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 10 ம்திகதிக்கு முன்னதாக இது குறித்த கருத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. கடிதத்தில் காணப்படும் இரு கேள்விகளையும் உன்னிப்பாக அவதானித்தால் இது ஒரு அரசியல் ஏமாற்றுவேலை என்பது புலப்படும். உச்ச நீதிமன்றம் பின்வரும் இரு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு தனது க…
-
- 0 replies
- 578 views
-
-
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் சற்று கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இலங்கை மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இணைந்து மறைத்து வைத்து விளையாடிய நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக செயற்படக்கூடிய நாடான சீனா மீது இந்தியா தனது கண்ணை வைத்திருக்கும் வேளையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு, அதுவும் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்ற விவகாரம் இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை சற்று அசைத்து பார்த்துவிட்டது. கடந்த மே மாதம் சீனாவுக்கு…
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு நாளை வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களாக கடுமையான உடல் அவதிகளை சந்தித்திருந்த நிலையில் அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகவும் உள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120219&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 556 views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் பல இணையத்தளங்களை ஆராய்ந்து வருவதாகவும் அப்படியான இணையத்தளங்களை வெகு விரைவில் இலங்கையில் முடக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120214&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 593 views
-
-
வடமாகாண சபையினால், கடந்த ஒருவருடமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவரை, பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார். வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக அறிவிலித்தனமான விமர்சனங்களை அரசாங்கமும் மற்றும் மாகாணசபை எதிர்க்கட்சியினரும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருவதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதனையடுத்தே வடக்கு மாகாணசபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இது…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த பாசையில் பேசுகிறார்கள். இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை. மசாகா என்றால் என்ன?
-
- 3 replies
- 950 views
-
-
ஐ.நா விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் பீரிஸ் கேள்வி! இலங்கை தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்கள் அடங்கிய சர்வதேச விசாரணைக் குழுவின் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும்இ கிடைக்கப்பெறும் எழுத்துமூல சாட்சியங்களை நிராகரிப்பதில்லை என்ற அந்த விசாரணைக் குழுவின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள…
-
- 1 reply
- 397 views
-
-
நீர்கொழும்பு மீனவர்களுக்கும் கருவாடு பதப்படுத்தலில் ஈடுபட்டுள்ளோருக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலை அடுத்து நான்கு படகுள் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் கருவாட்டு வாடிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மீன்களை நீர்கொழும்பு கொட்டுவை மைதானம் அருகில் கருவாடு பதப்படுத்தலில் ஈடுபட்டுள்ளோர் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று தினங்களாக எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இந்நிலையில், கத்தோலிக்க மதத் தலைவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேச்சவார்த்தையின் போது இணக்கப்பாடொன்றுக்கு வந்த நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியுடன் மேற்கொள…
-
- 0 replies
- 402 views
-
-
போயா தினத்தை முன்னிட்டு யாழில் 100 பயனாளிகளுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.. ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஒமல்பே சோபிததேரர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் வறிய மக்கள் 100 பேருக்கு பசுமாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இவ்வாறு பசுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பசு மாடுகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=845543614106100070#sthash.nva0fTxL.dpuf
-
- 0 replies
- 312 views
-
-
பருத்தித்துறை நகராட்சி மன்ற உள்ளூராட்சி வாரமும் பரிசளிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தும்பளை நெல்லண்டை அம்மன் திருமண மண்டபத்தில் பருத்தித்துறை நகராட்சி மன்ற தலைவர் சபா.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான பதில் துணைத் தூதுவர்தட்சனாமூர்த்தி கலந்து கொண்டதுடன் மங்கள விளக்கினை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருவாகரன், பிரதேசசபை தவிசாளர் பூ.சஞ்சீவன், கரவெட்டி தெற்கு-மேற்கு பிரதேசசபை தவிசாளர் வியாகேசு, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஜெயசீலன் நகரசபை உறுப்பினர்கள் இபிரதேசசபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உட…
-
- 4 replies
- 560 views
-
-
தனது மார்பகங்களை சிறிதாக்கிக் கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்ட பெண்ணொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக வைத்தியரொருவர் 2 இலட்சம் ரூபாய் கேட்டதாகவும் அவரின் அவ்வளவு பணம் இல்லாமையினால் 50 ஆயிரம் ரூபாவுக்கு, குறித்த வைத்தியரின் களனியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அப்பெண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரின் வீட்டில், சத்…
-
- 0 replies
- 377 views
-
-
கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இன்று வியாழக்கிழமை (06), நிவாரணப் பொருட்களுடன் சென்று, அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், அவர் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க முற்பட்ட போது, அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இடமளிக்கவில்லை. மாற்றாக, அந்த நிவாரணங்கள் இம்மக்களுக்கு வேண்டாம், அவற்றை மீண்டும் எடுத்துச் செல்லுங்கள் என அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், தான் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள கணேசா வித்தியாலய நுழைவாயிலுக்கு அருகில் அடுக்கி வைத்துவிட்டு சரத் பொன்சே…
-
- 0 replies
- 319 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முதலமைச்சரின் இந்தியப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். எனினும்,இந்தியப் பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை எதனையும் இந்திய அதிகாரிகள் வெளியிடவில்லை. http://seithy.com/breifNews.p…
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாக குற்றம்சாட்டி கிறிஸ்தவ அமைப்பு ஒன்றினால், வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கையில் இராணுவ ஆட்சி முறை நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் மக்களின் உரிமைகள் முடக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சுமத்தியிருந்தது. இராணுவ ஆட்சியினால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விபரிக்கும் இந்த துண்டுப்பிரசுரங்கள் கடந்த வாரம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இராணுவ மயப்படுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறித்த துண்டுப்பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவ…
-
- 0 replies
- 547 views
-
-
"கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நிலவும் சிறுசிறு பிரச்சினைகளை ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: "இந்தச் சந்திப்பு மிகவ…
-
- 0 replies
- 607 views
-
-
ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்ஸலுக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஐ..நா. மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்க…
-
- 0 replies
- 380 views
-
-
மஹிந்தவுக்கு 3ஆம் முறை முடியுமா? திங்கள் தெரியும் வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014 03:09 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா இன்றேல் முடியாதா என்பது தொடர்பிலான வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தால், திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் எம்.எம். ஜயசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நேற்று புதன்கிழமை கடித…
-
- 2 replies
- 344 views
-
-
மங்கள எம்.பி. அரசு தரப்பிற்கு மாறுவது குறித்து பேச்சுவார்த்தை ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகின்றது. இவர் ஆளும் தரப்பிற்கு மாறி வெளிவிவகார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர எம்.பி. இந்த விஜயத்திற்கு முன்னரே ஜனாதிபதியையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பீடத்துடன் முரண்பட்ட நிலையிலேயே அவர் ஆளும் தரப்பிற்கு…
-
- 0 replies
- 301 views
-
-
எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் பரிதியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியைச் சேர்ந்த எம்.எச். எஸ்.டி.திசோரா 2008 இல் நிலைநாட்டிய 29.17 மீற்றர் என்ற சாதனையை ஆனந்த் முறியடித்துள்ளார். இதேவேளை இப் பாடசாலையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 36.56 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து திறமானப் பெறுமதிய…
-
- 4 replies
- 460 views
-
-
கோத்தாவை சந்திக்கச் சென்று அவமானப்பட்ட செல்வம் எம்பியும் மன்னார் ஆயரும்! முள்ளிக்குளம் நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் கோரிக்கைவிடுப்பதற்காக கோத்தாபயவை சந்திக்க கொழும்பு சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் அவமானம் அடைந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, படைத்தரப்பால் மன்னாரில் அபகரிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தினை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு கோருவதற்காக சந்திக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்று பிற்பகல் 4.மணிக்கு சந்திக்கலாம் என்றும் அதற்காக கொழும்பு வருகை தருமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய தரப்பிலிருந்து பதிலனுப்பப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 535 views
-
-
ஜனாதிபதி தேர்தல்: 19ஆம் திகதி வர்த்தமானி? வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014 10:24 அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிப்பார் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132194---19--.html
-
- 0 replies
- 405 views
-
-
கேட்பாரற்று அல்லலுறும் மக்கள் நீதி வேண்டி மன்றாட்டம்- யாழ்ப்பாணம். 31.10.2014 மதிப்பிற்குரிய அம்மணி/ஐயா, கடந்த 22.10.2014 அன்று எமது அரியாலை முள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியவதனி (வயது 18) என்பவர் கொடூரமான பாலியல் வல்லுறவுக்கும் உடலியல் உளவியல் ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்த வன்முறையை நிகழ்த்தியவர் முள்ளி வீதி, அரியாலை எனும் .முகவரியைச் சேர்ந்த 27 வயதுடைய சோதிநாதன் யசிந்தன் என்பவராவார். இவர் கடந்த காலங்களிலும் இது போன்ற பல வன்முறைகளை எமது முள்ளி, பூம்புகார் பகுதிகளில் நிகழ்த்தியுள்ள காரணத்தாலும் இவருடன் இணைந்த இவருடைய வன்முறைகளுக்குத் துணை போகும் நண்பர்கள் இன்னமும் சமூகத்தில் நடமாடித் திரிவதாலும் உள்ள அச…
-
- 0 replies
- 840 views
-
-
ஏ-9 வீதியில் கரணமடித்தது கார் - 2 பேர் பலி! - மூவர் காயம். [Wednesday 2014-11-05 19:00] ஏ-9 வீதியால் சென்ற கார் ஒன்று மாங்குளம், பனிக்கங்குளத்தில், இன்று மாலை விபத்துக்குள்ளானதில், இருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று மாலை 4.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுமார் 75 மீற்றருக்கு அப்பால் கரணமடித்தது. காரில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற மாங்குளப் பொலிஸார் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்க…
-
- 1 reply
- 650 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க்கண்காட்சி ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தி மரநடுகையை ஊக்குவித்து வருகிறது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பித்து வைத்தார். 5ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 13 நிறுவனங்கள் கலந்து கொண்டு தமது அலங்காரத் தாவரங்களையும் பயன்தரு மரங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு உற்பத்திகளைக் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்யவுள்ளனர்…
-
- 1 reply
- 654 views
-