ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
11 Nov, 2025 | 04:17 PM நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியனயார் நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு. இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே …
-
- 0 replies
- 73 views
-
-
11 Nov, 2025 | 03:35 PM வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அத்தோடு மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்க…
-
-
- 2 replies
- 180 views
- 1 follower
-
-
புதியதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளும் இடம்பெறவில்லை என அரச வர்த்தமானி அறிவிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த 19 பேர் கொண்ட குழுவில் சக்திவாய்ந்த புத்த சமயத்தை சேர்ந்த மூத்த பிக்குகள் மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிங்கள கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் Dr Hiniduma Sunil Senevi, 1998ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொல்லியல் சட்டம் (அத்தியாயம் 188) பிரிவு 39 “A” கீழ் இந்த குழுவை நியமித்து, நவம்பர் 1 ஆம் தேதியிட்ட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இக்குழுவின் காலவரம்பு 10.03.2025 முதல் 09.03.2027 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழுவில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள்…
-
- 2 replies
- 210 views
-
-
11 Nov, 2025 | 12:20 PM கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று செவ்வாய்க்கிழமை (11) காலை திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நிகழ்த்தப்பட்டது. இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினம் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/230074
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
11 Nov, 2025 | 11:06 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம் அனுப்பபட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக குறித்த நபரின…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர…
-
- 0 replies
- 143 views
-
-
மருத்துவ பீடத்திற்கு பேருந்து! adminNovember 11, 2025 யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவ பீடம் வரையில் அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் விடுதி, மருத்துவ பீடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, யாழ். நகர் பகுதியில் போதனா வைத்திய சாலைக்கு அருகில் காணப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் உள்ளக பயிற்சிகளுக்காக போதனா வைத்திய சாலைக்கு மருத்துவ பீடத்திற்கு வர வேண்டிய தேவையுள்ளது. இதனால் மாணவர்கள் போக்குவரத்தில் பல இடர்களை எதிர்கொண்டு வந்தனர். அந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மருத்துவ பீடம் வரையில் பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ…
-
- 1 reply
- 151 views
-
-
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை! அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும்…
-
- 0 replies
- 93 views
-
-
2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெற உள்ளது. https://athavannews.com/2025/1438749
-
- 3 replies
- 209 views
- 1 follower
-
-
ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை 11 Nov, 2025 | 10:31 AM ஆபத்துமிக்க திருகோணமலை, வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினை வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையூடாக சென்று வருகின்றனர். புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் இம் மக்கள் இழுவைப் பாதை மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்…
-
- 0 replies
- 91 views
-
-
நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்! adminNovember 11, 2025 யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் , நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது நிலவும் கால நிலையில் விரைவாக இருட்டுவதனால் , படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம். அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் படகு , வியாழக்கிழமை முதல் 30 நிமிடங…
-
- 0 replies
- 79 views
-
-
11 Nov, 2025 | 09:52 AM மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை (10) நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக் குழுவின் ஏற்பாட்டில்,அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள்,போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கை…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
11 Nov, 2025 | 09:15 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது, அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றுகையில், சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்த போதே சபாநாயகர் இவ்வாறு எச்சரித்தார். அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுஜீவ சேனசிங்க ஒழுங்குப் பிரச்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா …
-
-
- 11 replies
- 749 views
-
-
10 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல வரு…
-
- 1 reply
- 168 views
-
-
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு ! adminNovember 10, 2025 த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரச…
-
-
- 5 replies
- 281 views
- 1 follower
-
-
10 Nov, 2025 | 03:43 PM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்…
-
- 3 replies
- 305 views
- 1 follower
-
-
10 Nov, 2025 | 12:17 PM யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்த…
-
- 0 replies
- 148 views
-
-
மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. ஞாயிறு, 09 நவம்பர் 2025 05:55 AM சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்ற…
-
- 3 replies
- 268 views
-
-
Nov 10, 2025 - 07:11 AM பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏ…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
Nov 9, 2025 - 10:59 AM அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய …
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று! 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமானது. அதன்படி, விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் ம…
-
- 0 replies
- 83 views
-
-
Published By: Vishnu 10 Nov, 2025 | 03:15 AM நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல்,சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணிய…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது! எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://athavannews.com/2025/1452398
-
- 0 replies
- 75 views
-
-
தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை! இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் விடுதலைப் புலிகளின் வலையமைப்பை புதுப்பித்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக இந்திய புலனாய்வு…
-
- 2 replies
- 341 views
-