Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 04 OCT, 2024 | 09:58 AM வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக இருந்த புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195443

  2. Published By: DIGITAL DESK 7 04 OCT, 2024 | 09:31 AM தற்போது காய்ச்சல் பரவுவது சிறுவர்களிடையே அதிகரித்துள்ளமையினால் முகக்கவசம் அணிய வேண்டும் என சிறுவர்கள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கை, கால், வாய் நோய் தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகின்றது. எனவே, சிறுவர்களை பாதுகாக்க சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195442

  3. Published By: VISHNU 04 OCT, 2024 | 02:25 AM யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி கேமிற்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை. கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வந்து, பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவி…

  4. Published By: VISHNU 04 OCT, 2024 | 02:00 AM உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கௌரவமான முறையில் ஏற்றுக் கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதியை இயன்றளவு விரைவாக அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக் க…

  5. Published By: DIGITAL DESK 3 04 OCT, 2024 | 10:24 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், அவரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் ஆவார். https:/…

  6. அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் ! kugenOctober 4, 2024 (வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடக…

  7. 03 OCT, 2024 | 04:19 PM அண்மையில் நடைபெற்று முடிவடைந்த “சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு முறை” எனும் தலைப்பிலான அவையம் படிப்பு வட்டம் மக்களிடையே நிலவும் சமகால அரசியல் சிந்தனைகள் பற்றிய உரையாடல் தளமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 02.10.2024 புதன்கிழமை கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தலுக்குப் பின்னரான நிலை மற்றும் தேர்தல் முடிவுகளில் எவ்விதம் மக்களின் சமூக, பொருண்மிய, அரசியற் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பது தொடர்பிலும், மக்களிடையேயான அரசியல் விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கான தளமாக இம்மாத “அவையம் படிப்பு வட்டம்” நகர்ந்துள்ளது, …

  8. Published By: VISHNU 03 OCT, 2024 | 09:06 PM இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பத…

  9. வசமாக சிக்கிய தமிழ் அரசியல்வாதிகள்

    • 0 replies
    • 1.1k views
  10. 03 OCT, 2024 | 03:02 PM மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுகின்றது. ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கான ஓய்வூதியம்11 முதல் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195388

  11. 03 OCT, 2024 | 03:05 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது தமது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்திற்காகச் செலுத்தப்பட வ…

  12. Published By: RAJEEBAN 03 OCT, 2024 | 01:20 PM இலங்கையில் ஊழல் கலாச்சாரம் நீடித்தால் ஜப்பானின் முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹடேகி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையி;ல் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. முதலில் வெளிநாட்டு அழுத்தங்களின் மூலம் கிடைக்ககூடிய சாதகதன்மையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாமல் ஜப்பான் பல விடயங்களை சாதித்திருக்க முடியாது. ஜப்பானின் சீர்திருத்த தலைவர்கள் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக புத்திசாலித்தனமான முட…

  13. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர் தின நாளில் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஒருவர் குழப்பம் விளைவித்தமை குறித்து கண்டனம் தெரிவித்து இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எட்டுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடமாக போராடிக்கொண்டு வருகின்றோம். …

  14. வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசா…

  15. Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 11:40 AM பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது. எனவே, தற்போதைய ச…

  16. Published By: DIGITAL DESK 7 03 OCT, 2024 | 09:52 AM உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று வியாழக்கிழமை (03) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 இலட்சம் மக்கள் மது பாவனைக்கு அடிமையாகி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை செய்யப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப…

  17. Published By: VISHNU 03 OCT, 2024 | 03:24 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தலைமையிலான தாயக மக்கள் கட்சியின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திலதி ஜயவீரவினால் புதன்கிழமை (2) நி…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு! Vhg அக்டோபர் 03, 2024 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் அனுமதியுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் பெறுவதற்கு முன்னைய அமைச்சரவை முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித…

  19. தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிறார் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) மாலை மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் தவபாலன் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…

  20. ரணிலை ஆதரித்தவர்கள் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க முடிவு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும்…

  21. சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் Published By: VISHNU 02 OCT, 2024 | 09:26 PM சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று புதன்கிழமை (02) இலங்கைக்கு விஜயம் செய்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். …

  22. இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களின் போதே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எந்தவொரு லொட்டரிகள், வாடிக்கையாளர் கணக்கெடுப்பு, நன்கொடைகள் போன்றவற்றில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று சம்பத் வங்கி அறிவித்துள்ளது. பிரபலமான வர்த்தக நாமங்கள் மற்றும் சேவைகள் என்ற போர்வையில் தள்ளுபடிகள், பரிசுகள், அதிர்ஷ்ட சீட்டி…

  23. Published By: VISHNU 03 OCT, 2024 | 02:51 AM இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் புதன்கிழமை (02) முல்லைத்தீவு- கள்ளப்பாட்டிலுள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணைத்தூதுவர் லலிதா கபூர் ரவிகரனை எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் என விளித்திருந்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போட்டியிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே இன்று இட…

  24. 03 OCT, 2024 | 11:16 AM முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபான நிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம…

  25. 02 OCT, 2024 | 05:44 PM தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25 வீத பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா, பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.