ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லை! - டெஸ்மன் டி சில்வா [saturday 2014-07-26 09:00] விடுதலைப் புலிகளே போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தான் உரையாற்றியதாக வெளியான செய்தியை, அனைத்துலக சட்ட நிபுணர் சேர் டெஸ்மன் டி சில்வா நிராகரித்துள்ளார். இலங்கை இராணுவத்தினால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட போர் அனுபவக் கருத்தரங்கில் சேர் டெஸ்மன் டி சில்வா உரையாற்றியதாகவும், அதில், போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும், அவர்கள் 3 இலட்சம் பொதுமக்களை தப்பிச் செல்ல விடாமல் பயணமாக பிடித்து வைத்திருந்ததாகவும், அதுவே உலகின் மிகப்பெரிய பயண நாடகம் என்றும், இதுவே மிகப் பெரிய போர்க்குற்றம் என்றும் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் நேற்று …
-
- 0 replies
- 502 views
-
-
சம்பிக்க புதிய பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்க புதிய பேஸ்புக் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். சம்பிக்க ரணவக்கவின் பழைய பேஸ்புக் கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டதன் பின்னர், புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். புதிய கணக்கில் 1500 லைக்குகளை மட்டுமே செய்ய முடியும் தெரிவிக்கப்படுகிறது. பழைய கணக்கில் 21000 நண்பர்கள் இணைக்கப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சக்திகள் திட்டமிட்ட வகையில் தமது கணக்கை முடக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109840/language/ta-IN/---.aspx#.…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு சம்பந்தன் வலியுறுத்தல்! “காரைநகரில் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கடற்படைச் சிப்பாய்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.” – இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகப்படுத்திய உண்மையான குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவில்லை என்றும் இதன்போது அவர் குற்றம்சாட்டினார். காரைநகர் சம்பவம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இராணுவத்தின் செயற்பாடுகளினால் வடக்கு, கிழக்கு பெண்…
-
- 0 replies
- 371 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றிற்காகப் புறப்பட்டுச் சென்ற 7 ஊடகவியலாளர்களை ஓமந்தையில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை ஒமந்தை காவல்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தையும், சாரதியையும் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப் போவதாகக் கூறி காவல்துறையினர் வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விபரங்கள் எதனையும் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று ஓமந்தை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையின…
-
- 1 reply
- 508 views
-
-
ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் படகில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்க்கும் வரை ஆஸ்திரேலிய மண்ணில் வைக்கப்படும் இவர்களை, அதன் பின்னர் எவ்விதமாக கையாள வேண்டும் என்பதை தமது கொள்கையின் அடிப்படையிலும் சட்டங்களின் அடிப்படையிலும் ஆஸ்திரேலியா முடிவுசெய்யும் என்று அவர் க…
-
- 0 replies
- 293 views
-
-
நாட்டின் சிறுபான்மை கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானித்துளளதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டதற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மை கட்சிகளை ஒன்றிணைக்கும் முனைப்புக்களில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அண்ம…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கைக் கடற்படையினர் வரம்பு மீறிச் செயற்படக் கூடாது என இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மனிதாபிமான அடிப்படையில் நடாத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழக கடற்பரப்பில் கடற்படைப் பாதுகாப்பு கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருன் ஜெயட்லீ தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் கப்பல்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைகளை மீறும் போ…
-
- 0 replies
- 355 views
-
-
க.கோகிலவாணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்திய வம்வசாவளியினரின் பாதுகாவலனாக கடந்த 75 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வதாரங்களை உயர்த்தி, அவர்களது அடிப்படை உரிமைகளை பெற்றுகொடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அவர்களை உயர்வடைய செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான பி.ராதாகிஷ்ணன் தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தனது பவள விழாவை கொழும்பிலுள்ள அதன் தலைமயகத்தில் கொண்டாடியது. இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உப-தலைவர் பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட ப…
-
- 0 replies
- 269 views
-
-
-
- 9 replies
- 1.2k views
-
-
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். நீங்கள் அனைவரும் தேசிய அணியில் உள்வாங்கப்படுவதற்காக கடுமையான போட்டிகளுக்கு கடுமையான உழைப்புக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டீர்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த பெறுபேறு குறித்து நீங்கள் பெறுமையடைய வேண்டும். அத்தோடு பரவலாக கொண்டாடப்படும் நிகழ்வொன்றில் உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதை தெளிவான சலுகையாகவும் கௌரவமாகவும் நீங்கள் கருத வேண்டும். இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 156 விளையாட்டு வீரர்கள் பல்வேறு வெவ்வேறான நிகழ்வுகளி…
-
- 0 replies
- 272 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை 'புலிப்பார்வை' திரைப்படத்தில் ஒரு 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் சதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் போர்க்களத்துடன் முடிவடைந்தன. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் வேட்டையாடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் முள்வேலி முகாம்களில் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில் உலகை உலுக்கும் ஒரு படம் வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் …
-
- 0 replies
- 467 views
-
-
157 புகலிடக்கோரிக்கையாளர்களும் கொக்கோஸ் தீவு முகாமுக்கு மாற்றம்? சில வாரங்களாக சுங்க கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் தற்போது கொகோஸ் தீவுகளின் அவுஸ்திரேலிய பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிய வருகிறது கடந்த சில நாட்களாக 157 புகலிடக் கோரிக்கையலர்களை வைத்திருந்த சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கஸ் தீவை நோக்கி செல்வதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன அங்கு இருக்கும் குடிவரவு திணைக்களம் இவர்…
-
- 2 replies
- 595 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கைக்கு பதிலளிக்கும் விவகாரம், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த 5ம் நாள், சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறும், ஐ.நா விசாரணைக் குழுவின் வாய்மொழி அறிக்கை மற்றும், விரிவான அறிக்கையில், சிறிலங்கா அரசின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைப…
-
- 0 replies
- 336 views
-
-
அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளில் இருந்து விடுப்படலாம் என நவ சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அமெரிக்காவின் பின்னால் இருந்தால் எந்த மனித உரிமை தொடர்பான பிரச்சினையும் ஏற்ப்படாது. இஸ்ரேல் பிரச்சினை அதற்கு ஒரு சிறந்த உதாரணம், தொடர்ச்சியாக இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தாலும் அது குறித்து எந்தவொரு நாடும் வாய் திறக்காதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். http://www.onlineuthayan.com/News_M…
-
- 0 replies
- 524 views
-
-
நகைக்கடைக்குள் உட்புகுந்து கொள்ளையடிக்க முற்பட்ட வேளையில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு கொள்ளையர்களும் காயங்களுடன் வத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நிட்டம்புவ அத்தனகல வீதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையிலேயே இக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைக்கசவம் அணிந்து இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கடைக்குள் புகுந்து அங்குள்ளவர்களை கைத்துப்பாக்கி கொண்டு மிரட்டி கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர். இவ்வேளையில் கடை ஊழியர் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பின் கதவு வழியாக வெளியேறி அக்கதவையும் மூடி விட்டு முன்புறமாக கதவையும் கொள்ளையர் வெளியேறாத வகையில் மூடி விட்டு அயலவர்களின் உதவியை கோரி சத…
-
- 0 replies
- 334 views
-
-
தமிழர் நிலத்தை பகல்கொள்ளையிடும் இலங்கை அரசு இஸ்ரேலைக் கண்டிக்கிறது! - மாவை சேனாதிராசா [Friday 2014-07-25 11:00] பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கும் இலங்கை அரசுதான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் மக்களின் காணிகளை பகற்கொள்ளை போல் சுவீகரித்து வருகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற காலவிதிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது ஜனாதிபதியுடன் இண…
-
- 0 replies
- 520 views
-
-
கிளாஸ்கோ போட்டிகளில் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி! - நிறைவேற்று பொறுப்பாளர் தகவல். [Friday 2014-07-25 10:00] ஸ்கொட்லான்ட், கிளஸ்கோ நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்களின் போது மைதானத்துக்கு வெளியே தமிழ் அமைப்புகள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாட்டாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். கிளாஸ்கோ 2014 போட்டிகளின் நிறைவேற்று பொறுப்பாளர் டேவிட் கிரிவெம்பேக், அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு தாம் அனுமதியளிப்பதாக தெரிவித்தார். இந்த விளையாட்டு நிகழ்வின்போது பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளின் தலைவரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=113…
-
- 0 replies
- 389 views
-
-
வலி வடக்கில் ஆலயங்கள், பாடசாலைகளைக் காணவில்லை! - சென்று திரும்பியவர் தகவல். [Friday 2014-07-25 10:00] வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக்கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, மயிலிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர். இவ்வாறு மயிலிட்டிப் …
-
- 0 replies
- 358 views
-
-
-எம்.றொசாந்த் , நா.நவரத்தினராசா வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவம் கடந்த 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெற்ற இந்த உற்சவத்தில் இன்று (25) தேர்த்திருவிழா இடம்பெற்றது. இதன்போது, சுவாமி கட்டுத்தேரில் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார். http://tamil.dailymirror.lk/--main/119450-2014-07-25-07-10-10.html
-
- 0 replies
- 447 views
-
-
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குழுவினர் இந்தியாவில் விசாரணை நடத்த அவர்களுக்கு விசா வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: இலங்கையில் உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்ததுடன் போர்க் குற்றங் களிலும் ஈடுபட்டு, தற்போது சிறுபான்மை தமிழர்களை பாரபட் சத்துடன் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்து தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியி லும் இருந்து வருகிறது. இலங்கை யில் சிறுபான்மை தமிழர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படு வதையும், அவர்களுக்கு எதிர…
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்…
-
- 15 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். http://www.puthinappalakai.com/view.php?20140723110939
-
- 21 replies
- 1.8k views
-
-
பிரித்தானியா அதிகளவான ஆயுதங்களை சிறீலங்காவிற்கே விற்பனை செய்துள்ளது! ஜூலை 24, 2014 கடந்த ஆண்டு பிரித்தானியாவின் ஆயுதவிற்பனையில் சிறீலங்காவிற்கும் அதிகளவான ஆயுதங்கள் மற்றும் போர் தளபாடங்களை விற்பனை செய்துள்ளதாக பிரித்தானிய நாடாளமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 49.6 மில்லியன் பவுண்ஸ்களுக்கு சிறீலங்காவிற்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளபாடங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி செய்யும் குழுவினால் சிறீலங்கா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதில் சிறீலங்காவிற்கு விற்பனை செய்யப்பட்ட புள்ளிவிபரமும் வெளியிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/44408/64//d,fullart.aspx
-
- 1 reply
- 504 views
-
-
சர்வதேச விசாரணைக்கு இந்தியா இடமளிக்காது! - அஞ்சவேண்டாம் என்று ஆறுதல் கூறுகிறார் சு.சாமி. [Thursday 2014-07-24 09:00] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்பதால் அது குறித்து இலங்கை அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார். கொழும்புக்கு வந்திருந்த அவர் இலங்கை அரசுக்கே இத்தகைய ஆறுதல் அளிக்கும் அறிவுரையை வழங்கியிருக்கின்றார். விவசாய தோட்டங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் 'வெருளிகள்' என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் ஏன் இலங்கை அவர்கள் குறித்து அக்கறை கொள்ளவேண்டும், அவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை விவகாரம் பாதுகாப்பு …
-
- 1 reply
- 380 views
-
-
ஐ.நா விசாரணையை விஞ்சுமாம் தமது விசாரணை! - ஜனாதிபதி ஆணைக்குழுத் தலைவர் கூறுகிறார் [Thursday 2014-07-24 10:00] ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் தமது குழுவின் விசாரணைகள் அமையும் என்று காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். 'இது நேருக்கு நேர் விசாரணையாகும். எனவே எமது உள்ளக விசாரணை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும். இந்த விசாரணை செயற்பாட்டில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியங்களை அளிக்கலாம். மேலும், யாருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றதோ அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். புதிய ஆணைக்கு அமைவாக சர்வதேச தரத்துக்குட்பட்ட வகையில் விசாரணைகளை நடத்த…
-
- 1 reply
- 497 views
-