ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143544 topics in this forum
-
பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இரட்டைவேடம்! - அரசாங்கத்தைச் சாடுகிறார் தயான் ஜெயதிலக [Wednesday 2014-07-23 07:00] பாலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் இலங்கை அரசாங்கம் முரண்பாடாக நடந்து கொள்வதாக ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜெயதிலக, இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்க…
-
- 0 replies
- 590 views
-
-
ஓலைக் கொட்டகையில் பரிட்சை எழுதும் கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்..! [Wednesday 2014-07-23 11:00] வவுனியாவிலிருந்து ஓமந்தை வளியே சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றப்பட்ட கிராமம் கள்ளிக்குளமாகும். இக் கிராமத்தின் மாணவர்களின் கல்வியை வலுப்படுத்தும் நோக்கோடு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. மூன்று ஓலைக் கொட்டகையில் 80 மாணவர்கள் கல்வி கற்கும் மிகவும் பின்தங்கிய பாடசாலை குறித்த பாடசாலையின் அதிபரின் முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பாடசாலையில் கடும் வெய்யில்�� காற்றின் காரணமாக் கொட்டகைகளின் கிடுகுகள் ஒவ…
-
- 0 replies
- 473 views
-
-
படையினரைத் தண்டிக்க முனைந்தால் கடுமையாக எதிர்ப்போம்! - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை [Wednesday 2014-07-23 09:00] இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நவநீதம்பிள்ளை நிறுவிய குழுவிற்கு பதிலாக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் நியமித்தமை அரசாங்கத்தின் தகுதியில்லாத நடவடிக்கை என்று ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில், இந்த செயற்பாட்டின் ஊடாக, இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்ட…
-
- 0 replies
- 397 views
-
-
காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலினால், சிறிலங்கா அரசாங்கம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிமுடுவதை அனுமதிக்கும் இந்த சிறப்பு வர்த்தமானியில் திருத்தம் செய்யுமாறு கோரி, அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். “இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நிபுணர்கள், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 234 views
-
-
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு ஊறு விளைவிக்கும் காரியம் எதையும் சிறிலங்கா செய்யாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருகோணமலையில், 40 மில்லியன் டொலர் செலவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத் தாபனத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளி…
-
- 0 replies
- 215 views
-
-
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :- எமது நாடு இனவாத - மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இ…
-
- 0 replies
- 323 views
-
-
யாழ்.மாநகரசபையின் வேலைத்திட்டத்தின் கீழ் மிருக பாதுகாப்புத்திட்டம் ஒன்று யாழில் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒடெல் நிறுவனமானது தனது என்பார்க் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை மனிதாபமான முறையில் கட்டுப்படுத்துவதுடன் அவற்றால் ஏற்படும் விசர் நாய் கடி போன்ற தீங்குகளில் இருந்து மக்களை பாதுகாப்பது என்பவற்றை நோக்காக கொண்டு தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. http://www.onlineuthayan.com/News_More.php?id=563003252023671295
-
- 0 replies
- 258 views
-
-
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மர்மமுடிச்சு எனும் இந்த நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பு.கணேசராஜா நெறியாள்கை செய்திருந்தார். இதேவேளை தேசிய ரீதியாக கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டியில் ஸ்கந்த வரோதயக் கல்லூரியின் நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டப் போட்டி கடந்த 20 ம் திகதி ஶ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=733283251923784230
-
- 0 replies
- 405 views
-
-
வரலாற்றுப் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். வட மாகாண ஆளுநரும் அவருடைய பாரியாரும் அங்கு நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். தொடர்ந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இராஜகோபுரப் பணியானது வடமாகாண ஆளுநரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதால் இதன் ஒரு பகுதிக் கொடுப்பனவாக பத்து லட்சம் ரூபா நேற்று ஆலயத்தின் தர்மகர்த்தாவிடம் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் கையளிக்கப்பட்டது. இராஜகோபுரப் பணியானது பல கோடி ரூபா செலவில் மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் http://malarum.com/article/tam/2014/07/22/3850/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%…
-
- 1 reply
- 443 views
-
-
யாழ்., இணுவில், மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்கு திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார். யுவதியின் பெற்றோர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதேயிடத்தினைச் சேர்ந்த 20, 23, 24 மற்றும் 26 வயதுடைய 4 இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். மேற…
-
- 0 replies
- 407 views
-
-
மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன்…” யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவன் பலி!? யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக…
-
- 2 replies
- 790 views
-
-
முள்ளிவாய்க்காலில் 647 ஏக்கர் காணி கடற்படைக்காக சுவீகரிக்க நடவடிக்கை! - சிங்களத்தில் அறிவிப்புப் பிரசுரங்கள். [Wednesday 2014-07-23 09:00] முல்லைத்தீவு, வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்திலுள்ள 647 ஏக்கர் காணி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதான அறிவித்தல்கள் தனிச் சிங்க-ளத்தில் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள அரச காணியான மணல் பகுதியையும் தனியாருக்குச் சொந்தமான காணிகளையும் உள்ளடக்கிய சுமார் 647 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கவுள்ளதான அறிவித்தல்கள் தனிச் சிங்களத்தில் அச்சிடப்பட்டு அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான எந்தத் தகவல்களையும் குறித்த காணி உரிமையாளர்கள் அறிந்திருக்கவில்லை. க…
-
- 0 replies
- 454 views
-
-
கடவுளே நல்லூரானே உனக்கு கண் இல்லையே? இப்பிடி எல்லாம் ஒரு மண்ணில அநியாயம் நடக்குதே! ஒரு நாள் இரண்டு நாளாh? ஒரு இடம் இரண்டு இடமா? ஒவ்வொரு நாளும் தமிழரின்ட காணியள பிடிக்க ஓயாமால் வாறாங்களே? எங்கட சனத்த நிம்மதியாய் இருக்க விடாம உப்பிடி அலைக்கிறாங்களே? இப்பிடி எல்லாம் தாத்தா திண்ணையில இருந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். நானும் வடிவா பாத்து வைச்சிருக்கிறன். ஏன் தெரியுமே? நாளைக்கு எனக்கும் உந்த நிலைதானே? டெய்லி ஒரு காணிக்கு சுவிகரிப்பு நோட்டிசு அனுப்பத் திரியிறினம். எத வளைச்சுப் போடலாம் எண்டு திரியிறினம். ஒண்டக் கவனிச்சியளே? முந்தி சனங்கள் எங்கட காணியை தா எண்டு வலி வடக்கிலயும் அத மாதிரி இடங்களிலயும் போராட்டம் நடத்திச்சுதுகள். இப்ப இவன் எங்கட படலைக்குள்ளயே வந்திட்டான். …
-
- 0 replies
- 337 views
-
-
கூட்டமைப்பின் ‘இருபாதை பயணம்’ சரிவருமா? – வீரகேசரி யாழ்ப்பாணத்தி;ல் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்டம், தமிழ் மக்களின் இன்றைய அரசியல் போக்கு, அதன் எதிர்காலம் என்பன குறித்து பல்வேறு வினாக்களையும் எழுப்பியிருக்கின்றது. அத்துடன் பரந்துபட்ட சிந்தனையையும் தூண்டியிருக்கின்றது. அந்த மாநாட்டின் மகுட வாசகமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையின் அடிப்படையை வலியுறுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. ‘வலுவான ஐக்கியத்தை நோக்கி’ என்ற மகுட வாசகத்தைக் கொண்ட இந்த மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளும், ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி போன்ற …
-
- 0 replies
- 295 views
-
-
போரின்போது 84 ஆயிரம் ஆண்கள் பலியானதை அரசே உறுதிப்படுத்துகிறது; சுரேஷ் எம்.பி. news வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் 84 ஆயிரம் இளம் பெண்கள் கணவனை இழந்திருக்கின்றனர் என்று அரச புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் போரின் போது 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இரண்டு லட்சம் …
-
- 0 replies
- 380 views
-
-
அசையா சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம் புதன்கிழமை, 23 ஜூலை 2014 02:27 பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை நேற்று (23) அரசாங்கம் கொண்டுவந்தது. ஆட்சியுரிமை (விஷேட ஏற்பாடுகள்) எனப்படும் இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. இந்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் ஒரு திகதியில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் காரணமாக பலர் தமது காணிகளின் உரிமையை நிலைநாட்ட முடியாது போயிற்று. அந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் சிக்கிகொண்டவ…
-
- 0 replies
- 345 views
-
-
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தன்சானியா அறிவித்துள்ளது. குறிப்பாக மனிதாபிமான விடயங்கள், சமாதானம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தன்சானிய வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் மெம்பே (டீநசயெசன மு. ஆநஅடிந) தெரிவித்துள்ளார். தன்சானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2013ம் ஆண்டு வெற்றிகரமாக பொதுநலவாய நாடுகள் தலைர்கள் மாநாடு நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களில் கூறப்படுவதனை விடவும் இலங்கையின் மெய்யான நிலைமை மாறுப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். முரண்பாடுகளின்…
-
- 2 replies
- 717 views
-
-
திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி 23 ஜூலை 2014 ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- திருகோணமலையில் சீனாவின் சிஏடிஐசி நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு அனுமதி திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான நோக்கம் என்ன? – ரணில் திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான நோக்கம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவிற்கு விமான பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடமளிப்பதானது இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 280 views
-
-
உலகம் போற்றும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமாவை ஆன்மீகத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடக் கூடாது என தலாய் லாமா அண்மையில் கோரியிருந்தார். இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் தலாய் லாமாவை பிழையாக வழிநடத்தி வருகின்றன. கிறிஸ்தவர்களின் தலைவராக பாப்பாண்டவர் கருதப்பட்டது போன்று தலாய் லாமாவை உலக பௌத்த தலைவராக அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சார வலையில் தலாய் லாமா சிக்கியுள…
-
- 3 replies
- 433 views
-
-
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுமதியின்றி வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதித் திட்டமிடல் அமைச்சு அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பினை விடுத்தள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாக அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு சட்டங்களுக்கு முரணான வகையில் வெளிநாட்டு நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெற்றுக்கொள்வதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய அபிவிருத்தியை புறந்தள்ளி சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தன்னார்வ தொண்…
-
- 0 replies
- 369 views
-
-
இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஏழாவது சர்வதேச ஆவண- குறுந்திரைப்பட விழா கடந்த ஜூலை 18 முதல் நடை பெற்று வருகிறது. இதில் நெடும் ஆவணப்பட போட்டிப் பிரிவில் பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் இலங்கை இனப்படுகொலை பற்றிய “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” தெரிவாகியுள்ளது. இதையடுத்து இப்படம் நேற்று மாலை (ஜூலை 21) கைராலி திரையரங்கில் திரையிடப்பட்டது. 2009 போருக்கு பிறகு பெருமளவில் இலங்கையின் வடக்கு- கிழக்கில் நடந்து வரும் நில அபகரிப்புகளை பற்றியும் இராணுவமயமாக்கலை பற்றியும் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது பதிவு செய்துள்ளது. http://tamil24news.com/news/archives/175461
-
- 2 replies
- 348 views
-
-
மிளகாய் இல்லாமல் மிளகாய் தூள் தயாரித்த ஒருவரை நுகர்வோர் அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். உணவு தயாரிப்பதற்கு பொறுத்தமற்ற வகையிலேயே இந்த மிளகாய் தூள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் கிலோகிராம் மிளகாய்தூள் வெல்லம்பிட்டியவில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மிளகாய் தூள் ஆலையின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோதுமை மா, அரிசி மா மற்றும் டை வகைகளை பயன்படுத்தியே மிளகாய் தூள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/119080-2014-07-22-07-37-44.html
-
- 4 replies
- 659 views
-
-
ஜனாதிபதி ஒரு விதமாகவும் வெளியுறவு அமைச்சு ஒரு விதமாகவும் நடந்துகொள்வதாக இக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்த அமைப்பு கொழும்பில் செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இஸ்ரேலிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்றும், இதனால்தான் வெளிநாடுகளில் தமிழ் பிரிவினைவாதிகள் பலமடைந்தனர் என்றும் டயான் குற்றஞ்சாட்டினார…
-
- 0 replies
- 757 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு முன்னரை விடவும், ஆதரவாக இந்தியா செயற்படும் என்று, பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். “மோடி ஆட்சியில் இந்தியா” என்ற தலைப்பில் கொழும்பில், பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை இனிமேல் தேசிய நலன்களே வழிநடத்துமே தவிர, பிராந்திய நலன்கள் அல்ல. சிறிலங்காவுக்குப் பயணம் செய்து ஒரு முறை உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைக் கேட்டுக் கொள்கிறேன். மனிதஉரிமை விவகாரங்களில் சிறிலங்கா இலக்கு வைக்கப்பட்டதால் அது தொலைவுக்குச் சென்று விட்டது. அதுமுடிவுக்கு வர வேண்டும். …
-
- 1 reply
- 490 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியக் கடற்பரப்பில் இருந்து படகில் சட்டவிரோதமாகச் சென்ற ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது. இந்தியாவில், புதுச்சேரிக்கு அருகே உள்ள கீழ்ப்புத்துப்பட்டு என்ற கிராமத்திலும், பிற சில அகதிகள் முகாம்களில் இருந்தும் சுமார் 150 இலங்கை அகதிகள் படகில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்று அங்கு ஆஸ்திரேலியக் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து இந்திய அரசிடம் பேச ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன் இன்று புது தில்லி வந்தடைந்து, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனும் பே…
-
- 0 replies
- 358 views
-