Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இணையத்தளத்தின் ஊடாக சிறார்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் 2 ஆயிரத்து 500 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போது 7 சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஊடாக சிறார்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் தரப்பினர் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பலவித ஆர்வங்களை தூண்டும் வகையில் சிறார்களை பிழையான வழியில் இட்டும் செல்லும் நடவடிக்கைகள் குறித்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.pathivu.com/news/32502/57/2500/d,article_full.aspx

    • 0 replies
    • 295 views
  2. முதல் முறையாக வட மாகாண சபை உறுப்பினருக்கு செருப்பு மாலை (படங்கள்) கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி மருத்துவமனையில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த உதயகுமார் அன்பழகனின் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று மாலை அவரது பெற்றோர், உறவினர், நண்பர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. படுகொலை இடம்பெற்ற சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக நேற்று மாலை 5.00 மணிக்கு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து மீசாலை சந்தி வரை அவர்கள் சென்றனர். ஊர்வலத்தில் பங்குபற்றியோர் பல்வேறு சுலோகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கியவண்ணம் சென்றனர். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனின் உருவப் பொம்மைக்கு அவர்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலத்தில் கொண்டு சென்று புத்தூர் சந்தியில் அதனை…

  3. -எஸ்.சசிக்குமார் தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் நுண்கடன்; திட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு மூவர் அல்லது நால்வர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் நுண்கடன் திட்டத்தின் அடிப்படையில் விளிம்பு நிலை மக்களுக்கு கூடிய வட்டியில் கடன் வழங்குகின்றன. இந்த வட்டியைச் செலுத்த முடியாத ஏழை விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் தங்களது தொழில் நடைபெறாத காலங்களில் மேற்படி நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்று வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். …

    • 0 replies
    • 328 views
  4. மக்களின் காணிகளை அபகரிக்கவே கூடாதாம்; ஜனாதிபதி மஹிந்த news மக்களின் காணிகளை அபிவிருத்தித் தேவைகளுக்குப் பலவந்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தமது அரச உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சஇ. "நிலத்துக்குச் சொந்தமான மக்களை வீதிக்குக் கொண்டு வரக்கூடாது. பலவந்தமாக காணிகளை எடுத்துக் கொள்ள இடமளிக்கப்படக் கூடாது'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "30 40 ஆண்டுகளாக மக்கள் வசித்த காணிகளில் இருந்து அவர்கள் வீதிக்கு விட்டெறியப்படக் கூடாது. பலவந்தமாக காணிகளை பறித்தெடுத்தால், அது நியாயமற்ற சூழலை ஏ…

  5. புதன், ஜூலை 16, 2014 - 20:41 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா தமிழீழ இன அழிப்பில் பிரித்தானியா அரசின் பங்கு திடுக்கிடும் புதிய செய்தி! லண்டனில் கார்பொரேட் வாட்ச்(Corporate Watch) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் ஃபில் மில்லர் என்பவர் ஈழத்தமிழர்களின் இன அழிப்பில் பிரித்தாணியா அரசுக்கு உள்ள பங்கினை சிறிலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். பிரேமெனில் அமைந்திருக்கும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் வெளியிட்டுள்ள ‘தமிழர்களுக்கெதிரான பிரித்தாணியாவின் அருவருப்பான போர்: 1979 - 2009’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் இது வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியானது பிரித்தாணிய தேசிய ஆவணக் காப்பகத்திலும், சுதந்திரத் தகவல் கோரிக்கைகள் மூலமும், பொதுமக்…

  6. 'மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கினை கடுமையாக விமர்சித்ததற்காக நான் கொல்லப்படலாம்' 17 ஜூலை 2014 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஏதேச்சதிகார போக்கினை கடுமையாக விமர்சித்ததற்காக தான் கொல்லப்படலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூர்ய அச்சம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து இனந்தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாகவும், செவ்வாய்கிழமை முச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிளிலும் தன்னை பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் தன்னை கொல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள ஜெயசூர்ய, தான் பொலிஸாரை அழைத்தபின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அளுத்கம வன்முறைகள் மற்றும் அரசசார்ப…

  7. இஸ்லாம் என்ற மதத்தை வைத்து இவர் எப்படி பயங்கரவாதத்தை விதைக்கின்றார் எனப் பாருங்கள் ! https://www.facebook.com/photo.php?v=334231463393834

    • 0 replies
    • 247 views
  8. இலங்கை அகதிகளுக்கு நீண்டகால விஸா வழங்க மாநில அரசு பரிந்துரைக்கலாம்! - இந்திய அரசு அறிவிப்பு. [Thursday 2014-07-17 10:00] இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு, நீண்டகால விஸா வழங்குவதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட…

  9. ஐ.நா விசாரணையில் சாட்சியமளிக்க 10 பேர் ஜெனிவா பயணம்! [Thursday 2014-07-17 10:00] ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நோக்கில் பத்து பேர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். பிரிட்டன் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியனவே இவ்வாறு பத்து பேரை அனுப்பி வைத்துள்ளன. சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா விசாரணைக் குழு ஜெனிவாவில் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதா…

  10. லண்டனில் கார்பொரேட் வாட்ச் (Corporate Watch) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் ஃபில் மில்லர் என்பவர் ஈழத்தமிழர்களின் இன அழிப்பில் பிரித்தாணியா அரசுக்கு உள்ள பங்கினை சிறிலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். பிரேமெனில் அமைந்திருக்கும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் வெளியிட்டுள்ள ‘தமிழர்களுக்கெதிரான பிரித்தாணியாவின் அருவருப்பான போர்: 1979 - 2009’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் இது வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியானது பிரித்தாணிய தேசிய ஆவணக் காப்பகத்திலும், சுதந்திரத் தகவல் கோரிக்கைகள் மூலமும், பொதுமக்கள் மூலமும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட செய்தியாகும். வன்னிப் போரில் உயிர்தப்பிய மருத்துவர் என். மாலதி ஃபிலிப் மில்ல…

    • 0 replies
    • 802 views
  11. ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களும் பல அழுத்தங்களை திரு. கரி ஆனந்தசங்கரியினால் எதிர்நோக்கியிருந்தார். இதுபற்றி அண்மையில் கனடா சி.ரி.ஆர். வானொலியில் திருமதி. அனந்தி சசிதரன் அவ…

  12. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண ஆகிய இருவருமே ஆளுநரின் நியமனம் தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்; வடமாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென்பதை அரசுக்குள்ளிருந்து கொண்டே நாம் வலியுறுத்தி வருகின்றோம். போர் முடிந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே வடபகுதி தமிழ் மக்களுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக இருப்பதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகமாட்டார்கள். இராணுவப் பிடியிலிருந்து விடுதலை பெற்று ஜனநாயக உரிமைகளோடு வாழ்கிறோம் என்ற மனநிலையைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண் டியது அரசின் பொறுப்பு. அதற்கு, சிவிலியன் ஒருவர…

  13. மன்னார் வளைகுடா தீவுகளுக்கு அரணாகச் செயல்படும் பவளப்பாறைகள். மன்னார் வளைகுடா தீவுகளை காட்டும் செயற்கோள் படம். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந் துள்ள புகழ்பெற்ற மன்னார் வளை குடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப் பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான வான் தீவு, காசுவார், காரைச்…

    • 2 replies
    • 591 views
  14. காரைநகரில் 11 வயதுச் சிறுமி கடற்படைச் சிப்பாயால் துஷ்பிரயோகம்! [Wednesday 2014-07-16 18:00] யாழ்ப்பாணம், காரைநகரில் 11 வயது சிறுமியொருவர் கடற்படையைச் சேர்ந்த ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைநகர் பாலாவோடை அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=113239&category=TamilNews&language=tamil

  15. போரில் இறந்தவர்களுக்காக முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம் தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்! [Wednesday 2014-07-16 18:00] பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் சிவில் சமூக அமையத்தினர் கடந்த ஜூலை 13ஆம் தி…

  16. இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதால் ஜனநாயகம் பலவீனப்படும்! - அமெரிக்கா கருத்து [Wednesday 2014-07-16 18:00] இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பஸாகீ தெரிவித்துள்ளார். தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜென் பஸாகீ - அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவ…

  17. மீன்பிடிக்கச் சென்றவர் இரத்தம் வடிந்த நிலையில் வாடியில் சடலமாக மீட்பு! - பருத்தித்துறையில் சம்பவம். [Wednesday 2014-07-16 18:00] கடற்றொழிலுக்குச் செல்வதாக கூறிச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் பருத்தித்துறை சுப்பர்மடத்தடியில் உள்ள மீன்வாடி ஒன்றில் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆழியவளை, பாடசாலை வீதியைச் சொந்த இடமாகக் கொண்டவரும், எரிஞ்ச அம்மன் கோவிலடி வியாபாரிமூலையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டவருமான பாலசிங்கம் சதாசிவம் (வயது - 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரின் தகவலின் பேரில் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவரா…

  18. எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்! - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் [Wednesday 2014-07-16 18:00] பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியினை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இன்று யாழ்.நகர விடுதியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தனது உரையில், பிரதேச நல்லாட்சி விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று எம்மிடையே நடைபெறுவது மி…

  19. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம்! - வலியுறுத்துகிறது பிரான்ஸ் [Wednesday 2014-07-16 18:00] இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நண்பர்கள் என்ற ரீதியில் நல்லிணக்கம் குறித்து பிரான்ஸூம், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றன. நாட்டில் மீளவும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்க வேண்டுமாயின் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தினால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. பெரும்பான்மையினர், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் உ…

  20. அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசம், நேற்றுமுன்தினம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்து, தமது நியமனப் பத்திரத்தைக் கையளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் மாலையில் நடந்த நிகழ்வொன்றில், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், பிரசாத் காரியவசம் தனது நியமனப் பத்திரத்தைக் கையளித்தார். இதன்போது, இருவரும் சிறிது நேரம் உரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, வெள்ளை மாளிகையின் விருந்தினர் குறிப்பேட்டில், அதிபர் ஒபாமா, மிச்சேல் ஒபாமா, சாஷா, மற்றும் மாலியாவுக்கு சிறிலங்கா அதிபர் மற்றும் மக்களின் வாழ்த்துகள். 1931ம் ஆண்டில் இருந்து எந்தக் குறுக்கீடுகளுமின்றி தொடர்ந்து ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி வரும், தெற்காசியாவின் பழமையான ஜனந…

  21. சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் அர­சாங்­கத்தை குற்­ற­வா­ளி­யாக்கும் வகையில் இலங்­கையில் இடம்­பெறும் அனைத்து ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட வேண்டும். நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் செயற்­படும் அனை­வரும் தேசத்­து­ரோ­கி­களே என்று தெரி­விக்கும் அர­சாங்க பங்­காளிக் கட்­சிகள், நாட்டின் சட்­ட­திட்­டங்­களை மீறியும் நீதிக்கு முர­ணா­கவும் செயற்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை­களை கண்­டித்து வடக்கில் கூட்­ட­மைப்பு மற்றும் சிவில் அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்­பினை தெரி­விக்கும் வகை­யி­லேயே இக் கட்­சிகள் கருத்து வெளி­…

  22. அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மீண்டும் அறிவித்துள்ளது. கடலில் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து மீளவும் நாடு கடத்தும் செயன்முறை, புகலிடக் கோரிக்கையாளர் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என தெரிவித்துள்ளது. கடலில் வைத்து புகலிடக் கோரிக்கையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது நியாயமானதாக அமையாது என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் வோல்கர் டுருக் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் மீள் பரி…

  23. 10 வாக்குறுதிகளில் ஒன்றையேனும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை! - தவராசாவுக்கு முதல்வர் பதிலடி [Wednesday 2014-07-16 11:00] ஜனாதிபதியால் தமக்கு வழங்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அவர் நிறைவேற்றவில்லை என்று வடமாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவுக்கு விசனத்துடன் பதிலடி கொடுத்துள்ளார், முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியிடமே இருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் நியமனம் குறித்து பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்று வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேற்று நடந்த வட மாகாண சபையில் 12 ஆவது அமர்வில் குறிப்பிட்டார். ஆளுநர் சந்திரசிறியின் மீள் நியமனம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள…

  24. இலங்கை ஒருமைப்பாடுடைய ஒரு நாடு எனவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இணக்கம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மாவை சேனாதிராஜா மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டு 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான, ரோஹினி மாரசிங்க மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இணக…

    • 13 replies
    • 873 views
  25. சிங்கள மக்கள், தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் குரல் எழுப்ப ஆரம்பிக்கும் இந்த நிகழ்வுதான் இன்றைய தினத்திலே பிரதான நிகழ்வாகும். இதுதான் உண்மையான தேசிய ஐக்கியத்துக்கான வழியாகும் என்று கூறியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழர்களுக்கான சிங்களவர்களின் குரலை அரசாங்கம் தடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நண்பர் ஹெர்மன் குமார தலைமையிலான தேசிய மீனவர் ஒத்துழைப்பு சம்மேளனம், தென்னிலங்கையிளிருந்து சிங்கள இனத்தை சார்ந்த மீனவர்களை, விவசாயிகளை, தொழிலாளிகளை,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.