ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
-எஸ்.கார்த்திகேசு 'மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அல்ல அமெரிக்காவிலே நடைபெறுகின்றன. அங்கு அரசுக்கு எதிராக போராடியவர்கள் சித்திரவதை முகாமில் உள்ளனர். இங்கு அரசுக்கு எதிராக போராடியவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்' என புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். திருக்கோவில் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செவ்வாய்கிழமை (15) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'சில உலக நாடுகளும் அமைப்புக்களும் எமது அரசாங்கத்தையும், நாட்டையும் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்பிரசாரம். அமெரிக்…
-
- 0 replies
- 224 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நினைத்து வெட்கப்படுவதாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி, ரவூப் ஹக்கீமை அரசாங்கத்திலிருந்து விலக்கியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது கொள்கைகள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 'நான் இந்த நாட்டின் தலைவராக இருந்திருந்தால் ரவூப் ஹக்கீமின் கதைப் பிடித்து இழுத்து வெ…
-
- 1 reply
- 452 views
-
-
Glasgow வில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தை பற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் கருத்துக்களும் கலந்துரையாடலும்: [Wednesday 2014-07-16 10:00] Glasgow வில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தை பற்றிய தமிழ் இளையோர் அமைப்பின் கருத்துக்களும் கலந்துரையாடலும். அன்று தொடக்கம் இன்று வரை இலங்கைய ஆண்டு வந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களினை இனப்படுகொலை செய்வதையே முழுவேலையாக கொண்டுள்ளார்கள். மகிந்த ராஜபக்சே அதற்கு சற்றும் குறைவல்ல அதியுச்ச இனப்படுகொலைகளை அரங்கேற்றியதற்கு இவருக்கு முதலிடம். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவிற்கு எத்தனையோ முறை மஹிந்த வந்து புண்பட்டு திரும்பி சென்ற வரலாறுகள் ஏராளம். மீண்டும் ஒருமுறை ஸ்காட்லான் பகுதியில் இடம்பெற இருக்கும் விளையா…
-
- 0 replies
- 197 views
-
-
அரசின் அநீதிகளால் சிங்கள மக்களும் கொதிப்பு! - யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது கோபம். [Wednesday 2014-07-16 07:00] இலங்கை அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். என்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கருத்து வெளியிட்டனர். அரசினதும், அரச படைகளினதும் அச்சுறுத்தலுக்கு அஞ்சி நாம் ஆர்ப்பாட்டப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நீதிமன்றத்துக்கு மதிப்பளித்தே போராட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டோம். ஆனால் எத…
-
- 1 reply
- 477 views
-
-
மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக அங்கவீனமுற்ற இராணுவத்தினர் வழக்கு ஜூலை 16, 2014 யுத்தத்தின்போது படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி அங்கவீனமுற்ற முன்னாள் சிறீலங்காப் படையினர் தாக்கல் செய்த மனுவில், அரசாங்கம் பதிலளிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உதவித் தொகைகளை பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர்கள் 292 பேர் சார்பில் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் சங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஊனமடைந்த காரணத்தினால் இராணுவத்தை விட்டு நீக்கப்படும் படையினர் 55 வயதில் ஓய்வூதிய தொகையை பெறும்வரை அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என இராணுவச் சட்ட விதிகள் கூறுகின்றன. …
-
- 0 replies
- 259 views
-
-
மோடி இலங்கை விவகாரத்தை கையாளும் விதம் தமிழக கூட்டணிக் கட்சிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளன:- 16 ஜூலை 2014 இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விவகாரத்தை கையாளும் விதம் தமிழ்நாட்டில் உள்ள அவரது கூட்டணி கட்சிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளதாக இந்திய ஆங்கில நாளேடொன்று சுட்டக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பான முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக சாடி வந்த பாட்டாளி மக்கள் கட்சியும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் மோடி அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான ராஜதந்திர கொள்கை மற்றும் இலங்கையுடன் பேச்சுக்களை முன்னெடுத்து உறவை வலுப்படுத்தும் நிலைப்பாடுகளால் ஏமாற்றமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரச்சினையில் பாஜக அரசின் அணுகுமுறை அதிர்ச்…
-
- 1 reply
- 781 views
-
-
-எம்.றொசாந்த் தமிழ், சிங்கள மக்கள் இரண்டு தேசிய இனமாக இந்த நாட்டிலே வாழ உரித்துடையவர்கள். இந்த உண்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தேசிய மீனவ ஒத்துழைப்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறவிருந்த போராட்டம் கண்டனக்கூட்டமாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து சிங்கள மக்கள் தாமாக முன்வந்து போராட்டம் நடத்த முனைந்த போ…
-
- 1 reply
- 383 views
-
-
அபிவிருத்தித் தேவைகளுக்காக காணிகளைப் பலவந்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று, மகிந்த ராஜபக்ச தமது அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நிலத்துக்குச் சொந்தமான மக்களை வீதிக்குக் கொண்டு வரக் கூடாது. பலவந்தமாக காணிகளை எடுத்துக் கொள்ள இடமளிக்கப்படக் கூடாது. 30- 40 ஆண்டுகளாக வசித்த காணிகளில் இருந்து மக்கள் வீதிக்கு விட்டெறியப்படக் கூடாது. பலவந்தமாக காணிகளை பறித்தெடுத்தால், அது நியாயமற்ற சூழலை ஏற்படுத்தும். அபிவிருத்தித் தேவைகளுக்காக காணிகளைப் பெறும் போது, பொருத்தமான முறையொன்றை நடைமுறைப்படுத்துவதை அதிகாரிகள் உறுதிப்படு…
-
- 1 reply
- 476 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன்! [Wednesday 2014-07-16 07:00] அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது என்று விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார…
-
- 0 replies
- 420 views
-
-
காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதில் வவுனியா நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள்..! [Tuesday 2014-07-15 18:00] வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மீண்டும் நகரசபை முன்றலில் இன்று திங்கட்கிழமையிலிருந்து (14) முன்னெடுத்துள்ளனர். கடந்த 02ஆம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது, கடந்த 11ஆம் திகதிக்குள் 03 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து நியமனங்கள் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை அக்குழு நியமிக்கப்படவில்லை.தமது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 233 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மீண்டும் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பத்ரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஆளுனரது கொழும்பு அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கடந்த காலங்களில் எமது மக்களுக்கான தங்களது சேவை எவ்வாறு சிறப்பாக இடம்பெற்றிருந்ததோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடரவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வகையில் என்னோடு இணைந்து பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். அதற்காக எமது மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன…
-
- 2 replies
- 593 views
-
-
சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உயர் நீதிமன்றம உத்தரவு! வடமாகாண பிரதான செயலாளர் மற்றும் அவரது நிர்வாக குழுவினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் வகையில் வடமாகாண முதலமைச்சரால் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சுற்றறிக்கை ஒன்றை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று முதலமைச்சருக்கு உத்தரவிட்டது. வடமாகாண பிரதான செயலாளரினால் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிரதம நீதியரசர் மொஹான்பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினால் பரிசீலிக்கப்பட்டது. முதலமைச்சரின் சுற்றறிக்கையின் மூலம் தமதும், தமது அலுவலக நிர்வாக குழுவினரதும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவத…
-
- 11 replies
- 878 views
-
-
இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இன்று உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களாக மார்ட்டி அத்திசாரி, சில்வியா கட்ரைட் மற்றும் அஸ்மா ஜஹங்கிர் நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கடந்த யூன் மாதம் விசாரணைகள் இடம்பெற்றபோதும் இன்று முதல் விசாரணைக்குழு உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ளது. இந்த விசாரணைகள் 10 மாதங்கள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் …
-
- 0 replies
- 542 views
-
-
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது. இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக் கொள்ளையை நிறுத்த வேண்டும். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். வடகிழக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான இழுத்தடிப்புக்கள் வேண்டாம் உடன் பதில் கூறவும். போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும் குறித்த போராட்டம் மற்றும் பேரணியால் பொதுமக்க…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கையில் இரண்டு லட்சம் இராணுவம் உள்ளது அதில் வடக்கில் 1 1/2 லட்சம் இராணுவத்தினர் இங்கு நிலை கொண்டுள்ளனர் ஆனால் வடக்கு மாகாணத்தில் பத்து லட்சம் மக்கள் தான் இருக்கின்றார்கள். இதனை வைத்து பார்த்தீர்களானால் புரியும் நாம் இராணுவ ஆட்சிக்குள் அகப்பட்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் :- வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவி…
-
- 0 replies
- 381 views
-
-
வட மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேசுக்கு தான் வழங்கியிருந்த உத்தரவுகளை வாபஸ் பெறுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழங்கிய உத்தரவுகள் காரணமாக தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டி பிரதம செயலர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலமைச்சர் தனது உத்தரவுகளை வாபஸ் பெற தயாரென அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார். பிரதம செயலரும் முதலமைச்சரும் சுமுகமாக தீர்த்துக்கொள்வதையே நீதிமன்றம் விரும்புகிறது என தலைமை நீதிபதி தெரிவித்ததையடுத்து வாபஸ் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமிதயாசிறி தெரிவித்தார். இதேவேளை பிரதம செயலரை நீக்கவும் இடமாற்றம் செய்யவும் அதனை சுமுகமா…
-
- 0 replies
- 291 views
-
-
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி, விலங்குசல்லி, உப்புத்தண்ணி, புலுவினிசல்லி, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை, அப்பா தீவு, பூவரசன்பட்டி, தலையாரி, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி, மனோலிபுட்டி, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்…
-
- 0 replies
- 436 views
-
-
இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே, போர்க்குற்றவாளி ஒருவர் ஆளுனராக நியமனம்! - மாவை சேனாதிராசா [Tuesday 2014-07-15 09:00] வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே போர்க்குற்றவாளியான ஒருவர் ஆளுனராகத் தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆளுனரினால் தான் வடக்கில் இராணுவ ஆதிக்கம் பிரயோகிக்கப்படுகின்றன. ஆளுனரின் பின்னணியில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடமாகாண ஆளுனரை நியமிக்கும் போது மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. …
-
- 1 reply
- 402 views
-
-
கூட்டமைப்புடன் பேசுவதை எதிர்க்கமாட்டோம் என்கிறார் வீரவன்ச! [Tuesday 2014-07-15 09:00] தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, என்றும், அது ஒரு கலந்துரையாடலே என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் அவர், சிறில் ரமபோஸா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தமையானது, இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே. ரமபோஸாவை மத்தியஸ்தர் என்ற நிலையில் அரசாங்கம் பார்க்கவில்லை. அதற்கான உறுதிமொழி தமக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் அந்த வேளையில் தமது கட்சி தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ளும். தமது கட்சி ஏற…
-
- 1 reply
- 246 views
-
-
ஜனநாயக நாட்டிற்கு இராணுவ ஆளுநர் எதற்கு? - கேள்வி எழுப்புகிறார் லக்ஷ்மன் கிரியெல்ல [Tuesday 2014-07-15 09:00] வடமாகாண ஆளுநரின் பதவிக்காலத்தை நீடித்து வடபகுதி மக்களின் உரிமைக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசு குந்தகம் விளைவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வடக்கு மாகாண சபை ஆளுநரான ஜி.ஏ.சந்திரசிறி மீளவும் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "வடக்கு ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் சிவில் ஆளுநர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அரசோ மீண்டும் இராணுவ ஆளுநரான சந…
-
- 0 replies
- 263 views
-
-
-எம்.றொசாந்த் வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றார்களா? என தான் சந்தேகப்படுவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் திங்கட்கிழமை (14) தெரிவித்தார். கீரிமலை பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்காக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த நிலஅளவை பணிகளை தடுக்கும் நோக்குடன் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'வடக்கிலே இராணுவம்…
-
- 0 replies
- 181 views
-
-
இலங்கைக்கு எதிராக வலைப்பின்னல்; மூத்த இராஜதந்திரி எச்சரிக்கை! சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான வலைப்பின்னல் படிப்படியாக வலுவான முறையில் பின்னப்பட்டு வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார். ஆனால் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தை அலட்சியம் செய்து வரும் நிலையில் திடீரென்று ஒருநாள் பாரிய அழுத்தமொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் கடமையாற்றிய அமெரிக்கத் தூதுவர் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித் தூதுவராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் சஹீத் நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 1 reply
- 574 views
-
-
பதவி துறக்கப் போகிறாராம் விக்னேஸ்வரன்! - ஆரூடம் கூறுகிறது சிங்கள நாளிதழ் [Tuesday 2014-07-15 09:00] வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியை துறக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வடக்கிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்ற போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. வடக்கு அரச நிர்வாகத்தின் கீழ் …
-
- 1 reply
- 483 views
-
-
இந்திய விமானபடை தளபதி சிறீலங்காவிற்கு பயணம்! ஜூலை 15, 2014 இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா இன்று உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சிறீலங்கா செல்லவுள்ளார். இரு நாட்டு விமானப்படையினர் மத்தியிலான உறவுகளை மேம்படுத்தவே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணத்தின் போது முப்டைதளபதிகளையும், பாதுகாப்பு துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவையும் சந்திப்பதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையம் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை குறிப்பிட்ட இந்த பயணத்திற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உருவாகலாம் என்றும் கொழும்பு அரசியல் தரப்புகள் எதிர்வு கூறியுள்ளன. விமானத் படைத்தளபதி ராஹா, சிறீலங்கா அரசியல் மற்றும் படை உயர் அதிகார…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ் ஏழாலையில் ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு! ஜூலை 15, 2014 யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் கிணற்றில் இருந்து ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏழாலை வடக்கைச் சேர்ந்த சின்னராசா தர்மராசா (வயது 57) என்ற 6 பிள்ளைகளின் தந்தையாவார். மது அருந்தும் பழக்கமுடைய இவர் திங்கட்கிழமை காலையே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த சுன்னாகம் காவல்துறையினர் விசாரணையின் பின்னர் சடலத்தை மீட்டனர். நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.h…
-
- 0 replies
- 427 views
-