ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
யாழில் பொலிஸார் குறைவு அதனாலேயே சிவில் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுகின்றனர்:- யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர்:- இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் பொலிஸார் ஈடுபட்டால் அதில் ஒன்றும் தவறில்லை. நாங்கள் ஒன்றும் பயங்கரவாதத்திற்கு ஆட்சேர்க்கவில்லை. இலங்கை இராணுவத்திற்கே ஆட்சேர்க்கின்றோம். என்று தெரிவித்துள்ளார் யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர். எனினும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபடுவது இல்லையென்றும் மறுப்புத் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரை விட இராணுவத்தினரே அதிகளவில்; நிலைகொண்டுள்ளனர். இதனாலேயே சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை இணைக்கும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எ…
-
- 1 reply
- 354 views
-
-
ஐ.நா விசாரணைக் குழு குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 17ம் திகதி விவாதம்! [Friday, 2014-06-13 07:47:38] ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு எதிரான தீர்மானம் குறித்து வரும் 17,18ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புவதாக அமைச்சர் ஒருவர் நேற்று கூறினார். கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த குழுவை நியமித்தது.யுத்த காலத்து மனித உரிமை மீறல்கள், பொறுப்பு கூறுதல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்…
-
- 1 reply
- 377 views
-
-
நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் வேள்வி நாளை நடைபெறவுள்ளது. தலைமுறை தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளாக கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகபலி வேள்வி இடம்பெறுவது வழக்கம். கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் மிருகபலி வேள்வி இடம்பெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்களை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மிருகபலிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதனையடுத்து அதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதன்படி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய முறைப்படி வேள்வியினை மேற்கொள்ள முடியும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து உரிய சட்டவிதிகளுடன் வேள்விக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 518 views
-
-
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடந்தவாரம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- கடந்த மாதம் 17 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றிய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை என குறிப்பிட்டு தேசம் காக்கும் படையினர் என்ற இனம் தெரியாத நபர்களால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப் பட்டிருந்தது. இந…
-
- 0 replies
- 394 views
-
-
சென்னை துறைமுகம், சென்னை மத்திய ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் பெங்களூர் நகரம் ஆகியவற்றை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவின் ஆதரவுடன் இயங்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முயன்றனர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான மொகமட் ஸாகிர் ஹுசைன் என்ற சந்தேக நபர் இது தொடர்பான முக்கியங தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். இதன் மூலம், இலங்கையில் உள்ள தனது பிரதிநிதிகள் மூலம் பாகிஸ்தான் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை உறுதியாகி உள்ளதாக 'எக்னமிக்ஸ் ரைம்' இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ஸாகிர் ஹுசைன் கொடுத்த வாக்குமூலத்தின்படி பெங்களூர் இலத்திரனியல் நகரம், தமிழ்நாடு கூடங்குளம் அணுமின் ந…
-
- 0 replies
- 245 views
-
-
தமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்ந்த எவராவது கடந்த காலங்களில் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென விசாரணைகளில் உறுதிப் படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் நாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென அக்கட்சியின் பிரமுகரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் வௌ;வேறு தரப்புக்களால் இயக்கப்பட்டனர். அவர்களே அத்தகைய குற்றசெயல்களில் ஈடுபட்டதாக தாம் நம்புவதாகவும், யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்தார். எனினும் தற்போது மாகாணசபை உறுப்பினராகவுள்ள ஜனா கருணாகரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்படுகின்றதே என பதில் கேள்வி எழுப்பப்பட்ட போது அத்…
-
- 0 replies
- 343 views
-
-
கொக்கு ஒன்றை அடித்து கொலைசெய்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா நேற்று உத்தரவிட்டார். இறக்காமப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த 8 ஆம் திகதி இலுக்குச்சேனை குளத்தில் கொக்கு ஒன்றை இறைச்சிக்காக அடித்து கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் மேற்படி நபர் நேற்று அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணமாக 20 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=711323112212866596#sthash.NoeAU1ng.dpuf
-
- 9 replies
- 775 views
-
-
இந்த இணைப்பில் சென்று சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில் தேர்திருவிழாவை பார்த்து அம்மன் அருள் பெறுங்கள் https://www.facebook.com/253113954387/photos/a.10152536229544388.1073741847.253113954387/10152536231334388/?type=1&theater
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 32 பேர் நேற்றுமுன்தினம் இராமேஸ்வரம் திரும்பியபோது வேதனைகளையும் சோகக்கதைகளையும் தாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். மண்டபம் பிரதேசத்துக்கு அவர்கள் வந்தபோது தாம் இலங்கை கடற்படையினரிடம் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இலங்கை கடற்படையினர் தமது படகுகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் அவற்றை மூழ்கடித்ததாகவும் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை தாம் கைதுசெய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் தம்மை சித்திரவதை செய்ததாகவும் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தினர். இந்த மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டிணத்தை சேர்ந்தவர்களாவர். …
-
- 1 reply
- 939 views
-
-
சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகக்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது சுவாமி தேரேற வருவதையும் தேர்வீதி வலம் வருவதையும் பக்தர்கள் காவடி , பறவைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதையும் காணலாம். www.thinakkural.lk/article.php?
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும் பொதுக்கொள்கை மாறாது. பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் என்று எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியேயாக வேண்டும் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனை நான் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். 13வது திருத்தம் மற்றும் 13பிளஸ் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இலங்கை தமிழர்…
-
- 0 replies
- 382 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும்பான்மையினமான சிங்கள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொசன் பண்டிகையினை நடாத்த அவர் அனுமதி வழங்கியதுடன் பொசன் தீபத்தினையும் நேரில் சென்று ஏற்றி வைத்தார். இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்த துணைவேந்தர் மாணவர்களை விடுதிகளிலும் தங்கவிடாது வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகைப்பட உதவி-முகப்புத்தக நண்பர்கள் http://www.naamthamilar.…
-
- 4 replies
- 634 views
-
-
'அளுகோசு' அல்ல 'உயிர் எடுப்பவர்' வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 09:24 இதுவரையிலும் அளுகோசு என்று பயன்படுத்தப்பட்ட பதவிக்கான பெயராது உயர் எடுப்பவர் என்று மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்றுகின்றவரை அளுகோசு என்றே அழைத்தனர். அளுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது. அதனடிப்படையில் மக்களிடமிருந்து 200 பெயர்கள் கிடைக்கப்பெற்றன. அந்த பெயர்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இந்த பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 489 views
-
-
தென்னாபிரிக்கத் தலையீடு; ஆளுங்கட்சிக்குள் குழப்பம்! இலங்கை இனப்பிரச்சினைக்கு சமரசம் செய்வதற்காக இலங்கை விடயத்தில் தென்னாபிரிக்கா தலையிடுவதை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்கா ஜனாதிபதியினால் இதற்கென விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அந்த நாட்டின் உபஜனாதிபதி சிறில் ரம்போஸாவின் முயற்சி தொடர்வது சந்தேகத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்களன்று கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் ஜாதிக ஹேல உறுமய மற்ற…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்திற்கு வருகை தந்து யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை சந்தித்தனர். பாகிஸ்தானின் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நெஏல் இஸ்ராயீல் கொக்கார் தலைமையில் 21 பேர் அடங்கிய போதனாசிரியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இந்த பிரதிநிதிகள் குழுவினர் யாழ் கட்டளைத் தளபதியை சந்தித்த பின்னர் யாழ் நகரத்தை பார்வையிட்டனர். இதன்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ். கோட்டை ஆகியவற்றுக்கு இந்த …
-
- 3 replies
- 531 views
-
-
இப்போது அடிக்கடி அரங்கேறிவரும் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் எங்களை அழிப்பற்கும் , சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்குமான பூமியின் தற்காப்புப் பொறிமுறைகள்தான். எனவே நாம் மீளவும் பூமியுடன் கொடுத்துவாங்கும் உறவு முறைக்குத் திரும்புவதே எங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் பா…
-
- 1 reply
- 1.8k views
-
-
மஹிந்தவின் அழைப்பிற்கு புதுடெல்லி முன்னுமை கொடுக்கவில்லை!? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், அந்த அழைப்புக்கு புதுடெல்லி முன்னுரிமை கொடுத்துப் பரிசீலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், முதலாவது வெளிநாட்டுப் பயணம், சிறிலங்காவுக்கானதாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியான போதும், அதுபற்றி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூட இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்லவுள்ளார் நரேந்திர மோடி. இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகும். அதையடுத்து, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்க…
-
- 1 reply
- 485 views
-
-
உடற்பருமனை ஊனமாகக் கருதக் கோரும் வழக்கு பருமனான உடலை ஒரு ஊனமாக கருதுமாறு முதலாளிமாரை வலியுறுத்துவது குறித்த ஒரு சோதனை வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துள்ளது. அளவுக்கு அதிகமாக பருமனாக இருந்ததற்காக தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கர்ஸ்டென் கல்டொவ்ட் என்னும் டென்மார்க் நாட்டு குழந்தை பராமரிப்பாளர் கூறியுள்ளார். அவர் 160 கிலோகிராம் எடையுடையவர். ஆனால், தனது பணிக்கு தனது எடை என்றும் தடையாக இருந்ததில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார். முதலாளிமார் உடற்பருமன் கொண்ட பணியாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும், அவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது என்றும் அவரது சட்டத்தரணி கூறுகிறார். அவர் இந்த வழக்கில் வென்றால், ஐரோப்பாவெங்கிலும், உடற்பருமன் கொண்டவர்களை அனுசரிப்பதற்காக ம…
-
- 0 replies
- 418 views
-
-
-நா.நவரத்தினராசா அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும் கற்பூரச் சட்டிகள் காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்ததுடன், அங்கப்பிரதட்டை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். tamilmirror
-
- 0 replies
- 310 views
-
-
முப்படையினரால் அடையா ளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 25 காணிகளை, படையினருக்கு வழங்க வேண்டாம் என்று காணி ஆணையாளர் நாயகத்தினால் வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகத்தினால், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 27 ஆவது விதியின் கீழ் முப்படையினருக்கும் காணிகளை கையளிப்பது தொடர்பான, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக என்னால் பிரதேச செயலாளரிடமிருந்து பரிந்துரை அறிக்கைகள் பெறப்பட்டிருந்த கீழ் காணப்படும் காணி கையளிப்பு நடவடிக்கைகள் அவசியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். புத…
-
- 0 replies
- 385 views
-
-
ஐரோப்பியசெய்தியாளர் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பும், எதிர்ப்பும் மிக ஆபத்தான விளைவைக் கொணருமென அந்த உரை எச்சரித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வரை காலமும் தென் சூடான், சிரியா, பாலஸ்தீனம், சிறீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல்களை மிகவும் ஆர்வத்துடன் ஆக்கபூர்வமாக எதிர்த்து வந்த நவநீதம்பிள்ளை, ஐரோப்பாவில் இடம் பெறும் மனிதவுரிமை மீறல்களையும் தற்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடப்பட்டு…
-
- 0 replies
- 511 views
-
-
தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய, செட்டிக்குள பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள பிறிகேட்டுக்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி - காணி அமைச்சின் மேலதிக செயலாளர் அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். செட்டிக்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் காணி அற்றவர்களாக உள்ள நிலையில், நெடுங்கேணியிலுள்ள பிறிகேட்டுக்கு கையளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள காணி, இறுதிகட்டப்போரினால் இடம்பெயரச்செய்யப்பட்டு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்கள் அமைக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தையும், அதற்குச்சூழவுள்ள மேலதிகமான இடத்தையும…
-
- 0 replies
- 466 views
-
-
அதிக மழை காரணமாக அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் பல வீடுகளும் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் பல தொழிலாளிகளின் வீடுகளும், அட்டன் வில்பிரட்புர பகுதிக்கு செல்லும் பாதையில் நீர் நிரம்பியதால் அதன் அருகில் உள்ள வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. கொட்டகலை கிருஸ்லஸ்பாம் பகுதியிலும் 5 வீடுகள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்டன் பொலிஸ் மைதானமும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையினால் போக்குவரத்துக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதோடு காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108068/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 316 views
-
-
விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிய ஒத்துழைக்க வேண்டும்: சம்பந்தன்:- இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும்- தமிழ் மக்களின் சார்பாகவும் தான் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன்- கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதி…
-
- 0 replies
- 668 views
-
-
தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் சுட்டதாக கூறும்படி எச்சரித்தனர்:- உயிரிழந்தவரின் நண்பன் வாக்குமூலம் மோட்டார் வண்டியை தாம் நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் நண்பன் தெரிவித்துள்ளார். எனினும் தாம் தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் தனது நண்பனை சுட்டுக் கொன்றதாக யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த மோட்டார் வண்டியில் சென்ற இளைஞனின் நண்பன் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது மேற்க…
-
- 0 replies
- 320 views
-