ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஊர்காவற்றுறை சிவன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சனிக்கிழமை (31) இரவு பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மார்க்கண்டு நாகேஸ்வரி (52) என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சனிக்கிழமை (31) இரவு கிணற்றடிக்குச் சென்ற வேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். tamilmirror
-
- 0 replies
- 275 views
-
-
-மாணிக்கப்போடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன் மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற 'அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் -ஒரு சமகால பார்வை' எனும் கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்துவிட்டார். அவர், இந்த கருத்தரங்கில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றிகொண்டிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்…
-
- 0 replies
- 336 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும் இலங்கை இனப்பிரச்சினையினைத் தீர்க்கக்கோரியும் நடைபவனி ஒன்று இன்று (01) காலை யாழில் இடம்பெற்றது. இலங்கை இந்திய நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து நடத்திய இந்த நடைபவனியானது, நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பலாலி வீதியில் அமைந்துள்ள இந்து சமயப் பேரவையினைச் சென்றடைந்தது. http://tamil.dailymirror.lk/--main/112610-2014-06-01-05-50-09.html
-
- 0 replies
- 232 views
-
-
எதிர்வரும் 10ஆம் நாள் விசாரணைகுழுவினை அறிவிக்கும் நவீம்பிள்ளை! ஜூன் 1, 2014 மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், மனித உரிமைகள் பேரவையின் 26 வது கூட்டத்தொடரில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் எதிர்வரும் வரும் 10ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையானர் உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் இலங்கை விவகாரம் குறித்து கருத்து வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விசாரணைக்குழுவின் நியமனம் குறித்த அறிவிப்பையும் இதன்போது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணை…
-
- 0 replies
- 285 views
-
-
அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை ஜூன் 1, 2014 அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை காலை தன்னைத்தானே தீமூட்டிய நிலையில் சாலையால் சென்றவர்களால் மீட்கப்பட்ட லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர் பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார். 95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் 01-05-14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார். அவுஸ்திரேலிய…
-
- 0 replies
- 355 views
-
-
கொபி அனானுக்கு வீசா வழங்குவது குறித்து அரசாங்கத்துக்குள் முரண்பாடு! [saturday, 2014-05-31 18:37:51] ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் இலங்கைக்கு வருவதற்கு வீசா வழங்குவது தொடர்பாக, அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அமைக்கவுள்ள விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொபி அனானுக்கு இலங்கைக்குள் வர கட்டாயம் வீசா வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைக்குள் வந்து அவ்வாறான விசாரணைகளை நடத்த எவருக்கும் வீசா வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கொள்கையை கொபி அனானுக்கும் கடைப்ப…
-
- 0 replies
- 455 views
-
-
கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும். இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது. 1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக …
-
- 28 replies
- 5.8k views
-
-
கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் தமது கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொடுத்ததாக, தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகள் தம்மை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15ம் திகதி மலேசிய காவல்துறையினர் மூன்று இலங்கையர்களை கைது செய்து, 25ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர். இவர்களில் ஒருவரே இவ்வாறு கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இரணைமடு விமான ஓடு பாதைக்கு பொறுப்பாக கடமையாற்றியவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 1 reply
- 487 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவின் உத்தரவுக்கு கோத்தாபய றெஜிமன்ட் செவிசாய்குமா? கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த இனிமேல் அனுமதிக்கக் கூடாது –டக்ளஸ்:- கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த, இனிமேல் அனுமதிக்கக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவ்வாறு அனுமதி கோரப்பட்டால் 'எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.' – எனவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பணிப்புரை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (30.05.14) வட மாகாண அமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவனாந…
-
- 2 replies
- 508 views
-
-
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள பிரிட்டன், இலங்கை அரசு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரக அரசியல்துறைப் பொறுப்பாளர் டானியல் பெயின்ரர், "மனித உரிமை மேம்பாடு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த என்பவற்றுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவளிக்கும். சுபீட்சமான இலங்கையைக் கட்டியயழுப்புவதே எமது பிரதான நோக்கம். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இலங்கையின் வடபகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண…
-
- 0 replies
- 479 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு மாதங்களில் இலங்கை செல்லக் கூடும் என புது டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு இலங்கை சென்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் சுஷ்மா தலைமையிலான குழு சந்தித்தது. இந்நிலையில் பிர…
-
- 0 replies
- 798 views
-
-
“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அழைத்தால் அரசியலுக்கு வருவேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் கொழும்பிலேயே தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நிழல் அரசருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜய பத்திரிகை நிறுவனம் 'தேசய' (தேசம்) என்றொரு சிங்கள வார இதழை இவ்வாரம் முதல் வெளியிடுகின்றது. அதன் முதலாவது இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில், “ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்த பணிகளை நான் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். …
-
- 0 replies
- 574 views
-
-
பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர் பில் பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அ…
-
- 1 reply
- 709 views
-
-
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்கிறது இலங்கை. [saturday, 2014-05-31 09:11:25] பயங்கரவாதம், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் என்பன தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதேவேளை சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தவும் விசேட அதிரடிப்படை பணிகளை செயற்படுத்தவும் அமைச்சுக்களுக்கிடையிலான நடவடிக்கை குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சட்டம் ஒழுங்கு…
-
- 2 replies
- 452 views
-
-
SAMPUR ETHNIC CLENSING AND THE INDIAN POWER PLANT PROJECT AN OPPEN LATTER TO NARENTHIRA MODI இந்துசமுத்திரத்தின் இராணுவப் புவியியலில் மிக முக்கியமான கேந்திரங்களில் திருகோண்மலையின் நுழைவாயிலான சம்ம்பூர் பிரதேசமும் முக்கியமானதாகும். இதனால்தான் சம்பூரில் இருந்து தமிழரை வெளியேற்றும் சம்பூர் இனச்சுத்திகரிப்பு (Sampur ethnic clensing) இடம்பெற்றது. தமிழர் இனச்சுதிகரிப்போடு இந்திய அனல் மின்திடந்த்தை இணைத்ததன் மூலம் சிங்கள அரசு முன்னைய இந்திய அரசை இனச்சுத்திகரிப்பில் பங்காளியாக்கியது.. அனல் மின்நிலைய பணியாளர்கள் என்ற போர்வையில் சம்பூரை சிங்களமயமாக்குவது இப்பிரதேசத்தில் சீன ஆதிக்கத்துக்கே வழிவகுக்கும். அனல்மின்திட்ட பணிகளில் சம்பூர் அகதிகளுக்கே முன்னுரிமை வளங்கப் படவேண்டும். …
-
- 1 reply
- 346 views
-
-
"பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கொள்கை அடிப்படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்" - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடனான பேச்சில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, கல்முனை ம…
-
- 0 replies
- 471 views
-
-
யாழில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ். தபால் நிலையம் முன்பாக ஆரம்பித்த இப் பேரணியானது சத்திர சந்தியூடாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. இதன் போது வீதிகளில் செல்வோருக்கும் மத்திய பஸ் நிலையத்தில் நின்றவர்களுக்கும் வாக்காளர் பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படன . அதன் பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக வேம்படி சந்தியை சென்றடைந்து மீண்டும் தபால் நிலைய முன்றலை சென்றடைந்தது. இப் பேரணியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் யாழ்.…
-
- 0 replies
- 346 views
-
-
-வடிவேல்-சக்திவேல் விவசாயிகள் எமது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு எமது திணைக்கள் உத்தியோகதர்களால் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும், என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தெரிவித்தார். விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த விவசாயத் தொழில் நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை வயற் கணத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு; தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்... நான் சென்ற மாதம் தான் இந்த மாவட்டத்திற்கு வந்து பிரதி விவசாயப் …
-
- 0 replies
- 402 views
-
-
இந்திய உயர்மட்ட அமைச்சரவையில் ரணிலின் நண்பர்கள் நால்வராம்!? எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால நண்பர்கள் நான்கு பேர் இந்தியாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரோந்திர மோடி ஆகியோரே அவர்கள் என தெரியவந்துள்ளது. சட்டத்தரணியான அருண் ஜெட்லிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நட்புறவு இருந்து வருகிறது. அத்துடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான ராஜ்நாத் சிங், ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால நெருங்கிய நண்பராவார். வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள இந்தியாவின் முன்னாள் எத…
-
- 2 replies
- 369 views
-
-
குருவில்வான் கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை! காணி அபகரிப்பின் ஓர் அங்கமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்கள் இது குறித்து மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மன்னார் பிரஜைகள் குழுவின் உபதலைவர் எஸ்.சகாயம் தலைமையிலான குழு, சமூகசேவகர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மார்டீன் டயஸ் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை குறித்த பகுதிக்குச் சென்று பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, மாந்தை மே…
-
- 0 replies
- 391 views
-
-
மத கடும்போக்குவாதம் தொடர்பில் இலங்கை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் – ஜோன் ரான்கீன் 31 மே 2014 மத கடு;ம்போக்குவாதம் தொடர்பில் இலங்கை மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். ஜோன் ரான்கீன் வடமத்திய, வடமேல் மற்றும் மாகாணங்களுக்கு விஜயம் செய்து மக்களை நேரடியாக சந்தித்திருந்தார். மதக் கடும்போக்குவாதத்தை அனைத்து மக்களும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீமஹாபோதி, ருவான்வெலிசேயா, திருக்கேதீஸ்வரம், புத்தளம் பெரியவள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத வழிபாட்டுத் தளங்களுக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 480 views
-
-
சம்பூர் அனல் மின்நிலைய பணியினை தீவிர படுத்துமாறு மகிந்த உத்தரவு! மே 29, 2014 இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது.எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் இன்று குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச, மின்சக்தி எரிபொருள்துறை அமை…
-
- 6 replies
- 727 views
-
-
வெளிநாட்டு முதலீட்டு வரிவிலக்கால் இலங்கைக்கு இழப்பு - சர்வதேச நாணய நிதியம்- 30 மே 2014 இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் போன்ற காரணங்களினால் இலங்கையின் வரிவருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை கடன்சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை நாட்டின் 2014-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சிவீதம் 7.8 ஆக இருக்கும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ள போதிலும், அது 7 வீதமளவே இருக்க முடியும் என்று எதிர்வுகூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், அங்கு வரிவருமானம் குறைந்து காணப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் என்பதையும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 369 views
-