Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கினைச் சேர்ந்த கந்தையா லிங்கேஸ்வரன் (34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பொருட்களையும் உடைத்துள்ளார். இது தொடர்பாக தொந்தரவுக்குள்ளாகிய பெண் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தமையால் குறித்த நபர் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் த…

    • 2 replies
    • 3.9k views
  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன்போது கிளிநொச்சியில் நேற்றுமுற்பகல் நடைபெற்ற காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதிமன்றக் கட்டமைப்பு, முகாம்கள், பயிற்சி நிலையங்கள் எனப் புலிகளின் முக்கிய நிலைய…

  3. ஈழத் தமிழர் பிரச்சனையில் 13வது அரசியல் சாசன திருத்தம் போன்ற காலாவதியான தீர்வை தற்போதைய பாஜக அரசு முன்வைக்கிறது என்ற அதிருப்தி குரல்கள் ஒருபக்கம் இருக்க முந்தைய பிரதமர்களைப் போல இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் பிரதமர் நரேந்திர மோடி சற்றே கடுமையான தொணியிலேயே தமது கருத்துகளை முன்வைத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சவும் இந்தியாவுக்கு சென்றிருந்தார்;. அவருடன் நேற்று முன்தினம் (27.05.14) 20 நிமிட நேரம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசு விரும்பாத …

  4. யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை (29) மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பித்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்த போது, அதனை முதல்வர் மறுத்தார். அவ்வாறு அஞ…

  5. -மாணிக்கப்போடி சசிகுமார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசையும் நான்காம் வருட ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் அறுபத்து மூன்று நாயன்மார் அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. கூழாவடி, பாலமீன்மடு, கல்லடி, கொக்குவில் உள்ளிட்ட பல பாகங்களிலிருந்தும் வந்த ஊர்வலங்கள் தாமரைக்கேணி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசையும் கலைநிகழ்வும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/112000--63---.html

  6. ''சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' - நளினியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சோகம் கவிந்திருக்கும் அதே சமயம், அபாரத் தீர்க்கமும் சேர்ந்திருக்கிறது. ''குற்றம் செய்யாத என்னை, இத்தனை வருடங்கள் சிறைக்காவலில் அலைக்கழித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை'' என்று கதறும் நளினி, சிறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் விடுதலைப் போராட்டத்துக்கான முனைப்பிலேயே கழிக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, விடுதலையின் வாசல் வரை …

    • 0 replies
    • 701 views
  7. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கை மற்றும் அதன் சாதகத்தன்மை தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் அம்மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை கலந்துரையாடப்பட்டன. இதன்போது எதிர்வரும் டிசெம்பர் மற்றும் ஜனவரி மாத காலத்தை அறுவடைக் காலமாகக் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கான முன்னாயத்தங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, பெரிய வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்தும் முகமாக பெரிய வெங்காயச் செய்கையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப…

  8. ஐ.நா விதிமுறைகளில் அவசர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் - இலங்கை 29 மே 2014 ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம், அகதி அந்தஸ்து வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வாறு அகதி அந்தஸ்து வழங்குகின்றது என்பது தெளிவாகவில்லை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகளின் விண்ணப்பங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என தெரிவ…

  9. அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பயணிகள் போக்குவரத்து கம்பனிகளின் கீழ் பணியாற்றுவதற்காக இவ்வாறு பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக பெண் நடத்துநர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது . புதிதாக நடத்துநர்களும், சாரதிகளும் நியமிக்கப்பட உள்ளதோடு இவர்களுக்கு பயிற்சி வழங்கவும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன வழங்கவும் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் தலைவர் ரேணுக துஷ்யந்த பெரேரா தெரிவித்தார். தகுதியானவர்கள் ஜூன் 13 ஆம் திகதிக்கு முன் ப…

    • 1 reply
    • 519 views
  10. 'தடை நீக்கப்பட்டது என்பதற்காக எல்லோரும் திருப்பியனுப்பப்படுவார்கள் என்றில்லை' சுவிட்சர்லாந்தில் தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்தவர்களை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கையில் நிலவிய தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையிலிருந்து வந்து தஞ்சம் கோரி தோல்வியடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்துவருவதாக மத்திய அரசின் குடியேறிகளுக்கான அலுவலகத்தின் பேச்சாளர் சிலீன் கோல்ப்ராத் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார். இலங்கையின் நிலைமைகள் குறித்து தாங்கள் 'அறிந்திருப்பதாகவும் தமக்கும் கவலைகள் இருப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.ஆனாலும், திருப்பி அனுப்பப்படுவதற்கு இருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டதன் மூலம், தஞ்சக் கோரிக்கை தோல்வியடைந்த எல்லோ…

  11. இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தேவைகள் மறுக்கப்பட்டு வெறுமனே தொழிற்சங்க அரசியலை முன்னெடுப்பவர்கள் தேசிய ரீதியில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கிடப்பது வேதனை அளிக்கின்றது. நாடற்றவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போது வீடற்ற சமூகமாக அடிமைப்படுத்தப்பட்டு வருவதை தடுப்பதற்கு விழிப்புணர்ச்சியுடன் மறுமலர்ச்சி காண வேண்டும் என்பதே எமது பிரதான குறிக்கோளாகும் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய வம்சாவளி மக்கள் குழுவின் தலைவருமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். தெல்தொட்டை லூல்கந்தர தோட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முற்போக்கு ச…

    • 0 replies
    • 398 views
  12. முப்பது வருடகாலம் ஆயுத கலாசாரத்திற்குள் சிக்கியிருந்த வடபகுதி தமிழ் மக்களுக்கு இப்போதாவது சிவில் நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் ஐ.தே.க. வடக்கின் வர்த்தகத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனை விடுத்து மக்களிடம் கையளிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது. பிட்டகோட்டேயில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே.க. எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கின் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக 64 காணித்துண்டுகள் கோரப்பட்டுள்ளது. இங்கு இராணுவ முகாம்களை அமைப்பதை விடுத்து தொழிற்சாலைகள் அமைப்பதற்குமே காணிகள் பயன்படுத்தப்பட வேண்டும். வடக்கின் இராணுவமே இருக்கக்கூடாது…

    • 0 replies
    • 417 views
  13. தந்தையின் பெயரில்லாதும் பிறப்பு சான்றிதழ் பதியலாம் news "தந்தையின் பெயர் குறிப்பிடாமலும், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது'' இவ்வாறு தெரிவித்துள்ளார் மாவட்டப் பதிவாளர் பி.பிரபாகர். யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. அதில் "பல சிறுவர்கள் இன்னமும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் பாடசாலையில் இணைக்கப்படுகின்றார்கள் இல்லை'' என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே மாவட்டப் பதிவாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "பிறந்த பிள்ளையின் பதிவு …

  14. ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஈழத் தமிழ் சமூகம் கொண்டுள்ள அபிலாஷையை நிறைவு செய்யும் விதத்தில் தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டை விரைவுபடுத்துமாறும், 13 ஆவது திருத்தத்தை முழு அளவிலும், அதற்கு அப்பாலும் விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதனை எட்டுமாறும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக வற்புறுத்தினார் என்று கூறப்படுகின்றது. தான் பிரதமர் அலுவலகப் பொறுப்பை ஏற்ற முதல் நாளில் - பொறுப்பேற்று சில மணி நேரத்தில் - இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த போது இந்தியப் பிரதமர் இப்படி வற்புறுத்தினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்தச் சந்திப்புக் குறித்து விடுத்த செய்திக் க…

  15. வடக்கு மாகாண சபையை இயக்குவதில் அரசு தடையாகவே உள்ளது; ஆஸி. தூதுவரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பு வடக்கு மாகாண சபையைத் தனித்து இயங்க வைப்பதில் பல்வேறு முட்டுக் கட்டைகள் எமக்கு இருக்கின்றன. இதனால் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் எமக்கு நெருக்கடிகள் உள்ளன. - இவ்வாறு இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடியிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலியத் தூதுவர் ஆஸ்திரேலிய அரசினால் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து ஆராய்வதற்காக வந்திருந்தினர். இதன்…

  16. "இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்ளிப்புத் தொடரவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்ந்து அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கின்றோம்.!" - இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார். அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ஈட்டிய பெரு வெற்றியைப் பாராட்டி அவருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடிதத்தின் முழு விவரம் வருமாறு : - முதலமைச்சர் அவர்களே, தமிழ் மக்களை, …

    • 0 replies
    • 259 views
  17. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுகின்றனர் எனச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. இதற்காகத் தன்வசம் உள்ள சில சருகு புலிகளைப் புலிகளாக நடமாடவிட்டு, அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்ற பெயரில் பலரைக் கைதுசெய்யும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று புதன்கிழமை (28.05.2014) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போது கூறியவை வருமாற…

    • 0 replies
    • 491 views
  18. புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பில் கனேடிய தமிழ்க் காங்கிரஸின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றிக்கும், நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தமைக்குமான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார். சென்னைக்கு வருகை தந்துள்ள டேவிட் பூபாலபிள்ளை பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன், அக்கட்சியின் தேசிய செயலாளர் கலாநிதி தமிழிசை சௌந்தராஜன் ஆகியோர் உட்படப் பல தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். மேலும் பல தலைவர்களுடன் அவர் தொடர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இந்திய வருகையை ஒ…

    • 0 replies
    • 339 views
  19. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு இராணுவத்தின் துணையுடன் அடாவடித் தனம் புரிந்துள்ளமை தொடர்பில் தனக்கு மக்களால் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவருடைய கையாட்களும் கடந்தகாலங்களிலும் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரின் து…

    • 0 replies
    • 713 views
  20. யாழ்.குடாநாட்டிற்கு 2025ம் ஆண்டிலாவது சுத்தமான நீரை வழங்குங்கள் என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில் 80 வீதமான மக்களும், 20வீதமான வளங்களுமே உள்ளன.ஆகையால் வளப்பங்கீடு செய்தல் மிக அவசியம்.அத்துடன் நீர் பிரச்சனையை தீரப்பதற்கு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் விஞ்ஞான பூர்வமான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீர் பிரச்சனை தற்போது ஐ.நா பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.அதுமட்டுமல்லாது,மலக்கழிவு கலக்காத கிணறு நகரத்தில் தற்போது இல்லை என…

  21. மலேசியாவில் கோலாலம்பூரின் அருகே கைது செய்யப்பட்ட இலங்கையரான, பாகிஸ்தான் உள்ளக உளவு அமைப்பை சேர்ந்தவரென சந்தேகிக்கப்படும் மெஹமட் ஹூசைனி கைது செய்வதற்கான பிடியாணையை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர். ஹூசைனி மே மாதம்14 ஆம் திகதி மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியுமான ஷாகிர் உசைன் என்பவர் ஹூசைனியின் நெருங்கிய உதவியாளர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் முதல் ஹூசைனியின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்த மலேசிய விஷேட பொலிஸ் பிரிவினர், சென்னை மற்றும் பெங்களுரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீ…

    • 0 replies
    • 332 views
  22. பிரபாகரன் வழிபாடுகளில் ஈடுபட்ட கோயிலில் நாமல் ராஜபக்ஷ வழிபாடு 28 மே 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிபாடு செய்து வந்த ஆலயத்தில், ஆளும் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ வழிபாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் அமைந்துள்ள வற்றாப்பளை ஆலயத்தில் பிரபாகரன் வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருவிழா தொடர்பில் ஆலய பரிபாலன சபையினருடன் நாமல் ராஜபக்ஷ கலந்தாலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. …

    • 5 replies
    • 1.6k views
  23. * இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது. * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும். * பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும். * ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். - இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ர…

    • 6 replies
    • 1.2k views
  24. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் செவ்வாய்கிழமை வீடென்றின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த கணவன்,மனைவி மற்றும் மகள் ஆகியோர் கடுமையான உபாதைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதான உதயகுமார் நமிலராசி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=5628#sthash.CYXS29bp.dpuf

  25. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் மற்றும் கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் பல்வேறு அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 11 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் ஆனது 12 மணி வரையான ஒரு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு , ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பன ஆதரவு வழங்கியிருந்தன. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எமது நிலமும் எமது வீடும் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு, சுயநிர்ணய உரிமையை அங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.