ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக அமைக்கப்படும் இந்த புற்று நோய் வைத்தியசாலையினால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர். 4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார். - See…
-
- 3 replies
- 385 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா மீண்டும், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். தீர்மானம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்தை கோர இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleV…
-
- 0 replies
- 330 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பதில் அளிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:- ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலகள், சந்திப்புக்கள் குறித்தும் தொடரும் வாதப் பிரதிவாதங்களிடேயே அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ சுமந்திரன் தமது பக்க விளக்கத்தை ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். அந்த தெளிவுபடுத்தலில் தமக்குள்ள முரண்பாடுகள் விமர்சனங்கள் குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு பதில் ஊடக சந்திப்பை நடத்தி தமது விளக்கத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் இங்கு தரப்படுகிறது. http://globaltamilnews.net/GTM…
-
- 0 replies
- 369 views
-
-
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று யாழ்.மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள எச்.என்.வி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கொப்ரல் கலந்து கொண்டு உரையாற்றினார். வட மாகாணம் முன்பு பின்தங்கிய ஒரு மாகாணமாக இருந்தது ஆனால் இன்று அவ்வாறு இல்லாது இலங்கையின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இவ்வாறான நிலைமைக்கு வட மாகாணம் உருவாவதற்கு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலே பிரதான காரணமென்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கொப்ரல் தெரிவித்த…
-
- 1 reply
- 895 views
-
-
யாழ். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவர், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் உள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளனர். கலைப்பீட பீடாதி…
-
- 1 reply
- 1.7k views
-
-
நீதவான் ஒருவருமு; சட்டவிரோதமான முறையில் யானையை வளர்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாது நீதவான் ஒருவர் யானைக் குட்டியொன்றை வளர்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் பாரியளவில் சட்டவிரோத யானை வர்த்தகம் இடம்பெற்று வருவதாக வனவிலங்குகள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் தனிப்பட்ட நபர்கள் வீடுகளில் யானை வளர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு யானைகளை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை வளர்ப்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும…
-
- 0 replies
- 302 views
-
-
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிக்கிறது. இதன்மூலம் புலிகளை நினைவுகூற முயற்சி நடப்பதாக கூறுகிறது. எனவே இந்த நினைவு கூறலை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என கூறுகிறது. வடக்கில் இறுதி போர்முனையாக இருந்த முள்ளிவாய்க்காலை நினைவு கூறுபவர்கள் தாங்கள் புலிகளை நினைவு கூறப்போவதாக இதுவரையில் சொல்லவில்லை. அந்த போர்முனையில் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, சாதாரண பொது மக்களும் பெருந்தொகையில் கொல்லப்பட்டார்கள். இறந்துபோன அனைவரையும் நினைவுகூறும் உரிமை அவர்களது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. அதை எவரும் தட்டி பறிக்க முடியாது. இது சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை மனித உர…
-
- 0 replies
- 280 views
-
-
வட மாகாண புதிய ஆளுநராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா? வட மாகாணத்தின் புதிய ஆளுநராக, தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் எதிர்வரும் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதே காலப்பகுதியில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில், வட மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எ…
-
- 0 replies
- 339 views
-
-
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த விவாதப் போட்டியில் இறுதி சுற்றுக்கு 16தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் மேற்பிரிவு எனவும் 12தொடக்கம் 15 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்ப்பிரிவு எனவும் ஆறு பாடசாலைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் இன்று நடைபெற்றன. மேற்பிரிவிலிருந்து இறுதிச் சுற்றுக்கு வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் முதலில் போட்டியிட்டன.இதில் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலை வெற்றியீட்டியது. அதேபோல கீழ்ப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சுண்டுக்குளி மகளிர் பாடசாலையும்,யாழ் இந்துக்கல்லூரியும் போட்டியிட்டன.இதில் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை வெற்றியீட்டியது. ம…
-
- 2 replies
- 465 views
-
-
தடைசெய்த 16 அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை:- 09 மே 2014 இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் இராஜதந்திர ரீதியில் தூதரகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ; "இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளாக இனங் கண்டு தடைசெய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 499 views
-
-
புலிகள் இயங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது: ருவான் வெள்ளிக்கிழமை, 09 மே 2014 02:03 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இயங்குகின்றதாகவும் சில புலம்பெயர்ந்தோரூடாக நிதிகளை பெற்று வருவதாகவும், அமெரிக்கா அண்மைக்கால அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக கூறியுள்ளதென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பயங்கரவாத இயக்கம் பற்றிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அண்மைய அறிக்கை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இலங்கைக்கும் மற்றும் சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்துள்ளதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை (08) கூறினார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச தொடர்புகள் முலம் வட அமெரிக்க, ஐரோப்…
-
- 2 replies
- 702 views
-
-
பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதர்களிடம்…
-
- 5 replies
- 604 views
-
-
பிரபாகரன் போன்ற மாவீரன் இனிப் பிறக்கப் போவதில்லை! - கேணல் ஹரிகரன் புகழாரம். [Thursday, 2014-05-08 10:14:44] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தளவுற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப் போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள…
-
- 11 replies
- 1.7k views
-
-
புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சிப்பாய்க்கு செருப்படி! மே 9, 2014 விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்றில் படுகாயமடைந்து சேவையில் இருந்து விலகிய சிறீலங்கா இராணுவச் சிப்பாய்க்கு கடந்த வாரம் செருப்படித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவின் மெல்சிறிபுர நகரில், பெண்ணொருவரின் உடம்பில் குறித்த சிப்பாய் உரசியபோது, கடும் சினமடைந்த அப்பெண் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி சரமாரியாக அடித்ததில் அந்நபரின் தலையில் 11 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து, மட்டக்களப்பு பிரதேசத்தில் இனப்படுகொலை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இவ…
-
- 2 replies
- 713 views
-
-
விடுதலைப்புலிகள் தொடர்பில் கனடாவின் நிலைப்பாடு தொடர்பில் இலங்கை இராணுவம் கவலை! கனடாவில் நடைபெறுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளின் நிகழ்வுகள் தொடர்பில் கனேடிய அரசாங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைக் கோரியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கனடாவில் முக்கிய அதிகாரி ஒருவர், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை என்று அறிவித்திருப்பதாக அவர் இதன் போது கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்களுக்கு கனேடிய அரசாங்கம் இடமளிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=33101
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழகம் சென்ற இலங்கை அகதிகளில் தாயார்களும் சிறுவர்களும் மண்டபத்துக்கு! தமிழகம் – தனுஸ்கோடி பகுதியில் கைதான இலங்கை அகதிச் சிறுவர்கள் அவர்களின் தாயார்களுடன் மண்டம் அகதி முகாமில் தடுத்து வைக்கப்படவுள்ளனர். த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து அகதிகளாக சென்ற 10 பேர் கடந்த திங்கட் கிழமை தனுஷ்கோடியில் வைத்து கைதாகினர். அவர்களில் இரண்டு தாய்மார் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களுக்கு ராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அவர்கள் இன்று மண்டபம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களின் பிள்ளைகளுடன் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. http://tamilleader.com/?p=…
-
- 0 replies
- 608 views
-
-
ஆளுநரின் ஆசி பெற்ற யாழ்.பிரதேச சபைகள் நான்கின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!? யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச சபைகளில் கடமையாற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வடக்கு மாகாண ஆளுநரினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. வலி கிழக்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமையாற்றி வந்த திருமதி எஸ்.ஜெயந்தா வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமை…
-
- 0 replies
- 441 views
-
-
ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் செய்துள்ளது 09 மே 2014 ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,http://www.…
-
- 0 replies
- 679 views
-
-
குர்ஆனை நிந்திப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி நிந்தித்தவர்கள் வரலாற்றிலே நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் கிடையாது. குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை சேனாக்களுக்கு கூறுகின்றேன் என ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குறித்த சட்ட மூலத்தில் கசினோ விடயம் இல்லை என தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். இதனை விட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் தேசிய பொது விதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://…
-
- 1 reply
- 371 views
-
-
இலங்கையில் அலுகோசு பதவியைக் கைப்பற்ற கனேடிய, பிரித்தானிய, அவுஸ்ரேலிய பிரஜைகளும் முயற்சி! [Thursday, 2014-05-08 18:46:16] மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கு, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறுபேர் விண்ணப்பித்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். வெற்றிடமாகியுள்ள அளுகோசு பதவிக்கு இதுவரை 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குகின்றனர். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியாவில் இருந்தும் அளுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். குற்றவாளிகளை தூக்கிலிடும் தொழில் செய்யும் அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டு வரவென முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை இன்று புனர்வா…
-
- 3 replies
- 481 views
-
-
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்தச் சமயத்தில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற்று விடுவார் என்றும், அதையடுத்து அவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அறியமுடிகின்றது. அரச தலைமைப்பீடத்துக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எதிர்ப்பார்க்கப்பட்டது. அண்மையில் அவரது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் முடிவுற்ற சமயம் அது மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட…
-
- 1 reply
- 436 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவி சிரினி போலினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கைதிகள் விவகாரம் காணாமல் போனவர்கள் விவகாரம் போன்றன தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106…
-
- 0 replies
- 322 views
-
-
ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலகள், சந்திப்புக்கள் குறித்தும் தொடரும் வாதப் பிரதிவாதங்களிடேயே அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ சுமந்திரன் தமது பக்க விளக்கத்தை ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். அந்த தெளிவுபடுத்தலில் தமக்குள்ள முரண்பாடுகள் விமர்சனங்கள் குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு பதில் ஊடக சந்திப்பை நடத்தி தமது விளக்கத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் இங்கு தரப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106617/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 526 views
-
-
சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்' என்றார். அத்துடன், 'இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 426 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்கி;ன்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கி வருகின்றமையை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் புலிகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரகடனத்தின் அடிப்படையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்;, 424 தனிப்பட்ட …
-
- 1 reply
- 384 views
-